22 மே 2018

மீண்டும் சந்திப்போம்     சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு  சித்தப்பாவின்,


முதலாமாண்டு நினைவு நாள்
திருவுருவப் படத் திறப்பு
நினைவு மலர் வெளியீடு

     எதிர்வரும் 25.05.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணியளவில், திருவையாறு, திருமஞ்சன வீதி, பாபு திருமண மண்டபத்தில் நிகழ்வுற இருக்கின்றது.


வலையுலக உறவுகளானத் தங்களை,
இந்நிகழ்வில் கலந்து கொள்ள
இருகரம் கூப்பி
அன்போடு அழைக்கின்றேன்
வருக, வருக

     பல நாட்களாக, பல்வேறு பணிகளால் இணையத்தின் பக்கம் வர இயலாத நிலை.

     இணையக் கடலில் மூழ்கி, தங்களின் எண்ணங்களை, எழுத்துக்களை வாசிக்க. சுவாசிக்க இயலாத நிலை, இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றே எண்ணுகின்றேன்..

      ஜுன் மாதத் துவக்கத்தில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்