27 ஆகஸ்ட் 2013

கரந்தையில் குடந்தை

   
 திங்கட்கிழமை (26.8.13) காலை 10.55 மணி. வகுப்பறையில் இருந்தேன். அலைபேசி ஒலித்த்து. மறுமுனையில் நண்பரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு துரைபிள்ளை நடராசன்.

     பொதுவாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்லும் பொழுது அலைபேசியை தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் நல்லது. இருப்பினும் இந்த அவசர யுகத்தில், எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் அவசர அழைப்பு வரலாமல்லவா? எனவே வகுப்பறைப் பணிகளைப் பாதிக்காதவாறு அவ்வப்போது அலை பேசியைப் பயன்படுத்துவது உண்டு.


    
தங்களின் வலைப் பூ நண்பர் சரவணன் அவர்கள், ஆசிரியர் அறையில் காத்திருக்கிறார் என்றார் நண்பர் நடராசன். அப்பொழுது இரண்டாவது பிரிவு வேளை முடிவுற்றமைக்கான மணியும் ஒலித்தது. இதோ வருகிறேன் என்றேன்.

     ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் சென்றேன். குடந்தையூர் சரவணன் அவர்கள் காத்திருந்தார். எதிர்பார்க்காத இனிமையான சந்திப்பு. வாருங்கள் வாருங்கள் என கைகளைப் பற்றிக் கொண்டேன்.

     வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்னும் உன்னத வழியில் தனது வாழ்வினை அமைத்துக் கொண்டவர். பிறந்த மண்ணை மறவா நல் மனத்தினர். குடந்தையூர் எனத் தன் வலைப் பூவில், தனது ஊரினையும் இணைத்து பெருமிதம் கொள்பவர்.

     சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணி. இல்லம் இருப்பதோ குடந்தையை ஒட்டியுள்ள வலங்கைமானில். திங்கள் முதல் வெள்ளிவரை சென்னையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வலங்கைமானிலும் வாசம் செய்பவர்.


     
   தஞ்சைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன். உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் கரந்தை வந்தேன் என்றார். மனம் மகிழ்ச்சியில் மிதந்த்து.

     வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.

       சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும்
      கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
எனப் பாடுவார் பாரதி. ஆனால் இன்று வீட்டில் அமர்ந்தவாறே உலகத்துச் சொந்தங்களை எல்லாம் ஒன்றிணைக்க முடிகிறதே. உறவாடி மகிழ முடிகிறதே.

     வலைப் பூ என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னவொரு பொருத்தமான பெயர். உலகத்து உறவுகளை எல்லாம் வலை வீசிப் பிடித்து ஓரிடத்தில உறவாட விடுகிறதே.

     அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர்கள்,


துரைபிள்ளை நடராசன்
http://duraipillainatarajan.blogspot.com/


கரந்தை சரவணன்
http://karanthaisaravanan.blogspot.com/

ஆகியோரை அறிமுகப் படுத்தினேன்.

     சென்னைப் பதிவர் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்.

     அவ்வப்போது, ஓரிரு பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் போதே, மனம் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறதே, பதிவுலகச் சகோதர, சகோதரிகளை எல்லாம் ஓரிடத்தில் சந்தித்தால் எப்படியிருக்கும்?

     வலைப் பூ என்னும் பரமபத வாசலின் வழி சென்று, சொர்க்கத்தையே சொந்தமாக்கிக் கொண்ட உணர்வல்லவா ஏற்படும். சொர்க்கத்தில் கால் பதிக்க யார்தான் மறுப்பார்கள். ஆசைதான். ஆனாலும் வடபழநிக்கு வர இயலாத நிலை.

     தலைவலி என்னும் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான என் மனைவி, தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார். ஆகையினால் தஞ்சையிலேயே இருக்க வேண்டிய சூழல்.

     ஆகவே நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


   தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
  தமிழின்  தொண்டர்  தடுக்கினும்  நில்லார்.
  ஓடினார்  ஓடினார்,  ஓடினார்  நடந்தே

 ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உற்சாகம்
  சமுத்திரம் போல அமைந்த  மைதானம்
 அங்கே கூடினார் அத்தனை பேரும்

  உள்ளம்பு ஊற்றி  ஊற்றி  ஊற்றித்
  தமிழ் வளர்க்கும்  சங்கம் ஒன்று
  சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்  தார்கள்

   உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
   கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
   சுடர்க்கவி தொடங்கினர்  பறந்த்து தொழும்பு

   கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
   வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்
   தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்

    காற்றி லெலாம் கலந்த்து கீதம்
    சங்கீ தமெலாம்  தகத்தகா யத்தமிழ்

வலைப் பூ பதிவர் மாநாட்டிற்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறதல்லவா இப்பாடல்.

     பாவேந்தர் பாரதிதாசன் கண்ட தமிழ்க் கனவு இப்பாடல். வலைப் பூ பதிவர் மாநாட்டின் மூலம் பாரதிதாசன் கண்ட கனவு நிறைவேறிவிட்டதாகவே எண்ணுகின்றேன். சான்றோர் கண்ட கனவு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

       ஞாயிற்றுக் கிழமை நான் (1.9.2013) அன்று தஞ்சையிலேயே இருந்தாலும் மனம் என்னவோ, வடபழநியைத்தான் கிரி வலம் வந்து கொண்டிருக்கும்.

      பதிவர் மாநாடு வெல்லட்டும்.     புதுமைகளைப் படைக்கட்டும்.
    

     

24 கருத்துகள்:

 1. பதிவர் மாநாடு வெல்லட்டும். புதுமைகளைப் படைக்கட்டும் என நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா27 ஆகஸ்ட், 2013

  வணக்கம்
  ஐயா
  பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற மனஏக்கம் நன்றாக புரிகிறது கருத்து வெளியிட்ட விதம் மிக அருமை கவிதையும் மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா
  காலத்தின் கட்டாய தேவவையாகி விட்டது…
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. சான்றோர் கண்ட கனவு ஒருபோதும் பொய்ப்பதில்லை!.. வலைப் பதிவர் மாநாடு வெல்லட்டும்!..

  பதிலளிநீக்கு
 4. வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.

  வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 5. . சரவணன் என்பவர் மதுரை சரவணன் என்று வலையுலகில் இருக்கிறார். மதுரையில் பள்ளி தலைமை ஆசிரியர். இவர் குடந்தை சரவணன்.நன்று. உங்கள் பதிவு மூலம் இவர் அறிமுகமாகிறார் ( எனக்கு.) பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 6. ஜனவரி 2012-க்குப் பிறகு கரந்தை சரவணன் இடுகைகளே காணவில்லையே

  பதிலளிநீக்கு
 7. தங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சியும் தங்களின் உபசரிப்பில் நட்பின் மேன்மையையும் அறிந்து கொண்டேன் ஜெயக்குமார் சார். நன்றியுடன் ஆர்.வி.சரவணன்

  பதிலளிநீக்கு
 8. நானும் தங்களை பதிவர் சந்திப்பில் சந்திக்க
  ஆவலோடு இருந்தேன்
  பிறிதொருமுறை சந்திப்போம்
  வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 9. ***தஞ்சைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன். உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் கரந்தை வந்தேன் என்றார். மனம் மகிழ்ச்சியில் மிதந்த்து.

  வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.***

  உண்மைதாங்க! :) சரவணன் அவர்களை இப்பதிவின் மூலமே அறிந்துகொண்டேன். பகிர்தலுக்கு நன்றிங்க. :) இதுபோல் பதிவுகளைப் படிக்கும்போதே சந்தோசமாத்தான் இருக்கு.

  ஆனால்..ஒரு 2 அல்லது 3 வருடம் முன்னாலனு நெனைக்கிறேன். கருத்து வேறுபாடு உள்ள ரெண்டு பதிவர்கள் ஒண்ணா சந்திச்சு, (டாஸ்மாக் கடையிலேயே என்னவோ) ரொம்ப நேரம் அன்பாப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, திரும்பிப் போகும்போது, ஒரு பதிவரை இன்னொரு பதிவர், முகத்தில் குத்தி, அடித்து (என்னை பத்தி ஏன் அப்படி எழுதினாய்?னு) "அன்பைப் பரிமாரிக்கிட்டதாக" அடிக்கப்பட்ட நண்பர் ரத்தக் காயத்துடன் ஒரு பதிவு போட்டாரு. அது ஏனோ எனக்கு இப்போ ஞாபகம் வருது...

  பதிவுலகம் அதுமாதிரி காட்டுமிராண்டிகளிடம் இருந்து மீண்டு உங்களைப் போல் நல்லவர்கள் வரவால் உயர்தரத்திற்கு எடுத்துச் சொல்லப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்திங்க! :)

  பதிலளிநீக்கு
 10. //வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.//

  உண்மை தான். ;)))))

  பதிலளிநீக்கு
 11. வலைப்பூ பற்றிய உங்கள் கருத்து நிதர்சனம் ஐயா...

  பதிலளிநீக்கு
 12. அன்பின் ஜெயக்குமார் - பதிவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு நன்று - சென்னைத் திருவிழாவிற்கு வர இயலாமை கண்டு வருந்துகிறேன். விரைவினில் துணைவியார் பூரண குணமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. வலைப்பூ பற்றிய உங்கள் கருத்து உண்மை ஐயா...

  பதிலளிநீக்கு
 14. எழுதுவதோடு மட்டுமன்றி அவ்வப்போது வலைப்பூ நண்பர்களை அறிமுகப்படுத்திவரும் தங்களின் முயற்சியும் எண்ணமும் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 15. உடல் தஞ்சையிலும்,மனம் சென்னையிலுமாய்/இப்படி இருக்க ஒரு தனி மன்ம் வேணும்/வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 16. பதிவர்களைப் பற்றிய தங்களது அறிமுகம் தங்கள் அன்பைக் காட்டுகிறது. என்னாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் நடைபெறும் பதிவர்கள் திருவிழா செல்ல இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 17. இதுதான் வலைப்பூ .... சார் /// அந்தப் பக்கம் வரும் வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திக்கும் ஆவலோடு இருக்கிறேன் ...

  பதிலளிநீக்கு
 18. வலைப்பூவின் வாயிலாக இந்த உலகத்தையே ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து நட்பை வெளிப்படுத்தி நண்பர்களாகி நாளைய தலைமுறைக்கு நட்பைவெளிப்படுத்தும் திறவுகோலாக இருப்பதே வலைப்பு என்பதை உங்களின் இந்தசந்திப்பின் வாயிலாக வெளிக்கொனற்ந்தமைக்கு மிக்க நன்றி.உங்களின் வலைப்பூ வாரந்தோறும் புதுபுது வாசனைகளை கொண்டுவந்து மூச்சடைக்கச்செய்கிறது.வாசனையே வருக வாசம் அள்ளித்தருக!

  பதிலளிநீக்கு
 19. உங்கள் கருத்தும் உண்மைதான்

  பதிலளிநீக்கு
 20. எங்கோ ஏதோ ஒரு விஷயத்துக்காக சென்றாலும்.. செல்லும் இடத்தில் எல்லாம் நம் வலைப்பூ நண்பர்கள் உண்டா என்ற எண்ணம் இனி எழாமல் இருக்காது கண்டிப்பாக.. சந்தோஷம் பூக்கிறது ஒவ்வொரு வரியிலும் பெருமையும் நட்பின் வீரியமும் அழகாய் தெரிகிறது ஜெயகுமார் சார்.. அன்பு வணக்கங்கள்....

  நட்பில் உண்டு மேன்மை.. வலைப்பூவுக்கு உண்டு அதற்கான மகத்தான பங்கு...

  பதிவர் மாநாட்டுக்கு நீங்க போகலைன்னாலும் உங்க மனசு முழுக்க அங்கே தான் இருக்கும்னு சொன்னீங்க பாருங்க.. இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லா29 ஆகஸ்ட், 2013

  என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. ஆஹா! இந்த சூழலுக்கு அஹ்கான பாரதிதாசனின் பாடலை எடுத்துக் காட்டியமை அற்புதம

  உங்கள் வாழ்த்திற்கு வாழ்த்துக்கள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா30 ஆகஸ்ட், 2013

  காலை வணக்கம்!

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா30 ஆகஸ்ட், 2013

  திரைப்படகாட்சிபோல நிகழ்வுகள் கண்முன்னேநிற்கிறது பேஷ்பிரமாதம்குடந்தையாரின்சந்திப்புமகிழ்சிநன்றி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு