வைப்பு நிதி
நிரந்தர வைப்பு நிதி
நிரந்தர வைப்பு நிதி என்றால் என்ன என்பதை, இன்று
நாம் அறிவோம்.
அதாவது, ஒரு பள்ளியில், ஆண்டுதோறும், ஒரு பேச்சுப்
போட்டி நடத்தவும், போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும் விரும்புகிறோம்
எனில், நாம் என்ன செய்வோம்.
போட்டிகளை நடத்தவும், பரிசுகள் வழங்கவும் தேவைப்படும்
தொகையினை, ஆண்டுதோறும் கொடுப்போம்.
அல்லது,
ஆண்டுதோறும் தேவைப்படும் தொகையானது, வட்டியாகக்
கிடைக்கும் வகையில், ஒரு பெருந்தொகையை, நிலைத்த சேமிப்பாக ஏற்படுத்துவோம்.
இதில், இந்த இரண்டாவது செயலைத்தான் செய்தார்
இம் மாமனிதர்.
தான் விரும்பும் செயல், ஆண்டாண்டு காலம் தொய்வின்றித்
தொடர, ஒரு நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்தினார்
தொகை எவ்வளவு தெரியுமா?
நாற்பது காசுகள்
என்ன? வெறும் நாற்பது காசுகளுக்கு ஒரு வைப்பு
நிதியா?
நாற்பது பைசாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.
பத்து ரூபாய் காசையே கடைகளில் வாங்க மறுக்கும்
காலமல்லவா இது?
இதில் நாற்பது காசுகளுக்கு வைப்பு நிதி ஏற்படுத்தி,
அதில் கிடைக்கும் வட்டியை வைத்துக் கொண்டு, எதைத்தான் செய்ய இயலும்.
நீங்கள் வியப்பது புரிகிறது
பணமும், காசுகளும் மதிப்பிழந்து வரும் காலமிது.
ஆனால், அன்று காசுகளுக்கு இருந்த மதிப்பும்,
மரியாதையும் அதிகம், அதிகம்.
எவ்வளவு தொகையினை வைப்பு நிதியாக வைக்கிறோமோ,
அத்தொகையில், கால் பங்கு, ஆண்டுதோறும் வட்டியாகக் கிடைத்த காலம் அது.
ஒரு பைசா காசைக் கொடுத்து, ஒன்றல்ல, இரண்டல்ல,
முழுதாய் 140 வாழைப் பழங்களை வாங்கலாம்.
உண்மை
நம்பித்தான் ஆக வேண்டும்.
இந்நிலை நேற்றல்ல, கடந்த ஆண்டும் அல்ல
அதற்கும், அதற்கும் முன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இதுதான் நிலை.
40 காசுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி.
ஆண்டொன்றுக்கு 10 காசு வட்டியாய் கிடைக்கும்
இந்தத் தொகையைக் கொண்டுதான், ஒரு விழாவை, திருவிழாவை
நடத்தி இருக்கிறார்கள்.
பத்து பைசா காசைக் கொண்டு, ஊரே ஒன்று கூடி கொண்டாடும்
ஒரு விழாவை, திருவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.
என்ன விழா தெரியுமா?
பிறந்த நாள் விழா
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு மன்னனின்,
மாமன்னனின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
மன்னனின் திருவுருவச் சிலைக்கு சந்தனக் காப்பு
அலங்காரம் செய்து, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, அன்னம் படைத்து, மேள தாளம் முழுங்க
பெருவிழாவை நடத்தி இருக்கிறார்கள்.
ஐப்பசித் திங்கள் சதயத் திருநாளன்று விழா.
பிறந்த நாள் விழா
சதயத் திருவிழா என்றவுடன், பளிச்சென்று நினைவிற்கு
வந்துவிடுகிறதல்லவா, இம்மாமன்னனின் பெயர்.
ஆம்
மாமன்னன் இராஜராஜ சோழனின்
பிறந்த நாளைக் கொண்டாடத்தான் இந்த வைப்பு நிதி.
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்
மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன்
ஏற்படுத்திய வைப்பு நிதி.
தஞ்சையில், வானுயரக் கற்றளியை எழுப்பி, அழியாப்
புகழ் பெற்ற, தன் தந்தையின் மறைவிற்குப் பின், தன் தந்தைக்குத் திருஉருவச் சிலை வடித்து,
ஒவ்வோராண்டும், திருஉருவச் சிலைக்கு சந்தனக் காப்பு செய்து, பரிவட்டம் கட்டி, பிறந்த
நாளைக் கொண்டாடி இருக்கிறார் இராஜேந்திர சோழன்.
எந்த ஊரில் கொண்டாடினான்.
தஞ்சையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன், சதய
விழா நடந்ததா என்று தெரியாது.
ஆனால், திருஅரபுரம் கோயிலில் சதய விழா நடைபெற்றிருக்கிறது.
இக்கோயிலின் அம்மன் சன்னதி வலப்புறம்
உள்ள நிலைக் காலில், சதய விழாச் செய்திகள், கல்வெட்டாய், இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
திரு அரபுரம்
இன்றும், இக்கோயிலுக்கு அருகில் உள்ள சிற்றூர்
அரயபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
108 சிவாலயம்
பாபநாசம்
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது
இக்கோயில்.
காலத்தால் கரைந்து போய்விட்டது.
ஆயினும் காலத்தால் கரையாமல், கள்வர்களால் இடம்
பெயராமல், நிலைத்து நிற்கும், நிலைக்கால், இன்றும் மாமன்னன் இராஜராஜனுக்கு பிறந்த நாள்
வாழ்த்துகளை முழங்கிக் கொண்டே இருக்கிறது என்கிறார், வரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை
ந.செல்வராஜ் அவர்கள்.
வரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ்
போன்றோரின் அரும் முயற்சியால்,
கற்றூண்களில் மறைந்தும், பூமிக்குள் புதையுண்டும் கிடக்கும்,
தமிழனின் அருமை, பெருமைகள்
எல்லாம்
மெல்ல மெல்ல மேலெழுந்து வரத் தொடங்கி இருக்கின்றன.
வரலாற்று
ஆய்வாளரின்
தேடல்
தொடர
வாழ்த்துவோம்,
போற்றுவோம்.
வரலாற்று ஆய்வாளர்களின் தேடல் தொடங்கட்டும்.....
பதிலளிநீக்குவலிப்போக்கன்=Aneasthetist.
நீக்குவாழிய பல்லாண்டு!இக்காலத்தில் பொதுக்கல்விக்குத் திருவிழாவுக்கு, நாம் என்ன செய்துள்ளோம் என ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான வரலாற்று செய்தி.
பதிலளிநீக்குவரலாற்று ஆய்வாளர்
அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
செய்திகளை எங்களுக்கு தந்த உங்களுக்கு நன்றிகள்.
அய்யம்பேட்டை திரு. ந.செல்வராஜ் அவர்களின் பணி இன்னும் தொடர எமது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி நண்பரே...
சிறப்பான பணியை ஆற்றி வரும் அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.... சிறப்பான தொடக்கம்...... மர்ம கதை போல தொடங்கி மாமன்னரின் மைந்தன் , ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தன் தந்தைக்கு ஆற்றிய கடமையை அழகாக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.....நன்றி.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள். மேலும் நடக்கும் தேடல்களில் இன்னும் நல்லபல தகவல்கள் கிடைக்கவேண்டும்.
பதிலளிநீக்குவரலாற்று ஆய்வாளர்களின் பணி காலத்தை கட்டிக்கொண்டுவருகிறது.கண்முன்னே/
பதிலளிநீக்குபுதிய செய்திப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவரலாற்று ஆய்வாளர் அய்யம்பேட்டை ந.செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குபுதிய செய்தி. தகவல்கள் அருமை. தேடல்களில் நல்லன வரட்டும். ஆய்வாளர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பான தகவல். அய்யம்பேட்டை ந செல்வராஜ் அவர்களது பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள் 🎊.
பதிலளிநீக்குஅருமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குgood search
பதிலளிநீக்குவரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் பணியை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை. ஐயா கூறியுள்ள சதய விழாச் செய்தி உங்களால் இப்பதிவு மூலமாகத்தான் தற்போது அறிந்தேன்.
பதிலளிநீக்கு// வரலாற்று ஆய்வாளரின்
பதிலளிநீக்குதேடல் தொடர
வாழ்த்துவோம், போற்றுவோம்.//
https://kovaikkothai.wordpress.com/
//ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு மன்னனின், மாமன்னனின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு// அப்போ பிறந்தநாட்களை எல்லாம் எப்படிக் கணித்து வைத்திருப்பார்களோ?. கல்வெட்டிலாக இருக்குமோ..
கல்வெட்டு அறிஞர் செல்வராஜ் நாயக்கவடியார் அவர்களின் ஆய்வுப்பணிகள் பற்றி முகநூலில் படிப்பதுண்டு. ஐயா அவர்கள் குறித்த இந்தப் பதிவு முதலாம் இராஜராஜரின் கல்வெட்டுடன் தொடர்புடையது. சுவையாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஅரிய செய்தி; அற்புதமானப் பதிவு.
பதிலளிநீக்குஅரிய தகவல்கள் அற்புதமாக படைத்துள்ளவிதம் அருமை ஸார் ..உங்களுக்கும் செல்வராஜ் ஸார் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள் வாழ்த்துகள் ஸார் ..அருமை.தொடரட்டும் தங்கள் பதிவு...
பதிலளிநீக்குநல்ல சிறப்பான செய்திகளை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ஸார் .யாரும் சொல்லாத தகவல்கள்..உங்களுக்கும் செல்வராஜ் அய்யா அவர்களுக்கும் பாராட்டுகள்..வாழ்த்துகள்..அருமை
பதிலளிநீக்குநுட்பமான செய்தி தோழர்
பதிலளிநீக்குநல்ல பல தகவல்களுக்கு நன்றி. கட்டுரை ஆரம்பத்தில் வாழைப்பழம் பற்றி படித்ததும் நினைவுக்கு வந்தது-அந்த நாட்களில் ஒரு வாழைக்குலை வாங்கிய பணத்துக்கு இப்போது ஒரு வாழைப்பழம் கூட வாங்க முடியாது.
பதிலளிநீக்கு