இராணுவம்.
இராணுவம் என்றாலே, போர்க் களக் காட்சிகளும்,
வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி சிதறி வீர மரணம் எய்தும் வீரர்களின் காட்சிதான், நம்
கண் முன்னே தோன்றுகிறது.
இராணுவம் என்றாலே போர் முனை மட்டும்தானா?
இல்லை, இல்லை இல்லவே இல்லை.
இராணுவம் என்பது உலகளாவிய அனுபவம் பெற உதவும்
ஓர் அற்புத அமைப்பாகும்.
இராணுவம் பல பிரிவுகளைளம், ஒவ்வொரு பிரிவிலும்
பல உட்பிரிவுகளையும் கொண்ட, ஒரு பரந்து பட்ட அமைப்பாகும்.
இராணுவத்தில் சேர்வதற்கு உடலை வளர்த்தால் மட்டும்
போதாது.
உடல் நலம், மன நலம், கல்வித் தகுதி, ஒரு கூட்டமைப்பில்
அங்கம் வகிக்கக் கூடிய பொறுமை, தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற குண நலன்களே,
அடிப்படைத் தகுதிகளாகும்.
இராணுவத்தினரைப் பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று அதிகாரிகள் மற்றொன்று அதிகாரியல்லாதோர்.
அதிகாரிகளின் தொடக்க நிலையே லெப்டினன்ட் என்பதாகும்.
பின் இப்பதவி மெல்ல மெல்ல, கேப்டன், மேஜர், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட்
ஜெனரல், ஜெனரல் என மேலே மேலே ஏறும்.
அதிகாரியல்லாதோரின் தொடக்க நிலை சிப்பாய் ஆகும்.
இப் பதவி மெல்ல மெல்ல, மெதுவாய், மிக மெதுவாய் லான்ஸ் நாயக், நாயக், ஹவில்தார், நாயப்
சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர், கௌரவ அதிகாரி லெப்டினன்ட், கௌரவ அதிகாரி கேப்டன்
என ஊர்ந்து ஊர்ந்து மேலேறும்.
பொதுவாகத் தென்னாட்டவரைப் பொறுத்தவரை, ஏராளமானோர்
பட்டப் படிப்பு படித்திருந்தும், இராணுவம் பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வு இல்லாமையால்,
சிப்பாயாகச் சேர்ந்து, சிப்பாயாகவே தங்கள் வாழ்வினை முடித்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் வடநாட்டினரோ, ஒரு சாதாரண பி.ஏ., படிப்பை
வைத்துக் கொண்டு, அதிகாரியாய், முதல் நிலையிலேயே லெப்டினன்டாய் உள்ளே நுழைந்து, பதவி
உயர்வில் வெகு வேகமாய் மேலே ஏறுகிறார்கள்.
நம்மவர்களோ, சிப்பாயாகச் சேர்ந்து, பல வருடங்கள்
பாடுபட்டுப் போராடிப் போராடி, அதிகபட்சமாய் எட்டிப் பிடிக்கும் பதவியே லெப்டினன்ட்தான்.
நம்மவர்களின் உச்சகட்டப் பதவிதான், வட நாட்டினரின்
தொடக்க நிலைப் பதவியாக அமைகிறது.
நண்பர்களே, இராணுவம் பற்றிய அறியாமைதானே இதற்கெல்லாம்
காரணம்.
சரி, அப்படியானால், இராணுவம் பற்றி எப்படித் தெரிந்து
கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?
உங்களின் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை தரக்
காத்திருக்கிறது ஒரு புத்தகம்.
இராணுவம்
அழைக்கிறது
மூலையிலோர்
சிறுநூலும் புதுநூலாயின்
முடிதனிலேய சுமந்துவந்து தருதல் வேண்டும்
என்பார்
புரட்சிக்கவி பாவேந்தர்.
இராணுவம்
அழைக்கிறது
சிறு நூலாயினும், போற்றுதலுக்கு உரிய ஓர் நூல்.
இராணுவம் பற்றியப் புரிதலுக்கு உகந்த ஓர் நன் நூல்.
இந்நூலினை எழுதியவர் யார் தெரியுமா?
தாங்கள் நன்கு அறிந்தவர்தான்.
முப்பதாண்டு
கால இராணுவப் பணி
இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான
தஷின்
கங்கோத்ரிக்கு
தலைவராய் பொறுப்பேற்று,
ஒரு மாதம் இரு மாதமல்ல
முழுதாய் பதினெட்டு மாதங்களை
உறைபனி உலகில் கழித்தவர்.
வெண்பனிப்
பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்,
இராணுவம்
அழைக்கிறது, சிவந்த மண் கைப்பிடி நூறு,
எல்லைப்
புறத்தில் ஒரு இதயத்தின் குரல்,
கல் சொல்லும்
கதை, இலக்கைத் தேடும் ஏவுகணைகள்
சங்கமமாகும்
இணைகோடுகள், மண் மேடுகள்
முதலான நூல்களின் ஆசிரியர்.
குடியரசுத் தலைவர் விருது பெற்ற
கர்னல் பா.கணேசன்
எழுபத்து ஐந்து வயதைக் கடந்த பிறகும்
அயராத தளராது
தமிழ் தட்டச்சினைத் தானே முயன்று
சுயமாய் கற்றுத் தேறி,
வலைப் பூவில் தமிழ் மணம் கமழ,
இராணுவத்தின் மகத்துவத்தை, மேன்மையை
நமக்கு உணர்த்தி வருபவர்
இவரது
வலையினையும், நூலினையும்
வாசிப்போம் வாருங்கள்
இராணுவம்அழைக்கிறது
நியூ
செஞ்சுரி புக்ஹவுஸ் லிட்.
சென்னை.
விலை
ரு.25
ஆசிரியரின்
முகவரி
Colonel P.Ganesan,
THE POLES.
943, H Block, 17 th Main Road,
Anna Nagar West,Chennai -600 040
Email : pavadai.ganesan@gmail.com
Phone :044
26163794, Cell : 94 44 06 37 94
இராணுவத்தைப்பற்றிய தங்களது விவரிப்புக்கு நன்றி நண்பரே நூலை கண்டிப்பாக வாங்குவேன் இவ்வளவு சிறப்பு மிக்க இந்தநூலின் விலை 25 ரூபாய்தானா ?
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி நண்பரே
நீக்குநல்ல பகிர்வு. குறைந்த விலையில் நல்ல ஒரு புத்தகம்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு`ராணுவம் பற்றிய தகவலகளுக்கு நன்றி . கர்னல் கணேசன் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றி. நூலாசிரியருக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎனக்கு ஒரு புத்தகம் அய்யா ... மிக அருமையான விமர்சனம் .. //ஹேட்ஸ் ஆப் கர்னல் சார் //
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசிறப்பானதோர் நூல் அறிமுகம். இளைஞர்கள் பலருக்கும் பயன்படும்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகரந்தையார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குராணுவம் பற்றியும் வீரவணக்கத்திற்குரிய ராணுவ வீரர் - கர்னல் பா.கணேசன் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் கோடிட்டு காட்டியமை அருமை.
உங்களுக்கும் என்னுடைய வீரவணக்கம்.
கோ
நன்றி நண்பரே
நீக்குநல்ல வழிக்காட்டல் நூல் ,பொருத்தமான ஆசிரியரால் !பலருக்கும் பயன் படும் !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமிகவும் அருமையான விமர்சனம் அய்யா...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தென்னிந்திய மக்கள் அவ்வளவாக அறிந்ததில்லை உண்மைதான் .பஞ்சாபிகளில் பல குடும்பங்களில் பரம்பரையாக ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உண்டு
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅற்புதமான நூல். அதை எழுதிய கர்னல் அவர்களுக்கும், விமர்சனம் செய்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றி!
பதிலளிநீக்குத ம 5
நன்றி நண்பரே
நீக்குகர்னல் கணேசன் அவர்களது இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும். அறிமுகம் செய்த கரந்தை ஆசிரியருக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅறிஞர் கணேசனின் பயன்தரும் நூல்கள்
பதிலளிநீக்குhttp://www.ypvnpubs.com/2016/04/blog-post_9.html
என்ற தலைப்பில் நானும் எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.
அறிஞர் கணேசனின் நூலைச் சிறப்பாகத் தாங்கள் அறிமுகம் செய்துள்ளீர்கள்.
இப்பயன்தரும் நூல்களைப் பலரும் தேடி வேண்டிக் கற்பதால் சிறந்த அறிவைப் பெறலாம்.
நன்றி ஐயா
நீக்குஅன்புள்ள கரந்தையாரே!
பதிலளிநீக்குஅய்யா கர்னல் பா.கணேசன் அவர்களின் ‘இராணுவம் அழைக்கிறது’ என்ற நூலை அனைவரும் வாங்கிப் படிப்போம். இராணுவம் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்வோம்.
நன்றி.
த.ம. 6
நன்றி ஐயா
நீக்குநல்ல பகிர்வு.நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபகிர்வுக்கு நன்றி நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇராணுவம் தொடர்பான விஷயங்களை அறியத்தந்த ஐயா கர்னல் பா.கணேசன் அவர்களுக்கும்
பதிலளிநீக்குஅதனைப் பதிவினில் வழங்கிய தங்களுக்கும் மிக்க நன்றி..
நன்றி ஐயா
நீக்குஅருமையான விமர்சனம் இராணுவத்தில் சேர்ந்து நாட்டு பணியாற்ற விரும்புவர்களுக்கு தேவையான நூல்.
பதிலளிநீக்குவிலை 25 என்பது மிகவும் மகிழ்ச்சி.
பகிர்வுக்கு நன்றி.
நன்றி சகோதரியாரே
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகட்டாயம் வாங்கிப் படிக்கிறேன்! நல்லதொரு விமர்சனம்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குYou are correct. We don't have much awareness. Let the new book act as an eye opener.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு//நம்மவர்களின் உச்சகட்டப் பதவிதான், வட நாட்டினரின் தொடக்க நிலைப் பதவியாக அமைகிறது.//
பதிலளிநீக்குநிதர்சனம். அறியாமை அகலவேண்டும்.
நன்றி நண்பரே
நீக்குதென்னாட்டவர்கள் படித்திருந்தும் சிப்பாய் ஆகவே சேருகின்றனர் என்றும் வடநாட்டில் உள்ளவர் எடுத்த எடுப்பிலே அதிகாரியாகச் சேருகின்றனர் என்று சொல்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇது ராணுவத்துறைக்கு மட்டும் பொருந்தும் என்று இல்லை. மற்ற நிர்வாகத் துறைகளுக்கும் பொருந்துவதோ !!
இது உங்கள் அல்லது நீங்கள் குறிப்பிட்ட புத்தக ஆசிரியரின் பர்செப்ஷன் ஆ அல்லது அதை சுட்டிக் காட்டும் வகையிலே எதேனும் புள்ளி விவரங்கள் , கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில், ராணுவத்தில் உள் நுழைந்த அலுவலர்கள் பற்றி இருக்கிறதா ?
ஏன் நான் குறிப்பிட்டு கேட்கிறேன் என்றால், இது போன்ற ஆய்வு ஒன்றை நானும் ஒரு 15 ஆண்டுகட்கு முன்பு செய்திருக்கிறேன்.
இது ஒரு புறம் இருக்க,
பட்டப் படிப்போ அல்லது பிளஸ் டூ வகுப்போ எந்த ஒரு நபருக்கும் வேலைக்கு போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும்போது, கிடைக்கும் வேலை வாய்ப்புக்களை வைத்துத் தான் அவர் தான் எங்கு போகவேண்டும் எங்கு பணி புரியவேண்டும் என பொதுவாக தீர்மானிக்கிறார். சின்ன வயதில் நாம் மனதில் கொள்ளும் ஆவல்களில் பல முதிர்ச்சி அதாவது வேலைக்கான தகுதி வரும்போது பல காரணங்களினால் நிறைவேதுவதில்லை.
சமுதாய கட்டமைப்புகளும் இதற்கு ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.
இது பற்றி, இந்த புத்தக ஆசிரியர் பேசியிருப்பார் என நினைக்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி. கூடிய விரைவில் படிக்கிறேன்.
சுப்பு தாத்தா.
தென்னாட்டவர் வடநாட்டவர் ஒப்பீடு இந்த நூலில் உள்ள செய்திதான் ஐயா
நீக்குநன்றி
நல்ல நூல் பற்றிய அறிமுகம்,, நன்றி சகோ,,
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஇராணுவம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள ஆவல். விரைவில் வாங்கிப்படிக்கிறேன். நல்லதொரு நூல் அறிமுகத்துக்கு நன்றி சகோ!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குபல இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் உள்ள ஒரு சிறப்பான நூல் அறிமுகம் மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅனுபவம் விலை மதிப்பில்லாதது. பலரையும் வாங்கச் செய்வேன். முகவரி கொடுத்தமைக்கு நன்றி. விக்கி சார்பாக நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். விக்கிநூலகம் தற்போது உருவாகி வருகிறது. கண்டு கருத்திடுங்கள்.https://ta.wikisource.org/s/4kx
பதிலளிநீக்குவணக்கம்.
போற்றுதலுக்கு உரிய முயற்சி
நீக்குஇதோ இணைப்பிற்குச் செல்கின்றேன் ஐயா
இந்திய இராணுவத்தை பற்றிய அறியாத பல விஷயங்களை தமிழக மக்களுக்கு அறிய செய்ததற்கு நன்றிகள் பல.
பதிலளிநீக்குபுதிய புத்தகத்தை பற்றி அறிமுகமும் வரும் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா
நீக்குஇவரது
பதிலளிநீக்குவலையினையும், நூலினையும்
வாசிப்போம் வாருங்கள்//
மிக்க நன்றி சகோதரா.
https://kovaikkavi.wordpress.com/
நன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் கரந்தை மைந்தனே !
பதிலளிநீக்குதோன்றிற் புகழோடு தோன்றுக .......என்னும் வள்ளுவன் வாக்கினை நடைமுறையில் வெளிக்காட்டிய ஓர் போர் வீரனின் நூலினை அறிமுகம் செய்தீர்கள் நன்றி ! தங்களால் தாங்கள் பிறந்த மண் மட்டுமல்ல பாரத தேசமே பெருமை கொள்கிறது தங்கள் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
கேர்ணல் கணேசன் ஐயாவின் வலைப்பூவினை சென்று பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றிகள்
தம +1
நன்றி நண்பரே
நீக்குExperiences counts a lot என்று சொல்வார்கள். பிறருடைய அனுபவங்களை அறிகிற போது நாமும் எங்களை எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பலம் பெற்றவர்களாகின்றோம். முன்னேற விரும்புவோர் படித்துப் பயன் பெறக்கூடிய அருமையான நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...உடுவை
பதிலளிநீக்குதங்களின் வருகை மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது
நீக்குநன்றி ஐயா
படிப்பவர்கள், தன் செய்திகளின் மூலம் ஏதாவது ஒரு நல்ல செய்தியை அறிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் முயற்சிப்பது மிகுந்த மகிழ்ச்சி. நல்ல நூல் அறிமுகம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி திரு ஜெயகுமார் அவர்களே.
பதிலளிநீக்கு2009ல் வெளியான இந்த நூல் தமிநாடு முழுவதும் லட்சக் கணக்கில் விற்பனையாகிறது.ஆசிரியர் என்ற முறையில் எனக்குக் கொடுத்த 300 பதிவுகளையும் இலவசமாகப் பலருக்கும் கொடுத்திருக்கிறேன்.
வாழ்க்கையில் முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கின்றன.தவறான பாதையில் சென்றுவிட்டவர்கள் பாதை மாறி வர தயக்கம்,நம்மால் முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மை,குடும்ப சூழ்னிலை போன்ற பல காரணங்களினால் கிடைத்ததை வாழ்ந்து முடித்து வெளியேறுகிறார்கள்.
அது தவறான அணுகுமுறை.மனதிற்குப் பிடித்த, உடலும் மனமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேலைக்கு தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்.உற்றம்,சுற்றம்,உறவுகள் எல்லாம் காலப்போக்கில் விலகிவிட நீங்கள் மட்டுமே தனித்து நிற்ப்பீர்கள்.அப்பொழுது வருத்தப் படுவது காலம் தாழ்ந்த நிலை.
20-21 வயதில் அரசாங்க பொதுப்பணித் துறை பொறியாளர் வேலையை துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்தவன் நான்.Best sports person in atheletics,swimming,and Basketball என்று புரட்சி செய்துவிட்டு இந்தியத்திரு நாட்டின் ஆய்வுத்தள தலைவனாகத் தென்துருவம் சென்றவன்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
மனித சக்தி அளவுகோலுக்கு அப்பாற்ப்பட்டது.
உங்களது முன்னேற்றத்திற்கு புறக் காரணங்கள் தடையாக இருக்கமுடியாது.
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்களின் அற்புதமான வழிகாட்டி நூலாகிய ”இராணுவம் அழைக்கிறது” பற்றிய அறிமுகம் மிக அருமை. நம் மாணவர்களுக்கும் நமக்கு அறிமுகமான இளைஞர்களுக்கும் கொடுத்து வழிகாட்டுவோம்.