05 செப்டம்பர் 2016

தியாகத் திருநாள்


    

ஆண்டு 1936, நவம்பர் மாதம் 18 ஆம் நாள்.

     இரவு மணி 11.15

     தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகம்.

     இரவு நேரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

      அலுவலகத்தின் மைய அறையில் அம் மனிதர் ஓர் கட்டிலில் கண்மூடிப் படுத்திருக்கிறார். கட்டிலைச் சுற்றிலும் கவலை தோய்ந்த முகங்கள்.

     அம் மனிதர் உறுதியாகக் கூறிவிட்டார். என்னால் வீட்டில் படுத்திருக்க முடியாது. என் இறுதி மூச்சு, காங்கிரஸ் அலுவலகத்தில்தான் பிரிய வேண்டும். தூக்கிச் செல்லுங்கள் என்னை அலுவலகத்திற்கு. உறுதியாகக் கூறிவிட்டார்.


     இதோ கட்டிலில். மெதுவாக, மிக மெதுவாக சற்றுக் கடினப் பட்டுத்தான் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்.

     இன்னும் சற்று நேரம்தான்.

     அம்மனிதருக்குப் புரிந்து விட்டது.

     சுதந்திரக் காற்றைச் சுவாசிக்காமலே, தன் மூச்சு முடியப் போகிறது என்பது அம் மனிதருக்குப் புரிந்து விட்டது.

     மெல்லக் கண் திறக்கிறார்.

     கண்கள் யாரையோ தேடுகின்றன.

    கட்டிலைச் சுற்றி வட்டமிட்டக் கண்கள், ஒருவரிடம் வந்ததும் நிற்கின்றன. அந்நபரைக் அருகே வருமாறு கண்களாலேயே அழைக்கிறார்.

      காங்கிரஸ் இயக்கத் தொண்டர் திரு சிவகுருநாதன் என்பார், தம்மை அழைப்பதை உணர்ந்து, கட்டிலை நெருங்கித் தலை குனிகிறார்.

      கட்டிலில் படுத்திருக்கும் மனிதர், அம்மாமனிதர் மெதுவாய், மிக மெதுவாய் சொற்களை உதிர்த்தார்.

பாடு, பாரதியின் அந்தப் பாடலைப் பாடு.

  அடுத்த நொடி, சிவகுருநாதனின் கம்பீரக்குரலில், பாரதியின் பாடல், அறை முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகிறது.

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
   என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைக்கை விலங்குகள் போகும்?
   என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
   என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

    பாடல் முடிவுற்ற போது. அம்மாமனிதரின் மூச்சு அடங்கியிருந்தது. இறுதி மூச்சு பிரிந்திருந்தது.
சுதந்திர தேசத்தைக் காணாமல் போகிறோமே
என்ற ஒரே ஏக்கத்துடன்
கண்மூடிய அம்மனிதர், அம் மாமனிதர்.
அடிமை இந்தியாவில்,
தாயின் கருவறையில் இருந்து வெளிவந்து
முதன் முதலாய் சுவாசிக்கத் தொடங்கிய நாள்
5.9.1872.
ஆம்
இன்று செப்டம்பர் 5
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
இத்தேசத்திற்கு ஈந்த, அம்மனிதர், அம் மாமனிதர்


கப்பல் ஓட்டியத் தமிழர்
செக்கிழுத்தச் செம்மல்

வ.உ..சிதம்பரனார் அவர்களின்
பிறந்த நாள், பிறந்த நன்நாள் இன்று

செக்கிழுத்தச் செம்மலின்
நினைவினைப் போற்றுவோம்.
----
ஆசிரியர் தினமும் இன்றுதான்
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


32 கருத்துகள்:

 1. சுதந்திரத்திற்காகப் போராடி மடிந்த மாமனிதர்களை ஒவ்வாரு நொடியும் நினைக்க வேண்டியது நமது கடமை. அதை நினைவுபடுத்தும் உங்கள் பணியும் அபாரம்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல நினைவுட்டல்..
  அற்புதமான நடை..
  உங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பரே.
  எனது "எல்லாப் புறத்தில் ஓர் இதயத்தின் குரல்"நூலில் 25 வது கட்டுரை "தஞ்சமடைந்தபின் கைவிடலாமோ" என்ற பாடல் தான்.
  சுதந்திர போராட்ட வீரர்களில் வ.வு.சி.ஓங்கி நிற்பவர் .லட்சாதிபதியாய் வாழ்ந்திருக்க வேண்டியவர்.கிட்டத்தட்ட ஒரு பரதேசியாய் மறைந்து போனார்.அவர் வாங்கிய கப்பலை அவர் சிறையிலிருக்கையில் அவரை எதித்தவர்களிடமே விற்றார்கள்.
  இவரை போன்றவர்களின் வாழ்க்கை சரித்திரம் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்படுவதில்லை.காமராஜருக்குப் பிறகு தமிழக வரலாறு"தமிழர்களின் தலைகுனிவு சரித்திரம்" எனலாம்.

  பதிலளிநீக்கு
 4. ஆசிரியர் தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. ஆசிரியர் தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. நன்னாளில் மாமனிதரைப் பற்றிய அரிய பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஆசிரியர் தின வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. தம வாக்குப்பட்டை கண்ணில் படவில்லை.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா

  உலகம் போற்றும் மாமனிதர் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.
  இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. "1936, நவம்பர் மாதம் 18 ஆம் நாள்" - சரியான சமயத்தில் சுதந்திரத்திற்குக் காரணமானவர்களை நினைவுகூறுவது உங்களின் தனித்தன்மை. பாராட்டுக்கள் சார்.

  நான் சமீபத்தில் படித்தது.. வ.உ.சி அவர்கள் தனது மகனுக்கு ஒரு வேலை வேண்டும் என்று ஈ.வெ.ராவுக்கு எழுதிய கடிதம் திருச்சி பெரியார் மாளிகையில் இருக்கிறது என்று. அது உண்மையாக இருத்தல் கூடுமா?

  பதிலளிநீக்கு
 12. மாமனிதர் தனது இறுதி விநாடியிலும் காங்கிரஸ் இயக்கத்தை மதித்தார்..

  ஆனால் அவரை அந்த இயக்கம் அலட்சியம் செய்ததாகத் தானே அறியமுடிகின்றது..

  ஐயா வ.உ.சி. அவர்களின் தியாகம் என்றென்றும் நெஞ்சில் இருக்கும்..

  பதிலளிநீக்கு
 13. நெஞ்சம் நெகிழும்படியாக
  செம்மலின் பிறந்த நாளை
  நினைவு கூர்ந்த விதம் அற்புதம்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 14. உண்மையாகத் தன்னிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்த நல்ல மனிதர். அவருடைய பரம்பரையே இன்று ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்வி! அவர்களுக்கானும் ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல்தோர் மனிதர். தியாகச் செம்மல்... அவரது பிறந்த நாளில் சிறப்பான பகிர்வு.

  ஆசிரியர் தின வாழ்த்துகள் ஜி!

  பதிலளிநீக்கு
 16. எத்த்கைய தியாகி! மனம் நெகிழ்கிறது...

  பதிலளிநீக்கு
 17. மகத்தான மனிதரை நினைவு கூர்ந்தமைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. சிறுவயதில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் வாழ்க்கைப் பற்றி அறிந்தது என்னைக் கவர்ந்த தியாகச் செம்மல். அவரைப் பற்றிய பதிவு அவரையும் அந்த நாளையும் நினைக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 19. ஒரு தியாகியின் பிறந்த நாளை அருமையாக நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 20. அருமையான நினைவூட்டல்
  பயனுள்ள பதிவு

  பதிலளிநீக்கு
 21. எப்பேர்ப்பட்ட மாமனிதர். நம் அடுத்த சந்ததியினர் அறிந்து கொள்ள கூட வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில் இது போன்ற நினைவூட்டல் அவசியம். நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 22. ஜாதி மதம் பாராது நாட்டுக்காக உழைத்த மாமனிதரை,இன்று ஜாதிச் சங்க தலைவரைப் போல சித்தரிப்பது(நீங்கள் அல்ல ) வருத்தம் தரும் ஒன்று !

  பதிலளிநீக்கு
 23. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே. ஆசிரியர் தினப் பதிவு அருமை! மாமனிதரைப் பற்றிய அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 24. நல்ல பதிவு.வீட்டைவிட நாட்டை நேசித்தமனிதர்.

  பதிலளிநீக்கு
 25. நாட்டை நேசித்த மாமனிதர் பற்றி நல்ல பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
 26. வ.உ.சி பற்றி இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அவரின் தியாகங்கள் கவனிக்கப் படாதது வருந்தத் தக்கது. தக்க நேரத்தில்அருமையான பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
 27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்திற்கு தலைவணங்குவோம்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு