நண்பர்களே, நலம்தானே.
கடந்த பல வருடங்களாக, சில நூறு
முறையாவது மதுரைக்குச் சென்று வந்திருப்பேன்.
ஒவ்வொரு முறை, ஒத்தக் கடையைக்
கடந்து செல்லும் பொழுதும், நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் ஆனை மலையைக் கண்டு
வியப்பு அடைந்திருக்கிறேன்
இயற்கை தந்த கொடையை எண்ணி
எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் ஆனை மலையை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்துவிட
வேண்டும், ஆனை மலையில காலார நடந்து மகிழ வேண்டும், ஆனை மலையில் மோதித் திரும்பும்
காற்றை சுவாசித்து இன்புற வேண்டும் என்ற எனது எண்ணம், நிறைவேறாமல், பகற் கனவாகவே
நீடித்து வந்தது.
