18 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 12எனது கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு அழைக்கிறேன். வருகிறீர்களா?

     என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. படிக்கும் காலத்திலேயே ஆசிரியர் பணியா? அதுவும் எனக்கா?


      எனது வகுப்பில் 30 பேர் இருப்பார்கள். ஆனால் அவர் என்னை மட்டும்தான் ஆசிரியராகப் பணியாற்ற அழைத்தார்,

      இங்குதான் அமெரிக்கர்கள் தனித்து நிற்கிறார்கள். ஒருவருடைய உடற் குறையை விட, அவருடைய திறமைக்கு மதிப்பு கொடுப்பதில் அமெரிக்கர்களுக்கு நிகர் யாருமில்லை.

     ஆசிரியர் பணியில் சேர மனம் துடித்தது. எத்தகைய அனுபவம் உனக்காகக் காத்திருக்கிறது, விட்டுவிடாதே என்றது நெஞ்சம்.

      ஆனாலும் ஓர் பிரச்சினை, ஓர் முக்கியப் பிரச்சினை, பணப் பிரச்சினை முன் வந்து நின்றது.

       நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக, போர்டு நிறுவனத்தின் கல்வி உதவித் தொகையினைக் கொண்டுதான், படித்தும், வாடகைக்கு வீடு பிடித்தும்., உணவு உண்டும் அமெரிக்காவில் என் வாழ்வை ஓட்டி வருகிறேன்.

      நான் வேலைக்குச் சென்று பணம் ஈட்டத் தொடங்குவேனேயானால், கல்வி உதவித் தொகை பெறும் தகுதியை நான் இழந்து விடுவேன்.

       பகுதி நேர உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் ஊதியம், நிச்சயம், என் கல்வி உதவித் தொகையை விடக் குறைவாகத்தான் இருக்கும்.

          ஆனாலும் ஆசிரியர் பணியால் கிடைக்கும் அனுபவத்திற்கு, இப்பணம் இணையாகுமா என்று எண்ணினேன்.

      ஆனது ஆகட்டும் என, துணிந்து செயலில் இறங்கினேன்.

     லகுவார்டியா சமூகக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். போர்டு நிறுவனத்திற்கும் தெரிவித்தேன்.

       உடனே போர்டு நிறுவனம் என் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது.

       லகுவார்டியா சமூகக் கல்லூரியில் நேர் காணல் நடைபெற்றது.

       நான் படிக்கும் விதம், பாடம் நடத்தப் போகும் முறை ஆகியவற்றை, என்னுடைய மடி கணினியைக் கொண்டு, செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தேன்.

     நிருவாகத்தார் மகிழ்ந்து போனார்கள். பணியில் சேர்ந்தேன்.

     எனது வகுப்புகளுக்கான கால அட்டவணையும் வழங்கப் பட்டது.

    செப்டம்பர் 7 ஆம் நாள்.

    உதவிப் பேராசிரியராக, முதல் நாள் முதல் வகுப்பு.

   காலை 9.15 மணிக்கு வகுப்பு. சி மாளிகையில் 225 ஆம் அறை. எனது வகுப்பிற்காக ஒதுக்கப் பட்டிருந்தது.

      நமது நாட்டைப் போல் அல்லாமல், ஒவ்வொரு அறையின்  கதவின் முன் புறத்தில், அறையின் எண், பிரையில் முறையில் எழுதப் பட்டிருக்கும். அதை வைத்துக் கொண்டு, நானாகவே எனது வகுப்பறையை அடைந்தேன்.

     வகுப்பறையில் நான் நுழைந்த பொழுது, ஏறக்குறைய 15 மாணவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

      நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும், பேச்சு நின்றது. அமைதி. பிறகுதான் தெரிந்தது, நான் கையில் ஊன்று கோலுடன், வந்ததைக் கண்டதும், ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவாகத்தான் அந்த அமைதி என்பது புரிந்தது.

     மாணவர்களின் குரல் வந்த திசையினைக் கொண்டு, மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தினையும், ஆசிரியருக்கான மேடை போடப்பட்டிருக்கும் இடத்தையும், துல்லியமாய் உணர்ந்து, யாரிடமும் கேட்காமல், யாருடைய உதவியும் இன்றி, ஆசிரியருக்கான இருக்கையில் அமர்ந்தேன்.

      மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பில் நுழைவதை உணர்ந்தேன். முப்பதிற்கும் அதிகமான மாணவர்கள் அறையில் இருப்பதை அறிந்தேன்.

      வகுப்புத் துவங்க ஒரு நிமிடமே இருக்கும் நிலையில், ஒரு மாணவர் என்னை நெருங்கினார்.

ஐயா, தங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன். ஆனால் நீங்கள் வகுப்புப் பேராசிரியருக்கு உரிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். மாணவர்களுக்கான இருக்கைகள், தங்களுக்கு எதிர்புறம் உள்ளன.

      மாணவர்கள், என்னையும் தங்களுள் ஒருவராக நினைத்தது புரிந்தது.

அப்படியா? ஒரு வேளை, நான் உங்களுடைய பேராசிரியராக இருந்தால்?

     அடுத்த நொடி அறை முழுவதும் ஓர் அதிர்ச்சி அலை பரவியது.

     அதிர்ச்சி, அடுத்த சில நொடிகளில் வியப்பாக மாறியது.

      நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

      வகுப்பினைத் துவக்கினேன்.

     மடி கணினியையும், திரை பிரதிபலிப்பானையும் ( Projector ) கொண்டு வகுப்பை நடத்தினேன்.

      ஓரிரு நாட்களிலேயே, மாணவர்கள், என்னையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர்.

     ஒரு புறம் மாணவர் வாழ்க்கை. மறுபுறம் ஆசிரியர் வாழ்க்கை. நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தோடின.

    


நான், நாள்தோறும் காலை 7.45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி, எட்டு மணிக்கு வரும் நியூயார்க் நகர ஸீ தொடர் வண்டியைப் பிடித்து, நேரச் சதுக்கம்
( Time Square ) சென்றடைவேன்.

     அங்கிருந்து ஏழாம் எண் தொடர் வண்டிக்கு மாறி, கல்லூரியைச் சென்றடைவது வழக்கம்.

      அன்றும் அவ்வாறுதான் தொடர் வண்டி நிலையத்தை அடைந்தேன்.

      ஆனால் தானியங்கி நுழைவு வாயிலைக் கடப்பதற்குள், தொடர் வண்டி புறப்படத் தயாராக இருந்தது.

     அடுத்தத் தொடர் வண்டிக்காகக் காத்திருந்தால், தாமதமாகிவிடும் என்பதால், வண்டியைப் பிடிக்க வேகமாய் நடந்தேன்.

     ஒரு வழியாக வண்டியின் கடைசிப் பெட்டியின் அருகில் சென்று விட்டேன்.

     கதவில் கை வைத்தேன்.

     கதவு திறந்தது போன்ற ஒரு அசைவு ஏற்பட்டது.

     வண்டியில் ஏறுவதாக நினைத்து, காலை எடுத்து, வைத்து ஏற முயன்றேன்.

     வண்டி நகர்ந்துவிடவே, நடைமேடையில் இருந்து, தொடர் வண்டியின் தண்டவாளத்தில் விழுந்தேன்.

                                               தொடர்ந்து பேசுவேன்.

      31 கருத்துகள்:

 1. இவரின் சாதனை பிரமிப்பூட்டுகிறது! தொடர்ந்து எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.

  ஒரு மர்ம நாவல் போல வாழ்வியல் தொடரை எழுத உங்களால்தான் சுவராசியமாகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் வகையிலும் எழுத முடியும்.

  த ம 1


  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. //நம்ம// //
  அனது ஆகட்டும்// //
  துனிந்து// //
  எனத்,//
  //அதிர்ச்சயின்//

  வழக்கத்துக்கு மாறாக உங்கள் பதிவில் சில பிழைகள்!

  கடைசி வரி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தொடர்கிறேன். தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடந்த மூன்று நாட்களாக கணினி பழுது. புதிதாக மென்பொருள் ஏற்றம் செய்து நேற்று இரவுதான் கணினி தயாரானது.மூன்று நாட்களாக இணையத்தின் பக்கம் வர இயலாததால், அவசர அவசரமாய் தட்டச்சு செய்து பதிவிட்டேன்.அதனால் பல எழுத்துப் பிழைகளைக் கவனிக்க இயலாமல் போய்விட்டது.மன்னிக்கவும்.தற்பொழுது பிழைகளை நீக்கிவிட்டேன்.
   எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 4. அடடா...
  அடுத்து நடந்தது என்ன நடந்தது?

  பதிலளிநீக்கு
 5. அடடா...
  அடுத்து நடந்தது என்ன நடந்தது?

  பதிலளிநீக்கு
 6. பரபரப்பாய் போகிறது...அருமையான நடை நண்பரே

  பதிலளிநீக்கு
 7. உங்களின் திறமைக்கு ஒரு ராயல் சல்யூட் :)

  பதிலளிநீக்கு
 8. நான் வெற்றி வேல் முருகனின் ரசிகனாகி விட்டேன்

  பதிலளிநீக்கு
 9. நான் வெற்றி வேல் முருகனின் ரசிகனாகி விட்டேன்

  பதிலளிநீக்கு
 10. வியக்க வைக்கும் மனிதர்... அவர் மேல் மரியாதை அதிகமாகிக் கொண்டே போகிறது.

  பதிலளிநீக்கு
 11. விறுவிறுபாக செல்கிறது ஆச்சயர்மாகவும் இருக்கின்றது அவரது செயல் தொடர்கிறேன் நண்பரே
  த.ம.5

  பதிலளிநீக்கு
 12. யாராவது, என்னால் இயலாது, முடியாது என்று சொன்னால், இவரை உதாரணம் காட்டலாம். எளிதாக்க் கடந்துவிடுகிறார். அவர் மனதில் என்ன ஒரு தன்னம்பிக்கை, வைராக்கியம். கடைசி வரிகள் அதிர்ச்சி.

  நெல்லை வழக்கில் "ஏலே அவ(ன்) மனுசப்பயலால.. எம்டன்ல"

  பதிலளிநீக்கு
 13. நண்பர் விஜூ கருத்துதான் என்னுடைய கருத்தும். விறுவிறுப்பான கதைபோல் சொல்ல உங்களால்தான் முடியும்..!
  த ம 6

  பதிலளிநீக்கு
 14. ஐயோ பதபதைப்பு என்னாச்சு ரயில் நிலையத்தில்? தொடர்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 15. வெற்றிப் படிகட்டுகளில் வெற்றிவேல் முருகன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. மாணவர்கள் முருகனை தம்முள் ஒருவராக நினைத்ததைப் பார்க்கும்போது அவருடைய அருமையான குணாதிசயங்களை உணரமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 17. அடுத்து என்ன நடந்தது. அறிய ஆவல்

  பதிலளிநீக்கு
 18. அடுத்து என்ன நடந்தது. அறிய ஆவல்

  பதிலளிநீக்கு
 19. வெற்றிவேல் முருகன் அவர்கள் தன்னம்பிக்கை அனைவருக்கும் ஒரு பாடம்.
  அடுத்தது என்னாச்சு என்று அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 20. ஐயோ என்னாச்சு ரயில் நிலையத்தில்? தொடர்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 21. இவரது சரிதையைப் படிக்கப் படிக்க இவரைச் சந்தித்து உரையாட வேண்டும்போல் இருக்கிறது வாழ்க்கை அனுபவங்கள் வித்தியாசமானது. சிறப்பானது

  பதிலளிநீக்கு
 22. ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகிற வெற்றி வேல் முருகன்,,,,,/

  பதிலளிநீக்கு
 23. அதிர்ச்சி. அடுத்து என்ன. தொடர்கிறோம்

  பதிலளிநீக்கு
 24. சுவாரசியமாகச் செல்கிறது. இறுதியில் அதிர்ச்சி! என்ன ஆச்சு? தொடர்கிறேன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 25. நான் படித்ததிலே - இன்றைய
  பதிவு தான் விறுவிறுப்பாக இருக்கிறது
  பகுதி நேர உதவிப் பேராசிரியர் பணி
  பாரிய திருப்புமுனை என்பேன்

  பதிலளிநீக்கு
 26. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  நண்பர் திரு.வெற்றி வேல் முருகனின் தீரமான செயல்பாடுகளை பார்க்கும் பொழுது அவர்களது பெற்றோர் எதிர்காலம் அறிந்தே அவருக்கு மிகப் பொருத்தமான பெயரை சூட்டியிருப்பார்கள் என்று எண்ண வேண்டியுள்ளது. இப் பதிவின் முடிவினைப் படிக்கும்பொழுது மனதில் ‘திடுக்’ என இருக்கிறது. நல்லதையே நினைப்போம்.

  பதிலளிநீக்கு
 27. அடடா என்னாச்சு. யாரும் காப்பாற்றினார்களா

  பதிலளிநீக்கு
 28. வாத்தியார் கம்புக்கும் அஅமெரிக்காவிலும் பயமுண்டு எனபதை தெரிந்து கொண்டேன்.அதோடு யாணைக்கும் அடி சரக்கும் என்பது இதுதானோ...????

  பதிலளிநீக்கு
 29. என்னாயிற்று என்று அறிய இதோ தொடர்கின்றோம்....தன்னம்பிக்கை மனிதர்!!!! இவரை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்..அனைவருமே!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு