அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
ஆயிரக் கணக்கான இருட்டு சமையலறைகளும்
சாம்பல் நிறத்தில் ஓங்கிநின்ற
இயந்திரங்களும்
ஒரு திடீர்ச் சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற,
எங்களைக் கேட்கின்ற மக்களுக்காக
பிரட் அண்ட ரோசஸ், பிரட் அண்ட் ரோசஸ்
-- ஜேம்ஸ்
ஓப்பன்ஹிமின்
ஆயத்த ஆடை தொழிற்சாலை மற்றும் ஜவுளித்
தொழிற்சாலையைச் சார்ந்த பெண்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்ற ஆண்டு 1857,
மார்ச் 8. இடம் நியூ யார்க்.
ஊசி, நூல், மின்சாரம், வேலைக்குப்
பயன்படுத்தும் நாற்காலி மற்றும் கைப் பெட்டிக்கும் தொழிலாளர்களே பணம் கட்ட வேண்டிய
பரிதாப நிலை. தாமதமாக வந்தால் அபராதம். கழிவறையில் சற்று அதிக நேரம் இருந்தாலும்
அபராதம். இதுதான் அன்றைய நிலை.
நண்பர்களே, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற
போராட்டத்தில் ஈடுபட்ட, ஒரு பெண் சொன்னதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் நிச்சயமாய்
உடையும்.
நாங்கள் விலை குறைந்த துணிகளையே அணிந்தோம்.
கொடுமையான குடிசைகளில் வாழ்ந்தோம். மலிவான உணவை உண்டோம். எதிர்பார்ப்பதற்கு
ஒன்றுமே இல்லை. மறுநாளாவது நன்றாக இருக்க வேண்டுமே என்று ஆசைப் படுவதற்குக் கூட
எதுவுமே இல்லை.
துணிந்து
இறங்கிய பெண் தொழிலாளர்கள்,
எங்களுக்கு
ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும்
என்ற
பிரச்சார முழக்கத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.
As we come marching,
marching, in the beauty of the day
A million darkened
kitchens, a thousand lofts gray
Are touched with
all the radiance that a sudden sun discloses
For the people hear
us singing
Bread and Roses,
Bread and Roses
பெண் தொழிலார்கள் தங்களின் உரிமைக்காகவும்,
பசி, பட்டினி, ஓய்வின்மை, வாக்குரிமை, கூலி உயர்வு, எட்டு மணி நேர வேலை, வேலை
நிரந்தரம் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தியும், வீதியில் இறங்கி முதன் முதலில்
பேராடிய, அதே ஆண்டில், 1857 ஆம் ஆண்டில், ஜுலை மாதம் 15 ஆம் நாள் ஜெர்மனியில்
பிறந்தவர்தான் கிளாரா ஜெட்கின்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சர்வதேசப் பொதுவுடமை இயக்கத்தின்
தலைவர்களுள் ஒருவராய் உயர்ந்தவர் கிளாரா. பன்மொழிப் புலமையும், ஆழ்ந்த அரசியல்
அறிவும், இலக்கிய ஞானமும் உடையவர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓசிப் ஜெட்கினை மணந்தார்.
தனது கணவரிடமிருந்து மார்க்சியத்தையும், விஞ்ஞான சோசலிசத்தையும் கற்றுணர்ந்து
மார்க்சியவாதியாக மலர்ந்தார்.
நண்பர்களே, கிளாராவின் இரு மகன்களின் பெயர்
என்ன தெரியுமா? முதல் மகனின் பெயர் மார்க்சிம். இரண்டாவது மகனின் பெயர் கான்ஸ்டான்டின்.
நண்பர்களே, கிளாரா ஜெட்கின் பற்றிய இரு
செய்திகளைக் கூறப் போகிறேன். இதிலிருந்தே, பெண்களின் உரிமைக்காக இடிமுழக்கமெனக்
குரல் கொடுத்த, பெண்ணுரிமைப் போராளியின் உணர்வும், மேன்மையும் உங்களுக்குப்
புரியும்.
ஒன்று, பாரீசில் இருந்த பொழுது, மூலதனம்
என்னும் காலப் பெட்டகத்தை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ்-ன்
மகளான, கிளாராலாய்ப் உடன் இணைந்து, பெண் தொழிலாளர்களைப்
புரட்சியாளர்களாக மாற்றப் போராடிய வீராங்கனை இவர்.
இரண்டு, இரஷ்யாவிற்குச் சென்று, மாமேதை
லெனினைச் சந்தித்து, உரையாடி, அவரது அறிவு வெளிச்சத்தில், தனது தத்துவப்
பார்வையை கூர் தீட்டிக் கொண்டவர் இவர்.
![]() |
கிளாராவிற்கு லெனின் எழுதிய கடிதம் |
இருபத்தைந்து ஆண்டுகள் சமத்துவம் என்னும்
இதழின் ஆசிரியராய் இருந்தவர் கிளாரா. உலக யுத்தத்தின்போது, 1914 ஆம் ஆண்டு நவம்பர்
7 ஆம் தேதி வெளியான இதழில் இவர், ஆண்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்ற
தருணத்தில், வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் ஆகிய நாம் போராட வேண்டும்.
ஆண்கள் மௌனமாக இருக்கும் பொழுது, நமது கடமைகளை உரக்கச் சத்தமிட்டுச் சொல்ல வேண்டிய
கடமை நமக்குள்ளது என்று போதித்தார்.
சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் அமைப்பின்
தலைவரான கிளாரா அவர்கள், 1915ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள், ஒரு கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி,
போலந்த், ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த 28
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
யுத்தத்தின் மீதான எதிர்ப்பை, முதன்
முறையாக ஒருமுகப் படுத்தும் வடிவில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், யுத்தத்திற்கு
எதிராக, கிளாரா ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்
பட்டது.
இலட்சக் கணக்கானோர் ஏற்கனவே சமாதிகளில்
ஓய்வு எடுக்கின்றனர். இன்னும் பல இலட்சக் கணக்கானோர் கை, கால்களையும், கண்களையும்
இழந்து, சிதறுண்ட மூளைகளுடனும், தொற்று நோய்களுடனும், இராணுவ மருத்துவ மனைகளில்
அழிந்து வருகினறனர்.
மேலும் இந்த யுத்தத்தால் யாருக்கு லாபம்?
ஒவ்வொரு நாட்டிலும் மிகக் குறைவானவர்கள் மட்டமே இந்த யுத்தத்தால் லாபமடைகின்றனர்.
ரைபிள்களையும், பீரங்கிகளையும், நெஞ்சுக் கவசங்களையும் வழங்குபவர்களும், இராணுவ
வீரர்களுக்குத் தேவையான பிற பொருட்களை வழங்குபவர்களுமே, இந்த யுத்தத்தால்
லாபமடைகிறார்கள்.
லாபங்களுக்காக அவர்கள் மக்கள் மத்தியில்
முரண்பாடுகளைத் தூண்டி விடுகின்றனர். பொதுவாக இந்த யுத்தம் முதலாளிகளுக்கு மட்டுமே
பயன் அளிக்கும்.
யுத்தத்தைக் கண்டிப்போம். சோசலிசத்தை
நோக்கிப் பயணிப்போம்.
கிளாரா எந்த அளவிற்குத் தெளிவும், தைரியமும்
மிகுந்தவர் என்பது இப்போது விளங்குகிறதல்லவா.
நண்பர்களே, கிளாராவின் இவ்வறிக்கை
ஸ்விட்சர்லாந்தில் அச்சடிக்கப் பட்டு, ஜெர்மனியில் இரகசியமாகவும், பரவலாகவும்
விநியோகிக்கப் பட்டது.
விளைவு என்ன தெரியுமா? கிளாரா கைது செய்யப்
பட்டார். கார்ல்ஸ் ரோஹெவில் நான்கு மாதச் சிறை.
