அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
தான் பிறந்ததே வேதனைப் படுவதற்கு மட்டும்தானோ என்ற சந்தேகம், அவன் மனதில் தோன்றி
வெகுநாட்களாகி விட்டது.
பிறந்தது முதல் அவன் சந்தித்தது துன்பங்களை
மட்டும்தான், தோல்விகளை மட்டும்தான். தந்தையின் வருமானம் சாப்பாட்டிற்கே
போதுமானதாக இல்லை. நல்ல உணவிற்கு வழியில்லை. கசங்காத உடை உடுத்த வாய்ப்பே இல்லை.
கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சம் முழுதும் நிரம்பி
வழிந்தும் பலன்தானில்லை. சாப்பாட்டிற்கே வழியில்லாத போது, கல்லூரிக் கட்டணத்தை
எப்படிக் கட்டுவது.
பதினேழு வயதில், இதோ மருத்து கடையில் வேலை
பார்த்துக் கொண்டிருக்கிறான். இன்னும் எவ்வளவு நாளைக்கு, இதே வாழ்க்கையை வாழ்வது.
அவன் மனதில் திடீரென்று ஓர் எண்ணம். வாழ்ந்தது போதும்.
அன்று கடையில் இருந்து வீடு
திரும்பும்போது, இருபது தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டான். வீட்டிற்குச் செல்லும்
வழியில், விஸ்கி ஒரு பாட்டிலும் வாங்கிக் கொண்டான்.
அவனுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது.
தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, விஸ்கி சாப்பிட்டால் நல்லது என்று யாரோ,
எப்பொழுதோ கூறியது அவன் நினைவில் இருந்தது. அதற்காகத்தான் விஸ்கி.
வீட்டில் தன் அறையில் அமர்ந்து,
மாத்திரைகளை, அதன் உறையில் இருந்து பிரித்து மேசையில் வைத்தான். ஒரு கோப்பையில்
மதுவை ஊற்றித் தயார் நிலையில் வைத்தான்.
முதல் தவணையாக ஏழெட்டு மாத்திரைகளை வாயில்
போட்டு, அதனை விழுங்குவதற்காக, மதுக் கோப்பையினைக் கையில் எடுத்த போது, பின்னால்
இருந்து ஒரு குரல்.
சிட்னி, என்ன
செய்து கொண்டிருக்கிறாய்?
திடுக்கிட்டுத் திரும்பினான். எதிரில் அவன்
தந்தை.
கையில் மதுக் கோப்பையுடன், மகனைக் கண்ட
அதிர்ச்சி தந்தைக்கு.
என்னவாயிற்று
உனக்கு? அதென்ன மாத்திரை?
வாய் நிறைய மாத்திரைகள். மாத்திரைகளை
வாயில் வைத்துக் கொண்டு பேச முடியவில்லை. தந்தைக்கு எதிரிலேயே, விஸ்கியைக்
குடித்து மாத்திரைகளை முழுங்கவும் மனமில்லை. மாத்திரைகளைத் துப்பினான். பிறகு
பேசினான்.
தூக்க
மாத்திரைகள் அப்பா.
தூக்க மாத்திரை, மது. ஒரு நொடியில்
தந்தைக்குப் புரிந்துவிட்டது.
தற்கொலை செய்து
கொள்ளும் அளவிற்கு உனக்கு என்ன பிரச்சனை மகனே?
வாழ்க்கையே
எனக்குப் பிரச்சனைதான் அப்பா. தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள்.
தந்தை, ஒரு நிமிடம் தன் மகனையே உற்றுப்
பார்த்தார். எதையோ புரிந்து கொண்டதைப் போல், தலையை ஆட்டினார்.
சரி. உன்
விருப்பம் போல் தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் அதற்குமுன் சில நிமிடம், நான்
உன்னுடன் பேச விரும்புகிறேன்.
உங்களால் என்
மனதை மாற்ற முடியாதப்பா? இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளை நிச்சயம் தற்கொலை செய்து
கொள்வேன்.
சரி, சரி என்றவர், மகனை இழுத்து அணைத்து, ஆதரவாக
முதுகில் தட்டிக் கொடுத்தார்.
சட்டையை அணிந்து கொள். சிறிது நேரம் பேசிக்
கொண்டே நடப்போம் வா.
அந்தக் குளிர் இரவில், தந்தையும் மகனும்
தெருவில் நடந்தார்கள்.
நீ கடைசியாக
என்ன கதை எழுதினாய்?
கதை என்றதும் சிட்னியின் முகத்தில் ஓர்
மாற்றம். இந்த நேரத்தில், அதுவும் இந்த சூழ்நிலையில், அப்பா ஏன் என்னுடைய கதையைப்
பற்றி விசாரிக்கிறார். குழம்பித்தான் போனான்.
மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை. விரும்பிய
படிப்பையும் படிக்க முடியவில்லை. எனவே கவலையை மறக்க, கதை எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு
கதையாக எழுதி, ஒவ்வொரு பிரபல பத்திரிக்கைக்கும் அனுப்பிக்கொண்டே இருந்தான்.
கதையை அஞ்சலில் சேர்த்துவிட்டுக் கடையில்
அமர்ந்து கனவு காணுவான். பத்திரிக்கைகளில் தனது கதை அச்சாகி வருவது போலவும்,
மக்கள் விரும்பிப் படிக்கும், எழுத்தாளராக மாறி, புகழ் ஏணியின் உச்சியில்
அமர்ந்திருப்பது போலவும் கனவு காணுவான். ஆனால், கனவு கலைவதற்குள், கதை திரும்பி
வந்துவிடும்.
எத்தனை எத்தனை கதைகள் எழுதியிருப்பான்.
ஒன்றினைக் கூட இந்த பதிப்புலகம் ஏற்றுக் கொள்ளவில்லையே. அத்தனையுமல்லவா திரும்பி
வந்துவிட்டது.
தங்கள்
கதையினை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம்
உங்களுக்கு
வெறும் வருத்தம் மட்டும்தான். ஆனால் எனக்கோ இது வாழ்க்கை.
இனியும் இவ்வாழ்வு தேவைதானா? போதும் இதுவரை
வாழ்ந்த வாழ்க்கைப் போதும். துன்பப் பட்டது போதும், துயரப் பட்டது போதும்.
தனது மகனின் தோளில் கை போட்டவாறே, நடந்து
கொண்டே, சிட்னியின் தந்தை பேசினார்.
சிட்னி, இந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும்
ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று
யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான்
இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய
சுவாரசியம்.
இருக்கலாம்
அப்பா. ஆனால் என் கதை இந்தப் பக்கத்தோடு முடியப் போகிறதப்பா.
அவனது தந்தை சிரித்தார்.
அதை நீயே
முடிவு செய்யக் கூடாது மகனே. உன் வாழ்க்கை என்கிற கதையில், அடுத்தடுத்து வரப்
போகிற பக்கங்களில் என்னென்ன திருப்பங்கள், என்னென்ன ஆச்சரியங்கள், என்னென்ன
முன்னேற்றங்கள் இருக்கிறது என்பதை, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தால்தானே
தெரியும். திடீரென்று புத்தகத்தையே மூடி வைத்துவிட்டால் எப்படி?
சிட்னி யோசிக்க
ஆரம்பித்தான்.
தந்தை, தன்
மகனின் தோளைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பினார்.
சிட்னி, இதுவரை
உன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல. இனி எப்படி இருக்கப் போகிறது
என்பதுதான் முக்கியம். இனி உன் கதையின் அடுத்தடுத்தப் பக்கங்களை எழுதுப் போவது,
தீர்மானிக்கப் போவது நீதான். நல்லவிதமாக எழுது. எழுதி எழுதி உன் வாழ்க்கைப்
பாதையில் முன்னேறுவது உன் கையில்தான் இருக்கிறது.
சிட்னி அன்று இரவே, தூக்க மாத்திரைகளை அள்ளிக்
குப்பைத் தொட்டியில் வீசினான். ஓர் புதிய வேகம், ஓர் புதிய தன்னம்பிக்கை.
வாழ்க்கையை எதிர் கொண்டு சமாளிக்க, சாதிக்கத் தயாரானான்.
சிட்னியின் அடுத்தடுத்தப் பக்கங்கள்
சுவாரசியமானவை, ஆச்சரியங்கள் நிரம்பியவை, விறுவிறுப்பானவை.
The Naked
Face
இவரின்
முதல் நாவல் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
17 வயதில் எழுதத் தொடங்கியவர்,
தனது முதல் புத்தகம் வருவதற்கு 36 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
முதல் புத்தகம் அச்சில் வெளிவந்தபொழுது சிட்னியின் வயது 53.
17 வயதில் எழுதத் தொடங்கியவர்,
தனது முதல் புத்தகம் வருவதற்கு 36 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
முதல் புத்தகம் அச்சில் வெளிவந்தபொழுது சிட்னியின் வயது 53.
சிட்னி ஷெல்டன்.
உலகிலேயே அதிக
அளவு விற்பனையாகும் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர்.
சிட்னி ஷெல்டனின் கதைகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்ற சமாச்சாரம் எனக்கும் புதிது. அப்பாவின் அறிவுரையைக் கேட்காமல் இருந்திருந்தால் உலகு ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்திருக்கும். தற்கொலை எத்தனை தவறென்பதை பளிச்சென உணர்த்துகிறது சிட்னி ஷெல்டனின் வாழ்க்கை.
பதிலளிநீக்குசிட்னியின் வாழ்க்கை மாணவர்களுக்கு ஒரு பாடம்
நீக்குதன்னம்பிக்கைப் பாடம்
நன்றி ஐயா
புகழ் பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டனின் முதல் கதை பிரசுரமான போது வயது ஐமபதைக் கடந்து விட்டது என்ற செய்தி புதிது. சிறப்பாக சொலி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குமுதல்கதையினை வெளியிட அவர் காத்திருந்த வருடங்கள் அதிகம்
நீக்குநன்றி ஐயா
முதல் வெற்றியின் பின்னால்தான் எத்தனை தோல்விகள்? எத்தனை முறை விழுந்தாய் என்பதில் இல்லை, எத்தனை முறை நீ எழுந்தாய் என்பதில்தான் உன் வெற்றி இருக்கிறது என்று சொல்வார்கள். தோல்விதானே வெற்றியின் முதல் படிக்கட்டு? அருமையான பகிர்வு நண்பரே...
பதிலளிநீக்குதோல்விகளைக் கண்டு துவளாத மனம் வேண்டும் என்பார்களே
நீக்குஅதை சிட்னியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்
நன்றி நண்பரே
//நண்பர்களே, இவர்தான் சிட்னி ஷெல்டன். உலகிலேயே அதிக அளவு விற்பனையாகும் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர்.
பதிலளிநீக்குவிறு விறு நாவல்கள், நாடகங்கள், ஹாலிவுட் திரைக் கதைகள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கானப் படைப்புகள் என சிட்னி எழுதியதெல்லாம் வெற்றி, வெற்றி, வெற்றி//
சந்தோஷம். இதைக்கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அவரின் கதையை உருக்கமாக எடுத்துக்கூறிய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். அன்புடன் VGK
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்கு//மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை. விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. எனவே கவலையை மறக்க, கதை எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு கதையாக எழுதி, ஒவ்வொரு பிரபல பத்திரிக்கைக்கும் அனுப்பிக்கொண்டே இருந்தான்.
பதிலளிநீக்குகதையை அஞ்சலில் சேர்த்துவிட்டுக் கடையில் அமர்ந்து கனவு காணுவான். பத்திரிக்கைகளில் தனது கதை அச்சாகி வருவது போலவும், மக்கள் விரும்பிப் படிக்கும், எழுத்தாளராக மாறி, புகழ் ஏணியின் உச்சியில் அமர்ந்திருப்பது போலவும் கனவு காணுவான். ஆனால், கனவு கலைவதற்குள், கதை திரும்பி வந்துவிடும்.
எத்தனை எத்தனை கதைகள் எழுதியிருப்பான். ஒன்றினைக் கூட இந்த பதிப்புலகம் ஏற்றுக் கொள்ளவில்லையே. அத்தனையுமல்லவா திரும்பி வந்துவிட்டது.
தங்கள் கதையினை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம்
உங்களுக்கு வெறும் வருத்தம் மட்டும்தான். ஆனால் எனக்கோ இது வாழ்க்கை.
இனியும் இவ்வாழ்வு தேவைதானா? போதும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைப் போதும். துன்பப் பட்டது போதும், துயரப் பட்டது போதும்.//
அவரின் வெறுப்பு மிகவும் நியாயமானது. தபால் செலவு வேறு தண்டமாகும். சில பத்திரிகைகள் பதிலே தரமாட்டார்கள். பதில் தருவதற்கும் SELF ADDRESSED & STAMPED ENVELOPE வைத்து அனுப்ப வேண்டியிருக்கும். அது மேலும் கூடுதல் தண்டச்செலவு.
பிற்காலத்தில் பிரபலமான பல எழுத்தாளர்களுக்கும் [சாஹித்ய அகடெமி விருது வாங்கியோருக்கும் கூட] இதுபோல ஏற்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். இந்தக்கஷ்டங்களையெல்லாம் அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்.
>>>>>
ஆம் ஐயா தாங்கள் சொல்வது உண்மைதான்
நீக்குஅனுபவித்துப் பார்த்தவர்களுக்கே துன்பம் புரியும்
நன்றி ஐயா
இந்த நிலைகள் எனக்கும் 1982 முதல் 1990 வரை இருந்திருக்கிறது ஐயா வெறுப்பின் காரணமாய் பலகாலங்கள் நான் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். அந்த வேதனையின் தாக்கம் எனக்கும் தெரியும்.
நீக்குதங்களின் வேதனை புரிகின்றது நண்பரே
நீக்குஇன்று தங்களின் எழுத்து உலகை வலம் வருகிறதல்லவா
நன்றி நண்பரே
//இந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும் ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான் இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரசியம்.//
பதிலளிநீக்குமகனுக்கு ஆறுதல் சொல்லும் தந்தை என் மனதில் நிற்கிறார். இதுபோல ஒரு அருமையான தந்தை அமைந்ததும் அவரின் அதிர்ஷ்டம் தானே !
>>>>>
சிட்னிக்கு அமைந்த தந்தையைப் பார்த்தால் மனதில் ஏக்கப் பெருமூச்சு வருகிறதய்யா
நீக்குஇவரைப்போல் அனைவருக்கும் தந்தை அமைந்தால்
பிறகு கவலைக்கு ஏது வழி
நன்றி ஐயா
//உன் வாழ்க்கை என்கிற கதையில், அடுத்தடுத்து வரப் போகிற பக்கங்களில் என்னென்ன திருப்பங்கள், என்னென்ன ஆச்சரியங்கள், என்னென்ன முன்னேற்றங்கள் இருக்கிறது என்பதை, ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தால்தானே தெரியும். திடீரென்று புத்தகத்தையே மூடி வைத்துவிட்டால் எப்படி?//
பதிலளிநீக்குசூப்பர் !
//துவரை உன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல. இனி எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். இனி உன் கதையின் அடுத்தடுத்தப் பக்கங்களை எழுதுப் போவது, தீர்மானிக்கப் போவது நீதான். நல்லவிதமாக எழுது. எழுதி எழுதி உன் வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவது உன் கையில்தான் இருக்கிறது.//
ஆஹா ! 17 வயதில் கருக இருந்த ஒரு குருத்தினைக் காப்பாற்றி 90 வயது வரை வாழச்செய்து, தனது 53 வயதுக்குப்பிறகு மாபெரும் சாதனையாளராக்கியுள்ளதே ...... இந்த அற்புத வரிகள். ஆச்சர்யமாக உள்ளது.
தன்னம்பிக்கையூட்டிடும் தங்கமான இந்தப் பகிர்வுக்கு மீண்டும் என் மனமார்ந்த அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குஅதானே...! புத்தகத்தையே மூடி வைத்துவிட்டால் எப்படி...?
பதிலளிநீக்குவாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...?
சிட்னியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நினைய இருக்கிறது...
ஆம் ஐயா சிட்னியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது
நீக்குநன்றி ஐயா
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பதைப் போல ,நாவல் மன்னனின் மனதை மாற்ற வாழ்க்கையே ஒரு நாவல் என்று கூறிய தந்தையின் அறிவுரை பாராட்டத் தக்கது !மகனின் மனம் அறிந்த இப்படிப்பட்ட தந்தை எல்லோருக்கும் அமைந்தால் தற்கொலைகளே இருக்காதே !
பதிலளிநீக்குத ம 3
எல்லோருக்கும் இப்படிப்பட்டத் தந்தை அமைந்தால் அனைவருக்கும் வாழ்வில் வெற்றிதான்
நீக்குநன்றி நண்பரே
அருமையான கதை தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல கதை.நாம் நிச்சயம் கற்றுகொள்ளவேண்டியதே.பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஇந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும் ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான் இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரசியம்/
பதிலளிநீக்குசுவாரஸ்யமான எழுத்தாளரை புதுப்பித்த அருமையான நட்புரை தந்தையிடமிருந்து .. பதிவு மிகவும் ரசிக்கவைத்தது..பாராட்டுக்கள்.!
நன்றி சகோதரியாரே
நீக்குஆரம்பமுன் படமும் சொல்லிவிட்டது தங்களது இன்றைய பதிவு அருமையான எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் பற்றியது என்று! அவரது நாவல்கள் வாசிப்பதற்கு அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். மிகப் பெரிய எழுத்தாளர். அவரது வாழ்க்கை ராபர் புரூஸ் போன்று தன்னம்பிக்கையை ஊட்டக் கூடிய ஒன்று! தாங்கள் எழுதிய விதம் மிக மிக அருமை! நண்பரே! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குத.ம.
தெரிந்திராத விஷயங்கள். தாங்கள் எழுதியிருக்கும் தமிழ் படிப்பதற்கு இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குதொடர்ந்து நல்ல கட்டுரைகளை எதிர்பார்க்க வைக்கிறீர்கள்!
தங்கள் தொடர் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குபோராட்டமில்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை சிட்னி ஷெல்டன் தன் வாழ்க்கை மூலம் சொல்லியுள்ளார். நல்லதொரு பதிவு
பதிலளிநீக்குவாழ்க்கையே போராட்டம்தானே
நீக்குநன்றி நண்பரே
தன்னம்பிக்கை தரும் பதிவு.
பதிலளிநீக்குதங்கள் எழுத்துக்களுக்கு, சொல்லும் கருத்தைக் காட்சிப்படுத்தும் ஆற்றல் உள்ளது நண்பரே. அருமை.
இந்தப் பதிவில் நான் விரும்பி வாசித்த வரிகள்..
இதுவரை உன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது முக்கியமல்ல. இனி எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். இனி உன் கதையின் அடுத்தடுத்தப் பக்கங்களை எழுதுப் போவது, தீர்மானிக்கப் போவது நீதான். நல்லவிதமாக எழுது. எழுதி எழுதி உன் வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவது உன் கையில்தான் இருக்கிறது.
நன்று.
இளைஞ்ர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரை. தற்கொலைக்கு முயலும் சிட்னி ஷெல்டன் வாழ்க்கையில் தந்தையே அவருக்கு ஆறுதல் (COUNSEL) சொல்லும் நிகழ்ச்சியை உருக்கமாக சொல்லிய விதம் பாராட்டத் தக்கது.
பதிலளிநீக்குத.ம.8
மிக்க நன்றி ஐயா
நீக்குஇந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும் ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான் இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரசியம்.
பதிலளிநீக்குதன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.
நன்றி நண்பரே
நீக்கு
பதிலளிநீக்குசிட்னி ஷெல்டன் நாவல்கள் பலவும் படித்து ரசித்திருக்கிறேன்...
ஆனால் இந்தத்தகவல் எனக்குப் புதியது...
மனதால் சோர்ந்து இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான பதிவு...நன்றி!
நன்றி சகோதரியாரே
நீக்குஅடேங்கப்பா ஓர் உண்மையை நானும் இப்போது தான் உணர்கின்றேன்
பதிலளிநீக்குசிட்னி போல எழுதிக் கொண்டே போனால் எனது எண்பதாவது வயதில்
எனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்துவிடும் இல்லையா ?..:))(இப்போ நீ அடி வாங்கித் துலையப் போகிறாய் அம்பாளடியாள் :)) இதுக்கும் ஓர் அதிஸ்ரம் வேணும் அது உனக்கு இல்லப் போ :)))))))) )
அருமையான தன் நம்பிக்கை தரும் சம்பவம் !பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .
தங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும், தங்களை நாடி வரும் சகோதரியாரே
நீக்குநன்றி சகோதரியாரே
சிட்னி ஷெல்டனின் வாசகர்களில் நானும் ஒருவன். அவருடைய வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை இன்றுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநானும் சமீபத்தில்தான் ஒரு நூலில் படித்தேன் ஐயா
நீக்குஅதையே பதிவாக்கிவிட்டேன்
நன்றி ஐயா
அன்பின் ஜெயக்குமார் - பதிவு நன்று - தன்னம்பிக்கை வாழ்வில் வேண்டும். 20 தூக்க மாத்திரை - விஸ்கி கூடவே - சிட்னியின் வாழ்க்கை எங்கு சென்றிருக்கும் ? தந்தை வந்தார் - சிட்னியின் வாழ்க்கையினையே மாற்றினார் -
பதிலளிநீக்கு// சிட்னி, இந்த வாழ்க்கை இருக்கிறதே, அதுவும் ஒரு விறுவிறுப்பான கதை மாதிரிதான். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, அந்த சஸ்பென்ஸ் இருக்கிறதே, அதுதான் இந்த வாழ்வையே நகர்த்திச் செல்கிறது. அதுதான் இந்த வாழ்வின் மிகப் பெரிய சுவாரசியம். //
சிட்னியின் தந்தை சிட்னியின் வாழ்க்கையினையே தலைகீழாக மாற்றினார்.
நல்வாழ்த்துகள் ஜெயக்குமார்
நட்புடன் சீனா
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குசிட்னி ஷெல்டனின் தந்தையை பாராட்டியே ஆகவேண்டும். மகனுக்கு நல்ல வழிகாட்டி. அடுத்து அடுத்து வாழ்க்கையில் வரும் திருப்பங்களை சுட்டிக் காட்டி தன்னம்பிக்கை மிக்க மனிதனாக மகனை மாற்றிய தந்தையைப்பெற்ற சிட்னி ஷெல்டன் பாக்கிய சாலி.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
நன்றி
இதுபோன்ற தந்தையைப் பெற கொடுத்துவைத்திருக்க வேண்டும் சகோதரியாரே
நீக்குநன்றி சகோதரியாரே
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசிட்னி ஷெல்டன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வா? சிறந்த தந்தை சரியான தருணத்தில் வந்ததால் உலகிற்கு ஒரு பெரிய எழுத்தாளர் கிடைத்திருக்கிறார்..
நீக்குதன்னம்பிக்கை கதை..பகிர்விற்கு நன்றி சகோதரரே!
த.ம.11
நன்றி சகோதரியாரே
நீக்குதன்னம்பிக்கைக்கு உதாரணமாய் அறிவதற்கு
பதிலளிநீக்குஇதைவிட வேறு என்ன இருக்கின்றது...
நல்லதொரு பதிவும் பகிர்வும் ஐயா!
அருமை! வாழ்த்துக்கள்!
தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம் சிட்னி
நீக்குநன்றி சகோதரியாரே
சிட்னி ஷெல்டன் தற்கொலைக்கு முயன்றவர் என்பது புதிய செய்தி! அவருக்கு கிடைத்த தந்தையை நினைக்கையில் ஏக்கம் மேலிடுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
மிகவும் ஒரு பிரபலியமான வரலாற்றுநூலாசிரியர் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் யுகங்கள் கடந்தாலும் பாரினில் இவர்களின் புகழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி நண்பரே
நீக்குசிட்னி ஷெல்டன்.. வியப்புக்குரிய மனிதர்!..
பதிலளிநீக்குஇவருடைய தந்தையே இவருக்குக் கிடைத்த மகா பொக்கிஷம்.. அதுவும் தந்தையின் சொல்லை ஏற்றுக் கொண்டு - தன்னம்பிக்கையுடன் தன் வாழ்வினைத் துவக்கியதே திருப்பு முனை..
உணர்த்துதலும் உணர்தலும் ஒருவனுடைய வெற்றிப்படிகள்!..
சிட்னி ஷெல்டன் அவர்களே - அதற்கு மகத்தான உதாரணம்.
சிட்னி ஷெல்டனின் வரலாறு - தங்கள் கைவண்ணத்தில் அருமை!.. தங்களிடம் - பாடம் படிக்க இயலாமல் போனது எனக்கு!..
உணர்த்துதலும் உணர்தலும் ஒருவனுடைய வெற்றிப்படிகள்!..
நீக்குசரியாகச் சொன்னீர்கள் ஐயா
நன்றி ஐயா
ஒ! சிட்னிக்கும் நம்ம கதி தானா?
பதிலளிநீக்குநல்லவேளை மனுஷன் மனம் மாறினார்.
அண்ணா இதுபோன்ற தகவல் எல்லாம் எங்கேருந்து பிடிக்கிறீங்க!!
கலக்குங்க:)
மிக்க நன்றி சகோதரியாரே
நீக்குசிட்னி ஷெல்டன் பற்றிய அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குசிட்னியின் அப்பா மட்டும் அப்போ வரலேன்னா நமக்கு நல்ல த்ரில்லர் கதைகள் கிடைக்காம போயிருக்குமே
பதிலளிநீக்குஆமாம் நண்பரே தந்தையார் மட்டும் சரியான சமயத்தில் வராமல் போயிருந்தால் நாம் ஒரு கதாசிரியரை இழந்திருப்போம்
நீக்குநன்றி நண்பரே
வாழ்க்கையே போராட்டம்தான் ஐயா, சிட்னி அவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒருபாடமே...
பதிலளிநீக்குகுறிப்பு-ஐயா தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும், நண்பருடைய கணனியில் ஆரம்பத்திலேயே படித்து விட்டேன் ஆனால் கருத்துரை இடமுடியாத சூழ்நிலை ஆகவே இன்று இட்டேன் நன்றி.
தாமதமானால் என்ன நண்பரே
நீக்குதங்களின் வருகை ஒன்றே எனக்குப் போதும்
மிக்க நன்றி நண்பரே
tha.ma 14
பதிலளிநீக்குநான் ஓரிரெண்டு ஆங்கில கதைகளைத்தான் படித்திருக்கிறேன். அவை எல்லாம் சிட்னி ஷெல்டன் எழுதிய நாவல்கள் தான். ஆனால் அவருடைய வாழ்க்கையைப் பற்றி இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெயக்குயம்ர் சார்.
நன்றி நண்பரே
நீக்குமிக அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குபல வருடங்களாகவே நான் சிட்னி ஷெல்டனின் ரசிகை. அவரின் நாவல்கள் பெரும்பாலும் என்னிடத்தில் உள்ளன. இப்போது கூட அவரின் நாவலான BLOOD LINEஐ வாங்கிக்கொண்டு தான் இங்கே வந்தேன்.
அவரின் தந்தை தலையிட்டு அவருள் விதைத்த மன மாற்றத்திற்குப்பிறகு, பல வருடங்கள் அவர் வெற்றிகரமாக திரைப்பட வசனகர்த்தாவாக, பின் தொலைக்காட்சியில் வசனம் எழுதுபவராகத் தொடர்ந்து, ஐம்பது வயதுகளுக்குப்பிறகு தான் அவரின் முதல் நாவலை எழுதினார். ஆனால் அவரின் நவல்கள் தான் அவரை புகழேணியின் உச்சியில் கொண்டு சென்றன. அவரின் பல நாவல்கள் மனதை கலங்கச் செய்தவை, கனமாக்கியவை.
அவர் விட்டுப்போன குறிப்புகளைக் கொன்டு அவரின் நடையைப்பின் பற்றியும் சிலர் அவரின் பெயர் வைத்தே எழுதினார்கள். நானும் அவற்றைப்படித்திருக்கிறேன். ஆனால் அவை மனதை ஈர்க்கவில்லை என்பதே உண்மை!
மிக்க நன்றி சகோதரியாரே
நீக்குஅவரின் பல நாவல்களைப் படித்திருக்கிறேன்
பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் கதைகள் அவருடையவை.
பதிவில் தந்தை மகனுக்கு அறிவுரை சொன்னார்.
பதிலளிநீக்குஅது எனக்கும் உரைத்தது போல் இருந்தது ஜெயக்குமார் ஐயா.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றி சகோதரியாரே
நீக்குஇக்கால மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் ஓர் அற்புதப்படைப்பு சிட்னி ஷெல்டணின் வாழ்க்கை வரலாறு.அற்புதம் தங்களின் கட்டுரை மிளிர்கிறது.நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதங்கள் பதிவில் ஷெல்டன் வாழ்க்கை பற்றியுமல்ல அனைவரும் அறிந்து கொள்ளும் நீதி இருக்கு அண்ணேன்.........பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குExcellant. Thank You Sir.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதோல்வி (V)யின் முடிவில்தான் (victory) உள்ளதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.
பதிலளிநீக்குதந்தை என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.
நன்றி நண்பரே
நீக்குஅந்தத் தந்தையின் அணைப்பும் ஆதரவும் அவனை உச்சத்திற்குக் கொண்டு வந்தது.
பதிலளிநீக்குஇளையவர்கள் வாசிக்க வேண்டிய பதிவு.
அருமை. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரியாரே
நீக்குசரித்திரத்தில் இடம் பெற்று விடுகிற தன்னம்பிக்கை நாயகர்கள் இவர்கள்,இவர்களைப்போல் நம்மைச்சுற்றி இருக்கிற சாமான்ய தன்னம்பிக்கை நாயகர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்தான்,அதில் ஒரு மெக்கானிக்கைப்பற்றித்தான் தாங்கள் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.(மொபைல் ஒர்க் ஷாப் வைத்திருருப்பவர்)அது போல் நம்மில் ஊடாடி விரவி இருப்பவர்களான் நாயகர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்தான்,விளிம்பு நிலையில் இருக்கும்
பதிலளிநீக்குஅவர்களும் ஒரு சாதனை நாயகர்களே/
வியக்க வைத்த சம்பவங்கள். சிட்னி ஷெல்டனின் சரிதை குறித்தும் இன்று தான் அறிய முடிந்தது.
பதிலளிநீக்குயாம் அறிந்த நாவலாசிரியர்களிலே சிட்னியை போல் ஒருவன் இல்லை. அருமையான எழுத்தாளர். அவரின் எழுத்து பாணியே தனி.
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குஎந்த துறையில் சிகரம் தொட்டவர்களின் வாழ்கையை ஆராய்ந்து
பார்த்தாலும் அவர்கள் இந்நிலையை அடைய பட்ட துயரங்கள் நம்மை
வியக்க செய்வதோடு நமக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்கும்.
இந்த பதிவிற்கு என் வாழ்த்துகள்.
ஆம் நண்பரே சோதனையினை வென்றவர்கள்தான்
நீக்குசாதனையை படைத்திருக்கிறார்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
இவரைப் பற்றி நான் படித்துள்ளேன். இருப்பினும் இவருடைய வாழ்க்கையின் பின் உள்ள சோகத்தை இப்போதுதான் அறிந்தேன். ஒவ்வொரு வாழ்க்கை வரலாறும் மற்றவருக்குப் பாடமாக அமையும் எனலாம். கதையைப் படிக்க ஆரம்பித்தபோது பாலச்சந்தரின் தாமரை நெஞ்சம் திரைப்படம் நினைவிற்கு வந்தது. மனோதைரியத்தையும் எதையும் சாதிக்கலாம் என்ற துணிவையும் கொடுக்கும் வரலாறு இவருடையது. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசிட்னிக்கு கிடைத்த அப்பாப் போல் எல்லா பெற்றோரும் இருந்துட்டா எல்லா பிள்ளைகளும் சாதனையாளராய்தான் விளங்குவாங்க.
பதிலளிநீக்குஎனக்கு நல்லதொரு வழிகாட்டி போல் இருக்கிறாரே,, சிட்னி ஷெல்டன்! (எனது முதல் சிறுகதைத் தொகுப்பு என் 64 வது வயதில்தான் வெளியானது-அதாவது 2014 இல்.) துரதிர்ஷ்டவசமாக, என் தந்தை (மற்றும் தாய்) இப்போது உயிருடன் இல்லை. (அது சரி, நீங்கள் சிட்னி ஷெல்டன் மாதிரி எப்போது கதை எழுத ஆரம்பிக்கப்போகிறீர்கள்?)
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசிட்னி பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு...
தன்னம்பிக்கைப் பகிர்வு...
வாழ்த்துக்கள் ஐயா...
நன்றி நண்பரே
நீக்குதன்னம்பிக்கையான வரிகள் சார்..நன்றி.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் தோழர்
பதிலளிநீக்குஅருமையான தகவல்
சிட்னி என்று ஆரம்பிக்கவும் யார் அது என சஸ்பென்ஸ் எனக்கு சிட்னி கிரீன் பாம் (ஒரு இலக்கண வித்தகர்) நினைவுதான் வந்தது..
நல்ல பதிவு தோழர் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
நீக்குத ம பதினெட்டு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
நீக்குஅவருடைய பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்..... ஆனாலும் அவரைப் பற்றி இத்தனை நாள் அறிந்திருக்கவில்லை.
பதிலளிநீக்குஅவர் தந்தை மட்டும் தடுத்திராவிட்டால் நல்ல எழுத்தாளரை இழந்திருப்போம்.
அன்பு ஐயா.. வணக்கம்..
பதிலளிநீக்குசிறந்த பதிவிற்க்கு மிக்க நன்றி.. தங்களின் வலைப்பூவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறதய்யா.. தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..
திரு. சிட்னி அவர்களைப் பற்றி இப்போது தான் தெரிந்துகொண்டேன்.. மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த மகனுக்கு தந்தை கூறிய அறிவுரை, திருப்புமுனை..
மீண்டும் ஒரு நல்ல பாடம்... சிரமமில்லாமல் வகுப்பு எடுத்ததற்க்கு சல்யூட் ஐயா..
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு.சிட்னி ஷெல்டன் பற்றிய தங்களின் பதிவு மனத்தளர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு ஊக்கம் ஊட்டும் அமிர்தமாக அமைந்துள்ளது. இந்த செய்தியை அறிபவர்கள் யாராக இருந்தாலும் தற்கொலை எண்ணத்திலிருந்து கண்டிப்பாக விடுபடுவார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு தந்தை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இளைய சமூதாயமும், இனிமேல் நாம் இப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று மூத்த சமூதாயமும் ஏங்க வைத்து விட்டார் சிட்னியின் தந்தை. அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு