குடிப் பழக்கம்
தொடர்பாக, நமக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள, ஒரு சில வேறுபாடுகளை நாம் முதலில் புரிந்து
கொள்ளவது அவசியம்.
குடிக்கும்
கூட்டங்களில் குடிப்பவர்கள், குடிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே கலந்து கொள்கிறார்கள்.
குடிப் பழக்கம்
இல்லாதவர்களின் கொள்கையை மதிப்பதோடு, அவர்களை யாரும் குடிக்குமாறு கட்டாயப் படுத்துவது
இல்லை.
மாறாக, அவர்களுக்குத்
தேவையான பழச் சாறுகள், பதப் படுத்தப் பட்ட பெஸ்ஸி போன்ற பானங்களுக்கும், இக்கூட்டங்களில்
முக்கியத்துவம் அளிக்கப் படும்.
இதில் மிகவும்
முக்கியமானது என்னவென்றால், இக் கூட்டங்களின் நோக்கமே, போதையினை ஏற்றிக் கொள்வதல்ல.
மாறாக, ஒவ்வொருவருடனும் பேசுவது, புரிந்து கொள்வது, புத்தம் புதிய நட்புகளை உருவாக்கிக்
கொள்வது.
இந்தியாவில்
குடித்தலுக்கானக் கூட்டத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஒருவர் எத்தனை பாட்டில்களை காலி செய்தார் என்பதைத்தான் பார்ப்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில்
அப்படியல்ல. ஒருவர் ஒரு கோப்பை ஒயின் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரமாவது ஆகும். ஏனெனில்
இக்கூட்டத்தின் நோக்கமே பேசுவதுதான், ஆம் நண்பர்களே, பேசுவதுதான் முதன்மையான நோக்கம்.
ஒருவர்
எத்தனை பேரிடம் பேசினார், என்ன என்ன புதுச் செய்திகளைத் தெரிந்து கொண்டார், எத்தனைப்
புதியவர்களின் அறிமுகங்களைப் பெற்றார், தெரிந்து கொண்ட செய்திகளும், ஏற்படுத்திக் கொண்ட
புது நட்புகளும், தங்களது இலக்கை அடைய எவ்வாறெல்லாம் உதவும் என்பதே முக்கியம்.
என்னை வரவேற்ற
என் தோழி வெண்டி, எனக்காக, ஆரஞ்சு ஜுஸ் மற்றும் பீட்சாவையும் கொண்டு வந்து கொடுத்தார்.
சிறிது நேரத்தில்,
இன்னொரு முக்கியமான நபரும் வந்து, கலந்து கொண்டார். வியப்பின் உச்சிக்கே சென்றேன்.
ஏன் தெரியுமா? அவர் யார் தெரியுமா?
எங்களது பேராசிரியர்
வோரவில்.
சிறிது நேரத்தில்
இன்னொரு பேராசிரியரான ஹோஸே அவர்களும் வந்து சேர்ந்து கொண்டார்.
பிறகுதான்
தெரிந்து கொண்டேன். ஆசிரியர், மாணவர் என்ற வித்தியாசத்தினை இங்கு யாருமே பார்ப்பதில்லை
என்று.
இது மட்டுமல்ல,
பல சமயங்களில் பேராசிரியர்கள், தங்கள் இல்லங்களிலேயே, மது விருந்திற்கு ஏற்பாடு செய்து,
மாணவர்களை அழைக்கும் பழக்கமும் உண்டாம்.
ஒரு புரிதலை
ஏற்படுத்திக் கொள்ளுதல், நட்புணர்வினை வளர்த்துக் கொள்ளுதலே, இதுபோன்ற விருந்துகளின்
நோக்கமாக இருக்கிறது.
பல்கலைக்
கழக வாழ்க்கை இவ்வாறாக வேகமாக நகர்ந்து கொண்டே சென்றது.
கிறிஸ்துமஸ்
நாளும் வந்தது.
அதுவும் மெட்ரோ
தொடர் வண்டியில்.
முதல் பயணம்.
அதுவும் பென்சில்வேனியா
மாகானத்திற்கு.
தொடர்ந்து பேசுவேன்
வெற்றிவேல் முருகன் அவர்களின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
தொடர்ந்து புத்துணர்ச்சியும், விறுவிறுப்பும் தருவதற்கு நன்றி.
பதிலளிநீக்குமாகானம் --> மாகாணம்
வித்யாசமான பேராசிரியர்கள் & பழக்க வழக்கம்.தொடருங்கள் சகோ
பதிலளிநீக்குவித்தியாசமான கலாச்சாரம்தான் :)
பதிலளிநீக்குarumai. padivin neealam athekarithal nalathu aya.
பதிலளிநீக்குநினைத்தும் பார்க்க முடியாத அனுபவப் பகிர்வு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவெற்றிவேல் அவர்கள் தன் அனுபவங்களை நன்றாக சொல்லி செல்கிறார்.
பதிலளிநீக்குஇயல்பாகவும் அழகாகவும்
பதிலளிநீக்குசொல்லிச் சொல்லிச் செல்லும் விதமும்
வித்தியாசமான அனுபவங்களும்
தொடரை சுவாரஸ்யப்படுத்திப் போகிறது
ஆவலுடன் தொடர்கிறோம்
வாழ்த்துக்களுடன்...
carry on...
பதிலளிநீக்குதொடர்கின்றேன் ஐயா!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல செய்தி.நம்மவர்கள் திருந்தத வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குநல்ல செய்தி.நம்மவர்கள் திருந்தத வாய்ப்பில்லை.
பதிலளிநீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குசுவாரஸ்யம் குறையாமல் செல்கிறது தொடர்!
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன். விறுவிறுப்பு குறையவில்லை.
பதிலளிநீக்குவித்தியாசமான நடைமுறை...
பதிலளிநீக்குபுதுவித அனுபவங்கள்....
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
அவுஸ்திரேலிய பயணம் காரணமாகக் கருத்திட முடியவில்லை.
பதிலளிநீக்குஇனி வருவேன்.
https://kovaikkavi.wordpress.com/
நம் நாட்டில் குடி குடியைக் கெடுக்கும்
பதிலளிநீக்குஅமெரிக்காவில் குடி குடியை வளர்க்கும்
அவர்களுடைய மாணவருடனான மது விருந்தை நம்முடைய தேத்தண்ணீர் குடிக்கும் பழக்கத்துடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம். இங்கு ஆசிரியர், மாணவனுடன் டீ குடிப்பது என்பது கொஞ்சம் அபூர்வம்தான் (ஆசிரியர்கள் பெரும்பாலும் கொஞ்சம் விலகி நிற்பார்கள்) எல்லாம் இருப்பவர்களே அலுத்துக்கொள்ளும் காலத்தில், பார்வை இழந்தவர் படிப்புக்காகத் தன்னந்தனியே நாடு விட்டு நாடு சென்று, அவர் பெறும் அனுபவங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதொடர்கிறோம்
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபுதிய செய்திகள் பலவற்றை அறிந்து வருகிறோம். தொடர்கிறேன்.
"ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல், நட்புணர்வினை வளர்த்துக் கொள்ளுதலே, இதுபோன்ற விருந்துகளின் நோக்கமாக இருக்கிறது." என்பதை ஏற்கிறேன்.
பதிலளிநீக்குதொடருங்கள்
தொடருகிறேன்
சுதந்திர அமெரிக்கா. தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குஇந்தியாவில் உள்ளவர்களும் குடித்தவுடன் பேசுகிறார்களே! அய்யா....!!
பதிலளிநீக்குI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குElectro chlorinator Manufacturers
Electro Chlorinators
Electrochlorination skid
Electrochlorinator
Sodium Hypochlorite Generator
Sodium Hypochlorite Generation
On site Sodium Hypochlorite Generator
On site Sodium Hypochlorite Generation
Electrochlorination
Chlorinator