18 ஜூன் 2015

தஞ்சைக்கு வந்த புதுக்கோட்டை


வாசிக்காத நாட்கள் எல்லாம்
சுவாசிக்காத நாட்கள்
என்பர் நம் முன்னோர். புத்தகங்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்தான். புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது கூட, மனதில் ஓர் அமைதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

     நெஞ்சை அள்ளும் தஞ்சைக்குப் பெருமைகள் பல இருப்பினும், புதிதாய் ஓர் சிறப்பு சேர்ந்திருக்கிறது.

புத்தகத் திருவிழா

     கடந்த ஆறு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், பத்து நாட்களுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்-ன் பெரு முயற்சியால் நடைபெறும் புத்தகத் திருவிழா, தஞ்சைக்கு ஒரு புதுப் பொலிவை வழங்கி வருகிறது.


     தஞ்சை மாவட்ட நிர்வாகமும், இவ்வாண்டு களம் இறங்கி, முதன் முதலாக, ஓர் புத்தகத் திருவிழாவினைப் பெருவிழாவாக அரங்கேற்றி இருக்கிறது.



தஞ்சை மாவட்ட ஆட்சியர்
பெருமைமிகு திரு சுப்பையன் அவர்களின்
அயரா ஆர்வமும், தளரா உழைப்பும்
புத்தகத் திருவிழாவிற்குப் புது மெருகூட்டி
காண்போரை வியக்க வைக்கிறது.


102 புத்தக அரங்குகள்
நாள்தோறும்
பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
தமிழறிஞர்களின் சீரிய சொற்பொழிவுகள்
என அரண்மனை வளாகமே, திருவிழாக் கோலமாய் காட்சி அளிக்கிறது.

     அரங்கில் நுழைந்து விட்டால், கண்களுக்கு விருந்தளிக்கும் இலட்சக் கணக்கானப் புத்தகங்களின் அணி வகுப்பு, அரங்கிற்கு வெளியிலோ, செவிக்குப் பெரு விருந்தாய் திகட்டத் திகட்டச் சொற்பொழிவுகள்.

கடந்த 15.6.2015 திங்கட் கிழமை காலை 8.00 மணியளவில், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், அமைதியான குரல், என் அலைபேசி வழி வெளிப்பட்டது.


இன்று மாலை
கவிஞர் முத்து நிலவன் அவர்கள்
புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார்.

      மனமெங்கும் ஓர் மகிழ்ச்சி அலை பரவத் தொடங்கியது. புத்தகத் திருவிழாவினைக் காண, நடமாடும் நூலகத்தின் வருகை.

     மாலை 7.00 மணியளவில், அரண்மனை வளாகத்திற்குச் சென்றேன். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும் வந்திருந்தார்.

     எனது வலையுலக ஆசான், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது மகிழ்வினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.


நண்பர்களே, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக ஓர் சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார். என்ன சாதனை தெரியுமா?

தமிழ் விக்கிபீடியாவில்
முழுதாய் 200 பதிவுகளை
பதிவேற்றிச்
சாதனை படைத்திருக்கிறார்.

     வலைப் பூவைப் பொறுத்தவரை நமக்கு நாமே முதலாளி. நம் மனம் போனபடி எழுதலாம்.

     ஆனால் விக்கிப் பீடியாவிலோ, தணிக்கைக் குழு ஒன்று, பெரிய்ய்யக் கத்திரிக்கோலுடன், எப்பொழுதும் தயாராய்க் காத்திருக்கும்.

      விக்கிப்பீடியாவில் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரத்தைக் காட்டியாக வேண்டும், அடிக்குறிப்பு அவசியம் சேர்த்தே ஆக வேண்டும்.
      ஆதாரம் காட்டி, அடிக்குறிப்பைப் பதிவேற்றினாலும், பதிவு காணாமல் போகும் வாய்ப்பும் உண்டு. ஆதாரம் சரியில்லை, இது செல்லாது, செல்லாது என விக்கிக் குழுவால் பதிவு, நீக்கம் செய்யப் படுவது ஒரு தொடர்கதை என்கிறார்கள்.

     எத்தனை, எத்தனை தடைகள் வந்தால் என்ன, இதோ அசைக்க முடியாத ஆதாரம். இதோ புறந்தள்ள இயலாத அடிக்குறிப்புகள் என பார்த்துப் பார்த்து எழுதி, 200 பதிவுகளை நிறைவு செய்திருக்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம்
அவர்களைப் பாராட்டித்தானே ஆக வேண்டும்.
நாம் சேர்ந்தே பாராட்டுவோமா.

     மணி இரவு 8.00 கடந்த நிலையில், வீதி இலக்கிய அமைப்பு என்னும் பதாகையுடன் கூடிய, வேன் ஒன்று அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தது.

     வேனில் இருந்து, மொத்த புதுக்கோட்டையின் வலை உலகும் இறங்கி வந்தது.

    





கவிஞர் முத்து நிலவன் ஐயா, உதவித் தொடக்க்க் கல்வி அலுவலர் சகோதரி திருமதி ஜெயலட்சுமி அவர்கள், நண்பர்கள் திரு மகா சுந்தர், திரு குருநாத சுந்தரம், சகோதரி கீதா என பன்னிரெண்டு பேர் வந்திருந்தனர்.

     

புத்தகத் திருவிழா அரங்கிற்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த கூட்டத்தில் கரைந்து போனார்கள். புத்தக்க் கடைகள் மூடிய பிறகுதான் வேறு வழியின்றி வெளியே வந்தனர்.

      ஆயிரக் கணக்கான மக்களால், நிறைந்திருந்த வளாகம், சில நொடிகளில், ஆளரவமின்றி வெறிச்சோடிப் போனது.

      நாங்கள் மட்டுமே தனித்து நின்றிருந்தோம். எனது பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ. சரவணன் அவர்களும், உடற் கல்வி இயக்குநர் நண்பர் திரு திவாகர் அவர்களும், எங்களுடன் இணைந்து கொள்ள, ஒரு சிறு பதிவர் சந்திப்பு அரங்கேறியது.

      நண்பர்கள் திரு கஸ்தூரி ரங்கன், திரு பிஜு போன்றோரால் வர இயலாத நிலை. இவ்விருவரையும் சந்திக்க இயலா வருத்தம் மனதில் இருந்தாலும், கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் தலைமையில், மற்ற அனைவரையும் சந்தித்ததில், மனமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடத்தான் செய்தது.

தஞ்சைப் புத்தகத் திருவிழா
வருக வருக வருக
எனத் தங்களை அன்போடு அழைக்கிறது

வாருங்கள் நண்பர்களே.

74 கருத்துகள்:

  1. அன்றைய வகுப்பில் அனைவரும் தான் கலந்து கொண்டு தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்தோம்... அதில் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் பல படிகள் முன்னே சென்று சாதனை படைத்து கொண்டிருக்கிறார்... அவரின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் அடியேனின் அன்பான வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா
      முனைவர் விக்கிபீடியாவிலும் முனைவர் பட்டம் பெறுகின்ற அளவிற்கு முன்னே சென்று விட்டார்
      வாழ்த்துவோம்
      நன்றி ஐயா

      நீக்கு
  2. தங்களைப் போன்றோரின் நட்பும், வலையுலக நண்பர்களின் வாழ்த்துக்களும் என்னை மென்மேலும் எழுத வைக்கின்றன. உங்களைப் போன்றோரின் ஆதரவின்றி விக்கியில் என்னால் எழுதியிருக்கமுடியாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன். தங்களின் திறமையை வெளிக்கொணர ஒரு சிறிய தூண்டுகோலாக நான் இருந்த என்னைப் பற்றி மிகையாகக் கூறிவிட்டீர்கள் போலுள்ளது. நூல் கண்காட்சியில் புதுக்கோட்டை நண்பர்களைச் சந்தித்ததைத் தாங்கள், தங்களுடைய பாணியில் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. தொடர்ந்து சந்திப்போம், எழுதுவோம், சாதிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனை புரிந்தபிறகும் கூட
      அதை வெளிப்படுத்த தயங்கும் தங்களின் குணம்இருக்கிறதே
      அது யாருக்கும் கிட்டாத ஒன்று
      நன்றி ஐயா

      நீக்கு
    2. உங்கள் சாதனை போற்றத்தக்கது முனைவரே வாழ்த்துகள்

      நீக்கு
    3. முனைவரை வாழ்த்தியமைக்கு நன்றிந நண்பரே

      நீக்கு
    4. முனைவர் அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! நிறை குடம் தளும்பாது! அறிவுடையார்கள் அவை அடக்கம் காப்பதில் கருத்துடையவர்கள் ஆவார்கள் அதுதான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா! என்ன ஒரு அடக்கம்....வெளியில் தெரியாத சாதனை....அமைதியான சாதனை. அகத்தின் அழகு முகத்தில் தெரிகின்றதே! மனம் பெருமைப்படுகிறது முனைவரை நினைத்தும் இத்தகைய அருமையான மனிதர் எங்களுடனும் இருக்கின்றார் என்பதை நினைத்து!!!

      வாழ்த்துகள் ஐயா!

      நீக்கு
  3. ஜம்புலிங்கம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது. இதுபோன்ற பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்தால்தான் உலக அளவில் இணையத் தமிழின் நிலை மேம்படும். அதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் தமிழின் நிலை மேம்பட முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் முயற்சி பேருதவியாக இருக்கும்
      நன்றி ஐயா

      நீக்கு
  4. முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் சாதனை பாராட்டுக்குறியது. வணக்கங்களும், வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  5. //தமிழ் விக்கிபீடியாவில் முழுதாய் 200 பதிவுகளை பதிவேற்றிச்சாதனை படைத்திருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்.//

    உண்மையான + திறமையான + பொறுமையான சாதனையாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ஜம்புலிங்கம் ஐயாவிற்கு எனது வணக்கமும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ,
    ஆஹா எனக்கு தெரியாமல் போய்விட்டதே,
    அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தங்கள் பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்குத் தெரியப் படுதியிருக்க வேண்டும்
      அடுத்த முறை அவசியம் தெரியப் படுத்துவேன்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  8. தமிழ் வ்க்கிப்பீடியாவில் 200 பதிவுகளை பதிவேற்றி சாதனை படைத்திருக்கும் சகோதரர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    புத்தக கண்காட்சி இந்த முறை மருத்துவக்கல்லூரி சாலையில் நடக்கவில்லையா? தற்போது புத்தக‌க் கண்காட்சி நடக்குமிடம், முடிவுத்தேதி இரண்டையும் பதிலில் குறிப்பிடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்பொழுது புத்தகத் திருவிழாவானது.
      அரண்மனை வளாகத்தில் நடைபெறுகிறது சகோதரியாரே
      21.6.2015 வரை நடைபெறும்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  9. இப்படிச்சிலரை அடையாளம் காட்ட உங்களால்தான் முடியும் டாக்டர் ஜம்புலிங்கத்துக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா18 ஜூன், 2015

    /தமிழ் விக்கிபீடியாவில் முழுதாய் 200 பதிவுகளை பதிவேற்றிச்சாதனை படைத்திருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்.//
    இப்படி தாங்கள் பதிவிட்டதற்குத் தங்களிற்கு
    மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நல்ல சந்திப்பு! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. >>> முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் - தமிழ் விக்கிபீடியாவில் முழுதாக 200 பதிவுகளை பதிவேற்றி சாதனை படைத்திருக்கின்றார்<<<

    கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
    ஐயா அவர்கள் மேலும் பல சாதனைகளை நிகழ்த்துதற்கு வாழ்த்துகள்!..

    தஞ்சை புத்தகத் திருவிழாவினைக் கண் முன் காட்டியதற்கு மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு
  13. புத்தகத்திருவிழாவை பதிவர் திருவிழாவாக மாற்றிய பதிவர்களின் ஒற்றுமை சிறக்கட்டும்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ஜம்புலிங்கத்தின் உழைப்புக்கும் பங்களிப்பிற்கும் மிகுந்த நன்றியும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு
  15. ஜம்புலிங்கம் ஐயாவின் உழைப்புக்கும் விக்கிமீடியா பங்களிப்பிற்கு வாழ்த்துக்களும் பாராட்டும். தகவல் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. புத்தகத் திருவிழா சிறப்புற்றமைக்கு வாழ்த்துகள்
    சாதனை படைத்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைப் பாராட்டுவோம்
    காலையிலேயே ஓட்டுப்போட்டு கருத்துரை போட்டேன் முடிவில் நெட் பிரட்சினை வந்து விட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அலுவலகப் பணிகளுக்கு இடையிலும்
      அயராது, கணினியில் தாங்கள் செலவிடும் நேரம்
      வியப்பினை ஏற்படுத்துகிறது நண்பரே
      நன்றி

      நீக்கு
  17. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கரந்தையார் அவர்களுக்கு வணக்கம். நாங்கள் திட்டமிட்ட நேரத்தைவிட மிகவும் தாமதமாகவே வரமுடிந்தது என்றாலும் தாங்களும் அய்யா ஜம்புலிங்கம் அவர்களும் அந்நேரம் வரையிலும் சலிக்காமல் காத்திருந்தது எங்களனைவர்க்கும் நூறு புத்தகம் படித்த உற்சாகத்தைத் தந்தது. மிக்க நன்றி அய்யா.

    முனைவர் அய்யா ஜம்புலிங்கம் அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு! இங்கு நாங்கள் நடத்திய இணையப் பயிற்சியில் வந்த தமிழ் விக்கிப்பீடியா வகுப்பின் பிறகே அவர்கள் த.வி.யில் எழுதத் தொடங்கியதாகச் சொல்வதில் இப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை!
    என்ன ஒரு ஈடுபாடு! என்ன ஓர் உழைப்பு! அய்யாவின் பணிகளை வருங்காலத் தமிழர் போற்றுவர் என்பது உறுதி. அவர்களுக்கு எங்கள் வணக்கம் தெரிவிக்கும் வாழ்த்துகள். உங்களிருவரின் அன்பும் பண்பும் பரிமாறும் தமிழ்ப்பணிகள் தொடரட்டும்! மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் நடத்திய இணையப் பயிற்சிக்கு வந்த பிறகுதான்
      விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கினார் என்பது
      முற்றிலும் உண்மை ஐயா
      தங்களின் இணையப் பயிற்சியின் வெற்றி அது
      தங்களையும் புதுக்கோட்டை இணைய நண்பர்களையும்
      சந்தித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை ஐயா
      நன்றி

      நீக்கு
  18. இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    நமது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் முழுமுயற்சியில் மிகச் சிறப்பாக நடைப்பெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் சிறக்கும் வகையில் தங்களது பதிவு அமைந்துள்ளது. விக்கிப்பீடியா-வில் 200வது பதிவினை பதிவிட்ட சாதனையாளர் திருமிகு,.ஜெம்புலிங்கம் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தும் வாய்ப்பு தஙகளால் அன்று கிடைத்தது. அய்யா அவர்கள் ஆயிராமாவது பதிவினை பதிவிட்டு சாதனை செய்ய வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    புதுகையிலிருந்து ஒரு வாகனத்தினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து புத்தகத் திருவிழாவினை ஒரு திரைப்பட முன்னோட்டத்தினைப் பார்ப்பது போன்ற நேரத்தில் விரைந்து பார்த்து முடித்து, அந்த குறுகிய நேர இடைவெளியிலேயே சிறிய மூட்டை அளவு புத்தகங்களை வாங்கிய பரவசமான முகம் பாதியும் இன்னும் சரியாக பார்த்து வாங்க முடியவில்லையே என்ற ஏக்கமான முகம் பாதியும் கொண்டிருந்த புதுக்கோட்டை சகோதர, சகோதரிகளை சந்தித்து உரையாடும் வாய்ப்பு தங்களால் தான் எனக்கு கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் நம் தஞ்சாவூர் மாவட்ட்த்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக புத்தக அரங்கங்களைப் பார்க்க இயலாத வருத்தம் இருக்கத்தானே செய்யும், ஆனாலும் பாதி அரங்கங்களைப் பார்த்ததிலேதான் அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி
      நன்றி நண்பரே

      நீக்கு
  20. தமிழ் விக்கிபீடியாவில் சாதனை படைத்திட்ட முனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டையில் வீதி இலக்கிய அமைப்பை வழிநடத்த கவிஞர், ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் முன்னிற்கும் போது வலைப்பதிவர்கள் ஒற்றுமைக்கு சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அமைப்பு உருவாக வேண்டும்.

    அழகிய படங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

    த.ம.11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா
      ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐயா முத்து நிலவன் போன்ற ஒருவர் இருப்பாரேயானால், ஒவ்வொரு மாவட்டமும் புதுப்கோட்டையைப் போல ஜொலிக்கத்தான் செய்யும்
      நன்றி ஐயா

      நீக்கு
  21. குறுகிய காலத்தில் 200 பதிவுகளை பதிவேற்றிச்சாதனை படைத்திருக்கிறார் முனைவர் .ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் சாதனைக் கண்டு வியக்கிறேன் ,வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் நண்பரே !

    நல்லதோர் சந்திப்பும் நாவூறும் சொற்பொழிவும்
    சொல்லற் கரிய சுகங்கண்டீர்! எப்போதும்
    நில்லாமல் இப்பணிகள் நெடும்பயணம் ஆகட்டும்
    வெல்லும் தமிழை விதைத்து !

    ஐயா முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்குத் தமிழன்மை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகும் இவ்வேளை அயராத தங்கள் பணிகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்

    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    பதிலளிநீக்கு
  23. வாசிக்கும் போது மகிழ்ச்சியைத் தந்தது. முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. sathanaiyai veli kaatiyamaiku vaalthukal ayaa. sathani padivn suti koduthu iruthal nalam. ia indru than mien nool ramanujar patri padithu mudithan. pramibu, engal orilum ramanujar painethar endru padhkum podu oru santhosam. vaalthukal aya. og i

    பதிலளிநீக்கு
  25. முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சாதனை மலைக்க வைக்கிறது
    புத்தகத் திருவிழா என்றாலே உற்சாகம்தான்

    பதிலளிநீக்கு
  26. //ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அமைப்பு உருவாக வேண்டும்.// -- மகிழ்ச்சி

    முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  27. படிக்கப் படிக்க
    புகைப்படங்கள் பார்க்கப் பார்க்க
    மிக்க மகிழ்வாய் இருக்கிறது
    தலைப்பு மிகப் பொருத்தம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவின் பணியைப் போன்றே தங்களது பணியும் போற்றுதற் குரியது.

    வாழ்த்துகள் ஐயா.


    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. நிகழ்வுக்கு வர இயலவில்லை
    மன்னிக்கவும்.
    பதிவு அருமை
    புதுகையின் சார்பில் நன்றிகள்
    தம +

    பதிலளிநீக்கு
  30. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (21/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  31. புத்தகங்கள் தரும் மகிழ்ச்சியே அலாதி...

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (21.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 21ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பிற்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா
      இதோ ஐயா அவர்களின் தளத்திற்குச் செல்கின்றேன்
      நன்றி

      நீக்கு
  33. அன்பின் ஜம்புலிங்கத்தின் பணி அரிய பணீ. பாராட்டுக்குரிய பணி. மேன் மேலும் பணியாற்ற நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  34. இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
    தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      இதோ அவரது வலைதளத்திற்குச் செல்கின்றேன்

      நீக்கு
  35. பகிர்வுக்கு நன்றி.

    முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  36. முனைவர் ஜம்புலிங்கத்துக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. பதிவு அருமை நண்பரே! வாழ்த்துகள்! முனைவரைப் பெருமை படுத்தியது அருமை!

    பதிலளிநீக்கு
  38. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள் ..

    பதிலளிநீக்கு
  39. மகிழ்கின்றேன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு