27 மே 2017

சித்தப்பா மறைந்தார்


சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய என் சித்தப்பா, இயற்கையோடு இணைந்து விட்டார்.

      என்னுடன் அதிகம் பேசிய, என் ஒரே உறவு.

      நான் அதிகமாய் பேசிய, என் ஒரே உறவு


      உறவு மட்டுமல்ல, என் உற்ற தோழர்

      சிறு வயதில், என் கோடை நாட்களைக் குளிர்மைப் படுத்தியது, இவரது இல்லம்தான்.

       மாலை நேரங்களில், காவிரி ஆற்று மணலில், என்னை ஓட விட்டு, கைதட்டி உற்சாகப் படுத்தியவர்.

       திருவையாற்று நூலகத்திற்குள், என்னை முதன் முதலாய் அழைத்துச் சென்று, பாடப் புத்தகங்கள் மட்டுமே புத்தகங்கள் அல்ல, அதையும் தாண்டி, பரந்து விரிந்த ஒரு உலகம் இருக்கிறது, என்பதை எனக்கு உணர்த்தியவர்.

       என் சித்தப்பா.

        அண்ணன் தம்பி உறவிற்கு ஒரு ஒப்பற்ற உதாரணம் என் சித்தப்பா.

        என் தந்தை முன், அதாவது தன் அண்ணன் முன், உட்கார்ந்து பேசக்கூடத், தயங்கும், மரியாதை மிகுதி உடையவர்.

       எத்துனைச் சுமைகள், உள்ளத்தை அழுத்திய போதும், இதழோரப் புன்னகையால், உலகை வென்றவர்.

       உன்னத மனிதரின், உண்மை முகம் காண மறுத்த குடும்பம்.

       சோதனைகளும், வேதனைகளுமே தினசரி வாடிக்கையாகிப் போன வாழ்வு.

        வீட்டில் அமைதி, வெளியில் புன்னகை.

        எத்துனைக் கடினமானப் பணியினையும், வெகு இயல்பாய், வெகு எளிமையாய், வெகு நேர்த்தியாய் நிறைவேற்றும் ஆற்றலாளர்.

         வாழ்வில், தான் சந்தித்த, அத்துனை மனிதர்களின் உள்ளங்களையும் வென்றெடுத்தப் பண்பாளர்.

         நானே பலமுறை கேட்டதுண்டு, எதற்குச் சித்தப்பா, இவ்வளவு கடினமானப் பணிகளை, இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறீர்கள்.

         சிரித்தபடியே பதிலுரைப்பாய்.

         யாராவது ஒருவர் இந்த வேலையைப் பார்த்துத்தானே ஆக வேண்டும், அதை நான் செய்து விட்டுப் போகிறேனே.

          போதி மரமில்லா புத்தர் என் சித்தபபா.

           அன்று முதல் இவரே, என் வழிகாட்டியாகவும் ஆகிப் போனார்.

           ஆசிரியர்

           நல்லாசிரியர்

           நல்லாசிரியர் விருதும் பெற்ற நல்லாசிரியர்

           உதவிக் கல்வி ஆய்வாளர்

            தலைமையாசிரியர்

            பணி ஓய்விற்குப் பிறகு, தஞ்சாவூர், அய்யம்பேட்டை, ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியின் நிருவாக அலுவலர்.

            மாரடைப்பு

           25.5.2017 வியாழன் மாலை வரை, கல்வியியல் கல்லூரியில் பணியாற்றிவிட்டு, வீடு திரும்பி, என்றுமறியாச் சோர்வுடன் அமர்ந்திருந்தவருக்கு, இரவு 9.00 மணியளவில், இதயத்தில் இடியிறங்கியதைப் போன்ற, ஒரு பெரும் வலி.

            வியர்வையில் உடல் நனைந்தே போனது

           ஐந்தே ஐந்து நிமிடம்தான்

           அருகில் இருக்கும், மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற பொழுது, உடல் மட்டுமே மீதமிருந்தது.

         என் சித்தப்பா

வாழ்வு முழுவதும் ஓய்வறியா,
என் சித்தப்பா,
ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டார்.திரு சி.திருவேங்கடம்

இனியேனும் அமைதியாய், நிம்மதியாய் தூங்குங்கள்.

        

54 கருத்துகள்:

 1. ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சித்தப்பாவின் ஆன்மா இறைவனடியில் ஆழ்ந்து உறங்கட்டும்

  இவரை பிரிந்து வாடும் உறவுகளுக்கு எனது இரங்கல்கள்....

  பதிலளிநீக்கு
 3. ஆழ்ந்த இரங்கல்கள்.

  உங்களுக்குத் திடம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. ஆழ்ந்த இரங்கல்கள்.

  உங்களுக்குத் திடம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. வேதனை. ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.....பிரார்த்தனையும்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் சித்தப்பா அவர்கள் இழப்பு உங்களுக்கு மிகவும் வேதனைதான்.
  ஆழ்ந்த இரங்கல்கள்.
  ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் மீதும் உலகின் மீதும்
  அன்பையும், புன் சிரிப்பையும் கொட்டியவர்.
  நூலகத்தை அறிமுகப்படுத்தியவர்
  எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் சுபாவம் கொண்டவர்.
  இந்த பெருந்தகையாளரின் மறைவு
  தாங்க முடியாத வேதனைதான்- உங்களுக்கு
  எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும்
  ஆறுதல் கூறி வலு படுத்துவாராக...
  அன்னாரது ஆன்மா சாநதி அடைய வேண்டுகிறேன்.
  சரவணன்

  பதிலளிநீக்கு
 9. ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 10. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறவு என்பது நட்பும் ஆகிப்போன ஒன்றின் இழப்பு என்றும் ஈடு செய்ய இயலாத ஒன்றுதான்.

  பதிலளிநீக்கு
 11. தங்களுடைய சித்தப்பாவின் எளிமையான போக்கு என் இளமை காலந்தொட்டு என்னை கவர்ந்திழுத்தது. நான் எளிமையினை கடைபிடிப்பதற்கும் தூண்டுகோலாய் இருந்தது. அவருடய வார்த்தைகள் மனதை இதமாக வருடும்.அதை நான் அனுபவித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபம். எம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. தங்கள் வாழ்க்கைத் தட வழிகாட்டியாய் இருந்த தங்கள் சிற்றப்பாரின் மறைவால் மனவேதனையிலிருக்கும் தங்களுக்கும், தங்கள் சிற்றப்பார் குடும்பத்தார்க்கும் எனது ஆறுதல் மொழிகள் உரித்து.

  பதிலளிநீக்கு
 14. இனியேனும் அமைதியாக உறங்கட்டும்..
  ஓம்.. சாந்தி.. ஓம்..

  பதிலளிநீக்கு
 15. தங்கள் துயரத்தில் பங்கெடுக்கின்றோம்.
  துயர் பகிருகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. உங்களது சித்தப்பா, ஆசிரியர் திரு.சி.திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும் ( முதன் முதல் இந்த செய்தியை உங்களது ஃபேஸ்புக்கில் நீங்கள் வெளியிட்டபோது, இவர் உங்கள் சித்தப்பா என்று எனக்கு தெரியாது). – இரங்கலுடன் தி.தமிழ் இளங்கோ.

  பதிலளிநீக்கு
 17. உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 18. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய ஏக்கத்தையும், உணர்வுகளையும் உங்கள் எழுத்து மூலமாக உணர முடிந்தது.

  பதிலளிநீக்கு
 19. ஆழ்ந்த இரங்கல்கள்ண்ணே

  பதிலளிநீக்கு
 20. உயர்ந்த மனிதர்
  ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 21. உங்கள் ஆத்மாவிற்கு நெருக்கமான சித்தப்பாவை இழந்தது மிகப்பெரும் ஒரு இழப்பு. எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் உணர்வுகளை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது...தேற்றுவதற்கு சரியான வார்த்தைகள் வசப்படாமல் தவிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 22. வருந்துகிறேன்.

  இதுவும் இயற்கை நிகழ்வே என்று மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். உறவினர்களையும் தேற்றுங்கள்.

  பதிலளிநீக்கு
 23. ஆழ்ந்த இரங்கல்!
  அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 24. இறப்பு என்றால் இப்படி யாரையும் துன்பப் படுத்தாமல் ,தானும் துன்பப் படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லிச் சென்ற பெரியவருக்கு ஆழ்ந்த இரங்கல் :(

  பதிலளிநீக்கு
 25. பிரிவின் துயரம் அறிகிறோம். ஆறுதலாய் இருந்து சித்தப்பா காட்டிய வழியில் தொடர்ந்து பணிசெய்யவும்.

  பதிலளிநீக்கு
 26. ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 27. தங்கள் சித்தப்பாவின் இழப்பு தங்களுக்கு
  ஈடு செய்யா இயலாத பேரிழப்பு என்பதை
  தங்கள் பதிவின் வாயிலாக
  உணரமுடிகிறது

  காலமே தங்கள் துயரைப் படிப்படியாய்
  குறைக்க இயலும்

  அவரின் ஆன்மா சாந்தி கொள்ள
  நாங்களும் பிரார்த்திக்கிறோம்

  பதிலளிநீக்கு
 28. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
  பெருமை உடைத்திவ் வுலகு
  உங்கள் சிற்றப்பாவின் ஆன்மா அமைதி பெறட்டும்

  பதிலளிநீக்கு
 29. சித்தப்பா கொண்டாடப்பட வேண்டியவர். இறந்தும் வாழ்கிறார்....

  பதிலளிநீக்கு
 30. சித்தப்பா கொண்டாடப்பட வேண்டியவர். இறந்தும் வாழ்கிறார்....

  பதிலளிநீக்கு
 31. இழப்புகள் கலங்கதான் வைக்கிறது. மீண்டு வாருங்கள்

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ள ஜெயக்குமார்...
  உங்களின் பதிவின் வழியாக அண்ணன் திருவேங்கடம் அவர்கள் குறித்து சில சொற்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

  படிப்பில் உயர்ந்தவர். பண்பானவர். அன்பானவர். எதையும் எளிமையாகவும் அமைதியாகவும் அணுகிப் பழகியவர். ஒவ்வொரு கரந்தை வந்தாலும் என் வீட்டிற்கு வராமல் சென்றதில்லை. என்னங்க அன்பு என்று சகோதரனை மரியாதையுடன் கடைசிவரை அழைத்தவர். அவரின் துணைவியார் எனக்கு மாமா மகள் என்றாலும் நான் அதிகம் நேசித்தது அண்ணனைத்தான். அவரின் உடலருகே நின்றபோது யாரும் வேண்டாம் என் அண்ணனே போதும் என்றாயே அன்பு கூப்பிடு உன் அண்ணனை என்று அழுதார்கள். எப்படிக் கூப்பிடுவது? இனி அண்ணன் என்றால் சொல்லுங்க அன்பு என்கிற சொல்லை எங்கே கேட்கப்போகிறேன். எனக்கு எத்தனையோ செய்திருக்கிறார் என்னுடைய நெருங்கிய உறவு என்பதினும் எனக்கும் அவரே பலவிடங்களில் வழிகாட்டியாக நின்றிருக்கிறார். நிறைய எழுதவேண்டும். எத்தனை எழுதினாலும் என்ன செய்ய.. அவரின் இழப்பு நம் இருவருக்கும் ஈடு செய்யவிலாததுதான். அப்பாவை ஆறுதல் படுத்துங்கள். கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 33. இரண்டாவது வரியில் ஒவ்வொரு முறையும்..

  பதிலளிநீக்கு
 34. இறந்தும் வாழ்கிறார் உங்கள் உள்ளத்தில் மன அமைதி பெறுக நண்பரே!

  பதிலளிநீக்கு
 35. ஆழ்ந்த அனுதாபங்கள்

  பதிலளிநீக்கு
 36. எதிர்பாராத திடீர் மறைவு, மிகவும் கஸ்டமாக இருக்கும், அவரின் ஆத்மா சாந்தி பெறமும், அவரின் குடும்பமும் உறவுகளும் .. அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 37. தாங்கள் எவ்வளவு மதிப்பும் அன்பும் தங்கள் சிற்றப்பாவின்மீது வைத்திருந்தீர்கள் என்பதை உணர முடிகிறது.அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 38. நல்லோர்மறைவதில்லை, நம் மனதில் என்றும்ம்வாழ்வதால்.

  பதிலளிநீக்கு
 39. நமக்கு வேண்டியவர்கள் மறைந்தால் வருத்தம் நிச்சயம் ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 40. உற்ற‌ தோழரை இழந்திருக்கும் உங்கள் மனத்துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். என் ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு
 41. சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் .அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 42. புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
  இரந்துகோள் தக்கது உடைத்து-

  என்றார் வள்ளுவர். கண்ணீரில் படைத்த தங்கள் கைவண்ணம் அதை மெய்ப்பித்து விட்டது. அன்னார் அமைதியுடன் உறங்குவார் என்பது திண்ணம்.- இராய செல்லப்பா (இப்போது) சென்னை.

  பதிலளிநீக்கு
 43. புரந்தார் கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
  இரந்துகோள் தக்கது உடைத்து-

  என்றார் வள்ளுவர். கண்ணீரில் படைத்த தங்கள் கைவண்ணம் அதை மெய்ப்பித்து விட்டது. அன்னார் அமைதியுடன் உறங்குவார் என்பது திண்ணம்.- இராய செல்லப்பா (இப்போது) சென்னை.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் !

  சித்தப்பா ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம் அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  பதிலளிநீக்கு
 45. மீளா துயர் தந்துவிட்டுச்சென்ற இழப்பு!ஆழ்ந்த அனுதாபங்கள்!

  பதிலளிநீக்கு
 46. ஆழ்ந்த அனுதாபங்கள் ..இத்துன்ப நேரத்தில் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இறைவன் துணையிருக்க பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 47. நண்பரே எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியும் சித்தப்பாக்கள் இருக்கின்றார்களா என்று வியப்பாக இருக்கிறது. இப்படி இருக்கும் வாழும் மகாத்மாக்களை நாங்கள் வாழும் போதே அறியாமல் போய்விட்டோமே. நல்லவர்களை இனியாவது எங்களுக்கும் வாழும் போதே அடையாளம் காட்டுங்கள். நாங்கள் நட்பு பாராட்டி மகிழ்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 48. ஆழ்ந்த இரங்கல்கள்..  ஆழ்ந்த இரங்கல்...........

  பதிலளிநீக்கு
 49. ஆழ்ந்த இரங்கல்கள்:(

  பதிலளிநீக்கு
 50. ஆழ்ந்த இரங்கல்கள்.

  உங்களுக்குத் திடம் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு