02 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 3முனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

      ஒவ்வொரு கடிதத்தின்போதும், என் இதயம் சற்று நின்று, தட்டுத் தடுமாறிப் பின்னர்தான் துடிக்கத் தொடங்கியது.

     இதயம் மட்டுமா துடித்தது, நானும்தான் துடியாய்த் துடித்தேன்.


     எதனால் தேர்வு செய்யப்பட வில்லை. தேர்வினை நல்ல முறையில்தானே எழுதினேன். ஒன்றுமே புரியவில்லை.

    பிறகுதான் அந்த உண்மை மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது.

    TOFEL  மற்றும் GRE நுழைவுத் தேர்வுகளை எழுதினேன் அல்லவா. அதன் முடிவுகளை, தேர்வினை நடத்திய அமைப்புகள், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

    ஆனால் எனது தேர்வு முடிவுகள், நான் விண்ணப்பித்தப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப் படவே இல்லை.

    யார் செய்த தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது. கலங்கித்தான் போனேன்.

     இந்நிலையில்தான், செய்தித் தாட்களில் அந்த விளம்பரம் வெளி வந்தது.


வெளி நாட்டில் படிக்க, ஃபோர்டு நிறுவனம் உதவித் தொகை வழங்குகிறது.

     மீண்டும் புது தில்லிப் புறப்பட்டேன். புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று விண்ணப்பித்தேன்.

      அவர்களுடைய தேர்வு முறைகளை, ஒவ்வொரு படியாகக் கடந்தேன்.

      நேர்முகத் தேர்வு முடிந்தும், மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. முடிவுதான் தெரியவில்லை.

      பிறகு என்னுடன் விண்ணப்பித்த நண்பர்கள், ஒவ்வொருவருக்கும், ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து, கடிதங்கள் வரத் தொடங்கின.

ஃபோர்டு நிறுவன கல்வி உதவித் தொகைக்குத் தாங்கள் தேர்வு செய்யப்பட வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

     நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் வருத்தக் கடிதங்கள் வர, வர என் உள்ளம் சற்றே தளர்ந்துதான் போனது. இன்று என் நண்பனுக்கு, நாளை எனக்கு.

    

தபால்காரரை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாய் நகரத் தொடங்கியது.

      2002 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள், எனக்கும் கடிதம் வந்தது.

                                                                                                                         தொடர்ந்து பேசுவேன்


46 கருத்துகள்:

 1. தொடருங்கள்.தொடர்கிறோம்.மிக அருமை.நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சுவாரஸ்யமான இடத்தில் தொடரும்?! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. பேசுங்க... தொடர்ந்து வருகிறோம்...
  தமிழ் மணம் வாக்கு சேர்த்தாச்சு ஐயா...

  பதிலளிநீக்கு
 4. தமிழ்மணம் வாக்களிப்பதில் இங்கு ஏதோ பிரச்சினை... வாக்கு அளிக்கப்படவில்லை... மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாக்கு விழாவிட்டால் என்ன நண்பரே
   தங்களின் வருகை ஒன்றே பெருமகிழ்வளிக்கின்றது

   நீக்கு
 5. அந்த கடிதத்தில் உள்ள விடயம் அறிய தொடர்கிறேன்
  த.ம. 2

  பதிலளிநீக்கு
 6. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  படிக்கும் நமக்கே திடுக்..திடுக்..என மனம் அடித்துக் கொள்கிறது. நேரில் அனுபவித்தவர் மனம் என்ன பாடு பட்டதோ? நல்லதே நடந்திட வேண்டும் என்று எதிர்நோக்கி அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. தொடர் முயற்சி
  பிரமிக்கவைக்கிறது
  ஆவலுடன் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 8. கடிதம் வர தாமதம் என்றாலும் ,உதவித் தொகை கிடைத்து இருக்குமென நம்புகிறேன் :)

  த.ம வாக்களித்தேன் ,எந்த சிக்கலும் இல்லை ...சிக்கல் வராத காரணம் ...எழுத்தை ஊக்குவிக்கும் விதமாய் பதிவர்கள் அனைவருக்கும் நான் தொடர்ந்து போடும் வாக்குதான் என்று படுகிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் மணத்தின் நாயகர் அல்லவா தாங்கள்
   நன்றி நண்பரே

   நீக்கு
 9. அலெக்சாண்டர் டூமாஸ் தனது நாவல் ஒன்றில் இறுதியாகச் சொல்லும் 'HOPE' என்ற சொல் மீது வைத்த உறுதிதான் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 10. எத்தனை எத்தனை இடர்பாடுகள்....எப்படி எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது..

  டோஃபில் நாம் சொல்லும் 3 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இலவசமாக அனுப்புவார்கள்.மற்ற பல்கலைக்கழகங்களுக்கு நாம் தானே அனுப்ப வேண்டும் . பொதுவாக அவர்கள் சரியாக அனுப்பி விடுவார்கள்..பாவம் வெற்றிவேல் முருகன். தொடர்கின்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெற்றிவேல் முருகன் விசயத்தில் தவறவிட்டுவிட்டார்கள்
   நன்றி நண்பரே

   நீக்கு
 11. விறுவிறுப்பான பதிவு
  தொடருங்கள்
  தொடருகிறோம்

  பதிலளிநீக்கு
 12. தொடர்ந்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. தொடருங்கள் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. விறுவிறுப்பான திரில்லர் போல எழுதியுள்ளீர்கள். ரொம்பவும் காக்க வைக்காமல் தொடருங்கள் கரந்தையாரே!

  பதிலளிநீக்கு
 15. சாதனை ஓட்டம் தொடர்கிறதான்/

  பதிலளிநீக்கு
 16. தொடர்கிறேன்.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 17. அவருக்கு வந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது எனத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. விறுவிறுப்புடன் முருகன் வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  ஐயா
  விறுவிறுப்பான தொடர் தொடருகிறேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு