தென்னம நாடு
தென்னவன் நாடு
தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.
பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில்
சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.
பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில்,
ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம்
உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.
பல வரலாற்று எச்சங்களை விழுங்கி, பெரும் ஆய்விற்குரியப்
நிலப் பகுதியாக விளங்கும், இந்தத் தென்னமநாட்டில், 1993 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதுதான்,
இராஜராஜன் கல்வி அறக்கட்டளையாகும்.
இந்த அறக்கட்டளையில் சார்பில், இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றும்
நடத்தப்பெற்று வருகிறது.
திரு
ப.சாமிநாதன் சேதுராயர் என்பார் இவ்வறக்கட்டளையின் தாளாளராகப் பணியாற்றி வருகிறார்.
திரு ப.சாமிநாதன் சேதுராயரின் அருமைக்கும்
பெருமைக்கும் உரிய புதல்வர் திரு எஸ்.சக்திவேல்
அவர்கள், என்னுடன் பணியாற்றும் ஆசிரியரும், எனது நண்பரும் ஆவார்.
இவரது சீரிய வழிகாட்டலில், ஒவ்வொரு ஆண்டும்
, அறக்கட்டளையின் சார்பில், யோகா வகுப்புகளும், மருத்துவ முகாம்களும் நடத்தப்பெற்று
வருகின்றன.
இராஜராஜன் கல்வி அறக்கட்டளையும், இராஜராஜன்
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பெற்று கால் நுற்றாண்டு கடந்து விட்டன.
கடந்த 30.4.2018 திங்கட்கிழமை மாலை இராஜராஜன்
கல்வி அறக் கட்டளை மற்றும் இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் வெள்ளி விழா
சிறப்புடன் கொண்டாடப் பெற்றது.
வெள்ளி விழாவின் போது, நண்பர் திரு எஸ்.சக்திவேல்
அவர்களின் அரும் முயற்சியால், திருவள்ளுவர் சிலை ஒன்று திறக்கப் பெற்றது.
மேலும் தென்னமநாடு முத்தமிழ் மன்றம் என்னும்
தமிழ் அமைப்பு ஒன்றும் தென்னமநாட்டில், தமிழ் காக்க, தமிழ் போற்ற தோற்றம் பெற்றுள்ளது,
தமிழ் முழக்கம் என்னும்
நூலும் வெளியிடப் பெற்றது.
தென்னமநாடு
முத்தமிழ் மன்றத்தின் சார்பில்,
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
அவர்கள்
வரலாற்று
ஆய்வாளர்
முனைவர் எம்.அய்யாவு அவர்கள்,
மேனாள்
பதிவாளர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
திரு மணி.மாறன் அவர்கள்,
தமிழ்ப்
பண்டிதர், சரசுவதி மகால் நூலகம்
கரந்தை ஜெயக்குமார்
ஆம் நண்பர்களே, எனக்கும்
மாமன்னர்
இராஜராஜன் விருது
வழங்கப் பெற்றது.
வெள்ளி விழா நிகழ்வுகளுக்குத் தலைமையேற்ற மனிதநேயப்
பண்பாளர் திரு எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள், மாமன்னர் இராஜராஜன் விருதுகளை வழங்கிச்
சிறப்பித்தார்.
நண்பர் திரு எஸ்.சக்திவேல் அவர்களுக்கும்,
அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கும், தென்னமநாடு முத்தமிழ் மன்ற நிறைவேற்றுக் கழக உறுப்பினர்களுக்கும்
நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்
விழாவினைத் தொடர்ந்து சின்னஞ்சிறு மழலையர் பங்கு பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நிகழ்வுகளை, இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியை செல்வி வினோதினி அவர்கள் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
மேலும் பல விருதுகள் தங்களை வந்தடைவதற்கு வேண்டுகின்றேன்..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் விருதுகள் பல...
பதிலளிநீக்குதமிழ்ப்பணியாற்றுவோர், தமிழ்ப்பணி புரியும் தங்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்ததும் போற்றுதற்குரிய தமிழ்ப்பணிதான்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
அருமையான தொகுப்பு..வியப்பான செய்திகள்
பதிலளிநீக்குமேலும் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமை நல்ல பதிவு, அழகான நடையில் நிகழ்வினைத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி, நானும் விருது பெற்றவர்களுள் ஒருவன் என்பதால், இந்த விருதினை ஏற்பாடு செய்து, மிகவும் சீரிய விழா எடுத்து வழங்கிய ஆசிரியர் திரு சக்திவேல் அவர்களுக்கும் விழாக்குழுவினருக்கும், நல்ல பதிவினை செய்து வரும் ஆசிரியர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குசிறந்த நிகழ்வு. மென்மேலும் விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇராஜராஜன் விருது
பதிலளிநீக்குசொல்லும்போதே
மனதிற்குப் பெருமை
வாங்கும்போதோ
பெறுபவர்க்குப் பெருமை
காண்பவர்க்கோ
கண்களுக்குப் பெருமை
கேட்பவர்க்கோ
நெஞ்சமெல்லாம் பெருமை
விருதளிக்கும் போதோ
அளிப்பவர்க்கே பெருமை
தாங்கள் அனைவரும்
மேடையில் நிற்கும்போது
விருதுக்கே பெருமை.,.
தொடரட்டும் தங்கள் பணி
பெற்றிடுக விருதுகள் பல....
வாழ்க்கையில் இதைவிட பெரிய விருது என்ன இருக்கிறது. கொடுத்து வைத்தவர். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமும்பை சரவணன்
மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் மேலும் விருதுகள் பெற்றிடவும் மனமார்ந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவிருதும் பெருமை பெற்றது
பதிலளிநீக்குவிருதுகள் பெற்றமைக்கும் புதிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
மிக்க மகிழ்வு பல விருதுகள் பெற எனது வாழ்த்துக்கள்...ஐயா
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
மிக்க மகிழ்வு பல விருதுகள் பெற எனது வாழ்த்துக்கள்...ஐயா
மிகச்சிறப்பு... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்! வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.
தென்னம நாடு பற்றி இப்போது தான் அறிகிறேன். ராஜராஜன் விருது பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஆகா நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,!
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா...
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, விருது பெற்ற தாங்கள் விருது பெறுவதற்ககு தகுதியானவர் என்றால் அது மிகையில்லை.விழா சிறப்பாக நடைபெற உழைத்த நண்பர் திரு. சக்திவேல் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமனம் நிறை வாழ்த்துகள்
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா.... மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குமனம் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுடைய எழுத்து போற்றப்படுவதைக் கண்டு நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். உங்களின் சாதனைக்கு இது ஒரு அங்கீகாரம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குஅழகிய விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிருதுபெற்றமைக்கு வாழ்த்துகள் அய்யா.
பதிலளிநீக்குஅதை அடக்கத்தோடு தெரிவிக்கும் பண்பே பெரும் விருதுகளுக்கு அடிப்படை!
மனம் நிறைந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குமேலும் பல விருதுகள் பெற மனமாழ்ந்த வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவிருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்! தங்களுக்கு விருது வழங்கி கௌரவித்தவர்களுக்கு நன்றி பல!!
பதிலளிநீக்குமாமன்னர் இராஜராஜர் பெயரில் அறக்கட்டளை, மழலையர் துவக்கப்பள்ளி (இப்பெயர் சிறப்பாக அமைந்துள்ளது) இவ்விரண்டும் கால் நூற்றாண்டைக் கடந்து சாதனை புரிந்துள்ளன. விழா பற்றிய செய்திகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நிறைவான பணி. பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு