ஆண்டு 2005. மே மாதத்தில் ஓர் நாள். நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
இன்றைய தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும், உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும் அதிகாலையில்
தஞ்சையில் இருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக, திண்டுக்கல்லைக் கடந்து
பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
கரந்தைத் தமிழ்ச் சங்க,
மகிழ்வுந்து ஓட்டுநரும், நண்பருமான திரு ரமேஷ், ஒரே சீரான வேகத்தில்,
மகிழ்வுந்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ஜெயக்குமார், நாளை காலை 9.00
மணிக்கு, கொடைரோடு ஜங்ஷனில் உங்களுக்காகக் காத்திருப்பேன், வாருங்கள்
நேற்று கேட்ட வார்த்தைகள்,
காதுகளில், ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மணியைப் பார்த்தேன். மணி 8.30
ரமேஷ், சரியான பாதையில்தான்
செல்கிறோமா? யாரிடமாவது, கொடை ரோடு ஜங்ஷனுக்குப் போகிற வழியைக் கேளேன் என்கிறேன்.
கவலைப் படாதீர்கள், எனக்குப்
பாதை தெரியும்.
வந்துவிட்டீர்களா?
அலைபேசி வழி அழைப்பு வந்து
கொண்டே இருக்கிறது.
இதோ, வந்து விட்டோம் சார்.
இன்னும் பத்தே நிமிடத்தில் அங்கிருப்போம்.
ஒவ்வொரு முறையும் இதே பதிலைக்
கூறுகிறேன்.
சரியான பாதையில்தான்
செல்கிறோமா? வண்டியை நிறுத்தி, யாரிடமாவது கேளேன்?
கவலைப் படாதீர்கள். சரியான
பாதையில்தான் செல்கிறோம்.
ஒவ்வொரு முறையும், எனக்கும்
இதே பதில்தான் கிடைக்கிறது.
