07 ஏப்ரல் 2018

பொய்யெனப் பெய்யும் மழை




சிரிக்க வேண்டியவர்கள்
செத்துப் போனதும்
எரிக்க வேண்டியவர்கள்
உயிரோடிருப்பதும்

கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்பலாகிய கொடுமையினைக் கண்டபிறகு, மனம் வெந்து, மழை கூடப் பொய்யெனத்தானே பெய்யும்.

படுக்கையில் விழுந்தவுடன்
பதறியபடி பார்க்க வந்தார்கள்
கடன் தந்தவர்கள்

மனிதத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்ட, இக்காலத்தில், மழை மட்டும், மனமுவந்தா பெய்யும், பொய்யெனத்தானே பெய்யும்.

அதிக மதிப்பெண் எடுக்க
அம்பாளுக்கு தினசரி
நெய் விளக்குப் போடும்
அம்மா.

நண்பனின் மகனைவிட
நல்ல மதிப்பெண் எடுக்க
முருகனிடம் போய்
மொட்டை போடும்
அப்பா.

மாணவனாகும் பயிற்சியில் வாகை சூடவைத்து, மனிதனாகும் முயற்சினை தோற்கடிக்கும் கல்வி முறை இருக்கும்வரை, மழை கூட பொய்யெனத்தானே பெய்யும்.

வளர்த்ததை யெல்லாம்
அழிப்பது எப்படியென
ஆராய்ச்சி செய்து
சாதியைக் கண்டோம்.

சாதிக்கும் தலைவர்கள்
இல்லாத தேசத்தில்

சாதிக்குத் தலைவர்கள்
ஏராளம்.

கப்பலோட்டியத் தமிழனையும், கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராசரையும் கூட விட்டு வைக்காமல், சாதிக்குள் அடைத்துவிட்ட சமூகத்தில், மழை மட்டும் மனம் மகிழ்ந்தா பெய்யும், பொய்யெனத்தானே பெய்யும்.

மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.

மிருகங்களிடத்தில்
மனித நேயமும்,
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்
வந்துவிட்டன.

இயந்திரங்களோடு
பழகினான்
மனிதன்.

இயந்திரங்களிடத்தில்
மனித ஆற்றலும்
மனிதர்களிடத்தில்
இயந்திரத் தனங்களும்
வந்துவிட்டன.
………….
…………..

மனிதன்
பழகவேயில்லை
இன்னொரு
மனிதருடன்.

அடுத்த வீட்டு மனிதர்கள்கூட, அந்நிய தேசத்து மனிதர்களாய் மாறிவிட்ட, இப்பூமியில், மேகம் நட்போடு மழையாய் பெய்யுமா என்ன, பொய்யெனத்தானே பெய்யும்.

நோயாளிகளை
பார்க்கப் போகிறவர்கள்
எதையாவது
வாங்கிக் கொண்டு போகாதீர்கள்
முடிந்தால்
அன்பையும்
அமைதியையும்.

நட்புகளிடத்தும், உறவினர்களிடத்தும் அன்பாக பழகாத, தேவைக்குப் பழகும் மக்கள் இருக்கும் வரை, மழையென்ன அன்புடனா பெய்யும், பொய்யெனத்தானே பெய்யும்.

துயரங்களால்
துரோகங்களால்
இழப்புகளால்
இம்சைகளால்

உடைந்து பொய்விடுகிறோம்
ஒவ்வொருவரும்.

நம்பிக்கைகளால்
ஒட்டிக் கொள்கிறோம்
ஒவ்வொரு முறையும்.

ஆடைகள் என்பதெல்லாம்
தழும்புகளை
மறைக்கத்தான்.

துரோகங்களும், இம்சைகளும் நிரம்பி வழியும் வரை, பூமியை வந்தடையும் மழை, பொய்யெனத்தானே பெய்யும்.

       மெய்யென மழை பொழிந்த காலம், கரைந்து போய், மழை கூட பொய்யெனப் பெய்வதை, தன் உன்னத கவி வரிகளால், ஆதங்க உணர்வுகளால், நூலாக்கிப் படைத்திருக்கிறார் இக்கவிஞர்.

      இவர் அரிதாரம் பூசாத அழகியத் தமிழுக்குச் சொந்தக்காரர்.

     சமூக உணர்வை, சிந்தனைச் செறிவை, மனித நேயத்தைத் தன் அழகுத் தமிழால், கவி மழையாக்கிப் பொழிய வைக்கும், வித்தை தெரிந்த வித்தகர்.

      உயர்ந்த உள்ளமும். உள்ளம் முழுதும் ஈரமும் கொண்ட உன்னத மனிதர்.


இவரது கவி நூல்
பொய்யெனப் பெய்யும் மழை

வெப்பம் இல்லாத குளிர்ப்பேச்சும் – நிலா
வெளிச்சம் தெறிக்கும் பார்வையதும்
ஒப்பனை இல்லாத பூஞ்சிரிப்பும் – தமிழ்
ஊறித் ததும்பும் கவித்துவமும்

செப்பம் நிறைந்த சிந்தனையும் – உளி
செதுக்கிய சிற்பச் சொல்லமைப்பும்
முப்பழம் தோற்கும் கற்பனையும் – தங்கம்
மூர்த்திக்கு வாய்த்த நேர்த்திகளாம்

என முழங்குவர் கவிச்சுடர், கவிதைப் பித்தன்.


ஆம், இவர்தான்
கவிஞர் தங்கம் மூர்த்தி.

27 கருத்துகள்:

  1. பகிரப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் மனதில் இடம் பிடிக்கின்றன. வாழ்த்துகள் நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளின் ஜாலம் சிலிர்க்க வைக்கிறது கவிஞருக்கு எமது வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  3. அவரைப் பற்றியும் அவருடைய எழுத்தைப் பற்றியும் நன்கறிவோம். உங்கள் பாணியில் பகிர்ந்த விதம் அருமை. நூலாசிரியருக்குப் பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான அறிமுகம்...

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. ஆகா...! ஐயாவிற்கு வாழ்த்துகள் பல...

    பதிலளிநீக்கு

  6. //அடுத்த வீட்டு மனிதர்கள்கூட, அந்நிய தேசத்து மனிதர்களாய் மாறிவிட்ட, இப்பூமியில், மேகம் நட்போடு மழையாய் பெய்யுமா என்ன, பொய்யெனத்தானே பெய்யும்.//

    உணமையைதான் சொல்கிறார் கவிஞர்.
    மதுரை அடுக்குமாடி குடியிருப்பு வந்தவுடன் அனுபவிக்கும் உண்மை.

    அந்நிய நாட்டில் யாரைப் பார்த்தாலும் ஹலோ சொல்லி புன்னகை செய்வார்கள் இங்கு அதுவும் இல்லை.

    அத்தனை கவிதையும் அருமை.
    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. அழகான கவிதைகள் மனதில் நுழைந்து மழைபோல ஈரலிப்பாக . கவிஞர் தங்கம் பழனிக்கு வாழ்த்துக்கள். பகிர்வை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல சிறப்பான விமர்சனம். கவிஞர் தங்கம் மூர்த்தியின் இந்த கவிதை நூலை வாங்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பகிர்வு. கவிஞருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வரிகள் அனைத்தும் அருமை. நல்லதொரு பகிர்வு. கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்து கொண்ட கவிதை வரிகள் - வெகு சிறப்பு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. ஒரு நல்ல கவிதை அறிமுகப்படுத்தியற்க்கு நன்றி சார்..

    பதிலளிநீக்கு
  13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை வரிகள் இன்றைய சமூகத்தின் மோசமான செயல்பாடுகள் மீதான கடும் தாக்குதல்களை மேற்கொள்கிறது என்பதை மிக அழகாக பதிவிட்டது தங்கள் பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. உண்மையைச் சொல்லி இருக்கிறார்.
    தங்கமான வரிகள்.
    மனம் நொந்த மனிதத்தின் வார்த்தைகள். உள்ளம்
    வலிக்கப் பிரசவிக்கப் பட்ட கவிதை வரிகள்.
    மிக நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  15. கவிதை மிக அருமை. ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. உங்களது பதிவு எமது திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது

    http://gossiptamil.com/aggre/story.php?title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%7C-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  17. நூல் அறிமுகம் வெகு அருமை ஜெயக்குமார். அதற்காகத் தெரிந்தெடுத்த கவிதைத் துணுக்குகள்... சிந்திக்க வைக்கின்றன.

    அட்டைப் படம்... அழகு.

    பதிலளிநீக்கு
  18. சில நடப்புகள்மனதில் கோபங்களைத் தோற்றுவிக்கும் நல்ல எழுத்தாளர்களின் மனதில் தோன்றும் ஆற்றாமையின் வெளிப்பாடுகளே இதில் அறிமுகமாகும் தங்கம் மூர்த்தியும் அதில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  19. கவிஞர் தங்கம் மூர்த்திக்கும் "பெய்யெனப் பெய்யும் மழைக்கும்" கவித்துவாமான அறிமுகம். நூல் பற்றிய (Biliography) தகவல்களையும் இணைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. சாதிக்கும் தலைவர்.. சாதிக்கு தலைவர்..

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும். அதுப்போல எழுத்தாளரின் திறைமைக்கு இந்த வரியே போதும்.

    பதிலளிநீக்கு
  21. அடுத்த வீட்டு மனிதர்கள்கூட, அந்நிய தேசத்து மனிதர்களாய் மாறிவிட்ட, இப்பூமியில், மேகம் நட்போடு மழையாய் பெய்யுமா என்ன, பொய்யெனத்தானே பெய்யும்.

    பொட்டில் அடித்த மாதிரியான எண்ணம்.. இனியாவது யோசிப்போமா?!

    பதிலளிநீக்கு
  22. அய்யா வணக்கம். நலமா? தங்கம் மூர்த்தியின் கவிதைகளை அழகாக அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். சிவாஜியின் நடிப்பைப்பற்றிப் பேசும்போது ஏற்படும் உற்சாகம், மூர்த்தியின் கவிதையைப் பற்றிப் பேசும்போதும் எனக்குள் முகிழ்க்கும்.
    நண்பர் தங்கம் மூர்த்தி, தமிழக அரசின் 2016ஆம் ஆண்டுக்கான “தமிழ்ச்செம்மல்” விருதினைப் பெற்ற செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன். (வர வர உங்கள் முகமும்,கண்ணாடியும் வெண்பனி படரும் மீசையும் அய்யா தேவநேயப் பாவாணரை எனக்கு நினைவூட்டுகின்றன! வளர்க தங்கள் தமிழ்ப்பணிகள்)

    பதிலளிநீக்கு
  23. அருமையான சிந்திக்க வைக்கும் வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. நல்ல நூல். அறிமுகம்,,,!

    பதிலளிநீக்கு
  25. this is good article ....more information find for this post...FreeJobalert provides all govt job information from time to time. According to the Government of India, in the year 2020...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு