வானோங்கி
நிற்குது பார் தோழா
வாழ்வைப் பணயம் வைத்தோம்
உண்மை
உணர்வாரில்லை தோழா
உழைப்பை மதிப்பாரில்லை
பாவிகள்
வாழுகின்றார் தோழா
பாட்டாளி மாளுகின்றார்
ஆவி
துடிக்குதடா தோழா
ஆத்திரம் பொங்குதடா
பெரும்
பெரும் மாளிகைகளைக் கட்டியும், வானூர்தி செய்தும், கழனி உழுதும், உழைக்கும் தொழிலாளர்
வர்க்கம், அதன் பலனை அனுபவிக்க இயலாமல், மூன்று வேளை உணவிற்கும் வழியின்றி மாளும் அவலத்தைக்
கவிஞரின் வரிகளில் வாசிக்கும் பொழுதே, நமக்கும் ஆத்திரம் பொங்குகிறதல்லவா?
நிலத்தை
உழுத உழவன் பசியால்
நித்தம்
வருந்தி வாடுகிறான்
கொழுத்த
செல்வர் உணவை வீணாய்
குப்பை மீது எறிகிறார்
நாட்டைக்
காக்கும் வீரன் மனைவி
கூழுக் கேங்கி அழுகிறாள்
காட்டிக்
கொடுக்கும் கூட்டம் தினமும்
கறியும் சோறும் திங்குதே
வேதனையின்
வெளிப்பாடாய், நடைமுறை வாழ்க்கையில், நித்தம் நித்தம் நாம் காணும் உண்மை நிகழ்வுகளை,
எளிமையான வரிகளால் எத்துணை வலிமையாய் படம் பிடித்துக் காட்டுகிறார் பாருங்கள்.
வாளினைக்
கையில் எடடா தோழா
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம்
நாளெல்லாம்
உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வழ்வோர் உணர்வதாய் இல்லை
ஆள்வோரும்
செல்வர்க்கே அடிமைகளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணிகின்றார்
தோள்வலி
கொண்ட நற் சுதந்திர வீரா
துணிவுதான் இனி நம் வாழ்விக்கும்.
ஏதோ
இன்றைக்கு எழுதிய பாடல் போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இக்கவிஞர் மறைந்தே, ஆண்டுகள்
23 கடந்துவிட்டன.
இதுமட்டுமல்ல, இன்றைக்கு 58 ஆண்டுகளுக்கு முன்னரே.
நமது இன்றைய நிலையினை அன்றே கண்டு, 1962 லேயே
முழங்கியவர் இவர்.
அஞ்சாமல்
பொய் சொல்லல்
அறமாகிக் போச்சு
அடுத்தவன்
உடைமை மேல்
ஆசைவந் தாச்சுது
பஞ்சமா
பாதகம்
செய்திடும் பேரையும்
பலர்கூடிப்
பாராட்டும்
காலமாய்ப்
போச்சுது
யாராலே?
இது யாராலே?
இது
நம்மாலே, இது நம்மாலே என வேதனையில் புலம்பிடத் தோன்றுகிறதல்லவா?
இவர் 1948 ஆம் ஆண்டில் இருந்து, தொடர்ச்சியாய்,
ஒன்று இரண்டல்ல, முழுதாய் 28 ஆண்டுகள், திரைப் படத்துறையில், பாடலாசிரியராய், உயர்ந்து
நின்று பெரும் புகழ் பெற்றவர்.
இன்று நாம் மெய்மறந்து கேட்கின்ற பல பாடல்களை
இயற்றியவர்.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?
என்ற பாடலைக் கேட்டுக் கேட்டு மயங்கியிருப்பீர்கள்
அல்லவா? இது இவர் பாடல்தான்.
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால்
இதுவும் இவர் பாடல்தான்.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும்
ஏசும்,
வையகம் இதுதானடா?
இதுவும் இவர் பாடல்தான்.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
இதுவும் இவர் பாடல்தான்
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
இதுவும் இவர் பாடல்தான்
உலவும் தென்றல் காற்றினிலே
இதுவும் இவர் பாடல்தான்
வாராய் நீ வாராய்
இதுவும் இவர் பாடலேதான்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.,
பாடல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
தமிழ்த் திரைத் துறையில் உச்சத்தில் இருந்தபோது,
ஒரு நாள் திடீரென, இனி வேண்டாம் சினிமா என, திரை உலகைவிட்டே விலகிப் போய்விட்டார்.
இனி திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுத மாட்டோன்,
எழுதவே மாட்டேன் எனப் பிடிவதமாய் விலகியே போய்விட்டார்.
எத்துணையோ பேர், எவ்வளவோ சமாதானம்
சொல்லிப் பார்த்தார்கள்.
உறுதியாய் மறுத்துவிட்டார்.
நண்பர்களே, இவர் திரைத் துறையில் இருந்து, காத
தூரம் விலகி ஓடியதற்குக் காரணம் என்ன தெரியுமா?
இரண்டு பாடல்கள்.
இரண்டே இரண்டு திரைப்படப் பாடல்கள்.
தேர்த் திருவிழா என்னும் திரைப் படத்தில் இடம்
பெற்ற,
ஏ குட்டி,
என்னா குட்டி
எகிறிப் போகும் கண்ணுக்குட்டி
என்னும்
பாடலைக் கேட்டதும் நொந்துதான் போனார்.
தொடர்ந்து, எங்கள் வீட்டுப் பிள்ளை
என்னும் திரைப் படத்தில் இடம் பெற்றிருந்த,
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
என்ற
இரட்டைப் பொருள் நிறைந்தப் பாடலைக் கேட்டு, மனம் வெந்துதான் போனார்.
இதோ, அவரே கூறுகிறார், தன்னைத் திரைத் துறையில்
இருந்து வெளியேற்றியப் பாடல் இதுதான் என்பதை
அவரே கூறுகிறார், கேளுங்கள்.
விரசமான
வார்த்தைகளால், தரம் தாழ்ந்துபோனப் பாடல்கள், நுழைந்துவிட்ட திரைத் துறையில், எனக்கென்ன
வேலை என வெளியே வந்துவிட்டார்.
கவிஞன் என்பவன் தாய் மாதிரி பத்தியம்
இருக்கனும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது,
எதைக் கொடுக்க வேண்டும் எனப் பொறுப்புடன் எழுத வேண்டும்.
எப்பேர்ப்பட்ட மனிதர் பார்த்தீர்களா.
இவர் கவிஞர் மட்டுமல்ல.
போராளி.
சமுதாயச் சீர்திருத்தம், இந்தி எதிர்ப்பு, தமிழக
எல்லை மீட்சி, புதிய தமிழக அமைப்பு, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பயிற்சி மொழி, தமிழகப்
பெயர் அமைப்பு, தொழிலாளர் போராட்டம் எனப் பலப் போராட்டங் களங்களில் முன் நின்று, சிறை
சென்றவர்.
பள்ளிப்
படிப்பென்றால் இன்னதென்றே அறியாது, அடிமை இந்தியாவில், ஒரு பெட்டிக் கடை ஊழியராய்ச்
சேர்ந்து, மாத ஊதியம், ஆறு ரூபாய்க்காக, நாள்தோறும் பதினெட்டு மணி நேரம் உழைத்தவர்.
இன்பத் தமிழ் எங்கள் மொழி
என முழங்கியவர்
கவி கா.மு.ஷெரிப்.
//வாழ்வைப் பயணம் வைத்தோம்//
பதிலளிநீக்குபயணமா? பணயமா? இதே வரிகளில் பின்னாளில் "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி.." என்றார் கவிஞர்.
//நிலத்தை உழுத உழவன் பசியால் நித்தம் வருந்தி வாடுகிறான் கொழுத்த செல்வர் உணவை வீணாய் குப்பை மீது எறிகிறார்//
பதிலளிநீக்குபசிவர அங்கே மாத்திரைகள்... பட்டினியால் இங்கு யாத்திரைகள் என்றார் பின்னாளில் கவிஞர். நாட்டைக்காக்கும் கூட்டம் வரிகள் மனதைத் தைக்கின்றன.
சிறப்பான மனிதர் பற்றி சிறந்த பதிவு.
பதிலளிநீக்குவாலி கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் துட்டுக்குப் பாட்டு என்று எழுதிக் கொண்டிருந்தபோது இவர் கொள்கைக்காக விலகியது சிறப்பு.
பதிலளிநீக்குநல்ல மனிதர்.... எத்தனை நற்கருத்துள்ள பாடல்கள்.....
பதிலளிநீக்குசிறப்பான மனிதர் பற்றிய சீரிய பகிர்வு. நன்றி.
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
பதிலளிநீக்குபாடலை இயற்றியவரும் இவர் தான்.
சிறந்த பாடல்களை இயற்றுவேன் என்று இயற்றி கொடுத்து இருக்கலாம்.
அஞ்சாமல் பொய் சொல்லல்
அறமாகிக் போச்சு
அடுத்தவன் உடைமை மேல்
ஆசைவந் தாச்சுது
பஞ்சமா பாதகம்
செய்திடும் பேரையும்
பலர்கூடிப் பாராட்டும்
காலமாய்ப் போச்சுது
யாராலே? இது யாராலே?//
அருமை.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகவிஞன் என்பவன் தாய் மாதிரி பத்தியம் இருக்கனும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் எனப் பொறுப்புடன் எழுத வேண்டும்//
நன்றாக சொல்லி இருக்கிறார்..
அன்னைய போல் ஒரு தெய்வம் இல்லை
பதிலளிநீக்குஇது கண்ணதாசன் வரிகள் என்று எண்ணி இருந்தேன். நன்றி நன்பரே
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, நன் மனம் கொண்டவர்கள் அனைத்து துறைகளிலும் மிகச் சிலரே இருக்கின்றனர். அவர்களால் இயங்குகின்ற இவ்வுலகில் சுயநலவாதிகள் பலர் வெட்கமின்றி கடமையை மறந்து வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அதுவே சரியான வாழ்வியல் முறை என்றும் வாதிடுகின்றனர். கவிஞர்ஷெரீஃப் அவர்களை உளப்பூர்வமாக வணங்குகிறேன். பதிவிட்ட விதம் அருமை.
பதிலளிநீக்குகவிஞர். கா.மு.ஷெரீப் அவர்களைப்பற்றி ஓரளவு அறிந்தவன் நான் ஆனால் இது எனக்கு புதிய விடயமே...
பதிலளிநீக்குபணத்துக்காக, பதவி சுகத்துக்காக எழுதும் கவிஞர்கள் மத்தியில் இவர் மாறுபட்டவர்.
இவரது படைப்பில் உருவான திருவிளையாடல் படப்பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே" இதன் உள்ளர்த்தம் கண்டு பிரமித்து இருக்கிறேன் இயல்பான இஸ்லாம் மதத்தின் கருத்தே இப்பாடல்.
எல்லா மதமும் நம்பும் வகையில் எழுதியிருப்பார்.
படத்தின் டைட்டிலில் இவர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் கண்ணதாசன் பெயர் இடப்பட்டது.
நல்ஸவேளை இவர் இறந்து விட்டார் இன்றைய பாடல் வரிகளை கேட்டால் தற்கொலை செய்திருப்பார்.
பதிலளிநீக்குதிரு. கா.மு.ஷெரிப் அவர்களைப் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா....
பதிலளிநீக்குநல்லதொரு கட்டுரை.
நல்ல நினைவூட்டல்
பதிலளிநீக்குகவிஞரின் சிறப்பை அறிந்தேன்...
பதிலளிநீக்குகவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களைப் பற்றிய நினைவூட்டல் அருமை..
பதிலளிநீக்குநல்ல தமிழ் நெஞ்சங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்திருப்பார்..
தான் வாழும் சமூகத்திற்கு நல்ல வழிகாட்டலைத் தராத எந்த படைப்பும் குப்பைகளே. இதை உணர்ந்து பொருளீட்டலுக்காக பாடல்களைத் தராமல் கனவுத் தொழிற்சாலையை விட்டு ஒதுங்கிய திரு கா.மு.ஷெரீப் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
பதிலளிநீக்குநிலத்தை உழுத உழவன் பசியால்
பதிலளிநீக்குநித்தம் வருந்தி வாடுகிறான்
கொழுத்த செல்வர் உணவை வீணாய்
குப்பை மீது எறிகிறார்
நாட்டைக் காக்கும் வீரன் மனைவி
கூழுக் கேங்கி அழுகிறாள்
காட்டிக் கொடுக்கும் கூட்டம் தினமும்
கறியும் சோறும் திங்குதே!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்றவாறு மேற்காணும் பாடல்...
தங்கள் எழுத்து நடை, கவிஞரின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது.
நல்ல கவிஞருக்குச் சாவில்லை; அதுபோல் கவி கா.மு.ஷெரிப் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தங்கள் பதிவில் உள்ள எடுத்துக்காட்டுகள் சாட்சி.
கா.மு.ஷெரிப் பற்றி புதிய கருத்துகளை அறிந்தேன். தங்களின் தேடல் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஇவரைக் குறித்த தகவல்கள் அறிந்திருக்கிறேன். ஆனால் திருவிளையாடல் படத்திலும் இவர் பாடல் இடம் பெற்றதை இன்றே அறிந்தேன். தொகுப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குஇவருடைய திரைஇசைப்படல்களை விரும்பிக் கேட்பதுண்டு.இந்தப் பாடல்கள் எல்லாம் எங்கே போயின? தொடர்ந்து அறிமுகக் கட்டுரைகளைத் தரவேண்டுகிறேன்.
பதிலளிநீக்குமிகநல்ல கவிஞர் பற்றிய நல்ல மனிதரின் பதிவு...அருமை அய்யா...
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு.கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் நெஞ்சை வருட எத்தனையோ இரவுகளை இந்திய எல்லைப்புறத்தில் செலவிட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநினைவூட்டியமைக்கு நன்றி.
அருமையான கவிஞரைப் பற்றிய அருமையான பதிவு. நன்றி அண்ணா. "பாட்டும் நானே பாவமும் நானே" இவரா!!
பதிலளிநீக்குதிரைப்படப்பாடல்கள் சமூகத்தில் பெரும்பங்காற்றுபவை..உணர வேண்டும் பலர்
அவர் தந்த கருத்துள்ள பாடல்களைக் காலம் மறக்காது.
பதிலளிநீக்கு/சிறந்த பாடல்களை இயற்றுவேன் என்று இயற்றி கொடுத்து இருக்கலாம்./
கோமதிம்மாவின் ஆதங்கம் சரியே.
சிறப்பான பகிர்வுக்கு நன்றி.
திரு .கா.மு ஷெரிஃப் இத்தனை பாடல்களிலும் தன் உணர்ச்சிகளைக் கொட்டி இருக்கிறார். எத்தனை நல்ல வரிகள். எத்தனை கேட்டிருக்கிறோம். இந்த அருமை எப்பொழுதும் நிலைத்துப் போற்றும் விதமாகப் பகிர்ந்து இருக்கிறீர்கள் ஜெயக்குமார். மிக மிக நன்றி.
பதிலளிநீக்கு//கவிஞன் என்பவன் தாய் மாதிரி பத்தியம் இருக்கனும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் எனப் பொறுப்புடன் எழுத வேண்டும்// - திரைப்பாடலாசிரியர் ஒவ்வொருவர் வீட்டிலும் சட்டமிட்டு மாட்டப்பட வேண்டிய வரிகள்!
பதிலளிநீக்குஎனக்குத் தெரியாத தகவல்கள்.. உங்கள் போஸ்ட் எப்பவும் வித்தியாசமான தகவல்களாக இருக்கும். அருமை.
பதிலளிநீக்குகவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாத தகவல்கள் சிலவற்றையும் தெரிந்து கொண்டேன். அமைதியான கவிஞரான கா.மு.ஷெரீப் கால நீரோட்டத்திற்கு ஏற்ப, சினிமா உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இயலாததால், இவர் ஒதுங்கிக் கொண்டதால் தமிழ் திரையுலகிற்கு இழப்புதான்.
பதிலளிநீக்குநல்ல தகவல். உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டிய கவிஞர்!. பெருமைப் படுத்தியமைக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குகவிஞர் கா.மு.ஷெரீப் பற்றி பல விஷயங்களை தெரிய வைத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு!
பதிலளிநீக்குபாடல்களை கேட்டு இருக்கிறேன்.. அந்தப் பாடல்களை எழுதியவரை இன்றுதான் தெரிந்து கொண்டேன் ..கண்டு கொண்டேன்.. நன்றி!
பதிலளிநீக்குகவிஞர் கா.மு.ஷெரீப் பற்றி பல விஷயங்களை தெரிய வைத்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல மனிதர் கவிஞர் கா.மு.ஷெரீப் எத்தனை நற்கருத்துள்ள பாடல்கள்.....
சிறப்பான மனிதர் பற்றிய சீரிய பகிர்வுக்கு நன்றி.
கவிஞ்சரை பற்றி தெரிய முடிந்தது.. அருமை..
பதிலளிநீக்குஒரு கவிஞ்சர் எப்படி இருக்கவேண்டும் என்ற விளக்கம்..அருமை
பதிலளிநீக்குமிக மிகச் சிறப்பான மனிதர்...பலரும் காசிற்காகப் பாட்டெழுதிக் கொண்டிருந்தார்கள்...கொண்டிருக்கிறார்கள்....ஆனால் இவர் தனது கொள்கையில் பற்றி நின்று....மாமனிதர்...அவரைப் பற்றிய அருமையான சிறப்பான பதிவு..அவரது பாடல்கள் எல்லாமே அருமை
பதிலளிநீக்குகீதா