04 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 10




நியூயார்க் மெட்ரோ தொடர் வண்டி  நிலையம்.

  அமெரிக்கத் தொடர் வண்டி நிலையங்களில் ஆங்காங்கே, தானியங்கி பயணச் சீட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

      அந்த இயந்திரத்தில் ஒரு தொடு திரையும், தொடுதிரையின் கீழ், தொலை பேசிக் கருவியைப் போன்ற வடிவமுடைய, விசைப் பலகையும் இருக்கும். அதற்கும் கீழே, ஸ்பீக்கர் பின் சொருகக் கூடிய வகையில், ஒரு துளை இருக்கும்.

    அதில் நமது ஹெட்போன் பின்னைச் சொருகி, விசைப் பலகையின் ஸ்டார் பட்டனை அழுத்த வேண்டும். அடுத்த நொடி, கணினித் திரையானது நம்முடன் பேசத் தொடங்கும்.


     கணினி கூறும வழி முறைகளைப் பின்பற்றி எளிதாக, பயணச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.
     

இதே போன்று  பேசும் ATMகளும் ஆங்காங்கே உண்டு. இதனையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்டேன்.

      இன்னும் சொல்வதானால், நியூயார்க்கில் கால் பதித்த ஓரிரு மாதங்களிலேயே, நான் ஒரு முழு நியூயார்க் நகரவாசியாகவே மாறிவிட்டேன்.

      மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மீண்டும் வருவோமா. தானியங்கி இயந்திரத்தில் பயணச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவுடன், வானூர்திப் பயணத்தைப் போலவே, ரயில் நிலையப் பணியாளர் ஒருவர், என்னை அழைத்துச் சென்று, எனக்குரிய இருக்கையில் அமர வைத்தார்.

    தொடர் வண்டி முழுவதும் ஆங்காங்கே தொலைக் காட்சிப் பெட்டிகள், புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே வண்டியின் வேகம் அதிகரித்தது.

      ஒன்றரை மணி நேரத்தில் தொடர் வண்டியானது பிலடெல்பியாவை அடைந்தது.

       ரயில் நிலையத்தில் எனக்காக, எனது நண்பர் சாமுவேல் காத்திருந்தார்.

     சாமுவேல் எனக்கு அண்ணன் போன்றவர். என்னுடன் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்தவர்.

     படிக்கும் காலத்திலேயே காதலித்துத் திருமணமும் செய்து கொண்டவர்.

     எப்படியோ நியூயார்க்கில் நான் இருப்பதை அறிந்து, எனது தொலை பேசி எண்ணைக் கண்டுபிடித்துப் பேசினார். கிறிஸ்துமஸ் திருநாளைத் தன்னுடன் கொண்டாட அழைத்தார்.

     இதோ பிலடெல்பியாவில். ரயில் நிலையத்தில். பல மாதங்கள் கடந்த நிலையில், தமிழ் மொழியைக் கேட்டேன். என் தாய் மொழியைக் காதாரக் கேட்டேன்.

      தாய் மொழியைக் கேட்பதிலும், பேசுவதிலும்தான் எவ்வளவு இன்பம். சாமுவேல் அவர்களின் காதல் மனைவி பூனம் அக்கா அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றார்.

     கிறிஸ்துமஸ் அன்று, சாமுவேல் அவர்களுடன் இணைந்து தேவாலயம் சென்றேன். பிறகு சாமுவேல் அவர்களின் வீட்டில், இரண்டாம் மாடியில், பொருத்தப் பட்டிருந்த கிறிஸ்துமல் மரத்தடியில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டோம்.

     அன்று மதியம், பிரியாணியுடன் கூடிய விருந்து. விருந்தில் சாமுவேல் அவர்களின் பேராசிரியர்களும், நண்பர்களும் நண்பிகளும் கலந்து கொண்டனர்.

     அமெரிக்கச் சுதந்திரப் போரில், பிலடெல்பியாவின் பங்கு மகத்தானது. எனவே சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றோம்.

     இரண்டு நாட்கள் பிலடெல்பியாவில் தங்கியிருந்து விட்டுப் பின் நியூயார்க் திரும்பினேன்.

      நியூயார்க்கில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன்.



2004 ஆம் ஆண்டு 31 ஆம் தேதி இரவு 11.00 மணியளவில், நியூயார்க் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள நேரச் சதுக்கத்திற்குச் (Time Square ) சென்றோம்.

     சென்றோம் என்றால், நான் வெண்டி மற்றொரு தோழி மற்றும் சில நண்பர்களுடன் சென்றேன்.

      நேரச் சதுக்கத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம். பல நாடுகளைச் சேர்ந்த நொறுக்குத் தீனிக் கடைகள் பஞ்சமே இல்லாமல் பரவி இருந்தன.
    

புத்தாண்டு பிறக்க இன்னும் முப்பது நொடிகளே இருந்த நிலையில், நொடிகளைத் தலைகீழாக என்னும் நிகழ்வு தொடங்கியது.

5,   4,   3,   2,   1,   0

     கடிகார முள் 12.00ஐத் தொட்டவுடன், பல வைர, வைடூரிய, பிலாட்டின மற்றும் தங்கக் கற்கள் பொருத்தப் பட்ட ஒரு மிகப் பெரிய பந்து, மேலிருந்து கீழிறக்கப் பட்டது.

      அப்பந்து கீழிறங்கிய உடனேயே, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள், விண்னைப் பிளந்தன.

                                                    தொடர்ந்து பேசுவேன்











24 கருத்துகள்:

  1. நன்று தொடர்ந்து வருகிறேன் நண்பரே
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. அடுத்த வரைவுக்காக ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  3. பிரமிப்பைத் தரும் அருமையான தொடர்.
    தொடர்கிறேன்.
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. ஆஹா அண்ணா..இத்ன நாள் பார்க்காம விட்டுட்டேனே...இன்று மீதி 9 யும் படிச்சுடுறேன்..அண்ணா..

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு பிறப்பை நேரலையில் பார்ப்பது போல் உணர்ந்தேன் !

    பதிலளிநீக்கு
  6. புத்தாண்டு பிறப்பை நேரலையில் பார்ப்பது போல் உணர்ந்தேன் !

    பதிலளிநீக்கு
  7. எல்லாமே வியப்பான செய்திகள். தாய்மொழி தமிழ் பற்றிய வெற்றிவேலின் உணர்வு பற்றி என்னவென்று பாராட்டுவது. தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  8. நியூயோர்க்கில்
    புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்
    அருமையான தகவலுடன்...
    தொடருங்கள் ஐயா தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  9. //இன்னும் சொல்வதானால், நியூயார்க்கில் கால் பதித்த ஓரிரு மாதங்களிலேயே, நான் ஒரு முழு நியூயார்க் நகரவாசியாகவே மாறிவிட்டேன்.//

    வேகமாகக் கற்றுக் கொள்பவர்களுக்கு எதுவும் சிரமமில்லை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. புறப் பார்வை இல்லாத ஒருவரின் அகக்கண் கொண்டு விவரிப்பதும்
    அதை மிக அற்புதமாக எழுத்தில் கொண்டுவரும் உங்களது திறமை
    பாராட்டுதலுக்குரியது நண்பரே.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. மேலே 2004 என எழுதியது சரிதானா ? அப்படியென்றால் வெற்றிவேல் முருகனின் 12 வருடத்திற்கு முந்திய கதையா?

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா05 அக்டோபர், 2016

    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. இம்மாதிரியான இயந்திரங்களை இயக்க யாராவது உதவுகிறார்களா இவரது அனுபவங்களைப் படிக்கும் போது இவர் சொல்லிச் செல்லும் முறை வியக்க வைக்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. சமீபத்தில் வந்த சர்வைவர் படத்தின் கிளைமாக்ஸ் அந்த பந்துதான்.
    அருமையான வர்ணனை
    தொடர்க
    தம +
    இப்போது இது முகநூலில்

    பதிலளிநீக்கு
  15. தமிழ் மொழியைக் கேட்டேன். என் தாய் மொழியைக் காதாரக் கேட்டேன். தாய் மொழியைக் கேட்பதிலும், பேசுவதிலும்தான் எவ்வளவு இன்பம்.

    நூற்றுக்கு நூறு உண்மை. வெற்றிவேல் முருகன் வாழ்க.

    பதிலளிநீக்கு
  16. அன்னிய தேசத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பேசக் கேட்பது நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம் தான்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு ஆச்சர்யம். தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஆச்சர்யமான விஷயங்களை அள்ளி வீசுகிறார்...
    அவரின் பின்னே பயணிக்கிறேன் நான்...

    பதிலளிநீக்கு
  19. நன்று சகோதரா தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. புத்தாண்டு அங்கே அப்படி பிறக்கிறதோ...!!...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு