தொழிலில்தான் எத்தனை எத்தனை வகைகள், எத்தனை
எத்தனை முறைகள். செய்யும் தொழிலைக்கூட சேவையாகச் செய்பவர்கள் பலர், இன்றும்
இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதரைக் கடந்த வாரம் சந்தித்தேன்.
கடந்த 12.5.2014 திங்கட் கிழமை இரவு 7.00
மணியளவில், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக, எனது மனைவியுடன்,
இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். தஞ்சைப் பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில்
இருந்த கடைகளில் பொருட்களை வாங்கிய பிறகு, என் மனைவி பின் இருக்கையில்
அமர்ந்தவுடன், வண்டியைக் கிளப்பினேன்.
சிறிது தூரம் கூட செல்லவில்லை. வண்டி பிடி
கொடுக்காமல், இடது புறமாகவும், வலது புறமாகவும், தன்னிச்சையாய் திரும்பி முரண்டு
பிடித்தது. வண்டியை நிறுத்துவதற்குள், பின்னால் வந்த ஒருவர், சார், பின்
சக்கரத்தில் காற்று இல்லை என்றார். ஆம் வண்டி பஞ்சராகிவிட்டது.
நாங்கள் இருந்ததோ, தஞ்சைப் பழைய பேரூந்து
நிலையத்திற்கு அருகில். சுற்றிலும் எத்தனை எத்தனை நகைக் கடைகள், மருந்து கடைகள்.
ஆனால் வாகன பழுது நீக்கும் கடை ஒன்று கூட கிடையாது. எந்த திசையில் சென்றாலும், ஒரு
கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றுதான், கடையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
கடையைக் கண்டுபிடித்தாலும், அங்கிருந்து
ஒருவரை அழைத்து வந்து, பின் சக்கரத்தைக் கழற்றி, மீண்டும் அதைக் கடைக்கு எடுத்துச்
சென்றாக வேண்டும். கடையில் பஞ்சர் ஒட்டியவுடன், மீண்டும் சக்கரத்தைத் தூக்கிக்
கொண்டு வந்து, வண்டியில் பொருத்தியாக வேண்டும். எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும்.
நண்பர்களே, பள்ளியில் ஒரு நாள் பேசிக்
கொண்டிருந்த பொழுது, நண்பர் ஒருவர், வண்டி பஞ்சரானால், அவ்விடத்திற்கே வந்து,
பஞ்சர் ஒட்டித் தருபவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறியது நினைவிற்கு வந்தது.
அப்பொழுதே, அந்த நண்பரிடம், பஞ்சர் ஒட்டுபவரின் அலைபேசி எண்ணைப் பெற்று, என்
அலைபேசியில் பதிவு செய்தும் வைத்திருந்தேன். அந்த எண்ணைத் தேடி எடுத்து, அவரை
அழைத்தேன்.
ஹலோ, பஞ்சர்
மாயாவா?
ஆமாம் சார்
சார், எனது
இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. ஒட்ட வேண்டுமே
எங்கு
இருக்கிறீர்கள்?
நான் தஞ்சைப்
பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகில், திருவள்ளுவர் திரையரங்கிற்கு அடுத்துள்ள,
இராசராசன் வணிக வளாகத்திற்கு எதிரில் நிற்கின்றேன்.
இதோ வருகிறேன்.
அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் வந்து
சேர்ந்தார் பஞ்சர் மாயா. ஐம்பது வயதிருக்கும்.
வணிக வளாகத்திற்கு எதிரில் வண்டியை
நிறுத்தி இருந்த போதிலும் போதிய வெளிச்சம் இல்லை. பையில் இருந்து ஒரு பாட்டரி
விளக்கை எடுத்தார். நண்பர்களே, சில ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்போம்,
குகைகளுக்குள் பயணிப்பவர்கள், வெளிச்சத்திற்காக, தலையில் விளக்கினைப் பொருத்திக்
கொண்டு செல்வார்கள் அல்லவா? அது போன்ற ஒரு விளக்கை எடுத்து, தலையில் தொப்பி போல்
அணிந்து கொண்டு, அதன் வெளிச்சத்தில், சக்கரத்தைக் கழற்றி, ட்யூபை வெளியில்
எடுத்தார்.
அவ்வழியாகச் சென்றவர்கள் எல்லாம், தலையில்
விளக்கினைப் பொருத்திக் கொண்டு வேலை பார்க்கும் காட்சியை ஆர்வத்துடன் பார்த்து
சென்றனர்.
கூடவே ஒரு பத்து லிட்டர் கேன் ஒன்றையும்
கொண்டு வந்திருந்தார். அந்தக் கேனின் மூடியைத் திறந்து, அதில் இருந்த நீரை, வாய் அகன்ற
பாத்திரத்தில் ஊற்றினார். மிதி வண்டிக்கு காற்று அடிப்போமல்லவா, அந்த கை பைப்பைக்
கொண்டு, ட்யூபில் சிறிது காற்றடித்து, ட்யூபை தண்ணீரில் அழுத்தி, பஞ்சரான இடத்தைக்
கண்டு பிடித்து, ஒட்டினார்.
பிறகு ஒரு புணலை எடுத்து, கேனில் சொருகி,
வாய் அகன்ற பாத்திரத்தில் இருந்த தண்ணீரை, ஒரு சொட்டுக் கூட வீணாகாமல், மீண்டும்
கேனில் ஊற்றி பத்திரப் படுத்திக் கொண்டார்.
பத்து நிமிடம் கூட ஆகவில்லை. வண்டி தயார்.
பஞ்சர் மாயா என்று சொல்கிறார்களே,
உங்களது பெயர் என்ன, என்றேன்.
எனது பெயர் மாய கிருஷ்ணன். கடந்த பத்து
வருடங்களுக்கும் மேலாக இப்பணியினைச் செய்து வருகிறேன். முன்பெல்லாம் கடையில்
இருப்பேன், கடைக்கு வந்து யார் அழைத்தாலும், அவர்களுடன் சென்று, சக்கரத்தைக்
கழற்றிக் கொண்டு, பஞ்சர் ஒட்டி, திரும்பவும் கொண்டு சென்று மாட்டுவேன்.
பின்னர் சில காலம் கழித்து, வண்டி பஞ்சர்
ஆன இடத்திற்கு சென்று, அங்கேயே ஒட்டிக் கொடுத்தால், எனக்கும் அலைச்சல் மிச்சம்,
மற்றவர்களுக்கும் நேரம் மிச்சமாகுமே என்று தோன்றியது. அன்றிலிருந்து இப்படித்தான்
இந்த வேலையை செய்து வருகிறேன்.
செல்போன் வந்த பிறகு, என் பணி மேலும்
சுலபமாகிவிட்டது. யார் அழைத்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் அங்கிருப்பேன். எந்த
வண்டி எனக் கேட்டு, அவ்வண்டிக்கான ட்யூபையும் உடன் கொண்டு செல்வேன். தேவைப்
பட்டால், ட்யூபை உடனே மாற்றிக் கொடுத்துவிடுவேன் என்றார்.
எவ்வளவு பணம்
கொடுக்க வேண்டும்
எண்பது ரூபாய்
கொடுங்கள் என்றார்.
நண்பர்களே, எனது வியப்பு மேலும் அதிகரித்தது.
ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று, கடையைக் கண்டுபிடித்து, ஆளை அழைத்து
வந்தாலே ஐம்பது ரூபாய் கேட்பார்கள். சில சமயம் இரண்டு பஞ்சர் சார், நூறு ரூபாய்
கொடுங்கள் என்பார்கள். இவரோ அலைபேசியில் அழைத்தவுடன், நாமிருக்கும் இடத்திற்கே
வந்து, பஞ்சர் ஒட்டிக் கொடுத்தும், கேட்கும் தொகை குறைவாகத்தான் தெரிந்தது.
பணம் போதுமா என்றேன்.
எண்பது ரூபாய்
போதும் சார்
எனது அலைச்சலைக் குறைத்து, அதிக நேரம்
காக்கவும் வைக்காமல், விரைந்து வந்து, நேரத்தையும் மிச்சப் படுத்தி, தொகையையும்
குறைத்துப் பெற்றுக் கொண்டு, விடைபெற்றுச் சென்ற, அந்த நண்பரை, எப்படிப்
பாராட்டுவது என்றே தெரியவில்லை.
தனது பணியினைக் கூட, ஒரு சேவையாகச் செய்து
வரும், பஞ்சர் மாயா பாராட்டுக்கு உரியவர்.
நண்பர்களே,
தாங்கள்
என்றாவது தஞ்சைக்கு வந்து,
இதுபோன்ற
நிலைமை ஏற்பட்டால்
அழையுங்கள்
பஞ்சர்
மாயா
93
60 12 10 78
தனது பணியினைக் கூட, ஒரு சேவையாகச் செய்து வரும், பஞ்சர் மாயா பாராட்டுக்கு உரியவர்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குபஞ்சர் மாயா அவர்களின் செயல், அது ஒரு தொழிலாக மட்டுமல்லாது, ஒரு சேவையாகவும் மிளிர்கின்றது, தங்கள் இந்த பதிவின் வாயிலாக...
பதிலளிநீக்குஅவருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் ஐயா!!!
நன்றி நண்பரே
நீக்குஅவசியம் சொல்கிறேன்
ஐயா கரந்தை அவர்களுக்கு...... அவரை வலைப்பதிவில் அறிமுகப்படுத்தி அவரை விட ஒருபடி மேலே சென்றுவிட்டீர்கள் நன்றி தங்களுக்கும் மாயா அவர்களுக்கும்.
பதிலளிநீக்குKillergee
www.Killergee.blogspot.com
நன்றி நண்பரே
நீக்குபஞ்சர் மாயா பாராட்டுக்கு உரியவர்.
பதிலளிநீக்குநல்ல மனம் வாழ்க.... நாடு போற்ற வாழ்க....
பதிலளிநீக்குநல்ல மனிதர் பற்றிய செய்திகள் தந்தமைக்கு நன்றி.
செய்யும் தொழிலே தெய்வம்! நல்ல மனம் படைத்த, தொழிலைத் தெய்வமாகக் கருதும் பஞ்சர் மாயா அவர்கள் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை! ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! நண்பரே! தங்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி நண்பரே
நீக்குமிகவும் போற்றப்பட வேண்டியவர்... அவர் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபஞ்சர் மாயா அவர்களைப் பதிவில் அறிமுகம் செய்தது சிறப்பு..
பதிலளிநீக்குநல்ல மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
வாழ்க நலம்!..
நன்றி ஐயா
நீக்குஅன்பின் வடிவமாம் பஞ்சர் மாயா அவர்களை அறிமுகம் செய்து அலங்கரித்த அன்பின் பிறப்பிடத்திற்கு அன்பான நன்றிகள்.வாழ்க மனித நேயம் வளர்க பன்பாளர்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇப்படியான நல்வர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதிலளிநீக்குதங்கள் செயல் மிகுந்த மனிதாபிமானச் செயல்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நாட்டில் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். பஞ்சர் மாயா அவர்கள் மிகவும் பாராட்டி போற்றப்பட வேண்டியவர்.
பதிலளிநீக்கு"செய்யும் தொழிலே தெய்வம்" - என்பதற்கு உதாரணம் தான் இவர்.
இதனை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றிகள்.
நன்றி நண்பரே
நீக்குசென்னையிலும் இதுபோலச் சேவை முன்பு இருந்தது. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. பாராட்டுக்குரியவர் மாயா என்னும் மாயக்கிருஷ்ணன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇப்படியும் சில மனிதர்களால் தான் மழை பொழிகிறது அன்பரே.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குநன்றி
அன்றைய தினம், உங்கள் இருசக்கர வாகனம் பஞ்சர் ஆக வேண்டும், மாய கிருஷ்ணன் வந்து பஞ்சர் பார்க்கவேண்டும், அவரைப் பற்றி உங்கள் பதிவில் நீங்கள் எழுத வேண்டும் என்று இருந்திருக்கிறது. எல்லாம் நன்மைக்கே!
பதிலளிநீக்கு// நண்பர்களே, தாங்கள் என்றாவது தஞ்சைக்கு வந்து,
இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் அழையுங்கள்
பஞ்சர் மாயா 93 60 12 10 78 //
அவரது செல்போன் எண்ணைக் குறித்துக் கொண்டேன். நன்றி!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குபுதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வினை அளித்தது ஐயா
இதுபோன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் ஐயா
சென்ற வாரம் என் வண்டியும் பஞ்சரான போது (திரு.மாய கிருஷ்ணன் செய்து வருவதைப் போன்ற )மொபைல் சேவையை போன்றே செய்யலாமே என்று மெக்கானிக்கிடம் சொன்ன போது,தண்ணீர் ,பும்ப்களை தூக்கி திரிய முடியாது என்றார் .நாம் ஐடியா சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கிற உலகத்தில் ,திரு .மாய கிருஷ்ணன் போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குத ம +1
நன்றி நண்பரே
நீக்குநல்லவர்களும் நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டும் தான் இருக்கிறார்கள் இல்லையா. சேவை மனப்பான்மையோடு செய்ய வேண்டிய பணிகளை வியாபாரமாக்கும் இந்நிலையில், பணியையே சேவையாக செய்கிறார். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இதை பதிவிட்டதும் தங்கள் பெருந்தன்மையே. நன்றி வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குபஞ்சர் மாயா அவர்கள் போன்றோர் இவ்வையகத்தில் வாழ்வதால் தான் இன்னும் இந்த உலகம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது சேவை எவ்வளவு பெரியது இருக்கும் இடத்திற்கே வந்து இடர் துடைக்கும் இவர் தான் கடவுள். அனைவருக்கும் பயன்பட அலைபேசி எண்ணோடு அவரைப் பற்றி பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.
நன்றி நண்பரே
நீக்குபுதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது பசுமையான நினைவுகளாய் நெஞ்சில் நிறைந்துள்ளது நண்பரே
ஒரு பஞ்சர் ஒரு பதிவு...
பதிலளிநீக்குஅருமை...
மிக நல்ல மனிதர் அவரது கம்ப்ளீட் பிச்சர் இல்லை என்கிற குறை (குடும்பம், அவரை நெகிழ்த்திய நிகழ்வு.. சங்கடம் என்று) ஒரு பாரா இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
உங்கள் பதிவு குறிதவறாது ஒரு நல்ல சேவையைத் தரும் ஆளுமையை இங்கே பதிவிட்டிருகிறது..
நான் அவருடன் போன் செய்து பேசுகிறேன்.. எண்ணுக்கு நன்றி
உண்மைதான் நண்பரே
நீக்குபஞ்சர் மாயாஅவர்களின் குடும்பத்தைப் பற்றி எழுதியிருக்கலாம்.
நன்றி நண்பரே
த ம 7
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉங்களுக்கு அவர் தொலை பேசி எண் கிடைத்ததால் நலமாய்ப் போயிற்று. இம்மாதிரி செய்பவர் பற்றி உள்ளூர் மக்கள் தெரிந்து வைக்க வேண்டுமே. உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கிறார்களா? தகவல் அருகில் இருப்பவர்கள் பலருக்கு உதவிகரமானது.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
நீக்குஅந்த நல்லமனம் வாழ்கவென வாழ்த்திடுவோம் .ஒரு சிலர் இப்படியும்
பதிலளிநீக்குஇருப்பதனால் தான் எமக்கும் இப் புவி வாழ்வு பிடித்திருக்கிறது என்றே
உணருகின்றேன் .சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .
அருமையான மனிதர்தான்! எங்கள் பக்கத்தில் இவரைப் போல யாரும் இல்லையே என்று வருத்தமாக உள்ளது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇந்த காலத்தில் இப்படிப்பட்டவர்கள் இருப்பது மிக அரிது!!
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரியாரே
நீக்குஅரிதான மனிதர்தான்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, நல் உள்ளம் கொண்டோரை வாழ்த்தும் குணம் நல் உள்ளம் உடையோருக்கு மட்டுமே சாத்தியம். இது சத்தியம். பதிவிட்ட உங்களுக்கும் இப்பதிவினை வாசித்து பஞ்சர் மாயா என்ற திரு.மாயக்கிருஷ்ணனை வாழ்த்திய உள்ளங்களுக்கும் அந்த நல் உள்ளம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த பஞ்சர் மாயாவைப் பற்றி தி இந்து தமிழ் நாளிதழ் பேட்டி எடுத்து பிரசுரித்தப்பொழுது அவர் சொன்னது. இத்தொழிலை நடுநிசி நேரங்களில் செய்யும் பொழுது ஏன் இப்படி சிரமப்பட வேண்டும் என்று சில நேரங்களில் நான் எண்ணினாலும் பஞ்சர் ஒட்டி தந்தவுடன் வண்டியில் வந்தவர்கள் சொல்லும் நன்றியில் நான் படுகின்ற சிரமங்கள் பஞ்சாய் பறந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு பெரிய மனது. அவரும் அவர் குடும்பமும் பல்லாண்டு வாழ நாம் வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவாழ்த்தப்பட வேண்டியவர்தான் மாயா
நீக்குவாழ்த்துவோம்
நன்றி நண்பரே
திரு பஞ்சர் மாயாவின் பணி பாராட்டுதற்குரியது. பல அரசியல் தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்திய தாங்கள் கடமையில் உயர்ந்து நிற்கும் ஒருவரை அறிமுகப்படுத்தி பெரும் பணியாற்றியுள்ளீர்கள். இப்பதிவைப் படித்தவுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆனந்தவிடகனில் அங்கே ஒரு மூலையில் என்ற தலைப்பின்கீழ் தஞ்சாவூர்க்கவிராயர் எழுதிய பதிவுகள் நினைவிற்கு வந்தன. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஉண்மையில் இது போன்ற சமயங்களில் 200 ரூபாயாவது கறந்து விடுவார்கள். செய்யும் தொழிலில் நேர்மையை கடைபிக்கும் மாயா போற்றுதலுக்குரியவர்.
பதிலளிநீக்குஎதிர் பாரா பஞ்சரால் பலமுறை நானும் அவதிப் பட்டிருக்கிறேன். அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்றால் எல்லாக் கடைகளுமே அரை நாள் மட்டுமே திறந்திருக்கும். அதனால் ஞாயிற்றுக் கிழமை மாலை வேளைகளில் இரு சக்கர வாகனத்தை நீண்ட தூரம் செல்ல பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்து விடுவேன். .
ஜெயகுமார் சார்! தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நீக்குதங்களைச் சந்தித்ததும், உரையாடியதும் நீங்கா நினைவுகளாய் நெஞ்சில் பதிந்துள்ளன ஐயா
நீக்குமாயா உண்மையிலேயே போற்றுதலுக்கு உரியவர்தான் ஐயா
நீக்குதிரு. மாயா போன்றோர்களை நமது தஞ்சை பெற்றுள்ளது என நினைக்கும் போது பெருமையாய் உள்ளது. தஞ்சை வளநாட்டின் ஒரு அங்கமாய் இருப்பதில் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறேன். திரு. மாயா அவர்களின் அலைபேசி எண்ணை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. அவசியம் பயனுள்ள பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதாங்கள் தஞ்சையா
மகிழ்வாக இருக்கிறது நண்பரே
தஞ்சையில் எங்கு இருக்கிறீர்கள்
ஒரு நேர்மையான உழைப்பாளியை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள் ஐயா. அவரது நேர்மைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த பதிவு ஐயா.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉழைப்பாளி பஞ்சர் மாயாவுக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகாலத்தின் மதிப்பு பன் மடங்காகிவிட்ட இன்னாட்களில் இதுபோன்ற பொருத்தமான சேவையை துளி நேரம் வீணாகாது அளிப்பவர்களை பாராட்ட வேண்டும். இவர் அதை ஓர் சேவை மனப்பான்மையும் கலந்து செய்து வருகிறார் என்றால் அவரை என்ன சொல்லி பாராட்டினாலும் தகும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅவரை என்ன சொல்லிப் பாராட்டினாலும் தகும்
சாதாரண மனிதர்கள் பல நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.
பதிலளிநீக்குஅவர்களைக் கவனித்துப் பார்ப்பவர்கள் சாதாரணர்களில்லை.
நல்ல காட்சிப்படுத்தும நடை! நன்றி!
விளிம்பு நிலை மனிதர்களைப்பற்றியும் சமூகஅக்கறையோடு எழுதுகிற உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.......வாழ்க !வளமுடன்....!
பதிலளிநீக்குநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமாம் மழை
நீக்குநன்றி நண்பரே
நீக்குதமிழ் மணம் TOP 10 யை அடைந்ததற்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇது மாதிரி சாமான்யர்கள் நிறையவே இருக்கிறார்கள்.இது போலானவர்களை வெளி உலகுக்கு தெரிய வைக்கிற தங்களின் மனது மிகப்பெரியதும்,மிகமுக்கயப்படுமாய் இருக்கிறது இந்த இடத்திலும்,இந்த நேரத்திலுமாய்/
பதிலளிநீக்குசூப்பர் மனிதர்
பதிலளிநீக்குபஞ்சர் மாயா = செய்யும் தொழிலே தெய்வம் - நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு கரந்தை ஜெயக்குமார்
பதிலளிநீக்கு