குஞ்சி
யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள்
அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம்
என்னும் நடுவு நிலைமையால்
கல்வி
அழகே அழகு
வாரிவிடப்பட்ட கூந்தலும், நன்கு உடுத்தப்பட்ட
உடையும், ஒப்பனைக்காக முகத்தில் பூசப்பட்ட மஞ்சளும் ஒருவருக்கு உண்மையில் அழகே அல்ல.
உள்ளத்தால் நல்லவர்களாய், நடுவு நிலை தவறாத
வழியே செலுத்தும் கல்வியே ஒருவருக்கு சிறந்த அழகூட்டும் அணிகலனாகும் என்று முழங்குகிறது
நாலடியார்.
ஒப்பனை அழகே அல்ல
கல்வியே அழகு
கல்வியே உண்மை அழகு
எனவே மாணவர்களே, படியுங்கள்
படியுங்கள்
அறம்பொரு
ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை
நல்லிசையும் நாட்டும் – உறுங்கவலொன்
உற்றுழியும்
கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்(கு)
உற்றதுணை
என்பார் குமரகுருபரர். கல்வியைப்
போல் உற்ற துணை வேறில்லை. எத்தகைய துன்பம் வந்தாலும், அதனை எதிர்த்து நின்று வெல்வதற்குரிய
ஆற்றலைக் கொடுப்பது கல்வி மட்டுமே என்கிறார்.
எனவே மாணவர்களே, படியுங்கள்
நன்றாகப் படியுங்கள்
தொடங்குங்கால்
துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன்(று)
அறிவகற்றும் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்கும்
சின்னீர் இன்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும்
பீழை பெரிது
கல்வியானது
கற்கத் தொடங்குகிற வேளையில் துன்பத்தை, வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் போகப் போக
பெரு மகிழ்வினை உண்டாக்கும்.
கல்வி மூடத்தனத்தை அழிக்கும்
விவேகத்தை விசாலப் படுத்தும்
எனவே மாணவர்களே, படியுங்கள்
தேர்விற்காகப் படிக்காதீர்கள்
மதிப்பெண்களுக்காகப் படிக்காதீர்கள்
நூலகங்களுக்குச் செல்லுங்கள்
நூற் கடலில் மூழ்கித் திளையுங்கள்
அறிவற்றங்
காக்குங் கருவீ செறுவார்க்கும்
உள்ளழிக்க
லாகா அரண்
எதிரிகளாலும்
அழிக்க முடியாத செல்வம் என்று ஒன்றிருக்குமானால், அது அறிவு ஒன்றே.
அறிவானது நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்.
எனவே அறிவைப் பெருக்குங்கள்
நூல்களைத் தேடித் தேடிப் படியுங்கள்
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்
இழந்தபின் நம்மால் மீண்டும் பெற முடியாதது
நேரம் மட்டுமே.
எனவே இளைஞர்களே, உங்களுடைய நேரத்தை கல்வியில்
முழுமையாய பயன் படுத்துங்கள்.
கல்வி உங்களைக் காக்கும்
மாணவர்களே, மாணவிகளே
துணிவோடு இருங்கள்
எத்துணை துன்பம் வந்தாலும் கலங்காதீர்கள்
நீங்கள் கற்ற கல்வி உங்களுக்குத் துணை நிற்கும்
உலகியல் அறிவோடு உயர் குணம் என இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த, மொழி தமிழ்.
ஆம். உலகியல் அறிவு தேவை என்பதை இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த, உணர்ந்து உரைத்த ஒரே மொழி நம் தமிழ் மொழி.
நீங்களெல்லாம் தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைப்
பட்டுக் கொள்ள வேண்டும்.
படியுங்கள்
படியுங்கள்
தளராது படியுங்கள்.
படித்துப் படித்து, உங்களை நீங்களே உயர்த்திக்
கொள்ளுங்கள்.
எத்தொழிலைச்
செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்
முத்தர்
மனம் இருக்கும் மோனத்தே வித்தகமாய்க்
காதி
விளையாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதி
மனம் நீர்க் குடத்தே தான்
ஒரு
பெண், தண்ணீர் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு வரும் பொழுது, வியக்கத் தக்க வகையில்,
குடத்தில் இருந்து கைகளை நீக்கி, பலவிதமாக விளையாடி, இரு கைகளையும் வீசிக் கொண்டு நடந்து
வரினும், அவளது உள் மனம், தன் தலையில் உள்ள குடத்தின் மீதே இருக்கும் என்பது விவேகசிந்தாமணி
வாக்கு.
இதைப் போலவே, நீங்கள் படித்துப் பணியாற்றுகின்ற
வாய்ப்பு பெற்று, வேலைக்குச் சென்றதும், எத்தொழிலாக இருந்தாலும், முழுக் கவனத்துடன் செயலாற்றுங்கள்.
பணியாற்றுகின்ற இடத்தில், நாம், யாராலும்,
தவிர்க்க இயலாத மனிதராக இருக்க வேண்டும்.
அந்த அளவிற்கு எடுத்துக் கொண்ட பணியினைச்
சிறப்பான நிறைவேற்றுங்கள்.
நீங்கள் பிறந்த குலம், குடும்பம், முக்கியமல்ல.
தாய் தந்தையர் படித்தவரா, படிக்காதவரா என்பது
முக்கியமல்ல.
வசதியுள்ள குடும்பமா, வசதியற்ற குடும்பமா
என்பது முக்கியமல்ல.
படியுங்கள்
உழையுங்கள்
உயர்வு உங்களை நாடி வரும்
இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர்
மற்றும் முனைவர் பட்டமளிப்பு விழா அரங்கில், இம் மனிதர் பேசப் பேச, அரங்கே வாய் பிளந்து வியந்துதான் போனது.
நாலடியார், விவேகசிந்தாமணி, நீதி நூல், திருக்குறள்
என ஒவ்வொன்றில் இருந்தும், தகுந்த பாடல்களை, இவர் உரத்து முழங்க, முழங்க அரங்கே ஆரப்பரித்துத்தான்
போனது.
தமிழறிஞராய், தேர்ந்த பேச்சாளராய், சிம்மக்
குரலில், ஆயினும் கனிந்த வார்த்தைகளால், மாணவ மாணவியரின் உள்ளத்திலும், நாடி நரம்புகளிலும்,
புது நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் ஊடுருவச் செய்த, இம் மனிதர் காக்கிச் சட்டைக்குச்
சொந்தக்காரர், என்பதால் அரங்கே இன்ப அதிர்ச்சியில் உறைந்துதான் போனது.
இவர் கருப்பு உடையில் இருந்து காக்கிக்கு
மாறியவர்.
ஆம் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின், மேனாள்
வழக்கறிஞர்.
உடலில் காக்கியையும், உள்ளத்திலும், உதிரத்திலும்
செந்தமிழையும் சுமந்து வாழ்பவர்.
காலந்தோறும் கருப்பர் நகரம்
சென்னை, மதராசப் பட்டினமாக மாறிய வரலாற்றை
அயராது ஆய்வு செய்து
டாக்டர் பட்டமும் பெற்றவர்,
இவர்தான்
தமிழ்திரு முனைவர் த.செந்தில் குமார்
காவல்துறை கண்காணிப்பாளர், தஞ்சாவூர்
கல்வி குறித்த அரிய நற்கருத்துரைகளைத் தொகுத்து வழங்கியதோடு, கடினமான காவல்துறைப் பணிகளுக்கிடையே, அயராத உழைப்பின் மூலம் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் த. செந்தில்குமார் அவர்களையும் சிறப்பித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிகச் சிறந்ததொரு பதிவு இது.
ஏற்கனவே இவரைக் குறித்த பதிவை தந்து இருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குஇந்த விந்தை மனிதருக்கு எமது வாழ்த்துகளும்...
படி, உழை, உயர் எல்லோரது உள்ளத்திலும் பதிய வேண்டிய கருத்து.
பதிலளிநீக்குமும்பை இரா. சரவணன்
முன்னால் படித்த நினைவு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. கல்வியின் தேவையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ஆன்ன்ல் இன்றைய கல்வியில் அறிவை வளர்க்க எந்த அம்சமும் இல்லை என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. தயவு செய்து எனது சில புத்தகங்களை புரட்டி உங்க்கள் கருத்தைத் தெரிவியுங்கள். "அறிவாளர்களாகவும், பேரறிவாளாராகவும் வளர்வது எப்படி"? Pratilipi.com/natarajan-nagarethinam
பதிலளிநீக்குஇவரை நீங்கள் முந்தைய பதிவில் அறிமுகப்படுத்தியது இன்னும் நினைவில் உள்ளது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இவரை நீங்கள் போற்றும் பாங்கு பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குகல்விக் கருத்து அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குகல்வியின் பெறுமையை சொல்லவும்... சொல்லக் கேட்கவும் அழகோ அழகுதான்... நல்லதொரு அனுபவ பதிவு... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇவர் பெருமைகளை ஏற்கெனவே ஒருமுறையும் கொடுத்திருக்கிறீர்கள். அவருக்கு எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குகாக்கி சட்டைக்குள் தமிழார்வம்!! புதுசா இருக்குண்ணே. செந்தில்குமார் சாருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎன்னைதான் என் வீட்டில் படிக்க அனுமதிக்கல. என் பிள்ளைகளை படிச்சுட்டே இருங்கன்னு சொல்வேன். எப்பாடு பட்டாவது ரெண்டு மூணு டிகிரி வாங்குங்கன்னு சொல்வேன்.
கல்வியின் வேர்கள் கசக்கும், அதன் பலன்களோ இனிக்கும்ன்னு சும்மாவா சொன்னாங்க.
முன்பே இவரைப் பற்றி படித்து இருந்தாலும்
பதிலளிநீக்குஇப்போது பேசிய விஷய பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள்.
அருமையாகச் சொன்னீர்கள் சகோ. முனைவருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குகல்வி கற்பது அழகு... எழுத்தில் வடித்தது அழகோ அழகு...கண்காணிப்பாளர் ஐயாவின் முனைவர் பட்டம் அழகுக்கே அழகு..... அருமை ஸார் .
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, தங்களின் பதிவில் பதிவிட்டுள்ள அந்த அருமையான தமிழருவியில் நானும் நனைந்தேன் என்பது பெருமையாக இருக்கிறது. நன்றி சகோ.
பதிலளிநீக்கு///குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
பதிலளிநீக்குமஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு//
இதை என் டயறிக் கொப்பியில் எழுதி வச்சிருக்கிறேன்.. உங்கள் போஸ்ட் அனைத்தும் உண்மை.. உண்மை..
///இவர்தான்
பதிலளிநீக்குதமிழ்திரு முனைவர் த.செந்தில் குமார்
காவல்துறை கண்காணிப்பாளர், தஞ்சாவூர்//
அதுசரி கரந்தை அண்ணனுக்கு இவர்மேல ஓவர் லவ் போல இருக்கே:) அடிக்கடி படத்தோடு எழுதுறீங்க இவர் பற்றி... ஹா ஹா ஹா அருமையான விசயங்களை எத்தனை தடவை வேணுமெண்டாலும் சொல்லலாம்.
கல்வியே என்றும் நிலையான சொத்து. அழகான கருத்துக்களுடன் ,பட்டம்பெற்ற த.செந்தில்குமாருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇவரைப் பற்றி முன்பே வாசித்த நினைவு இருக்கிறது. தற்போது கல்வி பற்றி பேசிய கருத்துகள் அருமை. எங்கள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇவர் வழக்கறிஞர் என்பது தெரியாத தகவல். நன்றி நண்பரே
பதிலளிநீக்குசிறப்பான மனிதர்....
பதிலளிநீக்குபடிப்பு நம்மை வேறொரு உலகத்திற்கு இட்டுச்செல்லும்/
பதிலளிநீக்குநான் படிக்கும் காலத்தில் இப்படி ஒரு அறிவுரை கிடைக்கவில்லை. அருமை.....
பதிலளிநீக்குமாணவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய
பதிலளிநீக்குகல்வி சார் சிறந்த வழிகாட்டல்! - தங்கள்
பதிவினை உலகத் தமிழ் வலைப்பதிவர் குழுவில் பகிருகிறேன். உலகெங்கும் இப்பதிவு பரவ வேண்டும்.
தமிழரின் முதலீடான கல்வி வளம் சிறந்து விளங்க வேண்டும்!
கல்வியின் அருமை பெருமைகளைப் பதிவுகளில் வெளிப்படுத்தியமைக்கு மிக்க பாராட்டுகள்
பதிலளிநீக்குமிக அருமை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது...
பதிலளிநீக்குஅருமையான கருத்துக்கள்...
காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் IPS அவர்கள் பற்றி இது மூன்றாவது பதிவு என்று நினைக்கிறேன். கல்வி பற்றி இலக்கிய மேற்கோள்களுடன் இவர் பகர்ந்த கருத்துகள் வியப்பளிக்கின்றன. வித்தியாசமான போலீஸ் அதிகாரி. கரடுமுரடான காவல்துறையில் பணியாற்றும் இனிமையான மனிதரும்கூட.
பதிலளிநீக்குகல்வியின் சிறப்பை, உதாகரண சிற்ப்பமாக செதுக்கி வாசகர்களுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது..அருமை..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes