14 ஜூலை 2014

நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்


நண்பர்களே, நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கணித மேதை சீனிவாச இராமானுஜன் மீது, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. எனது எம்.ஃ.பில்., படிப்பிற்காக, நான் எடுத்துக் கொண்ட தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.

     எம்.ஃ.பில்., படிப்பிற்காக, இராமானுஜன் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோதுதான், உண்மையிலேயே இராமானுஜன் யார் என்பது புரிந்தது. அதன்பின், இராமானுஜன் மீதிருந்த ஈடுபாடானது, காதலாகவே மாறியது.


     இப்படியும் ஒரு மனிதரா? கணிதத்தை இப்படியும் ஒரு மனிதரால் நேசிக்க முடியுமா? உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையை மட்டுமே சந்தித்தபோதும், கணிதத்தை மட்டுமே சிந்தித்து, கணிதத்தை மட்டுமே சுவாசித்து, சாதித்துக் காட்டிய மாமனிதரல்லவா சீனிவாச இராமானுஜன்.

     நான் போற்றும் மனிதர்களுள் முதன்மையாளராக ஆகிப்போனார் இராமானுஜன்.


நண்பர்களே, நேற்று நானும் என் மனைவியும், இராமானுஜன் திரைப்படத்திற்குச் சென்றோம். திரையரங்கினுள் நுழைந்தபோது, அங்கு எனக்கும் முன்பாக வந்திருந்த, எனது கணித ஆசிரியர் திரு எஸ்.வரதராசன் அவர்களைக் கண்டேன். நான் கணிதத்தையே, முதன்மைப் பாடமாகக் கொண்டு, கல்லூரியில் படித்ததற்கு இவரும் ஓர் காரணம். வணக்கம் கூறினேன். வாஞ்சையுடன் கரங்களைப் பற்றிக் கொண்டார்.


     என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில், நான் ஆசிரியராய் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள். இன்று மதியம், நான் என் குடும்பத்துடன், இராமானுஜன் படம் பார்த்தேன், அருமை, அவசியம் பாருங்கள் என்றார்.

      இராமானுஜன் படத்தினைப் பார்ப்பதற்காக, என் மனைவியுடன் திரையரங்கில் இருக்கிறேன் என்றேன். நண்பரின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

     திரையரங்கினுள் நான் எதிர் பார்த்ததைவிட கூட்டம் அதிகமகவே இருந்தது. இராமானுஜன் என்னும் மிகப் பெரிய சக்தி, ஆளுமை, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும், திரையரங்கிற்கு அழைத்து வந்திருக்கிறது.


இராமானுஜனின் காலடித் தடங்களைப் பின்பற்றி, ஒவ்வொரு இடமாக படம் நகர்ந்து செல்லும் அழகே அழகு. கும்பகோணம் சாரங்கபாணிக் கோயில் முதல் இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வரை, ஒவ்வொரு காட்சியையும், எழிலோவியமாய் நம் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர்.

     படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இன்றி, முழுமையாக திரைக்குள் இழுத்து, இராமானுஜனின் வாழ்க்கை சுழலுக்குள் மூழ்கி, மூச்சுத் திணறி, நம்மையும் திக்குமுக்காடச் செய்கிறது படம்.

     படம் நிறைவு பெற்று, திரையரங்கினுள் விளக்குகள் பளிச்சிட்டதும்தான், சுய நினைவிற்கே வந்தேன். நான் இருப்பது கும்பகோணத்தில அல்ல, தஞ்சையில், திரையரங்கில் என்பது புரிந்தது.

     மகத்தான ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்வு முப்பத்தி இரண்டே ஆண்டுகளில் முடிவடைந்ததுதான் சோகம். அதைவிட பெரிய சோகம், அக்கணித சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சடங்கினை, அவரது சொந்த சமூகமே புறக்கணித்ததுதான்.

      புரட்சிக் கவி பாரதியைப் பற்றிக் கூறும் பொழுது சொல்வார்கள், பாரதியின் இறுதிச் சடங்கின்போது, அவன் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையைவிட, இறுதிச் சடங்கில், கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை குறைவு என்று.

      கணித மாமேதை இராமானுஜனுக்கும் அதே கதிதான். மகத்தான அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்னும் பொன்னான வாசகம், இன்றும் கானல் நீராகத்தான் இருக்கிறது.

     நண்பர்களே, கணித மேதை இராமானுஜன் இன்று இல்லை. ஆனால் அவர் வழங்கிய கணிதத்தை, கண்டுபிடிப்பை, நம்மை அறியாமலேயே, நாம் தினம், தினம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காகவாவது, அக் கணித மேதைக்கு நாம், ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?


     குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப் பாருங்கள். படம் முடிவதற்குள், ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர், உங்கள் விழிகளில் இருந்து, எட்டிப் பார்க்குமானால், அதுவே அம்மாமேதைக்கு நீங்கள் செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.

69 கருத்துகள்:

  1. கணிதம் படிக்காவிட்டாலும் என் மனசுக்குப் பிடித்தவர் ராமானுஜன். அந்தக் கணித மேதை உண்டாக்கின சூத்திரங்கள் இன்றளவும் பயன்தரத் தக்கவையா இருப்பதே அவர் பெருமைக்குச் சான்று. மேதைகளுக்கு ஏனோ ஆயுள் குறைவாக இருப்பதும், அவர்களை இந்தச் சமூகம் சரியாக மதிக்காததும் மட்டும் இன்னும் எனக்குள் புரிபடாத புதிர்தான். இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை நான். பார்த்து விடுகிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேதைகள் வாழும் காலத்தில் போற்றப்படாதது புரியாத புதிர்தான்
      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  2. கண்டிப்பா நீங்க இந்த படத்தை பார்ப்பிங்கன்னு நினைச்சேன் அண்ணா! நானும் பார்க்கணும்.
    தம ரெண்டு

    பதிலளிநீக்கு
  3. நான் பிறந்த மண் கும்பகோணம் என்ற நிலையில் நான் மதிக்கும் பெரியோரில் ஒருவர் ராமானுஜன். தங்களது நூலைப் படித்தபின்னர் சாரங்கபாணி கோயில் போகும்போதெல்லாம் ராமானுஜன் நினைவும், அவரைப் பற்றி நூல் எழுதிய தங்களின் நினைவும் எனக்கு வரும். இத்திரைப்படம் பற்றிய தங்களின் கருத்தை ஆவலோடு எதிர்பார்த்தேன், தற்போது படித்தேன். நிறைவாக உள்ளது. சாதனையாளரைப் பற்றி எழுதும் தாங்களும் சாதனையாளரே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான கட்டுரை. வாழ்க உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  5. தில்லியில் வெளியிடவில்லை.... பார்க்க நினைத்திருக்கும் படம் ஐயா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் பாருங்கள் ஐயா

      நீக்கு
  6. கண்டிப்பாக படத்தைப் பார்ப்போம்... உங்களின் ஈடுபாடும் வியக்கத்தக்கதே... வாழ்த்துக்கள் ஐயா...

    அது தான் நேற்று உங்களை மணப்பாறையில் சந்திக்க முடியவில்லையோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெருங்கிய நண்பர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தமையால், மணப்பாறைக்கு வர இயலாமல் போய்விட்டது ஐயா
      அவசியம் படம் பாருங்கள்

      நீக்கு
  7. ராமானுஜன் வாழ்க்கை வரலாறு படமாகி இருப்பது வரவேற்கப் பட வேண்டியது ,நிச்சயம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது உங்கள் பதிவு !
    த ம 4

    பதிலளிநீக்கு
  8. விவரத்திற்கு நன்றி. கண்டிப்பாக பார்ப்பேன். கணக்குபிள்ளை தானே நான். நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கணித மேதை ராமானுஜர் வாழ்வு ,
    நாம் அவசியம் அறிய வேண்டிய ஒன்று;
    ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் படம் பாருங்கள்

      நீக்கு
  10. கண்டிப்பாக பார்க்கிறேன் ஜெயக்குமார் சார்.

    தாங்கள் கணித ஆசிரியராக இருந்துக்கொண்டு, மிக நுட்பமாய், அழகாய் வரலாற்றுப் பெரியோர்களைப் பற்றி எழுதுகிறீர்களே, ஆச்சிரியம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற நண்பர்களின் தூண்டுதலால்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் நண்பரே
      அவசியம் படம் பாருங்கள் நண்பரே

      நீக்கு
  11. கணிதமேதை ராமானுஜர் குறித்த விளக்கத்துடன் படம் பற்றிய கருத்து அருமை ஐயா...

    கண்டிப்பாக பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  12. கணித மேதை பற்றி தாங்கள் எழுதிய கட்டுரையின் வாயிலாக முன்பே அறிவேன்.இப்பொழுது திரைப்படமாக வந்திருப்பது பற்றி மிகவும் பெருமையடைகிறேன்.மிக விரைவில் இப்படத்தை திரையரங்கிள் குடும்பத்துடன் காண்பேன்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் ஜெயக் குமார் - திரைப்படம் அவசியம் பார்க்க வேண்டும் - அயலகத்தில்இருக்கிறோம் - தாயகம் திரும்பும் போது ஓடுமா ? முயல்வோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. பிள்ளைகளோடு சேர்ந்து படம் பார்க்கனும்ன்னு இருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் குழந்தைகளோடு பாருங்கள் சகோதரியாரே

      நீக்கு
  15. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் இருக்கிறது. உங்கள் எழுத்துகள் அதை அதிகப் படுத்துகின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உங்களின் பதிவே படத்தின் வெற்றி விழாவிற்கு வழிவகுக்கும் போல் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா. இன்னும் அவரைப்பற்றி அறிந்துக்கொள்ள ஆவலாக உள்ளது. பகிற்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் தொடர் பதிவின் மூலம் மட்டுமே கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கையை தெரிந்து கொண்டவன் நான். அவரைப் பற்றிய மற்றைய புத்தகங்கள் படித்ததில்லை.
    // குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப் பாருங்கள். படம் முடிவதற்குள், ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர், உங்கள் விழிகளில் இருந்து, எட்டிப் பார்க்குமானால், அதுவே அம்மாமேதைக்கு நீங்கள் செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.//

    உங்களது திரை விமர்சனம் சரியானதாகத்தான் இருக்கும். முன்புபோல் திரையரங்கம் சென்று படம் பார்க்க பொறுமையும், உடல் ஒத்துழைப்பும் இல்லை. எனினும் படம் பார்க்க சந்தர்ப்பம் அமையும்போது பார்க்கிறேன். நன்றி!
    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது பாருங்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  18. //குடும்பத்துடன் இராமானுஜன் திரைப்படத்தினைப் பாருங்கள். படம் முடிவதற்குள், ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர், உங்கள் விழிகளில் இருந்து, எட்டிப் பார்க்குமானால், அதுவே அந்த மாமேதைக்கு நீங்கள் செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.//

    - இது கணித மேதை ராமானுஜம் அவர்களைப் பற்றிய திரைப் படத்திற்கு தாங்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ்.

    ஆயினும், கணித மேதை ராமானுஜம் அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்தவர் - தாங்கள்., அப்போது எளியேனும் ஒரு சிறு அணிலாக தங்களுடன் இருந்ததெல்லாம் நினைவுக்கு வருகின்றது ஐயா.. கணித மேதை ராமானுஜம் அவர்களைப் பற்றி தாங்கள் தேடித்தேடி எடுத்த பொக்கிஷங்களையும் அதற்கான தங்களது பெரு முயற்சியையும் - இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன.

    கணித மேதை ராமானுஜம் அவர்களை நினைவு கூறும் இனிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணிதமேதை இராமானுஜனின் இறப்புச் சான்றிதழினைக் கூட கணினியில் தேடி, தாங்கள் எடுத்துக் கொடுத்தது இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது ஐயா.
      வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் படம் பாருங்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  19. கணித மேதை பற்றி நீங்கள் எழுதி இருந்த செய்திகள் படத்தில் வந்துள்ளதா. பொதுவாகவே வாழ்க்கை வரலாறு படங்களில் திரைக் கதைகள் மாற்றங்கள் பல சேர்க்கப் படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் பாருங்கள் ஐயா
      நான் அறிந்த வரையில், இப்படம் சினிமா என்னும் வரப்பிற்கு உட்பட்டு எடுக்கப்படவில்லை ஐயா
      உள்ளதை உள்ளபடியே கொடுத்திருக்கிறார்
      நன்றி ஐயா

      நீக்கு
  20. முதலில் உங்களுக்கு ஒரு கை குலுக்கல்! நம் இந்தியா, அதிலும் நமது தமிழ்நாடு ஈன்றெடுத்த, பார் புகழும் கணித மேதையைக் குறித்து ஒரு அழகான பதிவு எழிதியதற்கு! ஏன் நம் நாடே அவரைக் கண்டு கொள்ளவில்லை என்பது வியப்பாகத்தான் இருக்கின்றது! தமிழர் என்பதாலா? ஆனால் அவரது கணிதம் தானே பார் முழுவதும்? அதற்கு மொழி இல்லையே! இந்தப் படம் வெளிவந்துள்ளதே இனியாவது நமது நாடு அவரைக் கண்டு கொள்ளுமா? கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் நண்பரே! தாங்களும் இப்படிப்பட்ட மேன்மை பொருந்திய அறிவு ஜீவியைக் குறித்து எழுதியது இன்னும் அற்புதம்! அவரது சூத்திரங்கள் இல்லாத கணிதமே இன்று இல்லையே! நண்பரே!

    மிக்க நன்றி! மகிழ்வாகவும் இருக்கின்றது நண்பரே எழுதியதற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை கானல் நீராகத்தான் உள்ளது
      காரணம்தான் புரியவில்லை
      வாய்ப்புக் கிடைக்கும் பொழுது படத்தினைப் பாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  21. அழகாக எடுத்துரைத்தீர்கள்.
    நானும் இப்படத்தை விரைவில் திரையில் காண ஆவலாக உள்ளேன். என் மாணவர்களையும் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் மாணவர்களைப் பார்க்கச் சொல்லுங்கள் நண்பரே
      மணவர்களுக்கு இப்படம் மிகப் பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  22. அந்த மேதைக்கு இப்படம் ஓர் இனிய நினைவு கூரல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கணித மேதை இராமானுஜன் இன்று இல்லை. ஆனால் அவர் வழங்கிய கணிதத்தை, கண்டுபிடிப்பை, நம்மை அறியாமலேயே, நாம் தினம், தினம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காகவாவது, அக் கணித மேதைக்கு நாம், ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?//

      நிச்சயமாக நன்றி சொல்லத்தான் வேண்டும். மிக அருமையான பதிவு.

      தாங்கள் கணித ஆசிரியர் என்பதைக்கேட்க எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

      கணிதப்பாடம் என்றாலே எனக்கும் அச்சு வெல்லக்கட்டி சாப்பிடுவது போன்றதோர் மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு. ;)))))

      பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

      நீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணிதப் பாடத்தில் ஆர்வம் உள்ளவர் தாங்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது ஐயா
      வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் இராமானுஜன்படம் பாருங்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  24. கணித மேதையைப்பற்றி தங்களது பதிவால் கூடுதலாக தெரியவைத்தமைக்கு நன்றி, திரைப்படங்களுக்கு எதிரான கருத்துள்ளவன் நான், தங்களுக்காகவும், கணித மேதைக்காகவும் கண்டிப்பாக பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, நானும் தங்களைப் போலத்தான், நானும் திரைப்படங்களின் மேல் அதிக விருப்பம் இல்லாதவன்.
      ஆனாலும் இப்படம் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
      வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம்பாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  25. கண்டிப்பாக பார்க்க நினைக்கும் படம்! எங்கள் பகுதியில் திரைக்கு வரவில்லை! வந்ததும் பார்த்துவிடுகிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் பாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  26. கணித மாமேதை பற்றியும் இத்திரைப்படத்தைப் பற்றியும் அறிந்து மிக்க மகிழ்வு கொண்டேன். அருமையான விமர்சனம்.

    இங்கு திரைஅரங்குகளில் இத்திரைப்படம் காட்சிப்படுத்துகின்றனரோ தெரியவில்லை. அத்துடன் அங்கெல்லாம் சென்று நான் படங்கள் பார்ப்பதை விட்டுப் பலவருடங்களாகின்றன...
    ஆனாலும் கிடைத்தால் பார்க்கவேண்டுமெனும் ஆவலை உங்கள் விமர்சனம் ஏற்படுத்திவிட்டது.

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைப்பின் இராமானுஜனின் படம் பாருங்கள் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  27. இராமானுஜன் என்னும் மிகப் பெரிய சக்தி, ஆளுமை, பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும், திரையரங்கிற்கு அழைத்து வந்திருக்கிறது.

    மகிழ்ச்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே
      வாய்ப்புக் கிடைக்கும் பொழுது அவசியம் இராமானுஜன் படத்தினைப் பாருங்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    ஐயா.

    கணித மேதை இராமானுஜன் பற்றி சுவையாக கூறியுள்ளீர்கள்அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்தது மகிழ்ச்சிதான்.. தங்களின் கட்டுரையை படித்த பின் படத்தைப்பார்க்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி.
    த.ம 12வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, மிக நேர்த்தியாக கணிதமேதை இராமானுஜன் அவர்களைப் பற்றிய செய்திகளை கோர்த்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது இயக்குநர் திரு.ஞான ராஜசேகரன் அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் என்றால் அது மிகையாகாது. என் மனைவி, என் மகள் மற்றும் என் மகன் ஆகியோருடன் சென்று பார்த்தப் பொழுது நாங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட காட்சிகள் அதிகம். ஆங்காங்கே கைத்தட்டி இரசிக்கும் காட்சிகளும் கண்களுக்கு குளுமையான காட்சிகளும் நிறைந்து மனதிற்கு இதமாக இருந்தது. எனவேதான் இன்றைய மாணவர் பேரவைக் கூட்டத்தில் மாணவர்களைப் பார்த்து பெற்றோருடன் சென்று பாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன். மேதைகளை நாம் நம்முடைய இளைய சமூகத்திற்கு அடையாளம் காட்டினால்தான் நாளைய சமூதாயம் நன்றாக இருக்க முடியும் என்பதற்கு ஏற்ப தாங்கள் இப்பதிவின் மூலம் இத்திரைப்படத்தினை அடையாளம் காட்டியதற்கும் திரைப்படத்தை இயக்கியவருக்கும் நடித்தவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் திரையிட்டத் திரையரங்கத்தாருக்கும் நன்றியை தமிழ் சமுதாயத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமானுஜன் திரைப் படத்தினை இயக்கிய ஞான இராஜசேகரன் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.
      பேரவைக் கூட்டத்தில் மாணவர்களிடம் இராமானுஜன் படம் பற்றிக் கூறியது சரியான செயல்தான். இன்றைய மாணவர்கள் திரைப்படத்தின் வழியாக இராமானுஜனை அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு
      நன்றி நண்பரே

      நீக்கு
  31. உங்களின் பதிவே இராமானுஜத்தைப் பார்க்கத் துர்ண்டுகிறது ஐயா.

    அவசியம் (வீட்டிலேயே) பார்க்கிறேன்.... இங்கே இந்தப் படத்தைத் தியேட்டரில் போட மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  32. சிறந்த ஆய்வுக் கட்டுரை
    தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  33. கணித மேதையைப் பற்றிய பதிவு என்று நினைத்து படிக்க துவங்கினேன். ஆனால் அவரைப் பற்றிய திரைப் படத்தின் விமர்சனம் போல் தெரிந்தாலும் உங்களுடைய அழகான எழுத்து நடை அதை ஒரு அருமையான ஆய்வுக் கட்டுரை போல் ஆக்கிவிட்டது. அருமை.

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா15 ஜூலை, 2014

    sir a wonderful scrap that has been given by you, im an average student in schools at that time i hate maths because maths is the only subject created by steps and formulas, if the steps are correctly means the answer should be correct. im a little bit absent minded person so i cant able to forget the step. my major subject is computer science , in these subject if the persons well known and got more intrested in maths means then only he become a best programmer in computer field. now only i got litt bit worried in which way i left out from maths, these spark only created in my mind after reading ur article.thank u sir for a wonderful jouney with u and Mr.Ramanujan. tc.

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா16 ஜூலை, 2014

    அருமை.
    கண்ணீர், அதுவே அம்மாமேதைக்கு நீங்கள் செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  36. கத்தான அறிஞர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்னும் பொன்னான வாசகம், இன்றும் கானல் நீராகத்தான் இருக்கிறது.//

    உண்மை. நல்ல பதிவு.
    கணிதமேதை படம் பார்க்க ஆவலை தூண்டும் உண்மையான விமர்சனம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. Nice to read about Ramanujam and i am happy that Dr. Alagappa Chettiar has formed an mathematical institute in his name, More over its too remarkable for me that you as an math scholar able to write articles in various fields and that too in Tamil.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு