31 ஆகஸ்ட் 2022

வாருங்கள், வாழ்த்துவோம்

 



     திருமணம்.

     புதுமனைப் புகுவிழா.

     காதணி விழா.

     கோயில் குடமுழுக்கு விழா.

     படத் திறப்பு.

     மகிழ்வைத் தருகின்ற விழாவாக இருந்தாலும், துயரைப் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்வாக இருந்தாலும், நாம் முதலில் செய்யும் பணி, அழைப்பிதழ் அச்சிடுவதுதான்.

    

ஒரு காலத்தில், அழைப்பிதழ்கள் தமிழும், வடமொழியும் கலந்த கலவையாகவே அச்சிடப் பெற்றன.

     1911 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற, இன்றளவும் சீரிளமையோடு செயலாற்றி வருகின்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயரா முயற்சிகளின் பயனாகத்தான்,  விவாஹ சுபமுகூர்த்த பத்திரிக்கை என்பது, திருமண அழைப்பிதழ் என்னும் தனித் தமிழ் பெயர் பெற்று, இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் சொல்லாகப் படர்ந்து, பரவியுள்ளது.

     இருப்பினும் அழைப்பிதழ்கள் என்பவை, செய்தியினைச் சுமந்து செல்லும் ஊடகமாக மட்டுமே இருந்து வருகின்றன.

     அண்மைக் காலங்களில், விதவிதமான வடிவங்களில் அழைப்பிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    




                   மாத்திரை அட்டையின் வடிவத்தில்,

     ஆதார் அட்டையின் வடிவத்தில் எனப் பல்வேறு தோற்றங்களில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பெற்று, காண்போரின் கவனத்தைக் கவருகின்றன.

     இருப்பினும், வடிவங்கள்தான் மாறுகின்றனவே தவிர, இவை அனைத்தும், விழாவின் பெயர், நாள், நேரம், இடம், யாருக்கு விழா என்பன போன்ற தகவல்களை மட்டுமே தாங்கி வருகின்றன.

     முதன் முதலாக, என்னைப் பொறுத்தவரை, முதன் முதலாக, செய்தியோடு, உணர்வுகளையும் சுமந்து வந்த அழைப்பிதழ் ஒன்றினைக் கண்டேன்.

இணையேற்பு விழா

அழைப்பிதழ்

     இணையேற்பு விழா என்னும் வார்த்தைகள் கூட இன்று பரவலாகிவிட்டன.

 

அன்பிற்குரியவர்களுக்கு,

வணக்கம்.

செப்டம்பர் ஏழு, இரண்டாயிரத்து இருபத்தியிரண்டு புதன் கிழமை காலை, பத்து மணி சுற்றளவில்.

 

எனத் தொடங்குகிறது அழைப்பிதழ்.

     படிக்கும்போதே கண்கள் விரிந்தன.

     அடுத்தடுத்த வரிகளைப் படிக்கும்போது, உள்ளமும், விரிந்தது, மலர்ந்தது.

 

புதன் கிழமை

வேலை நாள், சிரமம் புரிகிறது.

 

ஆனாலும்

உங்களை எங்கள் கண்கள் தேடும்.

 

     படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது அல்லவா.

     நம் வீட்டு திருமண அழைப்பிதழை, இப்படி அச்சடிக்காமல் விட்டுவிட்டோமே என்னும் ஏக்கம் வருகிறது அல்லவா?

     எனக்கு ஏக்கம் வந்தது.

     நாம் எல்லாம், தாங்கள் தங்கள் சற்றமும் நட்பும் சூழ வருகை தந்து, மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம் என்று, அன்று, நம் முன்னோர் அச்சிட்ட வார்த்தைகளை, ஒரு எழுத்துகூட மாறாமல், இன்றும் அச்சிடுகிறோம்.

     இவர் எப்படி அழைக்கிறார் பாருங்கள்.

 

குழந்தைகளின் கைகளைப் பிடித்து

தலைதொட்டு, நெற்றியில் முத்தமிட்டு

 

இருவரும் இணைந்து

தங்களது இல்லறத்திற்கான

சுயத்தைக் கட்டமைக்க வாழ்த்துவோம்.

 

நீங்கள் இன்றி அரங்கம் நிறையாது

நிகழ்வும் முழுமை பெறாது.

 

அவசியம் வந்து விடுங்கள்.

 

     அவசியம் வருவேன் தோழர்.

     தங்கள் அன்பிற்காக மட்டுமல்ல, தங்களின் அழகுத் தமிழுக்காகவும், உணர்வுத் தமிழுக்காகவும் அவசியம் வருவேன்.


இவர்தான்,

ஆங்கில ஆசிரியர்

மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர்

சொற்பொழிவாளர்

கவிஞர்

எழுத்தாளர்

இதழாளர்

தொழிற் சங்கத் தலைவர்

கலை இலக்கிய சமூகச் செயற்பாட்டாளர்

கல்வியாளர்

நூலாசிரியர்


தோழர் இரா.எட்வின்.

---

இரா.எட்வின் – செ.விக்டோரியா

இணையரின்

அன்பு மகன்

கிஷோரும் – கோவை, ஷீனாவும்

எதிர்வரும் 7.9.2022

புதன் கிழமை

பெரம்பலூர்

பூமணம் திருமண அரங்கில்

இல்லறத்தில் இணைகிறார்கள்.

 

வாருங்கள், வாழ்த்துவோம்.

 

  

11 கருத்துகள்:

  1. சிறப்பான அழைப்பிதழ் வாழ்க மணமக்கள்.

    மணமக்களுக்கு எமது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  2. படிக்கப் படிக்க மனம் முழுவதும் மகிழ்ச்சி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா31 ஆகஸ்ட், 2022

    தகவல்கள் அருமை . மணமக்களுக்கு வாழ்த்துகள் - நாகேந்திர பாரதி

    பதிலளிநீக்கு
  4. எட்வின் அற்புதமான மனிதர்‌அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  5. அருமை. மணமக்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா31 ஆகஸ்ட், 2022

    புதுமையான நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான அழைப்பு.
    மணமக்களுக்கு வாழ்த்துகள் ஆசிகள்.
    மணமக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. அழகான அழைப்பிதழ்.மணமக்களுக்கு வாழ்த்துகள்!.

    வலைத்தளத்திலும் எழுதுகிறார் இல்லையா! பார்த்ததுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா02 செப்டம்பர், 2022

    அழகான அழைப்பிதழ். மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. மணமக்கள் என்றும் இணைந்து மகிழ்ந்திருக்க நானும் வாழ்த்துகிறேன்!!!

    பதிலளிநீக்கு
  11. செயல் புரிவது ஒருபுறம் இருந்தாலும் அந்த செயலின் சிறப்பை எடுத்துச் சொல்வதும் ஒரு சிறப்புதான்.வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு