04 ஜூன் 2017

காதலின் பொன் வீதியில் …..


     அந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.

என் சாமிக்கு பிலோமினா எழுதியது,

     நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.


     அக்குறும்பா இருக்கே. எவங்களையோ ராணி மாதிரி வச்சிருந்தீங்க. ஒரு கோபம் இல்லை, ஒரு சண்டை இல்லை.

     அவங்க எதிர்பார்த்திருக்க முடியாத வாழ்வு குடுத்தீங்க.

      நீங்க சொல்றதையும், இந்த லெட்டரையும் வச்சு பார்த்தா, சந்தோஷமா, நிறைவா இருந்தாங்கன்னுதான் தோணுது. பின்ன எதுக்கு போனாங்க?

     சில கேள்விகளுக்குப் பதிலு இல்ல முத்து. உறவுகளையும், கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம்.

      எல்லாரும் விளையாடுறது ஒரே விளையாட்டுதான். அந்த விளையாட்டுக்கான ரூலு, அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கோம்.

      உன் விளையாட்டு எனக்குப் பிடிக்காது. என் விளையாட்டு உனக்குப் புரியாது.

     நம்மபோட்டு வச்ச எல்லைக் கோட்டைத் தாண்டி, மத்தவங்க விளையாடும்போது, நமக்குப் பிடிக்கிறதில்லை… செலப்போ, நமக்கே நம்ம போட்டுக்கிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது.

     வௌங்காத விளையாட்டு ….  வுடு… கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து….. அறிஞ்சும் அறியாத புள்ள நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன்.

      வெந்நீர் சுட வைத்துக் கொண்டிருந்த முத்துவுக்கோ, இப்போதுதான் வாழ்வின் குழப்பங்கள் மெல்லத் தெளிவது போல் இருந்தது.

      முத்துவிற்கு மட்டுமல்ல, படிக்கப் படிக்க நமக்கும், வாழ்வின் குழப்பங்கள் மெல்ல மெல்லத் தெளிகின்றன, வாழ்வின் விளங்காப் பொருள் மெல்ல மெல்ல புரியத் தொடங்குகிறது.

      அடுத்த கள்ளிப் பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற
ஃபைலைக் கண்டவுடன், சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது….. மெல்ல ஃபைலைத் திறந்தார்.

     முதல் காகிதமே, ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்ற அலுவலக மெமோ.

      நிறுவனத்தின் சார்பில், சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏற்பட்ட, பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு, ஒழுங்கு நடவடிக்கை.

      தன்மேல் விசாரனை நடந்த ஆறு மாத காலம், தன் மனதில் பாறாங்கல்லாய் விழுந்த மரண வேதனை.

      சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்… எல்லோரம் தன்னைப் பார்த்து, கைக் கொட்டி சிரிப்பது போல் குமைந்து, தலை கவிழ்ந்து ஊர்ந்த நாட்கள்.

      மெமோவை மீண்டும் கையிலேடுத்தார். இரண்டாய் கிழித்தார், நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது நுணுங்கியது.

      வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து, வாய் குவித்து, வேகமாய் ஊதினார்.

       ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத்துணுக்குகள் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன.

        அவற்றை உதறித் தள்ளினார்.

        படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

       எழுந்து போய், பனியன் நனைய, மடமடவென்று தண்ணீரை வாயில், சரித்துக் கொண்டு, மீண்டும் காகித அடுக்கல்கள் மத்தியில் அமர்ந்தார்.

        இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல், நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

        கூளம்

        ஒவ்வொரு காகிதத்தைச் சுற்றியும் பின்னிப் பினைந்து செல்லும் நினைவுப் பின்னல்கள், நம்மையும், நம் வாழ்வின், தவிர்க்க இயலா துன்ப நினைவுகளின் சுழலுக்குள் மூழ்கி மூச்சுத் திணற வைக்கின்றன.

        அந்த அறையில் நுழைந்த போதே, அவன் விரல்கள் மேல்ல நடுங்கின. அந்த கேபினை ஒட்டியபடி ஸ்டெனோ வரலட்சுமி டைப்ரைட்டர் சகிதம், அந்நாளில் அமர்ந்திருந்த கோலம், குருவினுள்ளே விஸ்வரூபம் எடுத்தது.

      
வரா …… வரா…. என்று குருவின் நாடி நரம்பெல்லாம் ஒலித்த அந்த பெயர்……. அவன் வாழ்க்கைக்குள் வராமலேயே அல்லவா போய்விட்டது?

        எனக்கு மட்டும் போகனும்னு ஆசையா குரு? குடும்பத்தோடு போக அப்பா ஏற்பாடு பன்னிட்டாங்க. என் ராஜா இல்ல ….. பத்தே நாள் …. ஓடி வந்திடுவேன்….. சரியா?

       அதுவரைக்கும் நான் என்ன பன்ன?

        இரு

       வரா தன் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தாள். அவள் மேஜை பக்கலில் இருந்த மரத் தடப்பில் ஒட்டினாள். ஒட்டப்பட்ட பொட்டினை சுற்றி, நீலப் பேனாவால் அழுத்தமாய் வட்டம் இட்டாள்.

      குரு, இந்த பத்து நாளும் இந்த ஸ்டிக்கர்தான் உன் வரா….பாத்துக்கிட்டே இரு.

      அடுத்த பத்து நாட்களும், அந்தப் பொட்டில் குரு புதைந்து போனான்.

    யாருமற்ற ஒரு பின் மாலையில், அந்தப் பொட்டை பாதுகாக்க வேண்டி, அதன் மேற்புறம் விநாயகர் படத்தை ஒட்டினான்.

      குரு நினைவின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். மேல்ல அந்த வாழ்த்து அட்டையை, மேல் நோக்கி வளைத்து, ஸ்டிக்கர் பொட்டைத் தேடினான்.

      வராவின் பொட்டு, இன்னமும் அங்கே பத்திரமாய் இருந்தது. அதன் சின்ன வெல்வெட் பரப்பு சற்று மங்கியும், சுருக்கம் கண்டும் இருந்தது.

      மெல்ல விரலால் அதைத் தொட்டான்.

      அந்தத் தொடுகைக்காக மட்டுமே, இதுநாள் வரை காத்திருந்தது போல், அந்தப் பொட்டு உதிர்ந்தது.

       குருவின் வயிற்றிலிருந்து அலையலையாய் விம்மி எழுந்த ஒரு கேவல் வெடிக்க அழுதான். அன்றும் இன்றும் சட்சியாய் மட்டுமே இருந்த, அந்த அறையின் சுவர்களில், அவன் விசும்பல் மோதி வெறுமையில் மெல்லக் கரைந்தபடி இருந்தது.

        படிக்கப் படிக்க மனம், எழுத்தில், எழுத்தின் நடையில், வாசிப்போரை, எழுத்துக்குள் இழுத்து கரைந்து போகத்தான் செய்கிறது.

       படித்து முடித்த பின்னும், பல நிமிடம் நினைவற்று, சொல்லற்று, வெறுமையில் அமர்ந்திருந்தேன்.

        சராசரி வாசகனுக்கான எழுத்துக்களே அல்ல, இவரது எழுத்துக்கள். அதையும் தாண்டி, மேலான வாசகருக்கானது.

        இவர் தன் ஒவ்வொரு சிறுகதையிலும், சொன்னதை விடவும், சொல்லாமல் புரிய வைத்தவை, உணர வைத்தவை ஏராளம், ஏராளம்.

        இருபத்து இரண்டு சிறு கதைகள்.

        சொல்லப் போனால், இவைகள் கதைகளே அல்ல, வாழ்வியல் யதார்த்தங்கள்.

         வாழ்வியல் யதார்த்தங்கள் என்பதாலோ என்னவோ, இவரது பெரும்பாலான கதைகளில், ஒரு சோகம் இழையோடுகிறது.

பொன் வீதி

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      வந்தே மாதரம்.

      இப்படியும் இவருக்கு ஒரு பெயருண்டு.

      எட்டு வயதில் மேடையேறி, பேசப் போனவர், மேடை ஏறியவுடன், ஏற்பட்ட பயத்தில், பேச வேண்டியதை மறந்து, வந்தே மாதரம், வந்தே மாதரம் என, கை தூக்கி வீரமாய், முழங்கி விட்டு, மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.

      அன்று முதல் சில காலம், இவரது பெயரே வந்தே மாதரம் என்று மாறித்தான் போனது.

     அன்று மேடையை விட்டு ஓடியவர், இன்று மேடையிலேயே குடியிருக்கிறார்.

      பல்கலைக் கழகங்கள், வங்கிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும், மேடையேறி, மேலாண்மை, ஆளுமைப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

       மோகன்

       ஒரு முறை, ஒரு கவியரங்கில், இரு மோகன்கள்.

       கவியரங்கிற்குத் தலைமையேற்ற, தமிழ்ப் பேராசிரியர், இவரது முன்னெழுத்தை, பெயருக்குப் பின்னால் இணைத்து, மோகன்ஜி என அழைக்க, அன்று முதல் இவர் மோகன்ஜி ஆகவே மாறிப்போனார்.

மோகன்ஜி

     சிறு வயது முதலே, கவிதை, கதை, நாடகத்தோடு வளர்ந்தவர்.

     தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.

     சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர்.

     கவிதையே காதலாய்…. கனவே வாழ்க்கையாய் …. வானவில் மேல் கூடு கட்டி, கூவித் திரியும் குயில் இவர்.வானவில் மனிதன்
மோகன்ஜி

     காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் என்று எப்பொழுதோ கேட்டு, ரசித்த இனிமையானப் பாடல், மீண்டும் காற்றில் மிதந்து வந்து செவிகளில் நுழைவதைப் போன்ற ஒரு உணர்வு.


பொன் வீதி

வாருங்கள்
பொன் வீதியில்
பயணித்துப் பார்ப்போம்.

…………………………………………………………………………………………………..


வெளியீடு
அக்ஷரா பிரசுரம்,
G 1702, அபர்ணா சரோவர்,
நல்லகண்டலா,
ஹைதராபாத் -500 107
விலை ரூ.125
      

35 கருத்துகள்:

 1. அருமை நண்பரே தங்களுக்கே உரிய நடையில் விமர்சனம் நூல் வாங்கும் ஆவலை தூண்டி விட்டது.

  வாழ்த்துகள் திரு. மோகன்ஜி
  - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கில்லர்ஜி! கரந்தையாரின் விமரிசனம் மனம் தொட்டது. நண்பருக்கு என் அன்பு.

   நீக்கு
  2. நீண்ட இடைவெளிக்குப்பிறகு கணினி வழி த.ம.4

   நீக்கு
 2. உங்கள் பாணியில் விமர்சனம் அருமை. கணினிக்கு வரும்போதுதான் தம வாக்களிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. ரசனையான விமர்சனம்...

  திரு. மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவரகளுக்கு, தரு.மோகன்ஜி அவர்களின் புத்தகத்தினை தாங்கள் அருமையாக விமர்சனம் செய்தது மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் கரந்தை சரவணன். நேர்த்தியான விமரிசனம்...

   நீக்கு
 5. நண்பரே உங்களது அருமையான நடையில் விமர்சனம் அருமை...நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.மோகன் ஜிக்கு வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான விமரிசனம்.
  வாழ்த்துகள் கரந்தையாரே.

  பதிலளிநீக்கு
 7. அருமையான விமரிசனம் ..மேற்கோள்காட்டப்பட்ட வரிகள் புத்தகத்தை படிக்கும் ஆவலை தூண்டுகின்றன .தம வாக்களித்தாயிற்று

  பதிலளிநீக்கு
 8. திரு மோகன் ஜி - அவர்களது தளத்தில் நுழைந்த பின் நான் அடைந்த அவஸ்தை..
  என்ன என்று சொல்வது?..

  நிச்சயம் சொல்வேன்.. நாளை எனது தளத்தில்!..

  பதிலளிநீக்கு
 9. நூலில் உள்ளகதைகளை பதிவில் வந்திருந்தால் படித்திருப்பேன் விமரிசனம் மூலம் படித்த கதையா என்னும் நினைவு வரவில்லை. மோகன் ஜீ யின் எழுத்துகள் அலாதி. பெரும்பாலானவை நம் யூகத்துக்கு விடப்பட்டிருக்கும் கொஞ்சம் அப்ஸ்ட்ராக்டாக இருக்கும் சிறுகதை எழுதுவதில் தனிபாணி அவர் என்னைக் காண வரும்போது இந்நூலை எடுத்துவருவார் என்று நம்புகிறேன் விமரிசனம் உங்கள் பாணியில் அருமை

  பதிலளிநீக்கு
 10. அருமையான விமர்சனம்.

  //காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்//
  இந்த தலைப்பை படித்தவுடன் என் உதடுகள் தன்னிச்சையாக முணு முணுத்தது. ஒவ்வொருவர் விமர்சனங்களை படிக்கும் போதும் இந்த முணு முணுப்பு தொடர்கிறது.
  நீங்கள் குறிப்பிட்டது சிறப்பு.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  மோகன்ஜி அவர்களின் பெயர் காரணம் அறிந்து கொண்டேன்.
  மோகன்ஜி க்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அற்புதமாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
  கவித்துவமான எழுத்து
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. உங்களால் பொன்வீதி படித்துவிட்டோம். நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். பாராட்டுகள் நூலாசிரியருக்கு. நன்றி, பகிர்ந்த உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 13. ஆகா . நம்ம மோகன் அண்ணா. அதுவும் தங்கள் வாயால் வாழ்த்து பெறும் போது எனக்கே என்னை வாழ்த்துவது போல எண்ணம்.
  புத்தகம் எங்கு கிடைக்கும் ?

  பதிலளிநீக்கு
 14. 7 வது வோட் போட்டு... டமில்மணத்தில் ஏற்றி விட்டேன்.

  மோகன் ஜி பற்றி பல விசயங்கள் இங்கு தெரிந்து கொண்டேன். அவரது பொன்வீதி.... புளொக் எல்லாம் உலா வருவது மிக்க சந்தோசம்.. இப்படி யாருக்கும் அதிக ரிவீ ஒரு புத்தகத்துக்கு இதுவரை எழுதப்படவில்லை.

  பதிலளிநீக்கு
 15. TM 8 படிக்க ஆர்வத்தை தூண்டும் அழகிய நடையில் ஒரு விமர்சனம் குட்

  பதிலளிநீக்கு
 16. //சராசரி வாசகனுக்கான எழுத்துக்களே அல்ல, இவரது எழுத்துக்கள். அதையும் தாண்டி, மேலான வாசகருக்கானது.//

  உண்மை!

  பதிலளிநீக்கு
 17. அருமையான சிறுகதை நூல் அறிமுகம்.
  அத்தோடு ஆக்கியோனின் அருமை பெருமைகளை அள்ளித் தந்த பாங்கு சிறப்பு. வாழ்த்துகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 18. தங்கள் கைவண்ணத்தில்
  நல்ல ஒரு நூலை
  அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 19. படிப்பவரை துன்பப் படுத்தாமல் ,துன்பியல் கதைகளை எழுதவும் தனித் திறமை வேண்டும் ,மோகன்ஜி அவர்களுக்கு அது கைவரப் பெற்றுள்ளது :)

  பதிலளிநீக்கு
 20. தரமான எழுத்து குறித்த தரமான விமர்சனம்.

  பாராட்டுகள் ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 21. அருமை. நான் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் என் விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 22. அருமையான நூல் அறிமுகம். மோகன் ஜீக்கு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் கரந்தை மைந்தரே !

  தங்கள் நடையில் ஒரு விமர்சனம் சும்மா தகதன்னு இருக்கு !

  அவர் சிறுகதையை விடவும் நல்லா இருக்கும் உங்கள் எழுத்தில் ஈர்க்கப்படுகிறோம் நன்றி !

  தங்கள் அறிமுகத்தால் மோகன்ஜி இன் புகழ் பரவட்டும் !

  தம +1

  பதிலளிநீக்கு
 24. அறிமுகம் செய்யப்பட்ட பகுதிகள் வெகு நேர்த்தி ...
  வாழ்த்துகள் அய்யா

  பதிலளிநீக்கு
 25. அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. அறிமுகத்துக்கு நன்றி!! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. நன்று வாழ்த்துகள் சகோதரரே
  தமிழ் மணம் 11
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு