12 செப்டம்பர் 2013

யானையை விழுங்கும் பாம்பு

   

    நண்பர்களே, தஞ்சைப் பெரிய கோயிலை அறியாதவர்கள் யாருமிருக்க இயலாது. பலர் நேரில் கண்டு வியந்திருக்கலாம். இதுவரை நேரில் காணாதவர்களும் கூட, என்றேனும் ஒரு நாள் பெரியக் கோயிலில் தங்கள் காலடியினைப் பதித்திட வேண்டும் என்ற ஆவல், கனவு, இலட்சியம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.

     தொழில் நுட்ப வசதிகள் ஏதுமில்லா அக்காலத்தில், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர், வானுயர எழுப்பப் பெற்ற, கற் கோயிலின் எழிலில், கம்பீரத்தில் மயங்கி, கோயிலின் வளாகத்திலுள்ள சில காட்சிகளை காணாமலேயே சென்று விடுவது இயல்புதான். அவ்வாறு பலரும் காணாத காட்சி ஒன்றினைத் தங்களுக்குக் காட்டிட விரும்புகின்றேன்.

     வாருங்கள் நண்பர்களே, தஞ்சைப் பெரியக் கோயிலுக்குச் செல்வோம். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா? சென்ற நூற்றாண்டு மக்கள், இப்பெரியக் கோயிலைக் கட்டியவர் யார் என்பதைக் கூட அறியாதவர்களாகவே இருந்துள்ளனர். கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பெற்றது என்று, பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு வெட்டிச் சோழன் என்பவரால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும் பதிவு செய்யப் பெற்றத் தகவல்களையே உண்மை என்று, நம் முன்னோர் நம்பி வந்தனர்.

     ஆங்கிலேய ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பெற்ற ஜெர்மன் அறிஞர் ஹுல்ஸ் என்பவரே, 1886 ஆம் ஆண்டில், பெரியக் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக் கோயிலைக் கட்டியவர் இராஜராஜ சோழன் என முரசறைந்து அறிவித்த பெருமைக்கு உரியவராவார்.

     ஆம் நண்பர்களே, ஒரு ஜெர்மானியர் வந்து சொன்ன பிறகுதான், பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பதே இந்நூற்றாண்டு மக்களுக்குத் தெரிந்தது. நமக்கும் புரிந்தது.
 
கேரளாந்தகன் திருவாயில்
    
இராஜராஜன் திருவாயில்
நண்பர்களே, நாம் இப்பொழுது பெரிய கோயிலின் வாசலில் நிற்கிறோம். கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயிலைக் கடந்து உள்ளே செல்வோம் வாருங்கள்.  இதோ நந்தி மண்டபம்.

     பன்னிரெண்டு அடி உயரமுள்ள, ஒரே கல்லினால் ஆன நந்தி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணுகின்றோம். இந்த நந்தியைப் பற்றிப் பல கட்டுக் கதைகள் உலாவுகின்றன. அவை நமக்குத் தேவையில்லை நண்பர்களே. நந்தியைப் பற்றி நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.


     
    பன்னிரெண்டு அடி உயரமுள்ள இந்த நந்தியையும், நந்தி மண்டபத்தினையும் கட்டியவர் இராஜராஜ சோழனல்ல. வியப்பாக இருக்கின்றதா நண்பர்களே உண்மைதான்.

      நந்தி மண்டபத்தில் இருந்து இடது புறம் பாருங்கள். இடது புற பிரகாரத்தில், வராகி அம்மன் கோயில் தெரிகிறதல்லவா. அந்த வராகி அம்மன் கோயிலுக்கு அடுத்துள்ள, பிரகார மண்டபத்தில், அளவில் சிறியதாய் ஓர் நந்தி சோகமாய் அமர்ந்திருப்பது தெரிகிறதா? வாருங்கள் அருகில் சென்று பார்ப்போம்.


     

   இருந்த இடத்தை விட்டு, வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்ட சோகத்துடன் அமர்ந்திருப்பது போல் காட்சி தருகின்றதே, இந்த நந்திதான் உண்மையில் இராஜராஜ சோழன் வடிவமைத்த நந்தியாகும். பிற் காலத்தில், பெரிய கோயிலின் எழிலார்ந்த நெடிய உருவத்தோடு ஒப்பிடுகையில், இந்த நந்தி சிறியதாக இருப்பதாக, எண்ணிய நாயக்க மன்னர்களால் நிறுவப் பெற்றதே இன்றைய நந்தியும், நந்தி மண்டபமும் ஆகும்.    
    வாருங்கள் நண்பர்களே, நந்தி மண்டபத்தைக் கடந்து, பெருவுடையாரைத் தரிசிக்க, முக மண்டபத்தின் படிக் கட்டுக்களில் ஏறுவோம் வாருங்கள். படிகளில் ஏறிவிட்டோம். ஓங்கி உயர்ந்த, முதல் நிலை வாயிலின் இடது புறம் பாருங்கள். விநாயகர். வலது புறம் பாருங்கள் விஷ்ணு துர்க்கை.

     நண்பர்களே, இதோ விநாயகருக்கு இடது புறமாகவும், விஷ்ணு துர்க்கைக்கு வலது புறமாகவும், இரண்டு துவார பாலகர்கள் நிற்கின்றார்களே பாருங்கள்.

     வாருங்கள், நிலை வாயிலின் இடதுபுறம், விநாயகருக்கு அடுத்துள்ள துவார பாலகரின் அருகில் செல்வோம் வாருங்கள். பாருங்கள் நண்பர்களே, நெடிதுயர்ந்த துவார பாலகர், பாம்பு ஒன்றினைத் தனது வலது காலால் மிதித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? நன்றாக அந்த பாம்பினைக் கவனியுங்கள். அந்தப் பாம்பானது, ஒரு யானையினை விழுங்கிக் கொண்டிருக்கும் காட்சி தெரிகிறதல்லவா?    


யானையின் பின்பாதி உடல், பாம்பின் வாய்க்குள் சென்று விட்ட நிலையில், முன்னங் கால்கள் இரண்டும் வெளியே இருக்க, துதிக் கையினை உயர்த்தி அவலக் குரல் எழுப்பி யானை பிளிறிடும் பரிதாபக் காட்சித் தெரிகிறதல்லவா? பாம்பின் வாயில் இருந்து, மீண்டு வர யானை போராடுவது புரிகிறதல்லவா?

     யானையை விழுங்கும் பாம்பு. உலகின் எம் மூலையிலும், காண இயலாத விசித்திரக் காட்சி. இதன் பொருள்தான் என்ன?

     இராஜராஜசோழன் பெரியக் கோயிலைக் கட்டிய காலத்தில் இருந்த பெரிய விலங்கு யானைதான். அந்த யானையினை ஒரு பாம்பு விழுங்குகிறது என்றால், அந்தப் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். எண்ணிப் பாருங்கள் நண்பர்களே. அவ்வளவு பெரிய பாம்பு, துவார பாலகரின் காலடியில், ஒரு மண் புழுவினைப் போல், சுருண்டு மிதிபட்டுக் கிடக்கிறது என்றால், அந்த துவார பாலகர் எவ்வளவு உயரமானவராக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்.

      நண்பர்களே, துவார பாலகரின் இடது கையினைப் பாருங்கள். அவ்வளவு பெரிய துவார பாலகர், தனது இடது கையினை கோயிலின் உள்ளே அமைந்திருக்கும், மகாலிங்கத்தை நோக்கி, வியப்புடன் காட்டுவதைப் பாருங்கள். நான் ஒன்றும் பெரியவனல்ல, உள்ளே இருக்கின்றாரே, அவரே மிகப் பெரியவர் என்னும் பொருள்பட கைகளைக் காட்டுவதைப் பாருங்கள்.

     நண்பர்களே, தஞ்சையிலே ராஜராஜேஸ்வரமடைய பரமசாமி அமர்ந்திருக்கும் விமானத்திற்குப் பெயர் தஷிணமேரு என்பதாகும். இக் கோயிலின் விமானம் பேரம்பலம். பேரம்பலம் என்பது ஒரு கட்டுமானப் பகுதி மட்டுமல்ல, பரவெளியாகிய அம்பலமாகும்.

     சிவமாக விளங்குகின்ற, நமது பிரபஞ்சமாகிய பரந்த வெளியை, பூஜிப்பதற்காக, ஒரு நிலைப் படுத்திக் கட்டப் பெற்றதே பெரியகோயிலின் விமானத்துள் காணப்படும் வெளியாகும். இங்கு எல்லையில்லாப் பிரபஞ்சம் பரவெளி, ஒரு எல்லைக்கு உட்பட்டு விமானத்தின் உட்கூடாகக் காட்சியளிக்கின்றது.

     நண்பர்களே, தாங்கள் சிதம்பரத்திற்குச் சென்றிருப்பீர்கள். சிதம்பரம் கோயிலில், நடராஜப் பெருமானை தரிசித்தவுடன், சிதம்பர இரகசியம் என ஓரிடத்தை தீட்சிதர்கள் காட்டுவார்கள். பார்த்திருப்பீர்கள்.

     அங்கு சுவற்றில் தங்கத்தால் ஆன, வில்வ இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். அடுக்குத் தீப ஒளியிலும், கற்பூர தீப ஒளியிலும், திரைச் சீலையை விலக்கிக் காட்டும் பொழுது, பிரபஞ்சத்தில் ஒளிரும் கோடானு கோடி விண்மீன்கள், கிரகங்களின் பேரொளியை, நாம் அங்கு ஒளிரும் தங்க வில்வ இலைகளில் கண்டு, பிரபஞ்சமாகத் திகழும் ஆடல் வல்லானின் பேராற்றலை, உருவத்தை உணரலாம். பிரபஞ்சத்தை உணர்தலே சிதம்பர இரகசியமாகும்.

     சிதம்பரத்தைப் போன்றே, ஆதி அந்தமில்லாத பர வெளியின் பேராற்றலை உணர்த்துவதே தஞ்சைப் பெரியக் கோயிலாகும். ஆம் நண்பர்களே, இப் பிரபஞ்சமானது முடிவில்லாதது, எல்லையில்லாதது, பிரபஞ்சத்தின் பேராற்றல் அளவிடற்கரியது என்பதை உணர்த்துவதே, துவார பாலகர்களின் நோக்கமாகும். இதுவே பெரிய கோயிலின் தத்துவமுமாகும்.


      நண்பர்களே, இராஜராஜன் இச்செய்தியினை உணர்த்த முற்பட்டது, இன்று நேற்றல்ல. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, தொழில் நுட்பம் ஏதுமில்லாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.


     எனது அழைப்பினை ஏற்று, தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி நண்பர்களே. தங்களின் பொன்னான நேரம், பயனுள்ளதாகவே கழிந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போமா நண்பர்களே.

91 கருத்துகள்:

 1. அருமையான படங்கள். அதிசயமான செய்திகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 2. //இராஜராஜன் இச்செய்தியினை உணர்த்த முற்பட்டது, இன்று நேற்றல்ல..... விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, தொழில் நுட்பம் ஏதுமில்லாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.//

  மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.

  கிரேன் வசதிகள் ஏதும் இல்லாமல், அவ்வளவு எடையுள்ள கற்களை எப்படித்தான் மேலே கொண்டு சென்று, அழகாகத்தளம் அமைத்தார்களோ !

  நினைத்தால் வியப்பூட்டுகிறது.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா. கோயில் சுவற்றில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் கூட கோயிலைக் கட்டியது எப்படி என்பதற்கான குறிப்புகள் இல்லை என்றே கூறுகின்றார்கள்.நன்றி ஐயா

   நீக்கு
 3. யானையை விழுங்கும் பாம்பு

  நமது முகநூல் நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் எழுதிய அற்புதமான பதிவு.
  நண்பர் நம்மை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு கைபிடித்து அழைத்து செல்கிறார். ஒவ்வொரு இடத்தையும் நமக்கு விளக்குகிறார். நாம் நேரில் பார்த்த உணர்வு. யானையை விழுங்கும் பாம்பு - இந்த இடத்தில் சொல்லும் போது அற்புதமான உணர்வு. மிகவும் அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் முக நூலில் பகிர்ந்தமைக்கும் நன்றி ஐயா

   நீக்கு
 4. எங்களைக் கூடவே கூட்டிப்போய் காண்பித்தமைக்கு நன்றி.

  இந்தப் பாம்பை நான் கோட்டை விட்டுட்டேனே:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. அடுத்த முறை தஞ்சை வரும் பொழுது பாருங்கள் ஐயா.

