அழிவின் அவநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
- குறள்
நண்பர்களே, நான் ஆசிரியராகப்
பணியாற்றுகின்ற, தஞ்சாவூர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், சாரணர் இயக்கம், இளையோர்
செஞ்சிலுவைச் சங்கம், இண்ட்ராக்ட் கழகம், நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவர்
படை போன்ற பல்வேறு அமைப்புகள் சிறப்புடன் இயங்கி வருகின்றன.
இண்ட்ராக்ட் கழகமானது மாணவர்களுக்கு ஒரு
பிரிவும், மாணவிகளுக்கு ஒரு பிரிவும் என இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகின்றது.
மாணவர்களுக்கான உமாமகேசுவர இண்ட்ராக்ட்
கழகத்தின் வழிகாட்டி ஆசிரியராக, நண்பரும் முதுகலை ஆசிரியருமான திரு டி.பாபு
அவர்களும், மணவியருக்கான, இராதாகிருட்டின இண்ட்ராக்ட் கழகத்தின் வழிகாட்டி
அசிரியையாக, பட்டதாரி ஆசிரியை சகோதரி திருமதி பா.மகேசுவரி அவர்களும்
திறம்பட செயலாற்றி வருகின்றனர்.