இந்திய
மக்களுக்குச் சுதந்திரம் அளித்தால், அதிகாரம் நாணயமற்றவர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும்
போக்கிரிகள் கைகளுக்குச் சென்றுவிடும்.
ஜாதி, மதம், பதவி ஆகிய காரணங்களுக்காகவும் மற்றும்
எந்த காரணமும் இல்லாமலும் கூட, தங்களுக்குள் அடித்து மோதிக் கொள்வார்கள்.
இந்திய நாடே மலிவான அரசியல் சண்டை, சச்சரவுகளால்
காணாமல் போகும் நிலை வரும்.
லஞ்சம் தலைவிரித்தாடும்.
தண்ணீரையும், காற்றையும் கூட விலை பேசி, விற்றுக்
காசு சம்பாதிப்பார்கள்.
---- வின்ஸ்டன் சர்ச்சில்.
----
காரணம்
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேயர்கள், இந்தியாவையும்
ஈடுபடுத்தினர்
இந்தியப் படை வீரர்களை, ஏடன், சிங்கப்பூர்
என அனுப்பி போரில் பங்கேற்கச் செய்தனர்.
இந்தியர்களின் மன உணர்விற்கு எதிராக, இந்தியாவை
போரில் இணைத்ததை விரும்பாமல் இந்தியர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
----
1940 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியைக் காண வந்த,
பிரிட்டனின், நியூஸ் ஸ்டாண்டு என்னும் பத்திரிக்கையின் நிருபர், காந்தியைப் பார்த்துக்
கேட்கிறார்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க ஏதேனும்
ரகசியத் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
காந்தி கூறினார்
என்னுடைய பொது வாழ்வில், நான்
ஒரு திறந்த புத்தகம்.
என்னிடம் ரகசியம் ஏதும் கிடையாது
ரகசியமானப் போராட்டத் திட்டங்கள்
எதிலும் ஈடுபடவில்லை
என்னுடையப் போராட்டம் வெளிப்படையானது
அதனை நான் அறிவிப்பேன்
மக்களை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
காந்தி மக்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.
போராட்டக் களம் காண, காந்தி மக்களைத் தயார் படுத்திக்
கொண்டிருந்தார்.
மாதங்கள் கடந்தன.
1942 இல் கிரிப்ஸ் என்னும் ஆங்கிலேயர், ஒரு புதிய
திட்டத்தோடு இந்தியாவிற்கு வருகிறார்.
தன் திட்டங்களை அறிவிக்கவும் செய்தார்.
•
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இந்தியாவின்
மாநிலங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்படும்.
• தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில்,
பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கொண்டு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படும்
• 1935 இல் இயற்றப்பட்ட அரசியல்
சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம்.
என அறிவித்தவர், இறுதியாய் ஒரு குண்டையும் தூக்கிப்
போட்டார்.
இந்தியாவில் இருந்து எந்த மாநிலமாவது,
பிரிந்து போக விரும்பினால், அதை நாங்கள் அனுமதிப்போம்.
அவர்கள் தனிப்பட்ட முறையில், தனி
நாடு அமைக்க, அனைத்து உதவிகளையும் செய்வோம்.
பிரிந்து போகும் நாட்டை, டொமினியன்
அந்தஸ்த்து உள்ள நாடாக அங்கீகரிப்போம்.
இந்திய மக்கள் குமுறத் தொடங்கினார்.
இந்தியத் தலைவர்கள், இத்திட்டத்தைப் புறக்கணித்தனர்.
விளைவு.
Quit
India Movement
வெள்ளையனே
வெளியேறு இயக்கம்.
1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள், 8 ஆம் நாள்,
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் பட்டது.
இந்தியா கிளர்ந்து எழுந்தது
தமிழ் நாட்டில் களம் சூடு பிடித்தது
அனல் பறந்தது
கோயமுத்தூரில், சூலூர் விமான நிலையம், கோவையின்
பஞ்சாலைத் தொழிலாளர்களால், முற்றிலுமாய் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது.
சீர்காழியில் உப்பனாற்றுப் பாலம் தகர்க்கப்
பட்டது.
வேதாரண்யத்தில் உப்பளம் கைப் பற்றப்பட்டது
இராமநாதபுரம், குலசேகரப் பட்டினம், ராச பாளையம்
உள்ளிட்ட இடங்களில் புரட்சி பெரு வடிவெடுத்தது.
பலத் தமிழர்கள் தங்கள், இன்னுயிரை இழந்தனர்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், தமிழகத்தின்
பங்களிப்பு மகத்தானதாகும்.
ஆனாலும், வரலற்றின் பக்கங்களில் இருந்து,
தமிழகத்தின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விட்டதுதான் வேதனை
ம.பொ.சி அவர்கள் விடுதலைப் போரில் தமிழகம் என்னும் நூலை எழுதாமல், இருந்திருப்பாரேயானால்,
விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு முற்றிலுமாய், மறைக்கப் பட்டு, மறக்கடிக்கப் பட்டிருக்கும்.
தமிழகத்தின் பங்கினை மட்மல்ல, வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தின், பவள விழாவினைக் கூட, கொண்டாட மறந்த தேசம்தான் நம் தேசம்.
உண்மை, உண்மை
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆம்
ஆண்டு விழாவினைக் கொண்டாடிட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக உயிர் கொடுத்த, இந்திய
வீர்ர்களைப் போற்றிட, நம் நாடு மறந்து போய்விட்டதுதான் வேதனையிலும் வேதனை.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா,
நம் நாட்டில் எங்கேயும் கொண்டாடப்படவே இல்லை.
---
நண்பர்களே, ஆகஸ்டுப் புரட்சியினை.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று மக்களால் அறியப்பட்ட, ஆகஸ்டு புரட்சியினை, புரட்சியின்
தாக்கத்தை, சுமார் ஒரு மணிநேரம், கடும் இடி, மின்னலோடு பொழிந்த, அடை மழையினைப் போல,
கொட்டித் தீர்த்துவிட்டார் இவர்.
ஆகஸ்டு புரட்,சி என்னும் தலைப்பில் உரையாற்ற
வேண்டுமே என்பதற்காக, வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டி, குறிப்புகள் பலவற்றைத் தயாரித்து,
ஆற்றப்பட்ட உரை, அல்லவே அல்ல, இவரது உரை.
பல்லாண்டுகளாகப் படித்துப் படித்து, ஒவ்வொரு
முறையும், நெஞ்சம் துடித்துத் துடித்து, ஆழ் மனதில், உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த,
உதிரத்தோடு உதிரமாய் ஊறி, ஒன்றெனக் கலந்துவிட்ட, வரலாற்று நிகழ்வுகளை, உணர்ச்சிப் பெருக்கோடு
இறங்கி வைத்திருக்கிறார்.
இவரது உரை நிறைவுற்றபோது, சுதந்திரப் போராட்டக்
காலத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.
இதில் வியப்பிற்குரிய செய்தி என்ன என்றால்,
இவர் வரலாற்றுத் துறை பேராசிரியர் அல்ல.
வணிகவியல் துறைப் பேராசிரியர்.
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்.
பூண்டி புட்பம் கல்லூரி, தஞ்சாவூர்
பவள விழா கண்ட ஆகஸ்டு புரட்சி
என்னும் தலைப்பில்
ஏடகம் ஞாயிறு முற்றத்தில்,
இவர்தம் பொழிவின் வல்லமையைக் கண்டு
மெய்மறந்துதான் போனேன்.
நன்றி ஐயா.
---
ஏடகம்
ஞாயிறு
முற்றம் சொற்பொழிவு
ஏடக விழாவிற்கு, வந்திருந்தோரை,
ஏடகத்தின் நிறுவனர்
திரு
மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர்
பு.இந்திரா காந்தி அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார்.
திருமதி
கோ.விஜயலட்சுமி அவர்கள்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.
தன் தங்கு தடையற்றப் பேச்சால்,
பேச்சு வன்மையால், குரல் வளத்தால், கருத்துச் செறிவால்,
விழாத் தொகுப்புரையை.
குளிர் நிலவாய், இதமாய் வீசும் இளம் தென்றலாய்
வழங்கிச் சிறப்பித்தார்
செல்வி
இராச.பாரதி நிலா
வாழ்த்துகள் நிலா.
நிகழ்வில் கலந்துகொண்டு பொழிவினை முழுமையாகக் கேட்டேன். பேச்சாளர், தன் பேச்சால் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துவிட்டார். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் அதனைக் கேட்பதுபோல இருந்தது.
பதிலளிநீக்குசர்ச்சில் கூறியது நிறைவேறாமல் காந்திய அகிம்சை வழி நின்று இந்தியாவை காப்பது இன்றைய இளைஞர்களின் கடமை.
பதிலளிநீக்குஎவ்வளவு தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரநாடு இன்று கொள்ளையர்களின் கையில்....
பதிலளிநீக்குஇது போன்ற நிகழ்ச்சிகளை யூ டியூப் ல் பதிவேற்றவும். இருந்தால் இணைப்பு தரவும். நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குசுதந்திரம் எவ்வளவு கஷ்டபட்டு எத்தனை பேர்களின் உயிர் தியாகத்தாலும், கடும் உழைப்பாலும் வந்தது என்று உணர்ந்து கொள்ள உதவும்.
நல்ல பகிர்வுக்கு நன்றி.
சர்ச்சில் ஒரு தீர்க்க தரிசி ......! நம் சுதந்திரம் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சாவழியில் மட்டுமே பெறப்பட்டதுஎன்பது தவறோ
பதிலளிநீக்குஆம் ஐயா!
நீக்குதிரு. கோ.விசயராமலிங்கம் அவர்கள் "பவள விழாக்கண்ட ஆகஸ்ட் புரட்சி" என்ற தலைப்பில் நிகழ்த்திய ஏடகம் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு அனைவருக்கும் ஒரு "Eye Opener" எனலாம். யூடியூப் காணொளியில் இது போன்ற சொற்பொழிவுகளைப் பதிவேற்றினால் மிக்க நன்மை பயக்கும்.
பதிலளிநீக்குகாந்தி பற்றிய தகவல்கள் புதிது எனக்கு..
பதிலளிநீக்குவின்ஸ்டன் சர்ச்சில் கூறியது உண்மையாகிவிட்டது
பதிலளிநீக்குவின்ஸ்டன் சர்ச்சில் கூறியிருப்பது எப்படி இப்படி அப்படியே நடக்கிறது. நல்ல தொலநோக்குப் பார்வை.
பதிலளிநீக்குநிகழ்வு நல்லதொரு நிகழ்வு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
நான் அறிந்திராத அரிய தகவல்களைத் தொகுத்து வழங்கியிருகிறீர்கள். நன்றி ஜெயக்குமார்.
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத தகவல் அறிந்திட தந்தமைக்கு நன்றிண்ணே
பதிலளிநீக்குவெள்ளையனே வெளியேறு
பதிலளிநீக்குபோரில்
தமிழகப் பங்கினை மீட்டு
எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!
பாராட்டுகள்
அருமை ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
அரிய தகவல்கள் அறிந்தேன்.
பதிலளிநீக்குஏற்கெனவே அறிந்த தகவல்கள் எனினும் இப்படி ஒரு விழா எடுக்கப்பட்டது அறியாத ஒன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசர்ச்சில் அன்று கூறியது உண்மை என்பதை இன்றைய அரசியல்வாதிகள் நிரூபித்து வருவது வேதனைக்குரியது. அதே சமயம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் விவரங்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டது வேதனையிலும் வேதனை.
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான சொற்பொழிவினை அழகாக பதிவிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமிக அரிய தவல்கள் ஐயா...நன்று
பதிலளிநீக்குநல்ல சொற்பொழிவு! இதுவரை அறியாத பல அரிய, திடுக்கிடும் தகவல்கள்!
பதிலளிநீக்கு// இந்தியாவில் இருந்து எந்த மாநிலமாவது, பிரிந்து போக விரும்பினால், அதை நாங்கள் அனுமதிப்போம். அவர்கள் தனிப்பட்ட முறையில், தனி நாடு அமைக்க, அனைத்து உதவிகளையும் செய்வோம்// - இதை நீங்கள் குண்டு என வருணிக்கிறீர்கள்! நான் பொன்னான வாய்ப்பு என்பேன்! இப்பேர்ப்பட்ட அரும்பெரும் வாய்ப்பு ஒன்றை வெள்ளையர்கள் நமக்கு வழங்க முன்வந்திருக்கிறார்கள். காந்தியடிகள் எனும் ஒற்றை மனிதர் மீதான நம்பிக்கையால் அதைக் கெடுத்து, நம் கையால் நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொண்டிருக்கிறோம்! பெருமூச்செறிவதைத் தவிர வேறென்ன செய்ய!
வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்துப் படித்திருக்கிறேன். ஆனால் இந்த விதயம் தெரியவே தெரியாது! வெகு அரிய தகவல்! மிக்க நன்றி ஐயா!
ஐயா! மேற்படி சொற்பொழிவின் காணொலி அல்லது ஒலிப்பதிவு இருந்தால் இணைப்புத் தர இயலுமா?
பதிலளிநீக்குசில இடங்களில் தமிழ் மக்களின் பங்களிப்பு மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு மறுக்கப்பட்டு வருவது சாதாரண நிகழ்வு போலத் தெரிகிறது. நான் வாழும் இடத்தையும் சென்று வந்த தேசங்கள் சிலவற்றையும் வைத்து தான் இக்கருத்தைத் தெரிவி்க்கின்றேன்.
பதிலளிநீக்கு