13 மே 2015

உலகப் பாறை ஓவியங்கள்

   

 பத்து வருடங்களுக்கு முன்னால், அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து வருவதற்காக, ஆயனர் என்னை அனுப்பினார். நானும் அப்படியே செய்வதாக வாக்களித்து கிளம்பினேன். அஜந்தா வர்ணத்தின் ரகசியம், உமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
   
இதோ இந்தச் சுரங்க விஹாரத்தின் சுவர்களிலே கூட, வர்ணச் சித்திரங்களைக் காண்கிறோம். உமக்குக் கட்டாம் இந்த ரகசியம் தெரிந்துதான் இருக்க வேணடும்.

 அதை உடனே சொன்னீரானால், உம்மை உயிரோடு விடுகிறேன், இல்லாவிட்டால், உமது இஷ்ட தெய்வத்தை, உம்மைப் போன்ற கிராதகனுக்குத், தெய்வம் என்று ஒன்று இருந்தால், அந்தத் தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளும்.


     அப்பனே, உன்னுடைய கருணைக்காக மிக்க வந்தனம். என் இஷ்ட தெய்வம் ஒன்றே ஒன்றுதான். அது சிவகாமிதான். அந்தத் தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

 ஆயனரையும், அவர் மகளையும், அஜந்தாவுக்கே அழைத்துப் போய், அழிய வர்ண ரகசியத்தை நேரிலேயே, காட்டி கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.


அந்த அற்புதமான ரகசியத்திற்கு, உலகத்தில் வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத ரகசியத்திற்கு, என்னுடைய உயிரை ஈடாக வைத்தாயே, நீ நன்றாக இருக்க வேண்டும்.


சொல்கிறேன் கேள். மரஞ் செடிகளின் இலை, வேர், காய், விதை முதலிய தாவரப் பொருட்களைச் சாரு பிழிந்து, காய்ச்சி, சாதாரணமாக வர்ணங்களைக் குழைப்பது வழக்கம்.


தாவரப் பொருட்கள் காய்ந்து, உலர்ந்து அழிந்து போகக் கூடியவை. ஆகையால் அவற்றில் இருந்து உருவாக்கப்படும் வர்ணங்களும், சீக்கிரத்தில் மக்கி அழிந்து போகின்றன.


ஆனால் மலைகளிலும், பாறைகளிலும், சிற்சில பகுதிகள் இயற்கை வர்ணம் பெற்று விளங்குகின்றன, இந்த வர்ணங்கள் காற்றுக்கும், வெயிலுக்கும், மழைக்கும் மங்குவதில்லை, அழிவதில்லை. ஆகவே இந்த வர்ணப் பாறைகளைப் பொடி செய்து, அதற்கேற்ற பக்குவப்படி அரைத்து, குழைத்து உண்டாக்கும் வர்ணங்கள் அழிவதே கிடையாது.

இம்மாதிரி வர்ணப் பாறைகளை பொடித்துக் குழைத்த வர்ணங்களைக் கொடுத்துதான் அஜந்தாவில் சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன.

பரஞ்சோதி, சென்ற ஐந்நூறு வருஷ காலமாக, அஜந்தா சங்கிராமத்தைச் சேர்ந்த பிக்சுக்களைத் தவிர, வேறு யாரும் அறியாத, பரம ரகசியத்தை உனக்கு நான் சொல்லி விட்டேன், இனி நான் போகலாமா?

     அடிகளே, உடனே போய் விடுங்கள். அடுத்த நிமிடம் என் மனம் மாறினாலும் மாறிவிடும். நீர் ஓடிப்போக எத்தனித்த கள்ளச் சுரங்க வழியாகவே, இப்போது போய் விடுங்கள். சீக்கிரம், சீக்கிரம்.


     நாகநந்தி சென்று விட்டார். பரஞ்சோதியும், படை வீரர்களும் கூட, ஒவ்வொருவராக, நம் கண்களில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். நன்றாக வெளிச்சம் வருகிறதே, நாம் எங்கிருக்கிறோம். சுரங்கப் பாதையில் இல்லையா?

     இல்லை நண்பர்களே, இல்லை. நாம் சுரங்கத்தில் இல்லை. நாம் இருப்பது அரண்மனையில். என்ன அரண்மனையிலா? பல்லவர்களின் அரண்மனையிலா? இல்லை, தஞ்சையில், மராட்டியர்களின் அரண்மனையில்.

       தஞ்சையிலா? அதுவும் அரண்மனையிலா? எங்கு பார்த்தாலும, பாறைச் சிற்பங்கள் தெரிகின்றனவே.

       ஆம், பாறைச் சிற்பங்கள் தெரிகின்றன. ஆனால் மலைகளைக் காணவில்லையே, பாறைகளையும் காணவில்லையே. ஆனாலும் சிற்பங்கள் மட்டும் தெரிகின்றனவே? எப்படி.

நண்பர்களே,
எத்துனை முறை மீண்டும் மீண்டும் படித்தாலும், சிறிதும் அலுக்காத,
இவ்வுலகில் வாழும் காலம் வரை மறக்க இயலாத
அமரர் கல்கி அவர்களின்
சிவகாமியின் சபதம்.
நூலினையும்
பரஞ்சோதியார் அவர்களையும்
நீண்ட நேரம், நினைத்துக் கொண்டு நின்று விட்டதால்,
ஏற்பட்ட மனக் குழப்பம் என்று எண்ணுகின்றேன்.

      நாம் நின்று கொண்டிருப்பது, தஞ்சை அரண்மனையின், சங்கீத மகால் விழா அரங்கில், நடைபெற்று வரும் உலகப் பாறை ஓவியக் கண்காட்சி மண்டபத்தில்.

       நம்மால் உலகை வலம் வந்து, உலகு முழுவதும் உள்ள பாறை ஓவியங்களைப் பார்ப்பது, ரசிப்பது, அனுபவிப்பது என்பது இயலாத செயல் அல்லவா? இதோ உலகப் பாறை ஓவியங்கள் அனைத்தும், ஓரிடத்தில், நமது கடைக் கண் பார்வைக்காகக் காத்திருக்கின்றன.


இந்திரா காந்தி தேசியக் கலை மையம்,
புது தில்லி
தமிழ்ப் பல்கலைக் கழகம்,
தஞ்சாவூர்
கலைக் கூடம்,
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்
சரசுவதி மகால் நூலகம்
தஞ்சாவூர்
ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பயன், இக் கண்காட்சி.

உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி

     வாருங்கள், மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வருவோம். பாறை ஓவியங்களைக் கண்ணாரக் கண்டு, இன்புற்று மகிழ்ந்து வருவோம்.

     பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த, நம் மனித முன்னோர்கள், தங்களது வளமாக வாழ்விற்க்காகவும், தங்களது சந்ததியினர் தழைத்தோங்கி வளர்வதற்காகவும், தங்களைச் சுற்றியுள்ள உலகம், தங்களது செயல்பாடுகள் முதலியவற்றை, பாறைகளில் ஓவியங்களாகவும், கீறல் பொறிப்புகளாகவும் பதிவு செய்துள்ளனர்.

     சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள், என அறிஞர் பெருமக்களால், ஆய்வு செய்து, ஒரு மனதாக மதிப்பிடப் பட்ட, ஓவியங்கள் மட்டுமே, இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

     நினைக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? ஒரு நூற்றாண்டு, இரு நூற்றாண்டு அல்ல, ஓர் ஆயிரம் ஆண்டு, இரண்டாயிரம் ஆண்டு அல்ல, முழுதாய் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள்.

     நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் பேசத் தொடங்கியிருப்பானா என்பது சந்தேகம்தான். எழுத்துக்களை எழுத்துக் கூட்டி, எழுதவாவது தெரிந்திருப்பானா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் வரையக் கற்றுக் கொண்டுள்ளான்.

     பாறைகளில் கல் கொண்டு கீறியும், வர்ணம் கொண்டு பூசியும் ஓவியங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளான்.

     பாறை ஓவியங்கள் பெரும்பாலும், குகைத் தளங்களிலும், இரும்புக் காலத்தைச் சார்ந்த பெரும் கற்படை சின்னங்களிலுமே கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

     மலைத் தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் காணப்படும், பெரும்பாலான பாறை ஓவியங்கள் வேட்டையாடுதல், ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருந்த, மக்களின் அந்நாளையக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

     காலத்தால் முற்பட்ட ஓவியங்கள் செங்காவி கொண்டு தீட்டப் பட்டதாகவும், காலத்தால் பிந்தியவை, வெள்ளை வர்ணம் கொண்டு தீட்டப் பட்டதாகவும் காணப் படுகின்றன.

    தமிழகத்தில் முதன் முதலாக பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்த பெருமைக்கு உரியவர் பேராசிரியர் கே.வி.இராமன் அவர்களாவார். இவர்தான் 1978 இல் மல்லபாடி என்ற இடத்தில் பாறை ஓவியங்களைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவித்தார்.

     தமிழகத்தின் தருமபுரி, கிருட்டினகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இதுவரை நூற்று இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.


புள்ளி மான்களின் ஊர்வலம், உத்திரப் பிரதேசம்


போர்ப்படை வீரர்களின் அணிவகுப்பு, உத்திரப் பிரதேசம்



காண்டா மிருகத்தை வேட்டையாடும் மனிதன், உத்திரப் பிரதேசம்


சத்தீஸ்கர் நகரின் கோட்டு உருவங்கள்



மத்திய பிரதேசத்தின் கோட்டு 
உருவங்கள்




மலைக் குகைகளில் காணப்பட்ட ஓவியங்கள்  பல, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் முறையில், வடிவமைக்கப் பட்டு, பாறை வடிவங்களிலேயே, நம் முன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



கேரளாவில் கண்டறியப்பட்ட, கீறல் கோடுகளில் மனித உருவங்கள், நம மனதை கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தவை.

இந்த மின்னல் சகோதரர்களைப் பாருங்கள்


இறந்த மனிதர்கள் ஆவிகளாய், உலகை வரும் வருவார்கள் என்று எண்ணி, எண்ணி பயந்த அக்கால மனிதர்கள் ஆவிகளையும் சித்திரங்களாய் வரைந்து வணங்கியுள்ளனர். இக்காட்சியைப் பாருங்களேன். இப்பாறை ஓவியம் இருப்பது இந்தியாவில் அல்ல, ஆஸ்திரேலியாவில்.

    

ஆவிகளை மட்டுமல்ல, அக்காலத்தில், வீர தீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களை, கதாநாயகர்களாய் சித்தரித்து, அவர்களையும் ஓவியமாய் தீட்டி போற்றியுள்ளார்கள். இதோ ஒரு கதா நாயகனின் ஓவியம்.


லிபியாவின் போர் வீரன்.




அல்ஜீரியாவின் மனித, கால் நடை உருவங்கள்


மனிதன் சக்கரத்தினைக் கண்டு பிடித்த பின்னர்தான், அறிவியல் வளர்ச்சி வேகமெடுத்ததாக்க் கூறுவார்கள். இதோ நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அல்ஜீரியாவில், சக்கரம் பூட்டிய வண்டியில் பயணிக்கும் மனிதன்.
ரதமும், ரத ஓட்டியும்.

     பாறை ஓவியங்களைக் காணக் காண, வியப்பு கூடிக் கொண்டே செல்கிறது. ஆதிகால மனிதன், தங்களின் வாழ்க்கை முறையை, வருங்கால சந்த்தியினர் அறிய, உணர விட்டுச் சென்ற, வரலாற்றுச் சுவடுகள் அல்லவா, இந்த ஓவியங்கள்.

நண்பர்களே,
வாய்ப்பு கிடைக்கும் பொழுது
தஞ்சைக்கு வாருங்கள்
இந்த பாறை ஓவியங்களைக்
கண்டு மகிழுங்கள்.

உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி,

சங்கீத மகால்,    தஞ்சாவூர் அரண்மனை,

-------------------------------------------------------.
மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 5 ஆம் தேதி வரை
-------------------------------------------

வாருங்கள் நண்பர்ளே, வாருங்கள்


76 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. ஆசையாத் தான் இருக்கு. எல்லாவற்றையும் பார்க்கணும்னு. ஆனால் இயலாத ஒன்று. முடிந்தால் இன்னமும் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் முதலில் அஜந்தாச் சித்திரங்களைக் குறித்த பதிவோ என்றே நினைத்தேன். நாங்கள் அஜந்தா சென்ற நினைவெல்லாம் வந்து மோதிக்கொண்டன. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜந்தா ஓவியங்களையே பார்த்திருக்கிறீர்களா
      சகோதரியாரே தாங்கள் கொடுத்து வைத்தவர்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  2. நேரில் காண இயலாத குறையை தங்களின் பதிவு - தீர்த்து விட்டது..

    பதிவின் ஊடாக சிவகாமியின் சபதத்தையும் கொண்டு வந்தது சிறப்பு..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    பாறைஓவியங்கள் பற்றி ஓர் அளவு அறிந்த எனக்கு தங்களின் பதிவு வழி பல நாடுகளில் உள்ள ஓவியங்களை பார்க்க கிடைத்துள்ளது... வரலாற்று ஆதாரங்களுடன் பகிர்வை பகிர்ந்துள்ளீர்கள்.அதுவும் சொல்லிச்சென்ற விதம் சிறப்பு ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இச் சான்றுகள் அனைத்தும் பொக்கிசங்கள்... பேராசிரியர் கே.வி.இராமன் அவர்களைப் பற்றிய தகவலுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள கரந்தையாருக்கு,


    உலகப் பாறை ஓவியங்கள் - படங்களுடன் பார்ப்பதற்கு வியப்பில் ஆழ்த்துகிறது. உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி, தஞ்சாவூர் அரண்மனையில் நடைபெறுகின்ற தகவலைச் சொன்னீர்கள்.

    13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழும் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ் வழங்கிய விருதும் தாங்கள் பெற்றதற்குப் பாராட்டுதலும் வாழ்த்துகளும்.

    நன்றி.
    த.ம. 4.




    பதிலளிநீக்கு
  6. சிவகாமியின் சபதம் பற்றித்தான் தகவல்கள் சொல்லப்போகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்...
    உலகப் பாறை ஓவியங்கள் அதனை தொடர்புடைய ஒன்றை அற்புதமாக சொன்ன விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. 40 ஆயிரம் ஆண்டு முன் அல்ஜிரியாவில் சக்கரம் பூட்டிய வண்டி, போர்ப்படை வீரர்களின் அணிவகுப்பு, உத்திரப் பிரதேசம்,
    சத்தீஸ்கர் மாநிலத்து ஓவியம் என பல தரவுகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு தஞ்சை நகர் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.

    எம்மைபோல் பணி நிமித்தம் வெளியூரில் வசிக்கும் எங்களுக்கு உங்கள் கட்டுரையின் உதவியால் பார்த்து, இரசித்த நிறைவு கிடைத்தது.
    ஐயா, தஞ்சை இராஜராஜேச்வரம் பெருவுடையார் சுற்றில் ஆயிரம் ஆண்டு கால ஓவியம் நெஞ்சை கவருமே அது இந்த உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளதா?

    அஜந்தா, எல்லோரா, எலிபண்டா(மும்பை) பாறை ஓவியங்களை தாங்கள் காண வேண்டும் மனித சக்தியினால் உருவாக்கப்பட்டவைகள் அல்ல அவைகள்.. மனித பேய், இராட்சத சக்தி கொண்ட பித்தர்களால் உருவாக்கப்பட்டவை... மலைப்பாறை ஓவியங்களைக்கண்டு மலைத்து போய், ஸ்தம்பித்து போயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள் மட்டுமே என்பால்,
      பெரியக் கோயில் ஓவியங்கள் இடம் பெற வில்லை நண்பரே
      அஜந்தா எல்லோரா ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா
      ஆகா, ஓவியங்களின் பிரதிகளைப் பார்ப்பதற்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதே,
      உண்மையான ஓவியத்தை நேரில் நிஜத்தில் பார்க்கும் போது எப்படி இருக்கும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  8. ஒவ்வொன்றும் மிக மிக அற்புதம், ஆச்சர்யம் !! நேரில் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு உங்களின் இந்த பதிவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனை பற்றிய தகவல்களின் தொகுப்புகள் அருமை. நன்றி.

    வாழ்த்துக்கள் + பாராட்டுகள் !!

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு அண்ணா! நம்ம சி.ஈ.ஒ வுக்கு இதிலெல்லாம் அவ்ளோ ஆர்வம் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து நிலவன் ஐயா அவர்கள்,முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுடன், தஞ்சைக்கு வருவதாக மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார் சகோதரியாரே
      விரைவில் இருவரும் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  10. உலகப் பாறை ஓவியங்கள் கண்காட்சி படங்களும், செய்திகளும், பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமாய்ப் படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. ஆகா நான் சிவகாமியின் சபதம் பற்றித் தான் என் நினைத்தேன். உண்மையில் அத்துனையும் அருமை சகோ,நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு! பல விளக்கங்கள், புகைப்படங்கள், வர்ண்ணனைகள். சென்று பார்த்தது போன்ற உணர்வு. மிக்க நன்றி பகிர்விற்கு!

    பதிலளிநீக்கு
  14. கரந்தை சரவணன்13 மே, 2015

    என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    அற்புதமான பதிவினை பதிவிட்டு பாறை ஓவியக் கண்காட்சியினை இதுவரை காணாதவர்கள் உடனே செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். என்ன நாற்பதாயிரமாண்டு பழையவை என்பதுதான் நம்பமுடியவில்லை . நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அவை பற்றிய அறிவில் நான் சூன்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்காட்சியின் போது வழங்கிய கையேடு ஒன்றினில்
      40,000 ஆண்டு பழமையான ஓவியங்களை மட்டுமே
      காட்சிக்க வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தனர் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  16. முதியவன் என்னையும் கண்காட்சி க் காணச் செய்தீர் நன்றி !

    பதிலளிநீக்கு
  17. தமிழ் மணம் 10 பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அரிய தகவல்கள்! அரிதான ஓவியங்கள்! நான் தான் ஊரில் இல்லாமல் மிஸ் பண்ணி விட்டேன். ஆனாலும் ஓவியம் என்னும்போதே 'சிவகாமியின் சபதம்' நினைவில் எழாமல் போகாது அதை மனமுருகிப்படித்தவர்களுக்கு! அழகான இடைச்செருகலை அருமையாகத்தந்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      ஓவியங்களைப் பார்த்ததும், முதலில் நினைவிற்கு வந்தது
      சிவகாமியின் சபதம்தான்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
    2. உண்மையில் நினைக்கவே மலைப்பாக உள்ளது. நன்றி ஐயா.

      நீக்கு
    3. உண்மையில் நினைக்கவே மலைப்பாக உள்ளது. நன்றி ஐயா.

      நீக்கு
  19. அருமை இதை எல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பார்த்ததோடு அதனை விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா13 மே, 2015

    அத்தனை தகவல்களிற்கும்
    படங்களிற்கும் மிக்க நன்றி.
    சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. மிகச்சிறப்பான தொடக்கத்துடன் பாறை ஓவியக் கண்காட்சி பற்றி எழுதி அசத்திவிட்டீர்கள்! ஓவியங்கள் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் கவர்ந்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. பாறை ஓவியங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கண்டு களித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
    பொக்கிஷத்தைப் பார்த்து பாதுகாத்துக் கொள்ள தூண்டியது
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. மதுரைக்கும் விரைவில் இந்த கண்காட்சி வருமென ந்மபுகிறேன் ,காணும் ஆர்வத்தை தந்தது உங்களின் பதிவு :)

    பதிலளிநீக்கு
  24. இங்கிருந்தே இணையவழிக் கண்காட்சிவாயிலாக விளக்கிக் காட்டிவிட்டீர்கள்...!
    அருமை ஐயா.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு அய்யா..
    தம +

    பதிலளிநீக்கு
  26. ஓவியங்களைக் குறித்து அழகாக வர்ணனை தந்தமைக்கு நன்றி நண்பரே எமக்குத்தான் காண கொடுப்பினை இல்லை பதிவில் தந்தமைக்கு மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நல்ல ஒரு பயணம். அழைத்துச்சென்றமைக்கு நன்றி. பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி.

    பதிலளிநீக்கு
  28. உண்மையில் நினைக்கவே மலைப்பாக உள்ளது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  29. உலகப் பாறை ஓவியங்கள்
    மறக்க இயலாத
    அருமையான படைப்புகள்!

    பதிலளிநீக்கு
  30. ஓவியங்கள் அற்புதம்... பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  31. ஓவியங்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் அறியத் தந்தமைக்கு நன்றி !
    அருமையான பதிவுக்கு நன்றி சகோ !

    பதிலளிநீக்கு

  32. அருமையான பகிர்வு தஞ்சை வரும் ஆசைத்தூண்டுகின்றது பகிர்வு. ஓவியங்கள் அழகு! நாம் தான் அடுத்த தலைமுறைக்கு எதைவிட்டுச் சொல்லப்போறோம் என்ற ஏக்கத்துடன்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது
      நன்றி நண்பரே

      நீக்கு
  33. உங்கள் பதிவை வந்தவுடனேயே படித்து விட்டேன். படிக்கத் தொடங்கியவுடனேயே கல்கி நினைவுக்கு வந்து விட்டார். படங்களுடன், தகவல் தந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. ஜூன் 5 இற்குள் எனக்கு தஞ்சைக்கு வரும் சூழ்நிலை கிடைத்தால் நிச்சயம் இந்த ”உலக பாறை ஓவியங்கள்” கண்காட்சியை பார்க்கிறேன்.
    த.ம.19

    பதிலளிநீக்கு
  34. மிக மிக அருமை புகைப்படத்துடன் அமைத்திருப்பது மிகச்சிறப்பு

    பதிலளிநீக்கு
  35. அருமையான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அருமையான தொகுப்பு நன்றி

    பதிலளிநீக்கு
  37. அரிதான தகவல்கள்..அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்...உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு