ஆண்டு 1897.
சென்னை.
இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், அவர், அந்த
உன்னத மனிதர், ஒரு உயரிய முடிவை எடுத்தார்.
மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்.
நீண்ட வெண்ணிற மேலங்கி.
எட்டு முழ வேட்டி
ஓரத்தில் மெல்லிய சரிகையுடன் கூடிய வெண்மையானத்
தலைப் பாகை.
கம்பீரமான முகம்
அடர்ந்த மீசை
கனிவானப் பார்வை
இளகிய மனம்
அள்ள அள்ளக் குறையாத செல்வம்
சில நாட்களாகவே, அவர் முகத்தில் தீவிர சிந்தனையின்
கோடுகள்.




