தன் பெண்டு தன் பிள்ளை
சோறு வீடு சம்பாத்யம்
இவையுண்டு தானுண்டு
என
வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.
சுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள்
பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.
இவர் ஒரு இராணுவ வீரர்
இந்த இராணுவ வீரருக்குள் இருப்பதோ, ஒரு பொறியாளர்
இந்தப் பொறியாளருக்குள் இருப்பதோ, ஒரு எழுத்தாளர்
இந்த எழுத்தாளருக்குள் இருப்பதோ, ஒரு தமிழறிஞர்.
இவர் திருவருட்பாவையும்,
திருமந்திரத்தையும்
திருவாசகத்தையும்
தேவாரத் திருமுறைகளையும், முற்றாய் கற்றுத்
தேர்ந்தவர்.
உள்ளம்
பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காள மணிவிளக்கே
என்னும்
கொள்கையினை உறுதியாய் பற்றி நிற்பவர்.
மனிதனே தெய்வம்
தெய்வத்தைப் புற வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை
என்னும் கருத்துடையவர்.
இவை யாவற்றையும் விட, தான் பிறந்த மண்ணைத் தன்
உயிரினும் மேலாய் நேசிப்பவர், போற்றுபவர்.
இப்பூமிப் பந்தின் தென் கோடிக்குச்
செல்லும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தபோது, ஓட்டமாய் ஓடி, தன் ஊருக்குச் சென்று, தான்
பிறந்த மண்ணை, ஒரு பிடி அள்ளி, எடுத்துச் சென்று, தென் கோடியில் தூவியவர்.
தென் கோடியில், பனிப் பள்ளத்தாக்குகளுக்கும்
அடியில், அரை கிலோ மீட்டருக்கும் அதிகமாய் தோண்டி, சூரிய ஒளியினையேப் பார்த்திராதப்,
பாறைகளை வெட்டி எடுத்து வந்த, நவீனச் செங்குட்டுவன் இவர்.
தான் பிறந்த ஊரில், தன் சொந்த நிலத்தில்,
பெருந்தூண் ஒன்றினை எழுப்பி, அதன் உச்சியில், அண்டார்டிகாப் பாறையினைப் படுக்க வைத்து,
அகத் தூண்டுதல் பூங்காவை அமைத்து, நம்மைத் தலை நிமிர்த்திப் பார்க்க வைத்தவர்.
இன்று தன் சொந்தப் பணத்தில், பல
இலட்சங்களை வாரி இறைத்து, ஒரு அறிவுத் திருக்கோயிலை எழுப்பி, தான் பிறந்த மண்ணுக்குக்
காணிக்கையாய் அளித்திருக்கிறார்.
இவர் இரண்டு இந்தியப் போர்களில் பங்கு பெற்று,
துப்பாக்கிக் குண்டினைப் பரிசாய் பெற்றவர். இதற்காக விழுப்புண் விருதும் பெற்றவர்.
இதுமட்டுமல்ல,
குடியரசுத் தலைவரின்
வசிஷ்ட சேவா விருதும்
பெற்றவர்
கர்னல் பா.கணேசன்
.---
கடந்த 17.5.2017 புதன் கிழமை காலை, நண்பரும்,
கரந்தைக் கலைக் கல்லூரியின் ஆய்வக உதவியாளருமாகிய திரு கா.பால்ராஜ் அவர்களும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஓவிய
ஆசிரியருமான திரு சு.கோவிந்தராஜ் அவர்களும்,
நானும், தஞ்சையில் இருந்து மகிழ்வுந்தில் புறப்பட்டு, பாபநாசம், சுந்தரபெருமாள் கோயில்,
வலங்கைமான், நன்னிலம் வழியாக, சன்னா நல்லூரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதோ சன்னா நல்லூர்
சாலையின் இருமருங்கிலும் பதாகைகள்
வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அகத் தூண்டுதல் பூங்கா
மகிழ்வுந்தில் இருந்து இறங்கி, பூங்காவிற்குள்
நுழைகின்றோம்.
அண்டார்டிகா கல், தன் நெஞ்சம் நிமிர்த்தி எங்களை
வரவேற்கிறது.
விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அமைதியாய் அமர்ந்தோம்.
முனைவர்
அழகர் ராமானுஜம் அவர்களின் அற்புத உரையினைக் கேட்கும் வாய்ப்புக்
கிடைத்தது.
கர்னல்
கணேசன் அவர்களை, அவரது மனைவி கணவராய் அறிவார், அவரது பிள்ளைகள், இவரைத் தந்தையாய் அறிவர்,
உறவினர்கள் இவரைத் தங்களின் உறவாய் அறிவர்.
ஆனால் உண்மையான கர்னல் கணேசன் அவர்களை, உங்களுக்கு
அறிமுகப் படுத்த விரும்புகிறேன் என்று கூறித், தன் உரையினைத்
தொடங்கினார்.
அரங்கினுள் குழுமியிருந்தோர்,
வியப்புடன் நிமிர்ந்து அமர்ந்து, காதுகளைத் தீட்டி, கூர்மையாய் கவனிக்கத் தொடங்கினர்.
கர்னல் கணேசன் அவர்களை,
Nationalist
Rationalist
Humanist
Socialist
என்று
பெருமை பொங்க அறிமுகப் படுத்தி, கர்னல் கணேசன் அவர்களின், பன்முகத் தன்மையினை, ஒவ்வொன்றாய்,
பாங்குற, அழகுற, எழிலுற, இனிமையான வார்த்தைகளால் விவரிக்க விவரிக்க, அனைவரும் நெகிழ்ந்துதான்
போனார்கள்.
அறிவுத் திருக்கோயிலினுள் திரும்பும் திசையெல்லாம்
நூல்கள், நூல்கள்.
தான் பிறந்த மண்ணிற்காக, தான் தவழ்ந்த மண்ணிற்காக,
தன்னை வளர்த்த மண்ணிற்காக, தன் சொந்த நிலங்களை மட்டுமல்ல, தன் உழைப்பால் ஈட்டிய செல்வத்தையும்,
தன் வாழ்நாள் முழுதும் பார்த்துப் பார்த்துச் சேகரித்த நூல்கள் முழுவதையும் பெரு வள்ளலாய்
வாரி வழங்கி இருக்கிறார்.
சன்னா
நல்லூர்
தான் பிறந்த மண்ணை
மறவாது போற்றும்,
பாசமிகு மனிதரை
மாமனிதரை
கர்னல்
கணேசன் அவர்களை
நாமும்
போற்றுவோம்,
வாழ்த்துவோம்.
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குதம +1
இவரைப்பற்றி பலமுறை தங்களால் அறிந்தேன் இதோ மீண்டும் ஒருமுறை பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் திரு. கர்ணல் கணேசன் ஐயா அவர்களை வணங்குகிறேன்.
பதிலளிநீக்குத.ம.+1
கர்னல் கணேசன் அவர்களின் மகத்தான சேவைக்கு வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்..
பதிலளிநீக்குமுனைவர் அழகர் ராமானுஜம் அவர்கள் எங்களுக்கு ஆழியார் அறிவுதிருக்கோவிலில் பாடம் எடுத்து இருக்கிறார். ஆசிரியபயிற்சி எடுத்த போது. அருமையாக பேசுவார். மயிலாடுதுறை மன்றத்திற்கு நிறைய தடவை வந்து இருக்கிறார்.
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.
நல்ல மனிதருக்கு வணக்கங்கள். நன்றிகள்.
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவெளியூர் சென்றுவிட்டமையால் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. தங்களின் பதிவு அந்த ஏக்கத்தை தீர்த்துவிட்டது. ஐயாவின் முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஉண்மையில் தேசப்பற்று மட்டுமில்லாமல் ஊருக்கும் நல்லதாய் செய்தார் என்பதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அவரின் அறிவுத் தொண்டு.
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்களின் மகத்தான சேவை பிரமிக்க வைக்கிறது!
பதிலளிநீக்குஅருமையான சேவையைத் தொடர்ந்து அளிக்கும் கர்னல் கணேசன் அவர்களுக்கும் அறிமுகம் செய்து வரும் உங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
பதிலளிநீக்குHats off to Conl Ganesan
பதிலளிநீக்குgood post
பதிலளிநீக்குமனம் நிறை பாராட்டுகள்
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குசிறந்த மனிதரின் சிறப்பைக் கூறும் பதிவு ஏற்கனவே கர்ணல் கணேசன் பற்றித் தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அவரது வலைப்பூவிலும் சென்று பார்த்தேன் பெருமைப் படுகிறேன் வாழட்டும் அவர் தலைமுறை மகிழட்டும் எம்மண்
பகிர்வுக்கு நன்றிகள்
தம +1
கேனல் கணேசன் அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.... அழகிய திறப்புவிளா.
பதிலளிநீக்குஎப்பவும் பெரிய பதிவாகப் போட்டு விடுகிறீங்கள்.. இரு பகுதிகளாக்கிப் போடலாம் என்பது என் ஒரு சிறு கருத்து.. மற்றும்படி அனைத்தும் அருமை...
கள்ளப்புலனைந்தும் காளா மணி விளக்கே.. எனக்கும் மிகவும் பிடிக்கும்.
ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு மட்டுமே எழுதி வருகின்றேன் சகோதரியாரே.
நீக்குஇதன் காரணமாகத்தான், சற்றே பதிவு நீண்டிடினும், ஒரே பதிவாக பதிவிட்டு வருகின்றேன்.
நன்றி சகோதரியார
ஓ அப்படியெனில் ஓகே. தமிழ்நாடு போய் வந்து அம்மா சொன்னா.. “அதிரா உனக்கொரு விசயம் தெரியுமோ? இந்தியாவில் ஒரு வீட்டுக்கும் கூரை இல்லை “ என... அது இந்த அறிவுத்திருக்கோயிலைப் பார்க்கும்போது நினைவு வந்துது..
நீக்குஇலங்கையில் கூரை இல்லா வீடுகள் இல்லை ஹா ஹா ஹா:).
ஆழியாரில் வேதாத்திரியின் அறிவுத் திருக்கோயில் ஒன்றை அறிந்துள்ளேன்.. இன்னொன்று அறிவுத்திருக்கோயில் இருப்பதையும் தெரிந்து னொண்டேன்.
பதிலளிநீக்குசிந்தனைக்குரிய பதிவு!
பதிலளிநீக்குமரியாதைக்குரிய ஐயா,
வணக்கம்.தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் அறிவை மெருகூட்ட செய்கின்றன.தங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல.
வாழ்த்துகளும் பாராட்டுக்களும்......
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, கர்னல் கணேசன் அவர்களின் பன்முகத்தன்மையையும் தயாள சிந்தனையையும் மிக அழகாக தங்களின் பதிவு எடுத்துரைத்துள்ளது. கர்னல் அவர்களின் தொண்டினை சன்னாநல்லூர் மக்கள் மறக்க மாட்டார்கள். அவருடைய இந்த நல் செயலின் தாக்கம் நம் இளைஞர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். வாழ்க அவர் தொண்டு. அந்த அரிய விழாவில் கலந்து கொள்ள ஆசைப்பட்டும் பணியின் நிர்ப்பந்தம் என்னை முடக்கி விட்டது எனக்கு மிக மிக வருத்தமே.
பதிலளிநீக்குஇது போன்ற மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட நினைவுகளை பதிவு செய்தல் அவசியம். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான முன்னோடி நிகழ்வு
பதிலளிநீக்குவாழ்த்துகள் கர்னல் அவர்களுக்கும்
பதிவு செய்த பதிவருக்கும்
புதுக் கோட்டை வலைப் பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்து இருக்கிறேன் சென்னையில் சில பதிவர்களை சந்திக்கும் முயற்சியில் இவருக்கும் அழைப்பு விடுத்திருந்தேன் பதிவில் கண்ட செய்திகளை உங்கள் பதிவுகளின் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் இந்த பதிவிற்கும் நன்றி ஜெயக்குமார் அவர்களே.போட்டோ ஆல்பம் மற்றும் வீடியோவும் பெறுவதற்கு சன்னாநல்லூர் சென்றுவிட்டு இன்று இப்பொழுதுதான் சென்னை திரும்பினேன்.
பதிலளிநீக்குடாக்டர் அழகர் ஐயா அவர்களின் உரை என்னையே எனக்கு அறிமுகப்படுத்துவதுபோல் இருந்தது என்பதுதான் உண்மை.
மிகவும் அருமையான தகவல்கள் ..பெரும்பாலும் நான் அறியாதவையே .சிறப்பான மனிதரை பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்கு.வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிய முடியாத தகவல்கள் தேடி யாவரும்அறியும் படி பதிவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் ஐயா சேவை தொடரட்டும் தம-08
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் அறிந்திராத ஓர் உயர்ந்த மனிதரை அறிந்துகொள்ள உதவியது உங்கள் பகிர்வு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெயக்குமார்.
பிறந்த மண்ணுக்குஅருமையான சேவையைத் தொடர்ந்து அளிக்கும் கர்னல் கணேசன் அவர்களுக்கும் அறிமுகம் செய்து வரும் உங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.
பதிலளிநீக்குamazon offers Very nice article, a very good read.
பதிலளிநீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குtamil manam - 9
https://kovaikkothai.wordpress.com/
பதிலளிநீக்குவாழ்த்துகள், சிறப்பாக பணியை தொடருங்கள்!!
கர்னல் அவர்களைப் பற்றித் தங்கள் பதிவுகளின் மூலம் நிறைய அறிந்து கொண்டோம் இப்போதும் அவரது சேவையைக் குறித்தும்....வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅன்னாரின் சேவை அளப்பரியது . வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் கர்னல் அவர்களுக்கு. சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குகர்னல் கணேசன் அவர்கள் - அடுத்த
பதிலளிநீக்குதலைமுறைக்கு நல்வழிகாட்டி!
பாராட்டுகள்!