மனிதரெலாம் அன்புநெறி
காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனித தத்துவமாம்
இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்
இனிதினிதாய்
எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று
மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
-
பாவேந்தர் பாரதிதாசன்
எதையும் படிக்காம சொல்லக்
கூடாது. யாரோ ஒரு தலைவர் சொன்னாரு, ஏதோ ஒரு பத்திரிக்கையிலே படிச்சேன்னு சொல்லாதே.
மூல நூல்களைப் படி.
தந்தை என்றால் இவரல்லவோ
தந்தை. அறிவுரை என்றால் இதுவல்லவோ அறிவுரை.
அறிவுரை வழங்கியதோடு
விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து,
நூறு புத்தகங்களை அந்தத் தந்தை, தனது 19 வயது மகனிடம் கொடுத்தார்.
இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி.
மகனின் மனம் மகிழ்ச்சியால்
விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்க்கிறார்.
நூறு கோடி ரூபாய்
சொத்துக்களைப் பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு, ஒவ்வொரு நூலாய் படிக்கிறார்.
ஒவ்வொரு பக்கமாக, நூலைப் புரட்டப்
புரட்ட, ஒவ்வொரு நூலாகப் படிக்கப் படிக்க, மனதில் ஓர் எண்ணம், மெல்ல மெல்ல தலை
நீட்டி, வாழ்வின் இலட்சியமாய் உருவெடுத்தது.
இனி நூல்களே என் வாழ்வு.
சில ஆண்டுகளில் ஆசிரியர் படிப்பு
முடிந்த நிலையில், திருச்சி மண்ணச்ச நல்லூர் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர்
பணியும் கிடைத்தது. கணித ஆசிரியர் பணி.
பகலில் ஆசிரியர் பணி.
மாலையில் திருச்சியின் பழைய புத்தகக் கடைகளுக்குப் படையெடுப்பு. இதுவே இவரது
தினசரி வாழ்வாக மாறிப் போனது.
திருச்சி சுப்பையா
செட்டியார் கடையில், மாலை வேளையில், ஆயிரம் புத்தகங்கள் குவித்து வைக்கப்
பட்டிருக்கும். இது 50 பைசா, இதை எடுத்தா 1 ரூபாய் என விற்பார்.
அபூர்வமான புத்தகங்கள்
பலவற்றை, இக்கடையில் கண்டவர், கடைக்காரரிடம் கேட்டார்.
இந்தப் புத்தகங்களை எல்லாம், எங்கே இருந்து வாங்கினீர்கள்?
வி.ஆர்.எம் செட்டியார் கொடுத்தார்.
உடனே, வி.ஆர்.எம் செட்டியாருக்கு
ஓர் கடிதம் எழுதினார்.
நீங்கள் இவ்வளவு படித்து, கீதாஞ்சலியையும், தாகூரின் பிற
நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறீர்கள். ஆனாலும் இந்நூல்களை
எல்லாம் எதற்காகப் பழைய புத்தகக் கடையில் போட்டீர்கள். உங்கள் ஊரிலேயே ஒரு
நூலகத்தை ஏற்படுத்தியிருக்கலாமே?
விளைவு. இருவரும் சந்தித்தனர்.
நட்பு மலர்ந்தது.
ஒரு முறை, தன்னுடன் பணியாற்றும்,
ஆசிரியை ஒருவரை, வி.ஆர்.எம் செட்டியாரிடம் அறிமுகப் படுத்தினார்.
செட்டியார்
அவ்வாசிரியைக்கு, தாகூரின் Crescent Moon நூலினைப் பரிசளித்தார்.
அன்றிரவு, அந்த ஆசிரியை, தாகூரின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அதனுள்ளே
முழுவதுமாய் மூழ்கித்தான் போனார்.
அன்றிரவே, தாகூரின் நூலை
முழுவதுமாய் மொழி பெயர்ப்பும் செய்து விட்டார்.
ஆசிரியரிடம் காட்டினார். கணித
ஆசிரியரோ, மொழிபெயர்ப்பு கண்டு வியந்து, மகிழ்ந்து, அம் மொழி பெயர்ப்பினை
செட்டியாருக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு சில வாரங்கள் கடந்த
நிலையில், கணித ஆசிரியர் அனுப்பிய மொழிபெயர்ப்பு, வளர் பிறை என்னும்
பெயரில், நூலாய் திரும்பி வந்தது.
விளையாட்டாய்
மொழிபெயர்த்தது, நூலாய் உருவெடுத்தது கண்டு, இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவேயில்லை.
அடுத்த நாளே, இருவரும் சென்று,
செட்டியாரைச் சந்தித்தனர்.
இருவரையும் சற்று நேரம்,
அமைதியாய் உற்று நோக்கிய செட்டியார் கூறினார்.
நீங்கள் இருவரும், வாழ்விலும் இணைய வேண்டும், இணைந்தே செயல்பட வேண்டும் என
விரும்புகிறேன்.
இலக்கிய நட்பு, வாழ்வியல்
தொடர்பாக மாறி, திருமணத்தில் முடிந்தது.
நண்பர்களே, இத் தம்பதியினர்
யார் தெரியுமா?
ஞானாலயா
கிருட்டினமூர்த்தி – டோரதி தம்பதியினர்.
நூல்களின் காதலர்கள் இருவரும்,
வாழ்விலும் இணையர்களாய் இணைந்த போது, நடந்தவற்றைக் கூறவும் வேண்டுமோ.
ஒருவர் ஊதியம் என்பது போய்,
இருவர் ஊதியமும், நூல்களாய் மாறி, இவர்களது வீட்டினை நிரப்பத் தொடங்கின.
வீட்டில் இடம் போதாமையால், வீட்டு
மாடியினையும், நூல்கள் முழுமையாய், தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தன.
பல ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு
முறை இவர்களது வீட்டிற்கு வந்த, கட்டுமானப் பொறியாளர் கூறினார்.
நூல்களின் கனத்தை, இதற்கு மேலும் உங்கள் வீட்டு மாடி தாங்காது.
மனம் தளரவில்லை இருவரும்.
தங்களின் ஓய்வூதியப் பணம் முழுவதையும்
செலவிட்டு, பல இலட்ச ரூபாய் செலவில், புத்தகங்களுக்காகவே, ஓர் ஆலயம் எழுப்பினர்.
சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, சட்ட நூல்கள்,
சித்த வைத்தியம், பைபிள், இசுலாமிய மொழிபெயர்ப்புகள், காகிதத் துணியினால் ஆக பகவத்
கீதை உள்ளிட்ட பல புத்தகங்களும், இலக்கியத் தரமும், தொன்மையும் கொண்ட சிற்றிதழ்கள்
என, அபூர்வமான நூல்கள், ஒவ்வொரு அலமாரியிலும் மெருகு குலையாமல்
அமர்ந்திருக்கின்றன.
இவர்களது சேகரிப்பில் உள்ள
அற்புதமான விசயம் என்னவென்றால், இவரது நூல்கள் பெரும்பாலானவை முதற் பதிப்பு
நூல்களாகும்.
1938 இல் வெளிவந்த
பாரதிதாசன் கவிதைகள் முதற் பதிப்பைப் பார்த்தேன். வெளியிட்டோர் குஞ்சிதம்,
பி.ஏ.,எல்.டி., கடலூர் என்று போட்டிருந்தது. உள்ளே புரட்டினால், ஒரு சமர்ப்பணக்
கவிதை, அடுத்து கனம் இராமநாதனுடைய பாராட்டுரை, பெரியாரினுடைய அணிந்துரை. வ.ரா வினுடைய
சிறப்புரையெல்லாம் இருந்தது.
இவையெல்லாம் 1950 க்குப் பிறகு
வந்த பதிப்புகளில் இல்லை. இதையெல்லாம் பார்த்த பிறகுதான், முதற் பதிப்புகளைத் தேட
ஆரம்பித்தேன்.
நண்பர்களே, இன்று இவரது
ஆலயத்தில், ஞானாலயாவில் கொலுவீற்றிருக்கும் நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
ஓராயிரம், ஈராயிரம் அல்ல,
முழுதாய் ஒரு இலட்சத்திற்கும் மேல்.
ஒவ்வொரு நாளும் புத்தகங்களின்
எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
இவரது பெருமை அறிந்த பல பதிப்பகத்தார், தங்களது
வெளியீடுகளை, இவருக்கு, இலவசமாகவே வழங்கி வருகின்றனர்.
கடந்த 14.4.2015 சித்திரைத் திங்களின் முதல் நாள்,
ஞானாலயா
என்னும், இந்நூல் ஆலயத்தை, அறிவாலயத்தைத்
தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.
எங்கள் பள்ளியின்
தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம்,
ஆசிரியர்களான திரு ஜி.விஜயக்குமார், திரு வி.பாலசுப்பிரமணியன், திரு
எஸ்.தனபாலன், திரு வி.பிரகாசம் மற்றும் நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு
எஸ்.டி.செளந்தரராசன், திரு எஸ்.சேகர் மற்றும் நான் என பத்து பேர், ஞானாலயாவில்
நுழைந்து, புத்தக அடுக்குகளுக்கு இடைய மூச்சுத் திணறித்தான் போனோம்.
ஆயிரம், இரண்டாயிரம் கி.மீ
தொலையில் இருந்தால் கூட, யாராவது இவரை அழைத்து, ஞானாலயாவில் இருக்கும் ஒரு
புத்தகத்தைப் பற்றிக் கேட்டால், அந்தப் புத்தகம், இத்தனாவது அலமாரியில், இத்தனாவது
வரிசையில், இத்தனாவது புத்தகமாய் இருக்கிறது, எடுத்துப் பாருங்கள், என்று சொல்லக்
கூடிய அளவில், ஞானாலயா கிருட்டின மூர்த்தி அவர்களின் உதிரத்தில் ஒன்றெனக் கலந்து விட்ட
நூலகம் இது.
ஆய்வு மாணவர்கள் யார்
வேண்டுமானாலும், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், இவரது நூலகத்திலேயே தங்கி, ஆய்வு
செய்யலாம். தங்குமிடம் இலவசம், ஏன் உணவும் கூட இலவசம்.
நண்பர்களே, உங்கள்
இல்லங்களில், பழங் காலத்திய நூல்கள் இருக்குமானால், இவர்களை அலைபேசியிலோ,
தொலைபேசியிலோ அழையுங்கள், அடுத்த நாளே உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
நூலகத்தை அறிவியல்
முறைப்படி மேம்படுத்தி, விரிவுபடுத்தி, பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களது,
தற்போதைய கவலை, கனவு, இலட்சியம் எல்லாம்.
நூல்களை அட்டவணைப் படுத்தி
கணினியில் பதிவு செய்து, இணையத்தில் ஏற்ற விரும்புகிறார். நூறு ஆண்டுகளுக்கும்
மேல் பழமை வாய்ந்த நூல்களை, மைக்ரோ பிலிம் மற்றும் ஸ்கேனிங் முறைகளில் மாற்றம்
செய்ய விரும்புகிறார்.
இதற்குத் தேவை நிதி ஆதாரம்.
தங்கள் வாழ்நாளில், உழைத்து,
உழைத்து சம்பாதித்த, ஒவ்வொரு பைசாவையும், இவர்கள் ஞானாலயாவிற்காக மட்டுமே
செலவிட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் போதவில்லை. யானையின்
பசிக்கு, சோளப் பொறி போலத்தான் இவர்களது வருவாய் உள்ளது.
விரும்புவோர் தாராளமாய்
நன்கொடையினை வாரி வாரி வழங்கலாம். நன்கொடைகளுக்கு முற்றிலும் தகுதியான இடம்.
அதுமட்டுமல்ல நன்கொடைகளுக்கு வரி விலக்கும் உண்டு.
நூல்களுக்கென்றே
தம் வாழ்நாளை ஈந்து வாழும்
ஞானாலயா தம்பதியினரைப்
போற்றுவோம்
வாழ்த்துவோம், வணங்குவோம்.
முகவரி
பா.கிருட்டினமூர்த்தி,
ஞானாலயா ஆய்வு
6, பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக் கோட்டை – 622
002
தொலைபேசி 04322 2221059
அலைபேசி 99 65 63 31
40
மின்னஞ்சல் gnanalayapdk@gmail.com
வலைப் பூ http://www.gnanalayaresearchlibrary.blogspot.com
--------------------------
நண்பர்களே,
நம் பாரதத் திருநாட்டின்
சுதந்திரத் திருநாளில் பிறந்தவர்தான்,
ஞானாலயா கிருட்டினமூர்த்தி அவர்கள்.
எதிர்வரும் 15.8.2015,
இவரது 75 வது பிறந்த நாள் ஆகும்.
இவரது பிறந்த நாளினை, பவள விழாவாக சிறப்பாகக்
கொண்டாடிட,
கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற
தமிழன்பர்களும்
சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.
மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா
உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா
நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,
பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்
என தங்களை
இன்றே அழைக்கின்றேன்.
வாருங்கள், வந்து வாழ்த்துங்கள்
அய்யா, வணக்கம். உள்ளார்ந்த , உயர்ந்த செயல் புரிவோரைப்பற்றி உள்ளம் நெகிழ்ந்து எழுதியிருக்கின்றீர்கள். மிகச்செம்மையான செயல். அடுத்த முறை புதுக்கோட்டை செல்லும்போது அய்யா அறிவொளி, கவிஞர் முத்து நிலவன் போன்ற தோழர்களோடு இணைந்து சென்று பார்ப்பேன். அருமையான தகவல். நன்றி, நன்றி . முனைவர்.வா. நேரு, மதுரை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவாய்ப்பு கிடைக்கும் பொழுது ஒரு முறை ஞானாலயாவிற்குச் சென்று வாருங்கள்
நன்றி
உரிய நேரத்தில் எழுதிய கரந்தையார்க்கு நன்றி. ஞானாலயா திரு பா.கி.அவர்களுக்கு வரும் 15-08-2015 அன்று பவளவிழா (75ஆவது பிறந்தநாள் விழா) சிறப்பாக நடத்திட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில்தான் எழுதியிருக்கிறீர்கள். அய்யாவுடன் தொடர்புகொண்டு பேசி அந்தத் தகவலையும் பதிவில் இணைக்கமுடிந்தால் நல்லது.
நீக்குவாருங்கள் தோழர் நேரு. காத்திருக்கிறேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பிரபஞ்சன், திலகவதி முதலானோரை அழைத்துப் போய் ஞானாலயாவைப் பார்க்க வைத்தேன். தாங்களும் நண்பர்களுடன் வரவேண்டுகிறேன். நன்றி கரந்தையாரே.
தங்களின் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி ஐயா
நீக்குநண்பர்களோடு அவசியம் வருகிறேன்
ஐயா அவர்களின் பவள விழா செய்தியினையும்,பதிவினில் இணைத்து விட்டேன் ஐயா
நன்றி
ஞானாலயா தம்பதியினரைப் பற்றிய தகவல் பிரமிக்க வைக்கின்றது..
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் தரிசிக்க வேண்டிய ஆலயமாகக் குறித்துக் கொண்டேன்..
நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நான் அறிந்ததில்லை இப்படியான அழுத சொரூபி இருப்பதை தங்களின் பதிவு வழி அறிந்தேன் ஐயா... ஞானாலயா கிருட்டினமூர்த்தி – டோரதி தம்பதியிரை வணங்கிங் வாழ்த்துகிறேன் ஐயா.. பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குஆஹா நல்லதொரு தகவலைத் தந்தீர்கள் சகோ, நான் அவசியம் சென்று பார்க்கனும்.வணங்கப்படவேண்டியவர்கள். முதல் பதிவு எனும்போது அதில் கிடைப்பதற்கு அறிய தகவல்கள் நிச்சயம் இருக்கும். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஆம் சகோதரியாரே
நீக்குஅத்துனையும் முதல் பதிப்பு நூல்கள்
அவசியம் சென்று வாருங்கள்
கடும் கண்டனங்கள்..
பதிலளிநீக்குஏன் எங்கள் வீட்டிற்கு வரவில்லை..
மீண்டும் கடும் கண்டனங்கள்..
தம +
மன்னிக்கவும் நண்பரே
நீக்குநண்பர்கள் பத்து பேர் புறப்பட்டு, ஞானாலயா, சித்தன்ன வாசல், குடுமியான் மலை, குன்றக்குடி மற்றும் பிள்ளையார் பட்டி என்னும் பட்டியலோடு கிளம்பினோம், ஞானாலயாவிலேயே, மணி நன் பகலுக்கும் மேலாகிவிட்டது,
அதனால்தான் தங்களுக்கு வருகையினைத் தெரிவிக்கக்கூட இயலவில்லை
நன்றி நண்பரே
நானும் மதுவை வழிமொழிகிறேன். நண்பர்களோடு தங்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டதற்கு வருந்துகிறேன்.
நீக்குத.ம.கூ.1
நீக்குநண்பர் மது அவர்களிடம் கேட்ட மன்னிப்பினைத்
நீக்குதங்களிடமும் கேட்கிறேன் ஐயா
தமிழ் ம்ண வாக்கிற்கு நன்றி ஐயா
நீக்குபெரிய வார்த்தைகள் வேண்டாம்
நீக்குபுரிந்துகொண்டேன்
அடுத்தமுறை முன்னறிவிக்கவும்
நூலக பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபோற்றப்பட வேண்டிய மனிதர். வணக்கத்துக்குரியவர். நன்றி, நல்ல ஒரு மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு, ஆவணப்படுத்தியதற்கு.
பதிலளிநீக்குமிக அற்புதமான பதிவு.ஞானாலயா நூலகத்தையும் அதை உருவாக்கிய அய்யா அம்மா அவர்களையும் தாங்கள் கட்டுரையாக வழங்கியது மிக அருமை அனைவரையும் நூலகத்தை நோக்கி ஈர்க்கிறது..ஞானாலயா மேலும் பல லட்சம் பத்தகங்களைப்பெற்று சிறக்கவேண்டும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமிக அற்புதமான பதிவு.ஞானாலயா நூலகத்தையும் அதை உருவாக்கிய அய்யா அம்மா அவர்களையும் தாங்கள் கட்டுரையாக வழங்கியது மிக அருமை அனைவரையும் நூலகத்தை நோக்கி ஈர்க்கிறது..ஞானாலயா மேலும் பல லட்சம் பத்தகங்களைப்பெற்று சிறக்கவேண்டும் நெஞ்சார வாழ்த்துகிறேன்.நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவலைச்சரத்தில் ஞானாலயா என்று படித்த ஞாபகம் ,விளக்கப் பதிவை படித்து மேலும் அறிந்தேன் , நேரில் சென்று பார்க்க ஆவலைத் தூண்டுகிறது !
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமெய் சிலிர்க்க வைக்கும்பதிவு. கிருட்டிணமூர்த்தி தம்பதி, பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஞானாலயா பற்றியும் அவ்வாளுமைகள் பற்றியும் அறிவேன்.
பதிலளிநீக்குநீங்கள் செய்வதும் ஒருவகையில் தமிழ்த்தொண்டுதான்.
த ம 6.
நன்றி
ஞானாலயா என்ற ஒரு சொல்லுக்குப் பின் இவ்வளவு உழைப்பா? படிக்கும்போதே வியப்பாக உள்ளது. இவ்வாறான ஓர் அறிவுப் பெட்டகத்தைத் தொடங்கி, பேணிக்காக்கும் பெருமக்களின் முயற்சி போற்றுதற்குரியது. அந்நூலகத்தைப் பற்றிய அரிய செய்திகளைத் தொகுத்து தாங்கள் தந்துள்ள விதம் அவர்களின் பணியை எங்கள் மனதில் மென்மேலும் உயர்த்துகிறது. அருமையான பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் ஒரு முறை
ஞானாலயாவிற்குச் சென்று வாருங்கள்
நன்றி. ஞானாலயாவிற்காக உருவாக்கப்பட்ட தளம் இது. தங்கள் பார்வைக்கு
பதிலளிநீக்குhttp://www.gnanalaya-tamil.com/
Gnanalaya pudukkottai ஞானாலயா (பேச்சுத்) தொகுப்பு
https://plus.google.com/u/0/communities/111627536687519891951
மிக்க நன்றி ஐயா
நீக்குஞானம் மிகுந்தவர்களை
பதிலளிநீக்குஞாலத்திற்கு அடையாளம் காட்டிய கரந்தையார் அவர்களுக்கு,
வாழ்த்துகளும், நன்றிகளும்!
தொடக்கத்தில் இடம்பெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்
முத்தாய்ப்பு! முதல்தரமான பதிவு!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
உயர்ந்த மனிதர்கள். நல்லதொரு தகவலைத் தந்தீர்கள், நன்றி!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையான பதிவு நண்பரே,
பதிலளிநீக்குஅழகான நடையில் அற்புதமான மனிதர்கள் பற்றிய பதிவு! தொடரட்டும் இது போன்ற பதிவுகள்!
த ம 9
நன்றி நண்பரே
நீக்குஞானாலயா தம்பதியினரைப் பற்றிய சுவையான செய்திகளையும், அவர்தம் தியாகத்தைப் பற்றியும் உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குத.ம.10
நன்றி ஐயா
நீக்குஅற்புதமான மனிதர்களையும் ஒரு அறிவாலயத்தையும் அறிமுகம் செய்துள்ளதற்கு மனம் நிறைந்த நன்றி!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குDear Mr.Jayakumar,It is a fantastic news and introduction of the great couple.Is VRM.Chettiar avlive? if possible please give deails and address of chettiar and his desendants.It is like disturbing a beehive of book lovers and I am sure that thousands and thousands of people will be benifited by this message including me.Thanks a lot.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதிரு வி.ஆர் எம் செட்டியார் பற்றி விசாரித்துத் தங்களுக்குத் தெரியப் படுத்துகின்றேன் ஐயா
ஞானாலயாவிற்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் பல நாட்களாக உள்ளது ஐயா...
பதிலளிநீக்குஅவசியம் சென்று வாருங்கள் ஐயா
நீக்குஐயா அவர்களின் பவள விழா வருகின்றது
விழாவிற்கு வாருங்களேன்
நன்றி ஐயா
எத்தனை அற்புதமான தம்பதியினர் அவசியம் ஞானாலயாவிற்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பகிர்வுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குநூல்களுக்கென்றே
பதிலளிநீக்குதம் வாழ்நாளை ஈந்து வாழும்
ஞானாலயா தம்பதியினரைப்
போற்றுவோம்
வாழ்த்துவோம், வணங்குவோம்.
உங்களோடு நானும் வணங்குகிறேன்!
நன்றி ஐயா
நீக்குஅறியாத தகவல்கள் தெரிவித்ததற்கும் அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபணியடர்வு இருப்பினும், ஒருமுறை நேரில் அங்கு செல்லவேண்டும் என்று எண்ணத்தை வித்திட்டமைக்கு நன்றி. அங்கு சென்று எண்ணிம நூலகமாக அதனை மாற்ற என்னால் இயன்றதைச் செய்வேன். வணக்கம்.--தகவலுழவன்
பதிலளிநீக்கு
நீக்குதங்களின் சேவை அவசியம் தேவைப் படும் இடம்தான் ஞானாலயா
நன்றி ஐயா
புத்தகங்களுக்கு மிஞ்சிய சொத்தும் உண்டோ?இச்சிறப்பான பணியாற்றும் அவர்களை வாழ்த்துவோம்;இயன்ற உதவி செய்வோம்,அணில் போல்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குநண்பரே முனைவர் வா.நேரு இவருக்கு அடுத்து இருந்த எனது கருத்துரை எப்படி காணாமல் போனது நேற்று இருந்ததே...
பதிலளிநீக்குநண்பரே என்னை மன்னிக்க வேண்டும்
நீக்குஎனது கவனக் குறையும், கணினி பற்றிய அறிவுக் குறைவும்தான்
இதற்குக் காரணம்.
ஒரு கருத்தினை தாங்களே நீக்கம் செய்திருந்தீர்களா, அதனை நீக்க முயன்றேன், இரு கருத்துக்களுமே மறைந்து விட்டன,
அதனை மீண்டும் அவ்விடம் எப்படிக் கொண்டு வருவதென்று தெரியவில்லை
இதுதான் காரணம் நண்பரே
இனி கவனமாக இருப்பேன்
நன்றி நண்பரே
விளக்கவுரைக்கு நன்றி நண்பரே அது இனி மீண்டு வர வழி இல்லை நானே முதலில் வந்து விட்டோம் என பெருமையாக கருத்துரை இட அதற்க்குள் திரு. நேரு அவர்களுடையது பரவாயில்லை இரண்டாவது என நினைத்தேன் அதுவும் காணாமல் போனதும் குழம்பி விட்டேன் வேறொன்றுமில்லை.
நீக்குஞானாலயா கிருட்டினமூர்த்தி – டோரதி தம்பதியினரை வணங்குகிறேன் போற்றுதலுக்குறிவர்களே.... வாழ்க நலம்.
புரிதலுக்கு நன்றி நண்பரே
நீக்குஏற்கெனவே இவரைக் குறித்து அறிந்திருந்தாலும் இத்தனை விபரங்கள் தெரியாது. விரிவான பதிவுக்கு நன்றி. தம்பதியருக்கு உளமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுக்கள். பவள விழா சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஞானாலயா தம்பதியாரைப் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள். நூல்களுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த இவர்களுக்கு பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள். பவள விழா சிறப்பாக நடைபெற பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பதிவு காலகாலத்திற்கும் இவர்களின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி சகோதரியாரே
நீக்குவணக்கத்துக்குரியவர் ஞானாலயா கிருட்டினமூர்த்தி வணங்குகிறேன். நன்றி,
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவரலாறு படைக்கும் இணையருக்கு உளப்பூர்வமான பாராட்டுகள் உண்மையில் சிறப்பான இலக்கை அடையவும் அனைவரும் பயன் பெறவும் வேண்டியும் வெளியிட்ட உமக்கும் பாராட்டுகள் .
பதிலளிநீக்குபிறந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும் என்பதற்க்கினையாய் வாழும் இணையரை பாராட்டி மகிழ்வோம் .
நன்றி சகோதரியாரே
நீக்குசிறந்த தகவல் தந்தீர்கள்..
பதிலளிநீக்குஅவர்களிற்கு நிறைய உதவி கிடைக்கட்டும்.
இனிய விழா வாழ்த்துகள்.
நன்றி சகோதரியாரே
நீக்குஉயரிய பனியொன்றினை செய்யும் அரிய மனிதர்களைப் பற்றிய அருமையான கட்டுரை. படித்து பிரமித்தேன். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஞானாலயா திரு.கிருட்டினமூர்த்தி-திருமதி.டோரதி தம்பதியினரின் அயராத உழைப்பாலும் மனமுவந்த தொண்டுள்ளத்தாலும் கம்பீரமாக எழுந்து நிற்கும் ஞானாலயா நூல் உலகத்தை தங்களுடன் கண்டு வியந்த வாய்ப்பினை பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதே எனக்கு பெருமையளிக்கிறது. தமிழகமெங்கும வாசித்தலை சுவாசமாக கருதும் அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டிய நூலகம் என்றால் அது மிகையாகாது. அய்யாவின் பவள விழாவை சிறப்பாக நடத்த உள்ள நல் உள்ளங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்.
நாம் இது போல் அறிய பணிகள் செய்யாவிட்டாலும் இவரைப் போன்றவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நம் கடமை நூல்களுக்காக வாழும் ஒருவரை இன்னும் பலர் அறிய செய்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குபாராட்டத்தக்க பணி புரியும் மகத்தான மனிதர் .....வாழ்த்துக்கள்...உடுவை
பதிலளிநீக்கு