15 ஜூலை 2014

படிக்காத மேதை





தங்கமே, தண்பொதிகைச் சாரலே, தண்ணிலவே
சிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
                                          - கண்ணதாசன்

     மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.

     மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.


     அம்மா, உன்னைத் தேடி வருபவர்களுக்கு, நீ சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்து. நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்து.

நண்பர்களே, இவர்தான் காமராசர், நம் கர்மவீரர் காமராசர்.

     தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும், இம் மண்ணில் நரம்பும், இரத்தமும், சதையுமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறதல்லவா.

தீயன நாடார், என்றும்
    சிறுமைகள் நாடார், வாழ்வில்
மாயங்கள் நாடார், வெற்று
     மந்திரம் நாடார், நீண்ட
வாய்கொண்டு மேடை சாய்க்கும்
     வரட்டு வார்த்தைகள் நாடார்
                     - கண்ணதாசன்

    

கர்மவீரர் காமராசரின் அன்னை சிவகாமி அம்மையார், உடல் நலமின்றிப் படுத்தப் படுக்கையாக இருக்கிறார். தன் தாயைக் காண காமராசர் வருகிறார்.

     காமராசரின் சகோதரி நாகம்மாள், கண்மூடிப் படுத்திருக்கும் தன் தாயின் காதருகே குனிந்து, அம்மா, அண்ணன் வந்து விட்டார்.

      அடுத்த நொடி திடுக்கிட்டுக் கண் விழிக்கிறார் சிவகாமி அம்மையார். முகத்தில் ஓர் மகிழ்ச்சி, கண்களில் ஓர் புதிய ஒளி பரவுகிறது.

       தனது அருமைப் புதல்வனைத் தான் பார்ப்பது, இதுவே இறுதி முறை என்பது அந்தத் தாய்க்குப் புரிகிறது.

     அந்தத் தாயின் வாயில் இருந்து, குழறிக் குழறிச் சில வார்த்தைகள் வெளி வருகின்றன.

ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ.

வேண்டாம், நான் மதுரைக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்ற காமராசர், அப்பொழுதுதான் கவனிக்கிறார், தன் தாயின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிவதை.

சரி, எடுத்து வை.

      மறுபடியும், தாய் குழறியவாரே பேசுகிறார்.

அடுக்களையில் போய் சாப்பிடப்பா.

    அடுக்களையில் நுழைகிறார். சகோதரி உணவு பரிமாற, பேருக்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்.

அப்போ, நான் வரட்டுமா

     கடைசி முறையாகத் தன் மகனைப் பார்க்கிறார் தாய். தன் மகன், தன் வீட்டில் சாப்பிட்டிருக்கிறான் என்னும் மகிழ்ச்சி முகமெங்கும் பரவ,

மகராசனாய் போய் வா.

     ஏதேதோ நினைவுகளில் மூழ்கியவாரே, காரில் ஏறிப் பயணிக்கிறார் காமரசர். அருகில் அமர்ந்திருந்த பழ.நெடுமாறன் அவர்கள், மெதுவாக ஒரு விதத் தயக்கத்துடன் கேட்கிறார்.

ஐயா, நீங்கள் வீட்டில் சாப்பிட்டு, எவ்வளவு காலம் ஆகியிருக்கும்.

என்ன, ஒரு 25 அல்லது 30 வருடமாகியிருக்கும்.

இவர்தான் காமராசர்.
சமுதாய நலனுக்காக, சகலத்தையும் துறந்த துறவி.

     காமராஜ் கல்லூரியில் படித்தாரா? கல்லூரிக்குள் மழைக்காவது ஒதுங்கினாரா? என்று கேட்கிறார்கள். நான் கல்லூரியில் படிச்சேன்னோ, கல்லூரிக்குள் கால் வச்சேன்னோ எப்போது சொன்னேன்? நான்தான் படிக்காத பாமரன்னு உலகத்திற்கே தெரியுமே. நான் படிச்சதில்லைன்னு பச்சையாச் சொல்றேன். அதுக்கப்புறமும் காமராஜ் கல்லூரியில் படிச்சாரான்று நீ ஏன் வீணாக் கேக்கிற?

     நான் கல்லூரியில் படிக்கல. கல்லூரி வாசல்ல கால் வைக்கல. வாஸ்தவம். அதனாலதான், நான் படிக்காத கல்லூரியில், நம்ம பிள்ளைகள் எல்லாம் படிக்கட்டும்னு பாடுபட்டேன். எனக்குக் கிடைக்காத கல்வி, எல்லாருக்கும் கிடைக்கனும்னுதான் ஊர் ஊரா பள்ளிக் கூடம் கட்டினேன்.

நண்பர்களே, இவர்தான் காமராசர்.

முந்நூறு மக்களைக் கொண்ட சிற்றூர் தோறும்
தொடக்கப் பள்ளி.

இரண்டாயிரம் மக்களைக் கொண்ட பேரூரெங்கும்.
நடு நிலைப் பள்ளி,

ஐயாயிரம் மக்களுக்கு
ஓர் உயர்நிலைப் பள்ளி.

அனைவருக்கும் மதிய உணவு
இலவசச் சீருடை.

சாதித்துக் காட்டியவர் அல்லவா காமராசர்.
நம்மைப் படிக்க வைத்து ஆளாக்கிக் காட்டியவர் அல்லவா காமராசர்.

முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
பொன்னில்லான், பொருளில்லான், புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான், இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலுக்கு கரைத்துவிட்ட கங்கையவன்.
                                  - கண்ணதாசன்

125 ரூபாய் ரொக்கப் பணம்
கதர் வேட்டி – 4
கதர் சட்டை – 4
கதர் துண்டு – 4
செறுப்பு – 1 சோடி
கண்ணாடி – 1
பேனா – 1
சமையலுக்குச் சில பாத்திரங்கள்

இவைதான் காமராசர் விட்டுச் சென்ற சொத்துக்கள்.
இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார்.

கர்மவீரர் காமராசர்
மறைந்தவுடன், இவர் வசித்த
வாடகை வீட்டை
வீட்டின் சொந்தக் காரர் எடுத்துக் கொண்டார்.

இவர் பயன்படுத்திய
காரை
காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்டது.

இவர்
உடலை
அக்னி எடுத்துக் கொண்டது.

இவருடைய
பெயரை
மட்டும்
வரலாறு
எடுத்துக் கொண்டது.

---------
ஜுலை 15
காமராசர் பிறந்த நாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும், ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக்
கல்விக் கட்டணம் செலுத்துவோம்.

இதுவே
கர்மவீர்ர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்

---------
நான் ஆசிரியராகப் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
கட்டிடத்தை , திறந்து வைத்த கர்மவீரர் காமராசர்
-------

எனது வகுப்பில்
      கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, என் வகுப்பு மாணவிகளுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தினேன். 
மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பள்ளித் தலைமையாசிரியர்
திரு வெ.சரவணன் அவர்கள்





என் வகுப்பு மாணவிகளிடையே
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள்உரையாற்றுகிறார்
உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம் உரையாற்றுகிறார்
தலைமையாசிரியர் பரிசு வழங்குகிறார்
உதவித் தலைமையாசிரியர்
திரு அ.சதாசிவம் பரிசு வழங்குகிறார்
உடற்கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் அவர்கள் பரிசு வழங்குகிறார்
ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்கள் பரிகு வழங்குகிறார்




















66 கருத்துகள்:

  1. காமராசரை பற்றிய எனது பதிவைஇட தாமதமாகி விட்டது எல்லோரும் முந்திக்கொண்டார்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் ஐயா, நான் அவருடைய சாதனைகளை விளக்கி வைத்துள்ளேன்... நேரம் வரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. காமராஜர் பிறந்தநாள்! கல்வி வளர்ச்சி நாள்! இந்நாளில் உங்கள் பள்ளியில் மாணவியர் மத்தியில் அவரைப் போற்றும் பணிகளைச் செய்து இருக்கிறீர்கள்! நிகழ்வினைப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. காமராசர் எளிமையின் இலக்கணம்! கல்வியின் கண் என்பதை சிறப்பாக சொன்னது பதிவு! மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசளித்து சிறப்பாக கொண்டாடியமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. படிக்காத மேதையைப்பற்றிய பதிவினைப் படிக்க நல்லாத்தான் இருக்கு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ஆனால் அவரை பதவியில் தொடர வைக்காத மக்களை என்ன செய்யலாம்?

    இன்று அவரை நினைத்துப் புகழ்ந்து பேசி என்ன பயன்?

    மிக உயர்வான மனிதர்களின் மதிப்பு அவர்கள் உயிருடன் இருக்கும்போது யாருக்குமே தெரிவது இல்லை. சாபக்கேடு ;(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமராசரையே தோற்கடித்து பெருமை தேடிக்கொண்ட மாநிலமல்லவா நமது மாநிலம்
      நன்றி ஐயா

      நீக்கு
  5. ஏழைகளுக்கு கல்விக் கண்ணை திறந்தவர், மதிய உணவுக்கு வழியற்று இருந்த ஏழைப் பள்ளிச் சிறுவர்களுக்கு உணவூட்ட சத்துணவு திட்டத்தை உலகிலேயே முதன் முறையாக துவக்கி வைத்தவர் காமராஜ நாடார். அவரை பின்பற்றியே பிறரும் தாமே அந்த திட்டத்தை துவக்கியது போல மாயையை ஏற்படுத்தி, அந்த திட்டத்தை விரிவுபடுத்தி அவர் புகழை மறைக்க நினைத்தார்கள் என்பது சரித்திர உண்மை என்றாலும், எம்மைப் போன்றவர்கள் நேரடியாக கண்ட சத்தியமான உண்மை அது. எளிமையில் மட்டும் அல்ல ஏழைகளுக்கு உதவுவதில் தமிழகத்துக்கே பெருமை சேர்த்தவர். ஆனாலும் இன்று, யாரை யாரையோ பெருமைப் படுத்திக் கொண்டு காமராஜரைப் போன்ற உத்தமமான தமிழனை நம்மூர் தமிழர்கள் பெருமைப் படுத்தாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நெஞ்சில் வலியைத் தருகிறது என்பதே உண்மை. ஆனாலும் அவரை பெருமைப் படுத்தும் விதத்தில் உங்களது வலை தளங்கள் போன்றவையும் உள்ளன என்பதைப் பார்க்கும்போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. காமராஜர் ஒரு சகாப்தம், மறக்க முடியாத, மறக்கக் கூடாத தமிழர். அவரைப் போல இன்று எளிமையான எந்த அரசியல்வாதி இருக்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி இவரைப் போன்ற அரசியல்வாதியைப் பார்ப்பது என்பது இயலாத கரியம் ஐயா. பெரியார் கூறினார் இன்னும் குறைந்தது பத்து ஆண்டகளுக்காவது, காமராசரை தொடரந்து ஆட்சி செய்ய விட வேண்டும், அப்பொழுதுதான் நமது வாழ்வு மலரும் என்றார், நாம்தான் தோற்கடித்துவிட்டோமே

      நீக்கு
  6. அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றி பின்பற்ற வேண்டிய மனிதர். ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    ஏழைகளின் கல்விக்கண்னை திறந்த மேதையின் வரலாறு பல இடங்களில் படித்தேன் இருந்தாலும் தங்ளுடைய ஆளுமையன் வழி கூறிய விதம் சிறப்பாக உள்ளது போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் அஞ்சலிசெலுத்தும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இப்படிப்பட்ட மனிதர்களைக் காண்பது அரிது. அன்றும், இன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றும் இன்றும் மட்டுமல்ல
      என்றும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  9. மனம் நெகிழ்கின்றது ஐயா!..

    வளரும் பிள்ளைகள் மனதில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி பதிய வைப்பது காலத்தின் கட்டாயம். தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கின்றது.

    மாணவ மாணவியர்க்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும்!..

    பதிலளிநீக்கு
  10. எப்பேர்ப்பட்ட மனிதர். இத்தனை எளிமையான மனிதர் பிறந்த நாளினை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது சிறப்பு.

    உங்கள் பள்ளியில் இந்நாளைக் கொண்டாடிய உங்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. காமராசர் பிறந்தநாள்! கல்வி வளர்ச்சி நாள்!
    அருமையான பதிவும் பகிர்வும் ஐயா!

    தன்னிகரில்லாத் தகையரின் அருமை பெருமைகளை
    வளரும் சந்ததியினருக்கு ஊட்டி, அவர்களை ஊக்குவிக்கும்
    உங்கள் பணியும் சிறப்பு!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ஜெயக்குமார்

    கர்ம வீரர காமராசர் பிறந்த நாளான இன்று ( 15 ஜுலை ) அவரைப் பற்றிய அழகான, அருமையான பதிவொன்றை இட்டமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. ஒரு தலைவனைப் பற்றிய
    வரலாற்றை
    விரிவாக ஆய்வு செய்துள்ளீர்கள்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. நேற்றைய பொதிகை நிகழ்ச்சி ஒன்றில் கல்விதவிர காமராஜர் ஆற்றிய பல சாதனைகளைப் பட்டியல் இட்டிருந்தனர். நான் பணியாற்றிய திருச்சி பாய்லர் தொழிற்சாலையும் அதில் ஒன்று. காமராஜருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காமாட்சி. .அவரது தாயார் ராஜா என்று கூப்பிடுவாராம். இரண்டும் சேர்ந்து காமராஜர் என்றாகி விட்டதாம் இன்னொரு காமராஜர் பிறக்கப் போவதில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      இனி இன்னொரு காமராசர் பிறக்கப் போவதில்லைதான்

      நீக்கு
  15. நல்ல ஒரு தலைவரை நினைவுகூர்ந்து, இன்றைய தலைமுறை அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய உங்கள் அனைவருக்கும் முதலில் பாராட்டுகள்! அவருடைய தாயை சந்தித்த தருணத்தைப் படிப்பவர் கண்கள் நிச்சயம் பனிக்கும்! கண்ணதாசனின் வரிகளுக்குமேல் விளக்கம் தேவையா? அருமையான பதிவு! இனிமேல் இதுபோன்ற தலைவரை நாடு பார்க்குமா என்பது கேள்விக்குறிதான்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி இதுபோன்ற தலைவரை நாடு பார்க்க வாய்ப்பே இல்லை
      நன்றி நண்பரே

      நீக்கு
  16. விட்டுச் சென்ற சொத்துக்கள் இன்றைய தலைவர்கள் உணர வேண்டும்... இவரை விட எளிமையான தன்னலமற்ற ஒரு தலைவரை இனி காண்பது அரிது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரை விட எளிமையான தன்னலமற்ற ஒரு தலைவரை இனி காண்பது அரிது மட்டுமல்ல ஐயா, காண்பதே இயலாத காரியம்தான் ஐயா
      நன்றி

      நீக்கு
  17. காமராஜரைப் பற்றி எழுதி மனதை உருகச் செய்து விட்டீர்கள் ஜெயக்குமார் சார்.

    "//நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும், ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக்கல்விக் கட்டணம் செலுத்துவோம்.//"

    இப்படி அனைவரும் இந்த சேவையை செய்தால், ஏழை மாணவர்களின் அறிவுப்பசியை எளிதாக போக்க முடியுமே...

    பதிலளிநீக்கு
  18. சாதித்துக் காட்டியவர் அல்லவா காமராசர்.
    நம்மைப் படிக்க வைத்து ஆளாக்கிக் காட்டியவர் அல்லவா காமராசர்.

    சாதனை நாயகன் பற்றிய சிறப்பான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் நண்பரே! அதுவும் இறுதியில் சொல்லியிருக்கின்றீர்கள் பாருங்கள்...//.கர்மவீரர் காமராசர்
    மறைந்தவுடன், இவர் வசித்த
    வாடகை வீட்டை
    வீட்டின் சொந்தக் காரர் எடுத்துக் கொண்டார்.

    இவர் பயன்படுத்திய
    காரை
    காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்டது.

    இவர்
    உடலை
    அக்னி எடுத்துக் கொண்டது.

    இவருடைய
    பெயரை
    மட்டும்
    வரலாறு
    எடுத்துக் கொண்டது. // மிக அழகிய வார்த்தைகள்! இதற்கே ஒரு ஷொட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      ஆனால் இவ்வாக்கியங்களை கோபண்ணா அவர்களின் நூலில் இருந்து எடுத்து எழுதினேன் நண்பரே
      தங்களின் பாராட்டிற்கு உரியவர் திருமிகு கோபண்ணா அவர்கள்தான்

      நீக்கு
  20. பெயரில்லா16 ஜூலை, 2014

    இவருடைய
    பெயரை
    மட்டும்
    வரலாறு
    எடுத்துக் கொண்டது.


    mikka nanry.
    Vetha.Elanagthilakam.

    பதிலளிநீக்கு
  21. அவர் பிறந்த நாட்டில் பிறந்த பெருமை எனக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நமக்கெல்லாம் பெருமைதான் நண்பரே
      நன்றி

      நீக்கு
  22. உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்தேன் அண்ணா!
    //http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  23. இப்படியும் ஒரு மாமனிதர் வாழ்ந்தார் என்றால் எதிர்காலத் தலைமுறையினருக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்காலத் தலைமுறையினர் வியந்ததான் போவார்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  24. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கல்வித்துறை சார்பாக கொண்டாடப்பட்டு வருவதன் மூலம் அவருடைய நினைவுகளை பள்ளிகளில் போற்றப்பட்டு வருகிறது. அந்நிகழ்வின் தொடர்ச்சியாக நமது பள்ளியில் நடந்த போட்டிகளில் தங்கள் வகுப்பு மாணவச்செல்வங்களுக்கு பரிசு வழங்கும் பெறும் பேற்றினை எனக்கு அளித்ததற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டதை கண்ட பொழுது மனதிற்கு மகிழ்வாக இருந்தது. மேலும் நமது பள்ளியின் முன்னாள் ஆசிரியர் நினைவில் வாழ் அ.குமார வேலன் அவர்கள் தனது கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கத்தின் மூலம் உருவாக்கிய ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்தின் இலாபத்தை கொண்டு கட்டிய பள்ளிக்கட்டிடத்தின் படத்தினையும் அதை திறந்து வைத்து வாழ்த்திப் பேசும் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் படத்தினையும் உங்களுடைய பதிவில் இட்டு பதிவினை சிறப்பாக மாற்றியது அருமை. உன்னதமானத் தலைவர்களைப் போற்றுவதன் மூலம் நம் இளைய சமூதாயத்தினருக்கு நல்வழிகாட்டியாகத் திகழும் உங்களை எத்துணைப் பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசரை பிள்ளைகள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்...அதைச் செய்த உங்களுக்கு நன்றிகள்.
    பிள்ளைகள் ஆர்வத்துடன் பங்கெடுத்தது மகிழ்ச்சியூட்டுகிறது.
    காமராசர் முதலவராக இருந்தபொழுதும் அவரது தாய் தெருக்குழாயில் தான் தண்ணீர் எடுப்பாராம். ஒரு அதிகாரி வீட்டுக்குக் குழாய் இணைப்பு கொடுத்தாராம், அதை அறிந்த காமராசர் வேண்டாம் என்று மறுத்தாராம்..அவரைப் போன்ற தலைவர் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்..அவரைப்போல இன்னொருவர் வருவாரா என்பது சந்தேகமே...

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரரே.
    த.ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகமே வேண்டாம் சகோதரியாரே
      இனி இவர்போல் ஒருவர் வரப்போவதே இல்லை
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  26. கரந்தையாரே! சாதாரணமாகவே தங்கள் எழுத்துக்களில் உணர்ச்சி கொப்பளிக்கும். அதிலும் எல்லாவிதமான உயரிய அடைமொழிகளுக்கும் போருந்துபவரான பெருந்தலைவரைப் பற்றி எழுதும்போது உங்கள் எழுத்து, சிகரம் தொட்ட எழுத்தாகவே பரிணமிக்கிறது. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கிறார் என்று யார் சொன்னார்களோ, அவர்களின் குடும்பம் இன்று எங்கெல்லாம் போட்டுவைத்திருக்கிறது என்று மக்களுக்குத் தெரியும். ஆனால் மக்கள் எதையும் எளிதில் மறந்துவிடுகிறார்களே! மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டுவருவோம் என்று சொல்லி 47 ஆண்டுகள் ஆகிவிட்டன....இப்போது அந்தக் கட்சியே அநேகமாக அழிந்துவிட்டது. காலம் ஏனோ தமிழகத்திற்குக் கொடுமை செய்வதே தொழிலாகக் கொண்டிருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் மறதிதானே ஐயா அரசியல்வாதிகளின் மூலதனம்
      காமராசரைத் தோற்கடித்ததால், நட்டம் காமராசருக்கு அல்லவே
      நமக்குத்தானே
      நன்றி ஐயா

      நீக்கு
  27. அன்பின் ஐயா...
    மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து தாயை, வீட்டைத் துறந்து வாழ்ந்த தியாகி கர்மவீரரைப் பற்றிய அருமையான பகிர்வு...

    படங்களுடன் உங்களின் எழுத்துக்கள் வரிக்கு வரி காமராஜரை பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. அருமை அருமை. நேர்மை எளிமை தூய்மையின் மறுவடிவம் அல்லவா?
    நெகிழ வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  29. காமராசர் பிறந்தநாள்! கல்வி வளர்ச்சி நாள்!
    அருமை.

    கர்மவீரஎ காமராசர் பிறந்த நாளினை முன்னிட்டு, வகுப்பு மாணவிகளுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தியது மிகவும் சிறப்பு.
    இக்காலகுழந்தைகள் தன்னமில்லா தலைவரைப்பற்றி தெரிந்து கொள்வதும், அவரைப் பற்றி பேசுவது நல்ல விஷயம்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  30. இந்த நல்ல மனிதரையும் தோற்கடித்த அரசியலை சாக்கடை என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது ?
    த ம +1

    பதிலளிநீக்கு
  31. மிகத்தெளிவான விளக்க உரை. கண்ணதாசன் கவிதைகள் அழகு. பகிர்தலுக்கு நன்றிங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  32. பெருந்தலைவரைப் பற்றிய பதிவும், படங்களும் எங்களது நெஞ்சை விட்டு அகலாத அளவு பதியவைத்துவிட்டீர்கள், தங்களது பாணியில். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. வாழ்ந்த வரலாற்றை வரைந்த விதம் மிகவும் அருமை. தோழர் ஜீவாவுடனான அவரது நட்புமிக ஆழமானது. கடைசிக் காலத்தில் அந்த நல்ல இதயம் அமைதியின்றித் துடிக்கச் செய்த கொடுமையை நாம் இப்போதும் வெளியில் சொல்ல முடியாத சோகம்... என் பதிவிலும் இதை நான் சொல்ல முடியவில்லை சொல்லமுடிந்ததை அருமையாக உணர்ச்சிகரமாகச் சொனன விதம் அருமை. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதை மட்டுமே நினைத்து வாழ்ந்தவரை
      கவலைப் பட வைத்தே துடிக்க வைத்ததுதான்
      கொடுமை ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  34. மிக நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.அவரது காலத்தில்தான் தமிழகத்தில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டதாய்ச்சொல்வார்கள்.அதைப்போல வளர்ச்சிப்பணிகள் இப்பொழுதும் கேள்விபடமுடியவில்லை/அவருக்கும் தோழர் ஜீவாவுக்கும் அவருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும் அவருக்கும் இன்னும்,இன்னுமான பலருக்கும் இருந்த நட்பு வேர்விட்டுபடர்ந்தது எனச்சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமராசர் ஜீவா
      காமராசர் கண்ணதாசன்
      இவர்கள் எல்லாம் நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  35. பதிவுகள், முகநூல், என்று எந்தப்பக்கம் திரும்பினாலும் காமராஜர் புகழ் தான், அவர்கள் உண்மைகள் நண்பர் சொன்னது போல இணையம் என்பது ஒன்று இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் கர்மவீரர் யார் என்று இன்றைய தலைமுறைகள் கேட்டு இருப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சணமான உண்மை ஐயா. இணையம் இல்லாவிடில் காமராசரை இன்றைய தலைமுறையினர் யார் என்றுதான் கேட்பார்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  36. எளிமையாய் வாழ்ந்து மறைந்த ஒரு நல்ல மனிதருக்கு மிக அழகிய சமர்ப்பணம் செய்து விட்டீர்கள்! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு