ஆய்வு.
இன்று
ஆய்வு என்பது பெரும்பாலும், நூல்களுக்கு உள்ளேயே சுருங்கிவிட்டது.
ஆய்வியல்
நிறைஞர் ( எம்.ஃபில்.,) ஆய்வாகட்டும், முனைவர் பட்ட (டாக்டர்) ஆய்வாகட்டும், இலக்கியம்,
தத்துவம், கதை, சிறுகதை, நாவல் என நூல்களின் பக்கங்களை ஆய்வு செய்வதிலேயே நிறைவு பெற்றுவிடுகிறது.
ஆய்விற்காக
நூல்களைத் தாண்டி, களத்தில் இறங்குவோர் வெகு சிலரே.
அந்த
வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.
களப்
பணி
களப்
பணியே இவரது வாழ்வாகிப் போய்விட்டது.
ஆய்வில்
நிறைஞர் முடித்து விட்டார்.
முனைவர்
பட்டமும் பெற்றுவிட்டார்.
முனைவர்
பட்டத்தைப் பெற்றுவிட்டோம், மாத ஊதியத்தில், முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தையும்
பெற்றுவிட்டோம், இனி சொந்த வேலையைப் பார்ப்போம் என்று சுயநலத்தோடு செயல்படாமல், சுற்றிக்
கொண்டே இருக்கிறார்.
காடு, மேடு, வயல், வரப்பு எனச் சுற்றிக் கொண்டே
இருக்கிறார்.
இவரது
ஆய்வுக் களம்
பௌத்தம்
இவரது
ஆய்வு எல்லை
சோழ
நாடு
அதாவது
முன்பிருந்த, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை
மாவட்டம்.
மூன்று மாவட்ட எல்லைகளைத் தனது
ஆய்வு எல்லையாக வரையறுத்துக் கொண்டு, களப் பணியாற்றுவது என்பது லேசுபட்ட காரியமல்ல.
ஆனாலும்
இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
எதற்காக
இந்த எல்லை?
தமிழகத்தில்
காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக, சோழ நாட்டில்தான், பௌத்தத்தின் தாக்கம் அதிகமாய் இருந்திருக்கிறது.
எனவேதான் இந்த எல்லை.
சோழ நாட்டு எல்லைக்குள் இவர் தேடிய
பௌத்தம் எது?
கோயில்களா
அல்லது விகாரைகளா?
கோயில்கள்
என்பவை வழிபாட்டுத்த தலங்கள் என்பதை நாம் அறிவோம்.
விகாரைகள்
என்பது புத்த மத பிக்குகள் தங்கி, மதப் பணியாற்றும் இடமாகும்.
பூம்புகாரிலும்,
நாகப் பட்டினத்திலும் புத்த விகாரைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கான எச்சங்கள்
இன்று பூம்புகாரில் மட்டுமே மீதமிருக்கின்றன.
இன்று
புத்த கோயில்களோ, புத்த விகாரைகளோ மீதமில்லாவிட்டாலும், சோழ தேசமெங்கும், புத்த சிலைகள்
பரவலாக இருக்கின்றன.
எனவே
புத்தர் சிலைகளைத் தேடி, கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதையே, தனது
ஆய்வாக, தனது தேடலாக இவர் அமைத்துக் கொண்டு, களத்தில் இறங்கினார்.
வாரத்தில்
ஐந்து நாட்கள் அலுவலகப் பணி. மீதமிருக்கும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேடல்.
இவரைப்
பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், என் மனக் கண்ணில், முன் வந்து நிற்பவர், இவரது வாழ்க்கை
துணைவியார்தான்.
வாரத்தில்
ஏழு நாட்களும் வீட்டில் இல்லாத ஒரு மனிதரை எவ்வாறு பொறுத்துக் கொண்டிருப்பார் என எண்ணிப்
பார்ப்பேன்.
பிறகுதான்
காரணம் புரிந்தது.
புரிதல்
இருவருக்கும்
இடையிலான புரிதல் அப்படிப் பட்டது.
அண்மையில்,
இவர் பணி ஓய்வு பெற்றபோது, பணி நிறைவு விழாவிற்குச் சென்றிருந்தேன்.
இவரது
தேடலின் பலம், இவரது மனைவி.
இவர்
தேடிக் கொண்டே இருக்கிறார்.
பேரூந்துப்
பயணம், பின்னர் வாடகை மிதிவண்டிகளில் பயணம் எனப் பயணித்துப் பயணித்து, தேடித் தேடி,
புதிது புதிதாய், புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்துக்
கொண்டே இருக்கிறார்.
காடு,
மேடு, வயற்காடு, ஆற்றங்களைகள் என இன்றைய நவீனத்தின் வெளிச்சம் அதிகம் படாத சின்னஞ்சிறு
கிராமங்களில் எல்லாம் சுற்றித் திரிந்து, இதுவரை 65 புத்தர் சிலைகளைப் கண்டுபிடித்திருக்கிறார்.
தனியொரு மனிதராய், இதுவரையில், யாரும் சாதிக்காததை, இவர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
இவர்
புத்தரைத் தேடப்போய், சமணரைக் கண்டு பிடித்த நிகழ்வுகளும் அதிகம்.
புத்தர்
யார்? சமணர் யார்?
வேறுபாடு
என்ன? எப்படி அறிவது?
இதோ
எளிமையாய் விளக்குகிறார்.
ஞானம்
பெற்றதை குறிக்கும், தீச்சுடர் போன்ற அமைப்பு, தலையில் இருந்தால், அவர் புத்தர்.
நெற்றியில்
திலகம் இருந்தால், அவர் புத்தர்.
உடலில்
ஆடை இருந்தால், அவர் புத்தர்
உள்ளங்
கையில் தர்மச் சக்கரம் இருந்தார், அவர் புத்தர்.
இவையெல்லாம்
இல்லையேல், அவர் சமணர்.
சமணர்
சிலையின் தலையில் தீச்சுடர் இருக்காது, உடலில் ஆடை இருக்காது.
இவரது
ஒவ்வொரு புத்தர் சிலை கண்டுபிடிப்பிற்குப் பின்னும் ஒளிந்திருக்கும், தேடல்கள், அனுபவங்கள்
அதிகம், அதிகம்.
தமிழகத்தில் மட்டுமல்ல, ஏன் உலகில்
இருக்கின்ற புத்தர் சிலைகளிலேயே, ஒரே ஒரு மீசை வைத்த புத்தரைக் கண்டுபிடித்தவர் இவர்தான்.
ஆம புத்தருக்கு மீசை இருக்கிறது.
மீசை வைத்த புத்தர்.
நம்புவீர்களா? ஆனால் உண்மை,
மீசை
வைத்த புத்தர் இருக்கிறார்.
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள சிற்றூர், பெரண்டாக்
கோட்டை ஆகும்.
இச்சிற்றூரில் சாம்பான் என்ற ஒரு தெய்வத்தை,
இங்கு வாழும் மக்கள் வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து, இவர் அங்கு சென்று பார்த்தபோது,
இவருக்கு காத்திருந்தது என்னவோ, அதிர்ச்சிதான்.
ஆம், சாம்பான் என்று மக்கள் வழிபடும் இந்தத் தெய்வம் புத்தர்.
எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து,
இந்த சிலையினை சாம்பான் சாமின்னுதான் குப்பிட்டுக்கிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு
சிவன் ராத்திரி அன்னைக்கு விசேசம். அன்றைக்கு இரவு, இந்த சிலைக்கு, பூசை செய்து வழிபாடு
செய்வோம்.
அதுமட்டுமல்ல, வருடத்திற்கு ஒரு நாள், கிடா
வெட்டியும் வழிபாடு செய்வோம் என்று அவ்வூர் மக்கள் கூறுவதைக்
கேட்டு அதிர்ந்திருக்கிறார்.
புலால் உண்ணாமையையும், கொல்லாமையையும்
போதித்த புத்தருக்கே, கிடா வெட்டு.
அரியலூர்
மாவட்டம், ராசேந்திர பட்டிணத்தில், உள்ள புத்தர் சிலையை மஞ்சள் விற்கும் செட்டியார்
என அப்பகுதி மக்கள் அழைப்பதையும் கண்டிருக்கிறார்.
மன்னார்குடியில்
இருந்து திருத்துறைபூண்டி செல்லும் வழியில், வாடிவாய்க்கால் என்னும் சிற்றூரில் இறங்கி,
மிதிவண்டியில் பயணித்து, புதூரில் ஒரு புத்தர் சிலையைக் கண்டு வியந்திருக்கிறார்.
காரணம்,
இப்புத்தரை வழிபட்டால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடுவதாகவும், திருமணமானவுடன்,
கணவருடன் சேர்ந்து வந்து நன்றி தெரிவிப்பதும், தொடர் கதையாக நிகழ்கிறது என்பதை அறிந்து
ஆவணப் படுத்தியிருக்கிறார்.
தலையில்லாத புத்தர் சிலைகள் பலவற்றையும் கண்டு பிடித்திருக்கிறார். ஒரு முறை,
தலையில்லாத நிலையில், ஒரு புத்தர் சிலையினைக் கண்டு பிடித்து, தலை எங்கே என்று விசாரித்த
போது, அறுவடைக் காலமல்லவா, நெல்லை போரடிப்பதற்காக,
புத்தரின் சிலையைப் பயன்படுத்துவார்கள், தேடிப் பாருங்கள், சுற்றுவட்டார வயல்களில்
எங்காவது இருக்கும் என்று கூறுவதைக் கேட்டு திகைத்துப் போயிருக்கிறார்.
அதேபோல்,
புதுக்கோட்டை ராமநாதபுரம் எல்லையில், சுந்தர பாண்டியன் பட்டனத்தில், உள்ள ஏகாம்பரேசுவரர்
காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில், நின்ற நிலையில் இருக்கும் புத்தர் சிலையினைக் கண்டு
பிடித்து, உலகிற்கு அறிவித்து இருக்கிறார்.
நின்ற நிலையில் புத்தர் சிலையினைக்
காண்பது வெகு அபூர்வமாகையால், இவரது இந்தக் கண்டுபிடிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நண்பர்களே,
தன் வாழ்வின் பெரும் பகுதியை, புத்தர் சிலைகளைத் தேடுவதற்காகவே செலவிட்டுள்ளார் இவர்.
இவரோடு
எனக்கு சற்றேறக்குறைய இருபது வருடங்களுக்கும் மேலானத் தொடர்பும், நட்பும் உண்டு.
இன்று வலையில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்றால், அதற்குக் காரணம் இவர்தான். என்னை வலை உலகிற்கு அழைத்து வந்தவரே இவர்தான்.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு வரை, இவரை நான் பௌத்த மதத்தைச் சார்ந்தவர் என்றே எண்ணி இருந்தேன்.
ஏனெனில், இவரது பேச்சும் மூச்சும் பௌத்தம், பௌத்தம், பௌத்தம்.
இவர்
தனது மூத்த மகனது திருமண அழைப்பிதழை கொடுத்தபோதுதான், இவர் பௌத்தர் அல்ல என்பதையே உணர்ந்தேன்.
கேட்டபோது
சிரித்தார்.
அழைப்பிதழைக்
கொடுத்துவிட்டு, மெல்லச் சிரித்து விட்டுப் போய்விட்டார்.
ஆனால்,
நான் மீண்டும் சுய நினைவிற்கு வருவதற்குத்தான் நேரமாகிவிட்டது.
இவரது
தேடலும், சொல்லும், செயலும், இவரை புற உலகிற்கு பௌத்தராகவே அடையாளப் படுத்தியிருக்கிறது
என்றால், இவர் எப்படி உழைத்திருக்க வேண்டும். நினைத்துப் பாருங்கள்.
ஆனாலும்
இவர் தன் உழைபபிற்குரிய உயர்வினை அடையாததுதான் , என் போன்றோர்களின் பெரு வருத்தம்.
நண்பர்களே, அரசுப் பணியாளர்கள்
பலர், ஓய்வு பெறும் நாளில், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர் என்பதை நாளிதழ்களில்
வாசித்திருப்போம்.
ஆனால் இவரோ, ஓய்வு பெறுவதற்கு முதல் நாள், பதவி உயர்வு பெற்றவர்.
உதவிப்
பதிவாளராக பதவி உயர்வு பெற்றவர்.
யாரும ஓய்வு பெறும் நாளுக்கு முந்தைய நாள் பதவி உயர்வு பெற்றதாக, எனக்குத் தெரியவில்லை.,
அந்த வாய்ப்பு இவருக்குக் கிட்டியிருக்கிறது.
ஆயினும் இவர், அப்பதவியினையும் தாண்டி உச்சம் தொட்டிருக்க வேண்டியவர்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
தாங்கள் நன்கு அறிந்தவர்தான்.
உதவிப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்
கழகம்
---
சோழ நாட்டில்
பௌத்தம்
என்னும் தலைப்பில், இவர் சொற்பெருக்காற்றினார்.
யானையைப் பிடித்துப் பானைக்குள்
அடைக்க முடியுமா? என்ன?
தனது
இருபத்து ஐந்து ஆண்டுகாலத் தேடலை, சற்றே கோடிட்டுக் காட்டினார்.
பார்வையாளர்களாய்
நாங்கள் மெய்மறந்துதான் போனோம்.
இவரைப்
பாராட்ட, இவரதுத் தேடலைப் போற்றத் தகுந்த வார்த்தைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.
கிடைத்தபாடில்லை.
போற்றுவோம், வாழ்த்துவோம்.
---
ஆதிபராசக்தி தணிக்கைக் குழு உறுப்பினர்
திரு
கு.சிவராஜா அவர்கள்,
பொழிவினைக் கேட்ட வந்திருந்தோரை வரவேற்றார்.
அறந்தாங்கி நகராட்சி ஆணையர்
திரு
பே.வே.நவேந்திரன் அவர்கள்
தன் சீரியத் தமிழால், தலைமையுரை ஆற்றினார்.
நகராட்சி ஆணையர். பெரும் பதவி,
ஆனால் வயதிலோ இளையவர். திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், விடுமுறை நாளினைத்
திரையரங்கில் கொண்டாடாமல், வாழ்க்கைத் துணையரோடு, ஏடகத்தின் தமிழ் நாடி, இவர் வந்ததைப்
பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்,
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை
முனைவர் பட்ட ஆய்வாளர்
திருமதி
டி.பவானி அவர்கள்
நன்றியுரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.
விழா நிகழ்வுகளைக் கல்லூரி மாணவி
செல்வி
இரா.பாரதி நிலா அவர்கள்
தொகுத்து வழங்கினார்.
இவர்
முதுநிலை வருவாய் ஆய்வாளராக, வருவாய்த் துறையில் இருந்தும், தனது வருவாயைப் பற்றிச்
சிறிதும் கவலைப் படாமல், செந்தமிழின் வருவாயினைத் தேடித் தேடிப் பருகி மகிழும், திரு
சமத்துவ ராஜன் சம்பத் அவர்களின் அன்பு மகளாவார்.
தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச்
சேலை என்பார்கள், இவரோ, தன் தந்தையின் தமிழோடு பிறந்து, தவழ்ந்து, வளர்ந்திருக்கிறார்.
பெயரில்
பாரதியோடு, நிலாவையும் சேர்த்துக் கொண்டதால், தெள்ளத் தெளிந்த குளிர் பேச்சால், ஞாயிறு
முற்றத்திற்கு ஒளி சேர்த்தார்.
என்
மகளின் வயது ஒத்தவர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக பரிணமிப்பார் என்பதை
இவரின், ஏடகப் பேச்சு உணர்த்தியது.
வாழ்த்துகள்
நிலா.
வழக்கம் போலவே,
அமைதியாய், ஆர்ப்பாட்டம் சிறிதுமின்றி,
சிறந்த சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து, அரங்கேற்றி
இருக்கிறார்,
ஏடகம் அமைப்பின் நிறுவனர்
திரு
மணி.மாறன் அவர்கள்.
நன்றி ஐயா
தங்களின்
சீரிய பணி தொடரட்டும்.
தொடக்கமே தாங்கள் குறிப்பிடப்போவது முனைவர் அவர்களைத்தான் என்பதை உணர முடிந்தது.
பதிலளிநீக்குஇருப்பினும் கூடுதல் தகவல்கள் அறிய வைத்தமைக்கு நன்றிகள் பல...
முனைவர் அவர்களின் தேடுதல் இன்னும் பல பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.
மிக அற்புதமான பதிவு.ஒரு சிறந்த அற்புதமான மனிதரை அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. தங்களின் கட்டுரை நடை தங்களுக்கு உரித்தானது.மிக அருமை.நன்றி.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிலரால் சமரசங்களுடன் வாழ்க்கையை முடித்து விடுவர். சிலர் மட்டுமே தனக்கான பணி என்பதனை உணர்ந்து வாழ்க்கையை வாழ்வர். இதில் இரண்டாவது வகையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் முனைவர் அவர்கள். ஐரோப்பாவில் எந்த பழைய நினைவு இடங்களுக்குச் சென்றாலும் நம் நாட்டில் திரைப்படங்களுக்கு வரிசை கட்டி நிற்பது போலவே நிற்பார்கள். காரணம் பழைய விசயங்களுக்கு கொடுக்கும் மரியாதை அலாதியானது. ஆனால் நம்மவர்களுக்கு பழையது என்றாலே அது அலட்சியம் செய்ய வேண்டியது என்று ஆழ் மனதில் பதிந்து விட்டது. முனைவரின் உழைப்பு தன்னலமற்றது. ஆனால் ஒவ்வொரு செயல்பாடுகளும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அரிய சொத்து. அங்கீகாரம் இல்லாமல் சோர்ந்து விடும் மனிதர்கள் மத்தியில் தான் எடுத்த எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து உள்வாங்கி உணர்ந்ததை உலகத்திற்கு எடுத்துரைக்கும் இவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். பதிவு செய்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.
மிக அற்புதமான பதிவு.ஒரு சிறந்த அற்புதமான மனிதரை அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி. தங்களின் கட்டுரை நடை தங்களுக்கு உரித்தானது.மிக அருமை.நன்றி.
பதிலளிநீக்குஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை ஆதி முதல் அந்தம் வரை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு எல்லோருக்கும் வந்து விடாது... அது ஒரு வரம்.... பட்டத்துக்காக அல்லாது தன்னுடைய எல்லையை விரிப்பவர்கள் மகான்கள்... நெடிய கட்டுரை... வாழ்த்துக்கள் இருவருக்கும்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆரம்ப வரிகளே சொல்லிவிட்டது இது நம் முனைவர் ஐயா திரு ஜம்புலிங்கம் அவர்களைப் பற்றியது என்று!!! அப்புறம் வந்த வரிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?!!
பதிலளிநீக்குநம் முனைவரைப்பற்றிய சிறப்பான பதிவு. நிறைய தகவல்களும் அறிய முடிந்தது. முனைவரின் ஆராய்ச்சி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்!!
கீதா
சிறப்பான பதிவு.பேறுபெற்ற வாய்ப்பு எனக்கு.
பதிலளிநீக்குதிரு ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் பல...
பதிலளிநீக்குநன்றி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவைத் தான் சொல்கிறீர்கள் என்பது புரிந்து விட்டது. எனக்கும் அவர் நண்பராக வாய்க்கப் பெற்றதில் மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறது. அவர் தம் தொண்டு மேன்மேலும் சிறக்கட்டும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு. திரு.ஜம்புலிங்கம் ஐயாவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு.திரு. ஐம்புலிங்கம் அவர்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்திய திரு. கரந்தை ஜயக்குமார் அவர்களுக்கும்
நீக்குவாழ்த்துகள்..
முனைவர் ஐயாவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி. ஒரு நிகழ்வினை பலர் அறிந்து கொண்டாலும் தங்களைப் அரிதினும் அரிதான வெகு சிலரே அதனை ஆவணப்படுத்திடும் பணியில் வெற்றி பெற்றவராகின்றனர். சீரிய பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுத்தரை பற்றி இங்கு படிக்கும் போது , "பொன்னியின் செல்வன்" புதினமே நினைவிற்கு வருகிறது. நன்றி நண்பரே.
பதிலளிநீக்குமுனைவர் பட்டத்தைப் பெற்றுவிட்டோம், மாத ஊதியத்தில், முனைவர் பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தையும் பெற்றுவிட்டோம், இனி சொந்த வேலையைப் பார்ப்போம் என்று சுயநலத்தோடு செயல்படாமல், சுற்றிக் கொண்டே இருக்கிறார்.//
பதிலளிநீக்குஇதை படித்தவுடனே ஜம்புலிங்கம் சாரை தான் சொல்கிறீர்கள் என்று தெரிந்து விட்டது.
அவரைப் பற்றி மேலும் விவரங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
முனைவர் சாருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு சிறந்த ஆய்வு.... சிறந்த பதிவு....
பதிலளிநீக்குநல்ல தகவல் நன்றி
பதிலளிநீக்குநேற்று கோயில் உலா சென்றுவிட்டதால் இன்றுதான் உங்கள் பதிவினைக் கண்டேன். என்னுடைய அன்றைய பொழிவினைப் பகிர்ந்த விதம் என்னை நெகிழவைத்தது. ஒரு மணி நேரத்திற்குள் பேச முடிந்ததை அப்போது பேசினேன். கடந்த கால் நூற்றாண்டு காலமாக என் துணைவியாரும், மகன்களும் என் ஆய்விற்கும், வாசிப்பிற்கும் துணை நிற்கின்றனர். அவர்களாலும், உங்களைப் போன்ற நண்பர்களாலும், அறிஞர்களாலும்தான் தமிழகத்தில் இவ்வாறான தலைப்பில் ஆய்வினை எடுத்துக்கூறும் அளவு ஓரளவிற்கு சாதிக்க முடிந்தது. உங்களின் இந்த என் ஆய்வைப் பற்றிய மதிப்பீடானது இன்னும் எழுத வேண்டும், தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேம்படுத்துகிறது. அடுத்த இலக்காக சில மேலும் சில ஆய்வாளர்கள் களத்தில் தடம் பதிக்க என்னால் ஆன உதவிகளை அவர்களுக்குச் செய்துவருகிறேன். சாதனைகளைத் தொடர்வேன், உங்களைப் போன்று எனக்குத் தோள் கொடுப்பவர்களோடு இணைந்து. நன்றி.
பதிலளிநீக்குமுனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் தன்னலமற்ற, பக்கசார்பு எதுவும் இல்லாத, தனி ஒருவராக செய்த ஆராய்ச்சியை சிறப்பாகவே எடுத்துச் சொன்னீர்கள். இன்னும் ஏடகம் அமைப்பு செய்த நிகழ்ச்சி நிரலையும் தெரிந்து கொண்டேன். (நேற்றே இப்பதிவை படித்து விட்டேன். இருப்பினும் முன்புபோல் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் உட்காருவதில்லை; எனவே உடனுக்குடன் கருத்துரை எழுதுவதில்லை)
பதிலளிநீக்குவலைப்பதிவர்களிடையே நன்கு அறிமுகம் பெற்றவர், தஞ்சைப் பல்கலைகழகத்தில் பொறுப்பான பதவியில் பணிபுரிபவர், சிறந்த ஆய்வாளர், நிறையப் படித்து தான் படித்தவற்றைத் தன் பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டவர் என்பது மட்டுமே முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்களைப்பற்றி வலைப்பதிவுலகம் அறிந்திருந்த செய்தி. ஆனால் முனைவர். பா.ஜம்புலிங்கம் அவர்கள் தனி ஒருவராகவே விடுமுறை தினங்களில் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து மேற்கொண்ட (புத்த மதம் குறித்த) கள ஆய்வுகள், கண்டறிந்த புத்தர் சிலைகள், புத்தமதம், புத்தர் போதனைகளில் இவருக்குள்ள பிடிப்பு, உறுதுணையாக நின்ற துணைவியார் பற்றியெல்லாம் இந்த வலைப்பதிவு மிகச்சிறப்பான அறிமுகம் தந்துள்ளது. ஓய்வுபெறுவதற்கு முதல் நாளன்று பதவி உயர்வு பெறுவது அதிகம் கேள்விப்படாத ஒன்று. முனைவர். பா.ஜம்புலிங்கத்திற்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். வரும்நாட்களில் இவர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.. முனைவர் அவர்கள் போல இருக்கே என நினைத்தேன் படம் பார்த்தவுடன்.. அவரேதான்... அருமையான தேடல்..
பதிலளிநீக்குபுத்தரை மதம் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதை விட அவரின் பொதனைகள்.. அறிவுரைகளைப் பார்க்கும்போது அது எவ்வளவு உயர்ந்ததாக இருக்கு. நாம் இலங்கையில் விகாரைக்கும் செல்வதுண்டு..
முனைவர் ஜம்புலிங்கம் ஐயா பற்றியும் அவரது பௌத்த தேடல்கள் குறித்தும் விரிவான அருமையான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குஅய்யா அவர்களின் தேடலிருந்து நான் தெரிந்து கொண்டது.............
பதிலளிநீக்குஞானம் பெற்றதை குறிக்கும், தீச்சுடர் போன்ற அமைப்பு, தலையில் இருந்தால், அவர் புத்தர்.
நெற்றியில் திலகம் இருந்தால், அவர் புத்தர்.
உடலில் ஆடை இருந்தால், அவர் புத்தர்
உள்ளங் கையில் தர்மச் சக்கரம் இருந்தார், அவர் புத்தர்.
இவையெல்லாம் இல்லையேல், அவர் சமணர்.
சமணர் சிலையின் தலையில் தீச்சுடர் இருக்காது, உடலில் ஆடை இருக்காது.--
பதிவினை வாசித்துக்கொண்டு வந்தபோதே கண்டுபிடிச்சேன் முனைவர் ஐயா அவர்களைப்பற்றிய பதிவு என்று .எத்த்னை செய்திகள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கின்றன .
பதிலளிநீக்குதலையில்லா புத்தர் சிலை :( போரடிக்கவைத்துவிட்டார்களே நம் மக்கள்
25 ஆண்டுகால தேடலும் நிச்சயம் பயனுள்ளவை வருங்கால சந்ததியருக்கு .
அருமையான பகிர்வு .மிக்க ந்நன்றி அண்ணா
முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் முனைப்பும் முயற்சியும் முன்னெடுப்பும் நாம் அறிந்ததே. எனினும் இப் பதிவு அவர் குறித்த ஒரு பறவைப் பார்வையாக அமைந்துள்ளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமுனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களைப் பற்றி மிக அருமையான பதிவு! மீசை வைத்த புத்தர் சிலைக் கண்டுபிடிப்பு உலக முக்கியம் வாய்ந்த ஒன்று! இதையே இவர் வெளிநாட்டில் நிகழ்த்தியிருப்பின் இந்நேரம் தேசிய விருதளித்துப் பெருமைப்படுத்தியிருப்பார்கள். இந்நாட்டில், அதுவும் யாருடைய வரலாற்றை மண் மூடிப் புதைக்க உலகமே ஆலாய்ப் பறக்கிறதோ, அப்படிப்பட்ட தமிழர்களில் ஒருவராய் இவர் பிறந்திருப்பதே இவருடைய புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காகவே இருக்கக் காரணம். வரும்! ஒருநாள் வரும்! தமிழர் திறமைகள் உலகப் பந்தின் சுற்று வட்டத்தைத் திசை திருப்பும் நாளொன்று வரும்! அன்று ஐயாவைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், உழைப்பும், திறமையும் வான் புகழ் பெறும்! அந்நேரம் இப்பேர்ப்பட்ட அறிஞர்களின் புகழ் பரப்புதலையே நோக்கமாய்க் கொண்டு இயங்கி வரும் கரந்தையார் அவர்களின் உழைப்பும் போற்றப்படும்.
பதிலளிநீக்குஇந்த மிகச் சிறப்பான பதிவுக்காக நன்றிகள் பல!