நண்பர்களே, சர்வதேச பொதுவுடமை இயக்கத்தின்
மாவீரத் தலைவியும், ஆணாதிக்கத்தைத் தகர்த்தெறிய போரடிய வீராங்கனையுமான, இந்த
கிளாரா ஜெட்கின் அவர்கள்தான், 1910 ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் நடைபெற்ற, சர்வதேசப்
சோசலிசப் பெண்கள் மாநாட்டில்,
மார்ச்
8 ஆம் நாளினை
உலக
மகளிர் தினமாக
அறவிக்க
வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
ஆயிரமாயிரம் பெண்கள், தங்களது அடிப்படை
உரிமைகளைப் பெற, இரத்தம் சிந்திப் போராடிய, வரலாற்றை நினைவு கூறும் நாள்தான்
மார்ச் 8, உலக மகளிர் தினம்.
நண்பர்களே, உலக மகளிர் தினம் என்ற பெயருக்குப்
பின்னால் உள்ள உண்மை வரலாறு, இரத்தம் சிந்திய வீர வரலாறு, உண்ண உணவின்றி, உடுக்க
தரமான உடையின்றித் தவித்த, வீதிக்கு வந்துப் போராடிய வீராங்கனைகளின் உணர்வு
வரலாறு, இன்று மறக்கப்பட்டு விட்டது என்பதுதான் சோகத்திலும் சோகம்.
இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி,
சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப் பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள்
வலுப்படுத்தப் படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர்
எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.
வாழ்க கிளாரா ஜெட்கின்.
அன்புச் சகோதரிகளுக்கு, உலக மகளிர் தின
வாழ்த்துக்கள்.
-------
பரந்து பட்ட
பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில், ஆண் தொழிலாளர் மீது வைத்த
அக்கறையை, பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால், அது பாட்டாளி வர்க்க இயக்கம்
தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்.
-
கிளாரா ஜெட்கின்
-------
பட்டங்கள்
ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில்
பெண்கள் நடத்த வந்தோம்
- மகாகவி பாரதி
யுத்தத்தைக் கண்டிப்போம். சோசலிசத்தை நோக்கிப் பயணிப்போம்.
பதிலளிநீக்குபெண் போராளிகளின் பெருமைமிகு சரித்திரத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
வருகைக்கு நன்றி
நீக்குஉலக மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே
தோன்றிக் கொண்டே இருக்கும் எண்ணம் உண்மை தான் ஐயா... அதில் சந்தேகமே இல்லை... சிறப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, உலக மகளிர் தினம் நாளை 08.03..2014 கொண்டாட இருக்கின்ற நம் மகளிர்களான சகோதரிகளுக்கு ஓர் அருமையான சரித்திர நிகழ்வினை சுட்டிக்காட்டியதுடன் அந்த தினத்தினை வெறும் கோலப்போட்டி போன்ற மகளிரை அடக்கி வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் அறிவினை வெளிப்படுத்தும் கருத்தரங்கம், பட்டிமன்றம், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டுகிறது உங்கள் பதிவு. மிகவும் அற்புதமாக இப்பதிவினை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபடிக்கும் போதே உணர்ச்சி பெருக்கெடுக்கிறது, அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் வலைப் பூவில் எழுதிவரும் தங்களின் வருகைக்கும்
நீக்குவாழ்த்திற்கும் நன்றி நண்பரே
அருமையான பதிவு! உரிய காலத்தில்! வாழ்க! மகளிர்!
பதிலளிநீக்கு// ஆண்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்ற தருணத்தில், வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்குப் பெண்கள் ஆகிய நாம் போராட வேண்டும்.//
பதிலளிநீக்குகிளாரா அவர்கள் சொன்னதில் எவ்வளவோ அர்த்தங்கள்! பெரும்பாலும் கொலைக் குற்றவாளிகளில் ஆண்கள்தான் அதிகம்!
// இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப் பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப் படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது //
என்ற தங்களின் இந்த வரிகள்தான் உண்மை.
புரட்சிப் பெண்மணி கிளாரா ஜெட்கின். பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு நன்றி!
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாத்திற்கும் நன்றி ஐயா
நீக்குபாடுபட்டு வாங்கிய உரிமை சில பெண்கள் தவறாய் பயன்படுத்தும்போது எரிச்சலாய் வருகிறது. இத அப்படியே பதிவிறக்கம் பண்ணிக்கிட்டே என் மகள்களும், மகனும் படிக்க. பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குநல்லதுவும் கெட்டதுவும் இணைந்ததுதானே இவ்வுலகம்,
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
பெண் போராளிகளின் பெருமைமிகு சரித்திரத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு[தங்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடமே இந்த என் பின்னூட்டம்]
வருகைக்கும் வாழ்த்திற்ககும் நன்றி ஐயா
நீக்கு//[தங்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடமே இந்த என் பின்னூட்டம்]//
நீக்குஇந்த வரிகளைப் படித்ததும் முதலில் பொருள் விளங்கவில்லை ஐயா. பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.
தங்களின் கூர்மையான பார்வைக்கும், சீர்மிகு கவனத்திற்கும்
தலை வணங்குகின்றேன் ஐயா
நன்றி
Hello, I am not getting your articles through e mail. Pl look into it & do the needful - Ganesan.
பதிலளிநீக்குதங்களின் மின்னஞ்சல் முகவரியினைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் ஐயா.
நீக்குநானே தெரியப்படுத்துகின்றேன்.
நன்றி ஐயா
அருமையான சொற்சித்திரம்!..
பதிலளிநீக்கு//இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப்பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப்படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது..//
எனும் வரிகள் - ஆணாதிக்கத்தைத் தகர்த்தெறிய போராடிய வீராங்கனை - கிளாரா ஜெட்கின் அவர்களைப் பற்றிய கட்டுரையின் மகுடம் எனத் திகழ்கின்றன.
கிளாரா ஜெட்கின் போன்றவர்களின் உணர்வுப் பூர்வ போராட்டத்தின் பலனைத் தான் இன்றைய மகளிர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நீக்குநன்றி ஐயா
கருத்துச் செறிவுள்ள கட்டுரை! உரிய காலத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஇவரைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு போராளியை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவ்வாறான முக்கியப் பிரமுகர்களை வரலாற்றில் தடம் பதித்தவர்களைத் தாங்கள் தேடிக் கண்டுபிடித்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தங்களது பெருமனது வாழ்க.
பதிலளிநீக்குதங்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான் ஐயா.
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
இப்படி உருவான உலக மகளிர் தினம் ,இன்று ஒரே டிசைன் சேலை உடுத்திக் கொண்டு .சமைக்காமல் சாப்பிட்டு அந்த தினம் கொண்டாடப் பட்டு முடிந்து விடுகிறது !
பதிலளிநீக்குஒவ்வொரு ஊரிலும் ஒரு கிளாரா உருவானால் அல்லவா நாடு உருப்படும் ?
த ம +1
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
நீக்குகச்சிதமான பதிவு!
பதிலளிநீக்குகிளாரா பற்றிய பதிவு வழக்கம் போல் அருமை என்றாலும் .அதை விட என்னை கவர்ந்தது //இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப்பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப்படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது..// அண்ணா சூப்பர் !!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குஉலக மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
மாா்ச் 8 மகளிா் தினம் என்று தான் தொிந்திருந்தது.
பதிலளிநீக்குஆனால் அதன் பின்னனியில் உள்ள விவரம் இப்போதுதான் தெளிந்தது.
நன்றி புதிய தகவல் விளக்கத்துடன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
நீக்குஅருமையான பகிர்வு ஐயா....
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான சாலப்பொருத்தமான பகிர்வு!ஐயா!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமகளிர் தின முன்னோடியை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு/ இன்று மகளிர் தினமானது, கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி என திசை திருப்பப் பட்டு, பெண்ணடிமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப் படுகின்றனவோ, போராட்ட குணங்கள் மழுங்கடிக்கப் படுகின்றனவோ என்ற ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது //
பதிலளிநீக்குஉண்மை உண்மை! போராடும் குணம் மழுங்கடிக்கப் படுகின்றதுதான்! பெண்கள் இயக்கங்கள் பெருகிவிட்டனவே தவிர ஒவ்வொரு வன்முறைக்கும் குரல் கொடுத்து விட்டு பின்னர்காணாமல் போய்விடுகின்றனர் என்பதுதான் உண்மை! அந்த வன்முறைகளுக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து அதற்கான தீர்வு காணும் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை
நல்ல அருமையான பகிர்வு! மிக்க நன்றி!
வாழ்த்துக்கள்!
தாங்கள் கூறுவதுதான் சரி நண்பரே. ஒவ்வொரு வன்முறையின் போதும் குரல் கொடுக்கின்றார்களே தவிர, தொடர்ந்த செயல்பாடுகள் வேண்டுமல்லவா?
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
போற்றுதற் குரிய அருமையான பகிர்வு ! வாழ்த்துக்கள் சகோதரா .
பதிலளிநீக்குமிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றி சகோதரியாரே
நீக்குஉலக மகளிர் தின வாழ்த்துக்கள்
அன்பு ஐயாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்குபெண்கள் தினம் பற்றிய தங்களின் ஆழமான சிந்தனைக்கு முதலில் நன்றி. மார்ச் 8 எனும் நாள் மகளிர் தினமான வரலாற்றைக் கூறிய விதம் மிகவும் கவர்ந்தது. வாழ்க கிளாரா ஜெட்கின்.
அன்புச் சகோதரிகளுக்கு, உலக மகளிர் தின வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
நீக்குவீர மங்கை க்ளாராவின் வரலாஉ மெய் சிலிர்க்க வைக்கிறது. அறியாத பல தகவல்கள். நன்றி ஜெயகுமார் சார்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குபெருமைக்குரிய கிளராவின் வரலாறு கண்டு ஆச்சரியமும் மகிழ்வும் கொண்டேன் இதுவரை அறியாத விபரம் அறிந்தேன். அருமையான கட்டுரை. நன்றி வாழ்த்துக்கள்.....! அறியத் தந்தமைகும் நன்றி சகோ!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குVery nice article. Happy women's day. Thanks.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குVery nice article. Happy women's day. Thanks.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசமூகத்திற்கு பயனுள்ள தகவல்களை மட்டுமே தருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் உங்களைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது நண்பரே!
பதிலளிநீக்குதங்களின் அன்புக்கு நன்றி ஐயா
நீக்குவரலாற்று ரீதியிலான அருமையான பதிவு அய்யா. இன்றைய மகளிர்தினப் பெயரிலான வர்த்தகக் கொண்டாட்டங்களையும் ஒப்பிட்டு முடித்த விதம் மிகவும் அருமை அய்யா. இதுதான் இந்த இணைப்புத்தான் மிகவும் முக்கியம். நன்றி
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்குஆகா உங்கள் பதிவுகள் அனைத்தும் பாடங்கள்...
பதிலளிநீக்குஎனது மாணவர்களோடு பகிர்ந்துகொள்ளக் கூடிய பதிவுகள் வாழ்த்துக்கள் அய்யா..
அருமையான கட்டுரை.... இன்றைக்கு மகளிர் தினங்கள் கொண்டாடும் விதம் பற்றிய உங்கள் கருத்து தான் எனது கருத்தும்...
பதிலளிநீக்குஉலக மகளிர் தினம் கொண்டாட ஆரம்பிக்க காரணமாக இருந்தவர் பற்றிய விவரங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
.தாமதமான கருத்துக்கு மன்னிக்காகவும்.
பதிலளிநீக்குஉலக மகளிர் தின நாளுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாற்று கூற்று அடங்கியிருக்கிறதா?
சிறப்பான கட்டுரையை மிகவும் சிறப்பான ஒரு தினத்தில் தந்தமைக்கு நன்றி.
நண்பரே வருக வருக.
நீக்குதளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு மகிழ்வினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
நன்றி நண்பரே
வணக்கம் இம்மாதிரி பதிவுகள் எப்படி உருவாகிறது என்ற வித்தையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...
மிக்க நன்றி ஐயா.
நீக்குமகளிர் தின பதிவு அருமை ஐயா. ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளீர்கள். உங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன
நீக்குநன்றி ஐயா