மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, அவனைத் தொட்டுத்
தொடருகிறது ஒரு கேள்வி.
அடுத்து என்ன?
பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து பள்ளிக்குப் போகிறோம்.
அடுத்து என்ன?
கல்லூரிப் படிப்பு, வேலை தேடுதல்.
அடுத்து என்ன?
வேலை கிடைத்தாகி விட்டது, வசதி பெருகிவிட்டது. திருமணம், குடும்பம்.
அடுத்து என்ன?
பிள்ளைகளை வளர்த்தல், ஆளாக்குதல்.
அடுத்து என்ன?
இறுதி வரை இந்தக் கேள்வி, உடன் வந்து கொண்டே
இருக்கிறது.
நல்ல வேலை வாய்ப்பு, அதன் மூலம் பொருள் ஈட்டுதல்,
வசதியாக வாழ்தல். வீடு, வாகனங்கள்.
இதுமட்டுமே வாழ்க்கை என்று எண்ணி, மக்கள் வாழ்வைக்
கழிக்கின்றனர்.
அடுத்து என்ன?
இக்கேள்விக்கான விடையை, பலரும், பொருளாதார வசதி
குறித்த கேள்வியாக எண்ணியே, தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள்.
அடுத்து என்ன?
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், வசதியான வாழ்வை
நாடுவதும், தேடுவதும் தவறல்ல.
ஆனால், அதிலேயே முடங்கிப் போவதுதான் வேதனை.
அடுத்து என்ன?
இக்கேள்விக்கான, உண்மையான விடை, நாம் வாழும்,
சமூகத்திற்கு, நாம் என்ன செய்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது.
சமூக சிந்தனையோடு செயலில் இறங்கி பாடுபடுபவர்களால்தான்,
சாதனையாளர்களாக உயர முடியும்.
இதுவே, நாம் முழு வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளமாகும்.
இன்றைய இளைஞர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
மனிதன் தோன்றிய காலம் முதல் பதிவு செய்யப் பெற்றுள்ள
வரலாற்றைப் படித்து அறிய வேண்டும்.
இதுபோன்ற வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தரும்
பணியினை, தமிழின் தொன்மையை, மேன்மையை உலகிற்கு உணர்த்தும் பணியினை ஏடகம் முன்னெடுத்து
சீரிய முறையில் செயலாற்றி வருகிறது.
ஏடகத்தைப் பாராட்டுகிறேன்.
சென்னை உயர்நீதி
மன்ற நீதியரசரின் பொழிவு, அரங்கில் குழுமியிருந்த, இளைஞர்களிடைய ஒரு புதிய உத்வேகத்தையும்,
உற்சாகத்தையும் உண்டாக்கியது.
யாரும் சொல்லாததை, யாரும் செய்யாததை, யாரும்
நினைக்காததை, நினைத்து, சொல்லி, செய்து காட்டுபவதுதான் உண்மையான ஆய்வு ஆகும்.
இத்தகைய ஆய்வினைச் செய்து வரும் ஏடகம், மேலும்
மேலும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
ஒரு கல்வியாளருக்கே
உரிய தனித்தன்மையுடன், பல்கலைக் கழகத் துணைவேந்தரின், இரத்தினச் சுருக்கமானப் பேச்சு,
அவையை முற்றாய் கவர்ந்தது.
தஞ்சாவூர்,
பெசண்ட் அரங்கில்
நடைபெற்ற,
ஏடகம்
அமைப்பின்
ஐந்தாவது
ஆண்டு விழா
மற்றும்
புதிய
நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு
பாரதிதாசன் பல்கலைக் கழக
மாண்பமைத் துணைவேந்தர்
தலைமையேற்றார்.
சென்னை, உயர் நீதிமன்ற
மாண்புமிகு
நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு நூல்கள்.
தஞ்சையும்
அரண்மனையும்
ஏடகப்
பொருளாளர், ஆசிரியை திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்களின்
தொல்லியல்,
சுவடியியல் ஆய்வில் முனைவர் மணி.மாறன்
பழங்குடிகள்
என்னும் இரு நூல்கள்
முனைவர்
மணி.மாறன் அவர்களும்
திரு
க.முரளி அவர்களும்
பதிப்பாசிரியர்களாய் தொகுத்த
திகிரி
கட்டுரைகள்
முனைவர்
மணி.மாறன் அவர்கள்
பதிப்பாசிரியராகவும்
நான்
தொகுப்பாசிரியராகவும்
தொகுத்த
ஏடகம்
இரண்டாவது ஆண்டு மலர்
ஏடகம்
மூன்றாவது ஆண்டு மலர்
ஏடகம்
நான்காவது ஆண்டு மலர்
என
ஏழு நூல்கள் வெளியிடப்
பெற்றன.
சிங்கப்பூர், மேனாள் விரிவுரையாளர்
கும்பகோணம் நகராட்சி ஆணையர்
தஞ்சாவூர், வட்ட வழங்கல் அலுவலர்
ஜே.கே.அசோசியேட்ஸ் தணிக்கையாளர்
நான்
என ஐவர் வாழ்த்துரை வழங்கினோம்.
முன்னதாக,
விழாவிற்கு வந்திருந்தோரை
ஏடக நிறுவுநர், தலைவர்
வரவேற்றார்.
ஏடகப் பொருளாளர்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.
தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தமிழ்த் துறைத் தலைவர்
விழா நிகழ்வுகளைத்
திறம்பட, சுவைபடத்
தொகுத்து வழங்கினார்.
நான்கு
ஆண்டுகள்
நாற்பத்து
எட்டு மாதங்கள்
நாற்பத்து
எட்டு – ஞாயிறு
முற்றப்
பொழிவுகள்.
நாள்தோறும்
ஓலைச்
சுவடி வகுப்புகள்.
ஆண்டு
தோறும்
தமிழ்த்
தாத்தா
உ.வே.சா
இருக்கை நிகழ்வுகள்.
வரலாற்றுச்
சுவடுகளைத்
தேடும்
பயணங்கள்.
நம்
முன்னைத் தமிழரின்
நீர்
மேலாண்மைத் திறனை
உலகிற்கு
உணர்த்தும்
உன்னத
கண்டுபிடிப்புகள் – என
ஏடகம்
பீடு
நடைபோடுகிறது – காரணம்
ஒரு
தனி மனிதரின்
ஏடகத்
தலைவரின்
ஓயா
உழைப்பு
அயரா
அரும்பணி.
ஏடக
அன்பர்களை
ஏடகப்
புரவலர்களை
அரவணைத்து
ஒருங்கிணைத்துச்
செயலாற்றும்
உன்னதப்
பண்பாளர்
ஏடக
நிறுவுநர், தலைவர்
போற்றுவோம்,
வாழ்த்துவோம்.
//இத்தகைய ஆய்வினைச் செய்து வரும் ஏடகம், மேலும் மேலும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.//
பதிலளிநீக்குநாங்களும் வாழ்த்துக்கிறோம்.
//முனைவர் மணி.மாறன் அவர்களைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்.//
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
//ஐந்தாவது ஆண்டு விழா
மற்றும்
புதிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு//
வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி
நீக்குஏடகத்தை நாங்களும் வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஏடகம் வாயிலாக நாங்களும் நிறைய அறிந்துகொள்கிறோம், நீங்கள் பகிர்வதால்! உங்களுக்கும் ஏடகம் அமைப்பினருக்கும் வாழ்த்துகளும் நன்றியும் அண்ணா
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குஉங்கள் வரலாற்றுத் தேடல் இருக்கும் தகவல்களை அப்படியே உண்மை என்று நம்பிய பயணம்
பதிலளிநீக்குஎன்னுடைய வரலாற்றுத் தேடலோ
கல்வெட்டுகள்
பட்டயங்கள்
கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் சரியானவையே என்று செக்கு மாட்டுச் சிந்தனை கொண்டு காட்டுமிராண்டி காலத்துக்கு இட்டுச் செல்லும் மட மதவாத அமைப்புகள் கட்டிவிட்டு காசு மணி துட்டு பார்க்கும் ஜந்துக்கள் கதைத்த இழிவான இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்ற கூற்றை தகர்த்து
(விவேகானந்தர்,பாரதிகளின் கூற்று) உண்மை வரலாற்றை தேடும் ஆய்வு
உங்களின் பணிக்கு உதவ மதவாத சக்திகள்
என் ஆய்வுப் பணிக்கு உதவ பேரண்டம் ஆளும் மகா சக்தி
எது வெல்லும்
அறமா
அதர்மமா
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மனமே
என்று இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்து வாழ்கிறேன்
ஆசையே அழிவுக்குக் காரணம் என்று புத்தர் சொன்னார்
அவரது சீடர்கள் புத்த தத்துவத்தை உலகெங்கும் பரப்பினர்
அரண்மனையில் வாழ்ந்த சித்தார்த்தன்
புத்தர் ஆனான்
அவன் சீடர்கள் புத்த விகாரங்கள் அரண்மனைகள் ஆக்கிவிட்டு காசு மணி துட்டு பார்க்கும் ஜந்துக்கள்
குபேரன் சிலை என்று தங்க நிறத்தில் சிலைகள் உள்ளன
சிரிக்கும் புத்தர் என்றும் அழைக்கிறார்கள்
ஆம் புத்தர் சிரிக்கிறார்
ஆசை துறந்த என்னைப் பரப்பி ஆசைப்பட வைத்தவர்கள்
என் தத்துவத்தை அழித்து விட்டார்களே என்று
ஆசை யாரை விட்டது
உங்களையும்
என்னையும்
..என் ஆய்வுப் பணிக்கு உதவ பேரண்டம் ஆளும் மகா சக்தி..
நீக்குவாழ்த்துகள் நண்பரே
அன்பு நண்பரே, பதிவு அருமை. அயராது உழைக்கும் "ஏடகம்" நிறுவனர் முனைவர் திரு.மணி.மாறன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். ஏடகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அருமையாக பதிவு செய்து ஆவணப்படுத்தும் தங்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.நிகழ்வுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்திய அனைத்து அறிஞர்களையும் போற்றுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஏடகத்தின் பணிகள் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎன் இளைய சகோதரியின் குலதெய்வம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் காந்தலூர் என்ற இடத்தில் உள்ளது என வருடா வருடம் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள் என்னுடைய இளைய மகள் மித்ராவுக்கு மூன்று வயதாக இருக்கும் பொழுது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எங்கள் தமக்கை அழைத்துக்கொண்டு ஒரு வாகனத்தில் திருச்சி சென்றோம் வழியில் ஒரு குறுகலான திருப்பத்தில் எங்கள் வாகனத்தின் முன் சக்கரம் கழண்டு ஓட அந்த இடத்தில் மகாசக்தி கடுமையான விபத்திலிருந்து எங்களை காத்து நின்றது ஒட்டுமொத்த குடும்பமே அந்த விபத்தில் காணாமல் போயிருப்போம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று சூறாவளியாக அடிக்க கடும் சோதனைகளுக்கு மத்தியில் மீண்டு வாழ்கிறோம் எங்கள் தாய் தந்தையர் மறைந்து விட்டனர் இந்த நிலையில் இரு மாதம் முன்பு என் தமக்கை மீண்டும் அதே போன்று குலதெய்வ வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்பொழுது அந்த இடம் சிறிய மாற்றங்களை கொண்டிருந்தது எங்கள் தமக்கையின் பங்காளிகள் வறண்டு போன அவ்வப்போது அரசியல்வாதிகள் தூர் வாராமல் காசு பார்க்கும் ஏரிக்கரை அருகே அமைந்திருந்த அந்த குலதெய்வத்தை வழிபடுவதற்கு வசதியாக ஒரு பெரிய மண்டபம் கட்டியிருந்தனர் அதுமட்டுமன்றி வேறு ஒரு இடத்தில் குலதெய்வம் இருந்ததாக அங்கும் சிறிய கட்டிடம் ஒன்றைக் கட்டி சில சிலைகள் அங்கே வைத்திருந்தனர் அமெரிக்காவில் படிக்கும் ஒரு இளைஞன் அந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நிதி உதவி செய்து இருந்தான்
பதிலளிநீக்குஆனாலும் ஒரு விஷயம் எனக்கு உருத்தல் ஆகப் பட்டது
சுவரில் பெரிய எழுத்தில் ஒரு தொலைபேசி எண் காணப்பட்டது அது பூசாரியின் தொலைபேசி எண் சிலைகளை சிவன் மகாவீரர் என்று பெயிண்டில் எழுதியிருந்தனர் இரண்டும் ஒரே வண்ணத்தில் கையால் தாறுமாறாக எழுதியவை உண்மையில் மகாவீரர் சிலை எண்ணெய்ப் பிசுக்கில் சிவனோ லிங்க வடிவம் முறையாக இல்லாத வடிவில் மற்றவையும் அப்படியே முன்னதாக பழைய குலதெய்வம் கோயில் இருந்த இடத்தில் இருந்து இந்த இடம் வரையும் இந்த இடத்திலிருந்து பிரதான சாலையான திருச்சி தஞ்சை நெடுஞ்சாலை வரையிலும் பிரதானமான ஓரிடத்தில் சமணர் கோயில் செல்லும் வழி என்றும் சிவன் கோயிலுக்குச் செல்லும் வழி என்றும் ஏராளமான வழிகாட்டிப் பலகைகள் இருப்பதை காண முடிந்தது நிச்சயமாக இந்த பலகைகளை எங்கள் சகோதரியின் பங்காளிகள் வைத்திருக்க வாய்ப்பே இல்லை காசு மணி துட்டு பார்க்க ஏதோ ஒரு மதவாத அமைப்பு உள்ளே நுழைந்து இந்தக் கோவிலை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து காசு மணி துட்டு பார்க்க இந்தப் பலகைகளை வைத்துள்ளது என்பது என்னுள் உறுதியாயிற்று இதனை நான் என் சகோதரி உடன் வந்த மற்றவர்களிடம் எடுத்துரைத்த போது அவர்கள் இதனை காதில் வாங்கவே இல்லை வழக்கம்போல இவன் எல்லோரையும் சாடுகிறான் என்ற கோணத்தில் தான் அவர்கள் என் பேச்சை உதாசீனப் படுத்தினார்கள் அறம் வெல்லும் காலம் வரும்போது மக்களை மூடப்பழக்க வழக்கங்களில் ஆழ்த்தி பகுத்தறிவு தொலையச் செய்து காசு மணி துட்டு பார்க்கும் மதவாத சக்திகள் சர்வநாசம் நிச்சயம்
இன்று ஆன்மிகம் வணிகமயமாகிவிட்டது உண்மைதான் நண்பரே
நீக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே ஏடகத்திற்கு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசிறப்பான பணி... ஏடகத்தின் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குதோன்றிற் புகழோடு தோன்றுக...
நன்றி நண்பரே
நீக்குவிழா நிகழ்வில் உங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தஞ்சாவூரில் ஏடகம் தனக்கென ஓரிடத்தைப் பெற்றுப் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏடகத்தின் பதிவுகளை ஆவணமாக வெளிக்கொணரும் உங்கள் முயற்சி போற்றத்தக்கது. விழா ஏற்பாடு சிறப்பு. பொழிவாளர்கள் உரைகளும் சிறப்பு. நீதியரசரின் உரை அதிக தன்னம்பிக்கையைத் தந்தது.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஏடகத்தின் தொடர்ச்சியான பணி மிகவும் சிறப்பானது. ஏடகம் சார்பான சொற்பொழிவுகளை தொடர்ந்து
பதிலளிநீக்குகேட்கவும் ரசிக்கவும் உள்வாங்கவும் உங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது.
முனைவர் மணிமாறன் அவர்களுக்கு இனிய பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
நன்றி சகோதரி
நீக்குஏடகத்தின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள் பல.
பதிலளிநீக்குஉடுவை.எஸ்.தில்லைநடராசா
கொழும்பு-இலங்கை.
நன்றி ஐயா
நீக்குசிறப்பான பணி. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஏடகத்தின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஏடகத்தின் அரும்பெரும் பணி ஆய்வு சிறந்து தழைத்திட எங்களது வாழ்த்துகளோடு அதைத் தொகுத்து எங்களுக்குப் பகிரும் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி
நீக்கு