கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.
கரந்தைத் தமிழ்ச் சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்
என்று
முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழ் வேள்வி நடத்திய,
புண்ணிய பூமியில் இருந்து, புதிதாய் ஒரு வித்து, மெல்ல மெல்ல வேர் விட்டு, முளைத்து,
தழைத்து, கிளைத்து மெலெழும்பியிருக்கிறது.
ஏடெடுத்து எழுதத் தொடங்கியிருக்கிறது.
வாழ்த்தி வரவேற்க வேண்டியது, என் கடமையல்லவா?
என் உரிமையல்லவா?
கே.எஸ்.வேலு
எனது நண்பர்
எனது தம்பியின் வகுப்புத் தோழர்
கரந்தையில் பிறந்தவர், கரந்தையில்
படித்தவர்.
கோவையில் குடியேறியவர்.
இயந்திரத்தோடு இயந்திரமாய் வாழ்ந்து வருபவர்.
இடையில் எட்டாண்டுகள், இலங்கையில், கொழும்புவில்
வாழ்வை நகர்த்தியவர்.
இயந்திரமே வாழ்வாகிப் போன நிலையிலும், எழுத்தின்
வாசமும், வாசிப்பின் மோகமும், இவரது கையில் எழுதுகோலைத் திணித்திருக்கிறது.
எழுதுகோலையே ஊன்று கோலாய் பற்றி, விரைவாய் நடக்கவும்
பழகி விடடார்.
நண்பர்கள் மட்டுமல்ல, மனைவியும், இவரது மாமனாரும்
கூட இவரது எழுத்தில் மயங்கித்தான் போய்விட்டார்கள்.
இவரது மாமனார், ஓய்வு பெற்ற அரசு நூலகர். பழகுதற்கு
இனியவர். சிறந்த பண்பாளர்.
எனது தந்தையின் உற்ற நண்பர்.
வாழ்வு முழுவதும், நூல்களுடனே கழித்த, இவர்தம்
மாமனாருக்குத் தன் மாப்பிள்ளை, எழுத்தில் அதிகமாய் ஆர்வம் கொண்டிருப்பது கண்டு நெகிழ்ந்து
போய், இவரின் முதல் வாசகராகவும் மாறித்தான் போனார்.
மாமனார் மெச்சும் மருமகன்.
சிறு கதைகள், வாழ்வியல் அனுபவங்கள் என ஏராளமாய்
எழுதி வைத்திருக்கிறார்.
இரவும் பகலும் உரசிக் கொள்ளும், ஒரு பொன் மாலைப்
பொழுதில், நண்பர் வேலுவைச் சந்தித்தேன்.
வேலுவை வாசித்தேன்.
படிக்கப் படிக்கத் திகட்டாத நடை.
எளிமையான வார்த்தைகளால், வெகு இயல்பாய், வெகு
வேகமாய், நம்மையும், எழுத்தின் போக்கிலேயே, உடன் இழுத்துச் செல்லும், லாவகம் மிகு வார்த்தைகளுக்குச்
சொந்தக்காரர்.
எனது நண்பரையும், நண்பரின் வலைப் பூவினையும்,
தங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்வும், பெருமிதமும் அடைகின்றேன்.
கே.எஸ்.வேலு
இனி, இவர் நமது நண்பர்.
வாருங்கள், நண்பர்களே,
கே.எஸ்.வேலுவின்
வலையில் நுழைந்து
எழுத்தில் பயணித்து
மனதார வாழ்த்துவோம்
வாருங்கள், வாருங்கள்.
நண்பருக்கு வாழ்த்துகள். மென்மேலும் உயர்த்தும்.
பதிலளிநீக்கு//என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.//
கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். எனினும் மகாகவி என்பது பாரதியாருக்கு மட்டுமே பொருந்தும்.
நானும் இவர் தளத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குகே.எஸ்.வேலு அவர்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநண்பர் வேலு எழுத்தில் முத்திரை பதித்து கரந்தை மண்ணுக்கு பெருமை சேரக்க வேண்டும். (ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் ப்ளாக் போல)
பதிலளிநீக்குவாழ்க
-
நண்பருக்கு வாழ்த்துக்கள் ,தொடர்கிறேன்
பதிலளிநீக்குகே எஸ் வி தளம் pslv ராக்கெட் போல் வேகமெடுக்கும் என்று நம்புகிறேன் :)
பதிலளிநீக்குதங்கள் நண்பரின் வலைப் பூவினை அறிமுகம் செய்து வைப்பதில் நமக்கும் மகிழ்ச்சி தானே!
பதிலளிநீக்குதங்கள் நண்பரின் வலைப் பூவினை google+இல் 'உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்' குழுவிலும் facebookஇல் 'தமிழ் பதிவர்களின் நண்பன்' குழுவிலும் இணைத்துப் புதிய பதிவுகளைப் பகிரச் சொல்லுங்கள்.
விரைவில் எனது தளத்திலும் தங்கள் நண்பரின் வலைப் பூவினை அறிமுகம் செய்துவைக்கின்றேன்.
தங்கள் நண்பர் வலை உலகில் வெற்றிநடை போட வாழ்த்துகள்.
கவிதையில் வாழ்த்தியது அருமை... நண்பருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குநல்லவர்களையும் வல்லவர்களையும் வளர்த்துவிடுதல் தங்கள் பணிதானே நல்லது சென்று பார்க்கிறேன் அவர் பக்கம் வாழ்க நலம் !
தம +1
புதிய தளத்தின் அறிமுகம்.. இனிமை..
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
ஊருக்கு உழைத்திடல் யோகம் ;
பதிலளிநீக்குஉள்ளம் உற்றிடுமாறு வறுத்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும்போதும் உள்ளம் பொங்குதல்
இல்லா அமைதி மெய்ஞ்ஞாம் .
கரந்தை மண் வளமானதுதான்.
வாழ்த்துக்கள் நண்பரே.
நண்பருக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅழகான அறிமுகம்.. நண்பருக்கு வாழ்த்துகள்....நாங்களும் தொடர்கிறோம்....
பதிலளிநீக்குநல்ல அறிமுகம்.சென்ரு பார்க்கிறேன்
பதிலளிநீக்குநண்பருக்கு வழ்த்துக்கள் இனி அவர் பக்கமும் போய்ப்பார்க்கின்றேன் . வேலுவின் அறிமுக ஊக்கிவிப்புக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குgood post
பதிலளிநீக்குஅழகு அறிமுகம்...
பதிலளிநீக்குஉங்களால் அறிமுகப்படுத்தப்படும் நபர்கள் உங்களைப் போலவே பரிணமிப்பர் என்பது எங்களுக்குத் தெரியும். வாழ்த்துகள் அவருக்கு, நன்றி உங்களுக்கு பகிர்ந்ததற்கு.
பதிலளிநீக்குநண்பருக்கு வாழ்த்துகள்!! எழுதட்டும். வெல்லட்டும்
பதிலளிநீக்குஅறிமுகத்துக்கு நன்றி!!
பதிலளிநீக்குவேலுவின் தளத்ட்க்ஹுக்கும் சென்று வந்தேன்
பதிலளிநீக்குபுதியதொரு தள அறிமுகத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதிய தளத்தின் அறிமுகம்.. வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குhttps://kovaikkothai.wordpress.com/