ஆசிரியர்
என்றாலே, அவர் சகல விசயங்களிலும் நேரடியான அனுபவம் உள்ளவர், அது குறித்து ஆழ்ந்து சிந்திப்பவர்
என்றுதான் பொருள்.
எனவே ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்
கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும், தன்னை ஒரு கலைஞனாகவே மதிக்க
வேண்டும்.
எப்படி ஒரு பாடகன், தன்னுடைய பாட்டுத் திறனைத்
தினமும் வளர்த்துக் கொள்வாரோ, அப்படி, கற்றுத் தருவதை நுட்பமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிராமப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்,
அந்தக் கிராமத்தின் வளர்ச்சியே தன் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற பொறுப்புணர்ச்சியுடன்
நடந்துகொள்ள வேண்டும்.
மாறாக வகுப்பறையே தனது உலகம் என்று சுருங்கிவிடக்
கூடாது.
பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத குழந்தைகளுக்கு,
பள்ளிக்கு வெளியில் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.
அலங்காரமான ஆடைகளை அணிந்து, ஆசிரியர்கள் பகட்டுத்
தனமாக நடந்து கொள்ளக் கூடாது.
ஆசிரியர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க
வேண்டும். விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் பணி என்பது ஒரு வகையில், போர்
வீரனை விடவும் சவால் நிறைந்தது. எனவே ஆசிரியர்களது அன்றாடத் தேவைகளை, குறிப்பாக ஆசிரியர்களது
குடும்பத்திற்கானத் தேவைகளை, அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே வேலை செய்கிறோம்
என்று உணரும்போதுதான், கல்வி நலிவடையத் தொடங்குகிறது.
இது மாற்றப்பட வேண்டும்.
பொது மக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே
ஒரு இளக்காரம், கேலி உள்ளது.
இது மாற வேண்டும்
மக்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும்
ஒரு ஊருக்குள் வரும் கான்ஸ்டபிளுக்குக் கிடைக்கும்
மரியாதை, ஆசிரியருக்குக் கிடைப்பதில்லை.
போலிஸ்காரர் குற்றவாளியைப் பிடிக்க வருகிறார்.
அவரை நாம் வரவேற்று மரியாதை செய்கிறோம்.
ஆசிரியர், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை
வளர்த்து எடுக்க முயற்சிக்கிறார்.
அவரை நாம் மதிப்பதேயில்லை.
இது மாற வேண்டும்
முதலில் ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்
குறிப்பாக ஆசிரியர்களுக்கு எதிராக, எவரும்
கை நீட்டிப் பேசவோ, பரிகாசம் செய்யவோ கூடாது.
எப்படி, காவல் நிலையத்தைக் கண்டவுடன், எவ்வளவு
பெரிய ரௌடியும், அடங்கி ஒடுங்கி, அமைதியாய் போகிறானோ, அது போலப் பள்ளியைக் கண்டதும்,
அது அறிவு நிலையம் என மதித்து நடக்க வேண்டும்.
நண்பர்களே, படிக்கப் படிக்க வியப்பு
மேலிடுகிறது அல்லவா?
ஆசிரியர்களின் நிலையினை, ஆசிரியர்கள் போற்றப்பட
வேண்டியதன் அவசியத்தை, முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இவர் யார் தெரியுமா?
அதைவிட முக்கியம், எப்போது கூறினார் தெரியுமா?
இவர் இறந்தே, 114 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இவர் ஒரு மருத்துவர்.
அதனினும் மேலாய் எழுத்தாளர்.
அதனினும் மேலாய், ஆவணப்படுத்துதலின் நாயகர்.
இவர் எழுதிய ஐயாயிரத்திற்கும் மேற்பட்டக்
கடிதங்கள், இன்று, இவரது காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.
இவருக்கு வாசகர்கள் எழுதிய, ஏழாயிரத்திற்கும்
அதிகமானக் கடிதங்களும், முறையாக, தேதி வாரியாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன.
தனது கையெழுத்துப் பிரதிகள், கதைகள் வெளியான
இதழ்கள், டயரிகள், நோயாளிகளின் குறிப்பேடு, மருத்துவக் குறிப்புகள், பயணக் குறிப்புகள்,
வாசித்தப் புத்தகப் பட்டியல், நாடக நிகழ்வின் விளம்பரங்கள் என தனது வாழ்க்கைத் தொடர்பான
அத்துணை ஆவணங்களையும், முறையாகப் பராமரித்துப் பாதுகாத்து வந்தவர் இவர்.
இவர்தான்
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்
ஆண்டன் செகாவ்.
ஆசிரியர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள் என்பதை மக்களும், ஆசிரியர்களும் உணரும் போது புதிய உலகம் உன்னதமாக உருவாகும்.
பதிலளிநீக்குவரும் காலத்தின் தூண்களை உருவாக்கும் சிற்பிகள்....
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு. நன்றி.
புற வெளியில் ஏற்படும் அனுபவங்கள் அகவெளியில் பதிவாகி தாக்கத்தை
பதிலளிநீக்குஏற்படுத்துகிறது.அறிவு தன்னுள்ளே கிளர்ந்து எழும் ஒரு ஆன்ம உணர்வு.உடலால் ஆளப்படுகிறவர்களைவிட
மனதால் ஆளப்படுகிறவர்களே மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் தான் போற்றப்படுகிறார்கள்.
நல்ல பதிவு.வாழ்த்துகள்.
சிறப்பான பகிர்வு. நல்ல தகவல்.
பதிலளிநீக்குஆசிரியர்கள் சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகள். அறிவு தரும் தூண்கள்.ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்
பதிலளிநீக்குமாதா, பிதா ,குரு ,தெய்வம் இதில் தெய்வத்திற்கு முன்பாக குரு போற்றப்படுகிறார் இன்றைய மாணவசமுதாயத்தில் குரு பக்தி குறைந்துகொண்டே செல்கிறது இந்த நிலைமாறி சமுதாயம் காக்கப்பட ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்.நன்றி.
பதிலளிநீக்குமாதா, பிதா ,குரு ,தெய்வம் இதில் தெய்வத்திற்கு முன்பாக குரு போற்றப்படுகிறார் இன்றைய மாணவசமுதாயத்தில் குரு பக்தி குறைந்துகொண்டே செல்கிறது இந்த நிலைமாறி சமுதாயம் காக்கப்பட ஆசிரியர்கள் மதிக்கப்படவேண்டும்.நன்றி.
பதிலளிநீக்குநல்ல விடயம்.. நிச்சயமாக ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்களே..
பதிலளிநீக்குஉண்மை ஒரு நாடு ஒழுக்கம் பேணுபவர்களை பெற்றிருக்கிறது என்றால் ஆசிரியர்களே காரணம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு(செல் போன் வழியே கருத்துரையை டைப் செய்த போது ஏற்பட்ட எழுத்து பிழையின் காரணமாக இதனை நீக்கி விட்டேன்)
நீக்குபலரும் பல்வேறு பணிகளில் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டவர்களே. நான் என்றைக்குமே எந்த ஆசிரியராக இருந்தாலும் அவர்களை மதிப்பவன். - சிறப்பான பதிவு. NCBH இன் சோவியத் புத்தக கண்காட்சிகளில் ஆண்டன் செகாவின் படங்களையும், புத்தகங்களையும் பார்த்து இருக்கிறேன்.ஆண்டன் செகாவ் கதைகளுள் ஒன்றை தமிழில் படித்ததாகவும் நினைவு.
பதிலளிநீக்குஇன்னும் பல பழைய ஆசிரியர்கள் என் நினைவில் இருக்கின்றார்கள்.
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு. நல்ல தகவல்.
பதிலளிநீக்குhttps://kovaikkothai.wordpress.com/
நம் நாட்டில் குரு வழிபாட்டுக்கெனத் தனியாக ஓர் தினமே கொண்டாடப் படுகிறது. இப்போதைய காலகட்டத்தில் தான் ஆசிரியப் பணீ கேலிக் கூத்தாக ஆகி விட்டது. :(
பதிலளிநீக்குஆண்டன் செகாவ் ஆசிரியர்களைப்பற்றி எழுதியுள்ளவைகளை மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி..
பதிலளிநீக்குஎது நமக்கு கிடைப்பதில்லையோ அதுபற்றித்தான் மனம் எண்ணும் ஆசிரியர்களும் தங்கள் பணியினில் மகிழ்வுடன் ஈடுபட்டால் மதிப்புமவர்களுக்குத் தானாகவரும்
பதிலளிநீக்கு//ஒரு கிராமப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், அந்தக் கிராமத்தின் வளர்ச்சியே தன் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.//
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள்.
'ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி'
என்று சொல்வார்கள்.
அர்ப்பணிப்பு உணர்வோடு ஆசிரியர்களும் ஆசிரியர்களை மதித்து கீழ்படிதலுடன் மாணவ சமுதாயமும் இருக்கும் போது
அங்கு நல்லூறவு ஏற்படும்.
ஆண்டன் செகாவ் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.
படித்து முடிந்து பல வருடங்கள் ஆன பின்னர்கூட நாங்கள் படித்த (கும்பகோணம் திருமஞ்சன வீதி பள்ளி) ஆசிரியர்களைக் காணும்போது எங்களையும் அறியாமல் நாங்கள் மரியாதையோடு கைகட்டுவோம். அந்த செயல் இப்போது எனக்கு இப்பதிவைப் படித்தபோது நினைவிற்கு வந்தது. இதுவரை அறிந்திராத ஒருவரைப் பற்றி விவரமாக அறியத் தந்தமைக்கு நன்றி. தங்களின் தேடலும், பகிர்வும் தொடரட்டும்.
பதிலளிநீக்குஆண்டன் செக்கவ் பற்றி நல்ல அறிமுகம்,வாழ்த்துக்கள்,
பதிலளிநீக்குதவிர ஆசிரியரை சமூகம் போற்றுதலும் சமூகம் ஆசிரியரை போற்றுதலும் பரஸ்பரம் காணக்கிடைக்கிறதுதான் இன்றைக்கும்,,/
விதி விலக்குகள் சில இருக்கும்தான்,,/
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, திரு. ஆண்டன் செகாவ் அவர்களின் கருத்து இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. பதிவு அருமை.
பதிலளிநீக்குமிக பயனுள்ள பதிவு தோழர்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். "பொது மக்களிடம் ஆசிரியர்கள் மீது எப்போதுமே ஒரு இளக்காரம், கேலி உள்ளது. இது மாற வேண்டும்" ஆண்டன் செகாவ் பற்றிய பதிவு வெகு சிறப்பு. நன்றி
பதிலளிநீக்குஆசிரியர்கள் ஏங்கினால்...நாடு ஏங்கும் ” என்று எங்கோ படித்த நிணைவு....
பதிலளிநீக்குஆசிரியர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து சிறந்த மாணாக்கர்களை உலகுக்கு அளிக்கனும்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வுண்ணே