   நீக்கு
 5. தஞ்சை மா நகருக்கு பலமுறை வந்திருந்தாலும் இந்த தகவல்கள்
  ஏதும் அறியாது இந்த அற்புதக் கோவிலை வலம் வந்திருக்கிறேன்
  கையைப் பிடித்து அழைத்துச் செல்வதைப்போல அருமையான்
  புகைப்படங்களுடன் விளக்கங்களுடன் பகிர்வு மிக மிக அருமையான
  பதிவினைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. அடுத்தமுறை தஞ்சைக்கு வரும் பொழுது , தெரியப் படுத்துங்கள் ஐயா. தங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். எனது அலைபேசி எண். 94434 76716

   நீக்கு
 6. அற்புதமான அரிய தகவல்களை தருகிறீர்கள். தஞ்சை பெரிய கோவிலை ஒரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு பார்ப்பதற்காவே தஞ்சை வரவேண்டும் உங்களையும் சந்திக்கவேண்டும்
  உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. அவசியம் தஞ்சைக்கு வாருங்கள் ஐயா. நானும் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்

   நீக்கு
 7. இந்த காலத்தில் மக்கள் மனம்
  கையில் வைத்துள்ள
  ரிமோட் போல் ஆகிவிட்டது.

  எந்த காட்சியையும் கூர்ந்து முழுவதுமாக
  கவனிப்பதுமில்லை உள் வாங்கி கொள்வதுமில்லை.

  அதனால் தான் தேவையற்ற விஷயங்களில்
  மனதை செலுத்தி குழப்பத்துடனும்,
  பதட்டத்துடனும் வாழ்கின்றனர்.

  படமும் தகவல்களும்
  அருமை பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. நன்றி

   நீக்கு
 8. அவ்வளவு பெரிய பாம்பு, துவார பாலகரின் காலடியில், ஒரு மண் புழுவினைப் போல், சுருண்டு மிதிபட்டுக் கிடக்கிறது என்றால், அந்த துவார பாலகர் எவ்வளவு உயரமானவராக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்.

  பிரபஞ்சப்பெருவெளியை கண்முன்
  நிறுத்திய அற்புதமான பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே நன்றி

   நீக்கு
 9. நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட நந்தி அரிய தகவல். நன்றி

  பதிலளிநீக்கு

 10. தஞ்சை பெரிய கோயிலுக்குப் பலமுறை போனதுண்டு. திரு. பட்டாபி ராமன் சொல்வது போல் நாம் எந்தக் காட்சியையும் கூர்ந்து கவனிப்பதுமில்லை உள் வாங்கிக் கொள்வதுமில்லை. அழைத்துச் சென்று பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வு அளிக்கின்றன ஐயா. நன்றி

   நீக்கு
  2. ஒன்று நமக்கு நேரம் இருப்பதில்லை.

   நேரம் இருந்தால் நம்முடன் வருவோருக்கு
   ரசனை இருப்பதில்லை

   .நம்மை ரசிக்க விடுவதில்லை.

   இப்படியே ஆயுள் கழிந்துகொண்டிருக்கிறது .

   நாம் பிறரை அனுசரித்து போவதிலும்,
   உபசரிப்பதிலும் மீதி நேரம் இல்லாவைகளை
   நினைத்து நினைத்து மனம் புழுங்கி, புலம்பி. ,
   கிடைக்காதவைகளை நினைத்து
   சலித்துக்கொள்வதிலுமே
   நம் அனைவரின் வாழ்வும்
   வீணாகிக் கொண்டிருக்கிறது

   நீக்கு
 11. தஞ்சை பெரிய கோவிலை திரும்பவும், நேரில் தங்களுடன் சென்று பார்த்தது போன்று இருந்தது பதிவைப் படிக்கும்போது. தெரியாத புதுத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 12. விசித்திரக் காட்சி அபாரம் ஐயா... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 13. அறியாத பதிய செய்திகள்! மேலும் படங்கள்!நுட்பமான ஆய்வுகள்!
  நன்றி!நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன ஐயா நன்றி

   நீக்கு
 14. வாத்தியார் வேலையைத் தவிர இன்னொரு வேலையையும் நன்றாக செய்வீர்கள் போலிருக்கிறதே ...ஒவ்வொன்றையும் விளக்கிய விதம் அருமை !மீண்டும் ஒருமுறை வலம்வந்தது போலிருக்கிறது !

  பதிலளிநீக்கு
 15. தஞ்சை பெரிய கோவில்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். கோவில் பற்றி அறியாத தகவ்ல்களை அழகாக கைப்பிடித்து சென்று விளக்கினார் போல் இருக்கு. பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே நன்றி

   நீக்கு
 16. //நான் ஒன்றும் பெரியவனல்ல, உள்ளே இருக்கின்றாரே, அவரே மிகப் பெரியவர் என்னும் பொருள்பட கைகளைக் காட்டுவதைப் பாருங்கள்.//

  அவ்வளவு பெரிய துவார பாலகரே சிறியதாய் தெரியும் மகாலிங்கத்தின் முன் சிறிய நந்தி வைத்த இராஜராஜனின் ரசனையை அந்த நாயக்க மன்னர்கள் புரிந்து கொள்ள வில்லையே??

  பதிலளிநீக்கு
 17. தஞ்சை பெரிய கோவிலை விவரம் அறியா சிறு வயதில் பார்த்தது. உங்க பதிவு அந்த கோவிலை முழுவதுமாக சுற்றிக் காட்டியது. நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 18. ஆசிரியருக்கு வணக்கம்
  தஞ்சையும், தஞ்சை பெரிய கோவிலும் என் உயிர். இன்று தஞ்சை பெரிய கோவில் பற்றி நல்ல பதிவு செய்துள்ளீர்கள். அள்ள அள்ள குறையாத தகவல் களஞ்சியம் இராஜராஜேச்வரம். தங்கள் வலைபதிவை பல அன்பர்கள் கண்டுகளிக்கிறார்கள் மகிழ்ச்சி இதன் மூலமாவது பெரிய கோவலி பற்றி பல தகவல்கள் அன்பர்களுக்கு தெரிய வரட்டும்.
  ஐயா, பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் பெரிய கோவிலுக்கு (Authority) வரலாற்று அறிஞர், கல்வெட்டு நிபுணர். பெரிய கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் தெரிந்தவர். அவரைக்கொண்டு பெரியகோவில்- தொடர் எழுத்தச் சொல்லலாம்.(தங்கள் வலைப்பூவில் என் சிறிய ஆலோசனை) அவர் இராஜராஜேச்வரம் எனும் அற்புத நூலை எழுதியுள்ளார் விலை 700 பெரிய கோவிலைப்பற்றி மேலும் அறிய விரும்புபவர்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
  பெரிய கோவில் ஓர் அறிவு சுரங்கம், கள்கடை, போதை தரும் வஸ்து அதை தாங்கள் தொட்டு விட்டீர்கள் வரும் வலைப்பூவில் மேலும் அறிய செய்திகளை எதிர்பார்க்கிறேன்.
  நன்றி
  வணக்கம்
  தஞ்சை தாசன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களின் நூலில் இருந்துதான் பல செய்திகளை எடுத்துள்ளேன் ஐயா. தாங்கள் கூறுவதும் சரிதான்.
   நூலின் எல்லை குறுகிறது. வலைத் தளமோ பரந்து விரிந்தது. வலைப் பூவில் ஐயா அவர்கள் தொடராக எழுதினால் உலகு முழுதும் உள்ள ஆர்வலர்களைச் செய்தி உடனுக்குடன் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. நன்றி ஐயா

   நீக்கு
 19. மிக அருமையான பதிவு.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை காணவேண்டும் வணங்கவேண்டும் என்று நினைத்து காத்திருந்த நண்பர்களுக்கு கானொளி தரிசனம் கொடுத்து கூடவே பிரசாதமும் கொடுத்துள்ளீர்கள்.ஈசன் ஒருவனே இவ்வுலகில் பெரியவன் அவனின்றி வேறொன்றுமில்லை என்பதை இக்கட்டுரையின் மூலமாக உணர்த்தியமைக்கு மிக்க நன்றி.இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் மிகவும் அற்புதம்.இந்த அற்புதமான கட்டுரையை வழங்கியமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாலு.தங்களின் வாழ்த்தும் நட்பும் எனக்கு பெரு உற்சாகத்தினை அளிக்கின்றது நண்பரே. நன்றி

   நீக்கு
 20. மிக அருமையான பதிவு.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை காணவேண்டும் வணங்கவேண்டும் என்று நினைத்து காத்திருந்த நண்பர்களுக்கு கானொளி தரிசனம் கொடுத்து கூடவே பிரசாதமும் கொடுத்துள்ளீர்கள்.ஈசன் ஒருவனே இவ்வுலகில் பெரியவன் அவனின்றி வேறொன்றுமில்லை என்பதை இக்கட்டுரையின் மூலமாக உணர்த்தியமைக்கு மிக்க நன்றி.இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் மிகவும் அற்புதம்.இந்த அற்புதமான கட்டுரையை வழங்கியமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. தஞ்சை வந்ததில்லை. தங்கள் பதிவு ஆவலை தூண்டுகிறது. சிறப்பு மிக்க கட்டுரைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது தஞ்சைக்கு வாருங்கள் சகோதரியாரே. தங்களின் வருகைக்கம் வாழ்த்திற்கும் நன்றி

   நீக்கு
 22. ஐயா... என்ன அற்புதம்!..

  பிரமிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆச்சரியத்தில் அகலத்திறந்தன என் கண்களும் உணர்வுகளும்... வார்த்தைக்குள் அடங்குவதாக இல்லை ஐயா!
  ஏதோ நானும் செய்த பேறுதான் உங்கள் பதிவினைக் கண்ணுற்றுப் படித்து உணர்வது...

  மிக மிக அருமையாக உங்கள் வர்ணனை, படங்கள் மிகத்துல்லியமாக எடுத்துக் காண்பித்தமை யாவுமே அருமை!

  சிறந்த வரலாற்றுப் பதிவு! பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன சகோதரியாரே. நன்றி. வாய்ப்புஅமையும் பொழுது தஞ்சைக்கு வாருங்கள் பெரியக் கோயிலில் எழிலார்ந்த தோற்றத்தினை கண்ணாரக் கண்டு களியுங்கள்.

   நீக்கு
 23. ஏழாவது படிக்கும்போது பள்ளி சுற்றுலாவில் சென்ற போது பார்த்த கோயில்...அன்றைய நம் முன்னோர்களின் கலைத்திறமையை எடுத்துக்காட்டியது உங்கள் கட்டுரை..கூடவே பல தெரியாத செய்திகளையும்..ஜெர்மானியர் சொன்னது, மற்றும் நந்தி கதை போன்றவை....கட்டுரைக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே. வாய்ப்பு கிடைக்கும்பொழுது தஞ்சைக்கு மீண்டடும் ஒரு முறை வாருங்கள்

   நீக்கு
 24. பெயரில்லா12 செப்டம்பர், 2013

  மிக அற்புதமான தகவல்கள் மேனி சிலிர்த்துது.
  இனிய வாழ்த்து ஐயா.
  தீரு இரத்தினவேல் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்.
  ஆயினும் வாசித்திருப்பேன்
  இனிய நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே நன்றி

   நீக்கு
 25. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே நன்றி

   நீக்கு
 26. இதுவரை தஞ்சை சென்றதில்லை.. இந்த கோயிலை பார்பதற்க்கே செல்லும் ஆவல் வருகிறது.. உங்கள் பதிவு கோயிலில் கவனிக்க படவேண்டிய அம்சங்களை அள்ளிதந்துள்ளது.. மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் தஞ்சைக்கு வாருங்கள் . தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 27. கோயிலுக்கு உள்ளே சென்று திரும்பியது போன்ற மனநிறைவு தங்கள் பதிவால் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 28. விரிவான தகவல்கள் சார் .... நிறைய அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்பதின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த பதிவு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா நன்றி

   நீக்கு
 29. தஞ்சை பெரிய கோயிலை பற்றிய அறிந்திராத செய்திகள் அழகான படங்களுடன் பகிர்ந்தமை சிறப்பு! யானை விழுங்கும் பாம்பினை மிதித்துக் கொண்டிருக்கும் துவார பாலகர் சிலையை வேறு எங்கோ கூட கண்டதாக நினைவு! அருமையான சிற்பம்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா. இது போன்ற சிலை எங்கும் இல்லை எனக் கூறக்கேட்டிருக்கின்றேன் ஐயா நன்றி

   நீக்கு
 30. அன்பின் ஜெயகுமார் - தஞ்சை நான் பிறந்த ஊர் - 13 ஆண்டுகள் வசித்த ஊர் - 1950-1963. 1963ல் மதுரை சென்று விட்டேன்.

  50 ஆண்டுகளாக ஒரு முறையோ இரு முறையோ நான் மட்டும் தஞ்சை வந்திருக்கிறேன் அலுவல் நிமித்தமாக. அவ்வளவுதான்.

  தஞ்சைப் பெரிய கோவில் - நாங்கள் வசித்த காலத்தில் தஞ்சைக்கு யார் விருந்தினராக வந்தாலும் - நான் தான் அவர்களை பெரிய கோவிலுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி வருவேன். அக்காலத்தினை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  தஞ்சை விஜயம் - துணைவியாரோடு - திட்டம் இடுகிறோம் - முன் கூட்டியே தங்களுக்குத் தகவல் கொடுக்கிறோம்.

  தஞ்சை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பதிவர்களை அழைத்து ஒரு பதிவர் சந்திப்பும் நடத்துவோம்.

  பெரிய கோவில் பற்றி நான் ஒரு பதிவு போட்டதாக நினைவு - ஆனால் தேடும் போது கிடைக்க வில்லை - இன்னும் தேட வேண்டும் - பார்க்கிறேன்

  இப்பதிவு அருமையான பதிவு - தகவல்கள் அத்தனையும் படங்களும் அருமை - பல அரிய எனக்குத் தெரியாத தகவல்கள் பதிவில் உள்ளன.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மட்டில்லா மகிழ்வினை அளிக்கின்றன ஐயா. நன்றி.
   தாங்கள் தஞ்சைக்கு வர இருக்கின்றீர்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியைத் தருகின்றது. அவசியம் தெரியப் படுத்துங்கள் ஐயா.தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். இங்குள்ள பதிவர்களிடமும் தெரியப் படுத்தி சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றேன் ஐயா.
   எனது அலைபேசி எண். 94434 76716

   நீக்கு
 31. நம்ம ஊரைப் பற்றிய பதிவு என்றால் தேனினும் தித்திப்புத் தான்!... அன்புடையீர் தங்களுடைய பதிவு கண்டு மகிழ்கின்றேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொந்த ஊரின் நினைவே தித்திப்புத் தான். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 32. தஞ்சை துவாரகபாலர் படம் பல வருடங்களுக்கு முன் கோயில்தர்சனத்தில் எடுத்திருந்தோம். விளக்கம் உங்கள் பகிர்வில் புரிந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 33. நெஞ்சை கொள்ளை கொள்ளும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் தந்து விளக்கியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 34. தஞ்சை பெரிய கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். இருப்பினும் தங்கள் எழுத்து வழி படிக்கும்போது இன்னும் சிறப்பே. அடுத்த கோயில் எதுவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து என்னை உற்சாகப் படுத்துகின்றது ஐயா. நன்றி

   நீக்கு
 35. நல்ல படங்கள். அற்புதமான விளக்கம். உங்கள் மூலம் தஞ்சைக் கோவிலின் சிறப்பினை தெரிந்து கொண்டேன். இன்னும் தஞ்சையில் ஒரு நாள் தங்கி கோவிலை முழுவதும் பார்க்க ஆசை. என்று வாய்க்குமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அடுத்த பயணத்தின் போது அவசியம் தஞ்சைக்கு வாருங்கள் ஐயா. நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கும் வருகைக்கும் ,

   நீக்கு
 36. அருமையான விளக்கங்கள். சிலமுறை சென்றிருந்தாலும் இதில் பெரும்பாலானவற்றை உங்கள் எழுத்து மூலமே அறிந்தேன். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 37. ரொம்பவும் அருமையான பதிவு! இரு மாதங்களுக்கொரு முறை அவசியம் தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று ரசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இடையில் நண்பர்கள் வந்தாலும் அவர்களை அழைத்துச் செல்லும்போதும் அதே ர்சனையும் லயிப்புமாக இருப்பது வழக்கம். மறுபடியும் ஒரு முறை உங்கள் வாயிலாக இங்கிருந்தே ரசிக்க முடிகிற அளவு மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே நன்றி. எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே தோன்றாத காட்சியல்லவா பெரிய கோயிலின் காட்சி. நன்றி சகோதரியாரே

   நீக்கு
 38. நேரம் இருந்தால் பாருங்கள் நம்ம தஞ்சைப்பதிவு.

  http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/blog-post_20.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் இதோ வருகின்றேன் ஐயா தங்களின் பதிவிற்கு.

   நீக்கு
 39. விளக்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவு! பகிர்விர்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 40. பெயரில்லா13 செப்டம்பர், 2013

  தங்களின்செய்திகளைவாசிக்கும்போது சுவாசிப்பதுபோலஉணர்ந்தேன்நன்றி

  பதிலளிநீக்கு
 41. யானையை விழுங்கும் பாம்பு
  என்ற சிற்பம் ஒரு தகவலைச் சொல்லுகிறது.

  இந்த இடத்தில் யானை என்பது
  இவ்வுலகில் வாழும் உயிர்களை குறிக்கிறது.

  பாம்பு என்பது
  காலனைக் குறிக்கிறது.

  இந்த உலகில் பிறந்த உடனேயே
  ஒவ்வொரு உயிரையும் மரணம்
  விழுங்கி கொண்டே வருகிறது
  என்பதை மறைமுகமாகக் காட்டும்
  உண்மைதான் இந்த சிற்பம் கூறும் பாடம்.

  அந்த காலன் என்னும் பாம்பை தன் காலில் போட்டு
  நசுக்கும் சக்தி படைத்தவன் உள்ளே இருக்கிறான்
  என்பதைத்தான்(அதாவது நம் உள்ளத்தின் உள்ளே இருக்கிறான்)
  துவாரபாலகர் காட்டுகிறார்.

  மார்க்கண்டேயரின் உயிரை கவர
  வந்த காலனை காலால் உதைத்து காத்த
  காலகாலனை நம் உயிர் இந்த உடலை விட்டு
  நீங்குமுன் பற்றுக்கோடாக கொண்டு
  உய்யவேண்டும் என்பதே
  இந்த சிற்பம் கூறும். உண்மை.

  இந்த உண்மையை அறியாது
  யானை போன்று நாம் ஆபத்தை அறியா மூடமாயிருந்தால்
  நாம் காலன் என்னும் பாம்புக்கு இரையாகிவிடுவொம்
  என்பதை உணர்ந்து கொண்டு
  எந்த கடமை செய்தாலும்
  இறை உணர்வோடு இருக்கப்
  பழக வேண்டும். .

  பதிலளிநீக்கு
 42. பெயரில்லா15 செப்டம்பர், 2013

  வணக்கம்
  ஐயா

  தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய பல புதிய விடயங்களை படிக்க கிடைத்தமைக்கு மிக நன்றி ஐயா. பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் ஐயா,

  விரிவான விளக்கங்களுடன் இக்கட்டுரை மிகப்பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 44. அரிய தகவல்கள் தந்த அறிஞரே நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 45. அய்யா...தஞ்சை பெரிய கோயிலை கட்டியதால்தான் அந்த காலத்தில் சோழன் கஷ்டப்பட்டார் என்று சொல்கிறார்களே..இந்த காலத்திலும் அந்த கோபுர பொம்மைகள் வீட்டில் இருந்தால் கஷ்டம் என்கிறார்களே உண்மையா?

  பதிலளிநீக்கு
 46. அனகோண்டா என்ற படம் வந்தப்போது,தமிழகத்திலும் பெரிய அனகோண்டா போல பாம்பு இருந்தது அதுக்கு ஆதாரம்னு இந்த சிலை செய்தியை ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்ததை படித்துள்ளேன்,இதே துவாரப்பாலகர்கள் இடுப்பில் பாம்பு கட்டியிருக்க, யானையை முழுங்கும் சிலையும் இருக்குனு போட்டிருக்கு.

  பதிலளிநீக்கு
 47. பெயரில்லா20 செப்டம்பர், 2013

  வணக்கம்
  ஐயா
  இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்க்கவும் இங்கேhttp://blogintamil.blogspot.com/2013/09/4.html?showComment=1379631760719#c7451803708075538998

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 48. துவாரபாலகர் பற்றிய விரிவான படங்கள் அற்புதம். நந்தி மண்டபம் குறித்த தகவலும் இதுவரை அறிந்திராத ஒன்று.

  பதிலளிநீக்கு
 49. பெருவுடையார் கோவில் பற்றிய அறிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 50. அருமை அய்யா துவாரபாலகரை பற்றி
  அழகாக பதிவு செய்தீா்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு