கோயில்
இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.
இக்காலப் பெரியவர்கள் கூறுவதும்,
எங்கெல்லாம் கும்பாபிசேகங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம், ஒலிப் பெருக்கி மூலம், அடிக்கடி,
காற்றில் தவழ்ந்து வரும் முழக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.
கோயில்
இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.
இந்தச் சொல்லாடலின், உண்மைப் பொருள்தான் என்ன?
இன்று பல பழமொழிகள், தங்கள் உருவிலும், பொருளிலும்
திரிந்து வாழ்ந்து வருகின்றன.
ஆயிரம்
பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்து
வக்கத்தவனுக்கு
வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்கு
போலிஸ் வேலை
ஆசிரியராய் இருப்பதால், பலமுறை
வந்தியதுண்டு.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையா? என நொந்ததுண்டு.
பிறகுதான் அறிந்தேன், தெளிந்தேன்.
அலைபேசியும், தொலைபேசியும், கடித வசதியும் இல்லாத,
அக்காலத்தில், அலையாய் அலைந்து, மணமகன் வீட்டிற்கும், மணமகள் வீட்டிற்கும் நடையாய்
நடந்து, பேசிப் பேசியல்லவா, ஒரு திருமணத்தை முடிவு செய்ய வேண்டும்.
ஆயிரம்
முறை போய் சொல்லி, ஒரு கல்யாணத்தை நடத்து.
இப்பழமொழியை, எப்படித் தலை கீழாய்
மாற்றிவிட்டார்கள் பாருங்கள்.
வாக்கு
அறிந்தவனுக்கு வாத்தியார் வேலை
போக்கு
அறிந்தவனுக்கு போலிஸ் வேலை
இப்பழமொழிகள் எல்லாம், இன்று திரிந்து,
அர்த்தங்கள் இழந்து, அணர்த்தங்களை அல்லவா சுமந்து திரிகின்றன.
கோயில்
இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்
கோ என்றால் அரசன்
இல் எனில் இல்லம்
கோயில் என்றால் அரசனின் வீடு, இல்லம், அரண்மனை
அரசன் குடியிருக்கும் இடத்தில், குடியிருப்பது
பாதுகாப்பானதாகும். திருடர்கள், எதிரிகள் ஆகியோரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அரசனின்
ஊரில் குடியிருக்க வேண்டும்.
எனவே அரசனின் வீடு இல்லாத இடத்தில் குடியிருக்க
வேண்டாம்.
கோயில்
இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.
இதனைப் போலவே, கருப்பு, காட்டேரி என்று
கூறிக் கூறி, சிறு வயதிலேயே, பயத்தினை, அச்சத்தினை, நம் குழந்தைகள் மனதில் ஆழ விதைத்து
விடுகிறோம்.
கருப்பு என்றால் என்ன?
காட்டேரி என்றால் என்ன?
இதோ விளக்கம் கூறுகிறார் ஒரு அறிஞர், தமிழறிஞர்,
நாம் முற்றாய் மறந்துபோன ஒரு தமிழறிஞர்.
வாகன வசதியற்ற, அக்காலத்தில், இரவில் காட்டு வழியில்
பயணம் செய்பவர்கள், பார்க்கின்ற, வெட்டப்பட்ட மரங்கள், பட்டுப் போய் நிற்கும் மொக்கை
மரங்கள் எல்லாம், இரவில் கருப்பாக, ஆள் நிற்பது போல், பலவித உருவங்களில் தெரியும்.
எனவே, அந்த கருப்பு உருவங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனப் பெரியவர்கள் கூறுவர்.
இந்தக் கருப்பு உருவங்கள்தான், பேயாக, கருப்பாக
உருமாற்றப்பட்டு மக்களை பயமுறுத்தி வருகிறன.
கிராமங்களைக் கடந்து இரவில் பயணம் செய்பவர்கள்,
அக்காலத்தில், அடந்த காடுகள், கழனிகள் வழியே பயணிக்க வேண்டும்.
அப்படி அவர்கள் கடந்து போகும் பொழுது, காட்டில்
உள்ள ஏரிகளில் இருந்து, எழும் காற்றானது, நீரின் சலசலப்பைச் சுமந்து வரும்.
எனவே அந்தக் காட்டு ஏரியின் சலசலப்பைக் கேட்டு,
காட்டு ஏரியின் சத்தத்தைக் கேட்டு பயப்படவேண்டாம் என்று சொல்வார்கள்.
காட்டு
ஏரிக்கு பயப்பட வேண்டாம் என்பதுதான், காட்டேரி என ஒரு பேயின் உருவமாகத் திரிக்கப்பட்டு
விட்டது.
எனவே, பயப்பட வேண்டாம்,
கருப்புக்குப் பயப்பட வேண்டாம்
காட்டேரிக்கும் பயப்பட வேண்டாம் என நமக்கு உண்மை
நிலையை உணர்த்தி, விழிப்புணர்வு ஊட்டியவர் இவர்.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில்
பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர்.
தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின்
முன்னோடி
தன் இறுதிக்கலம் வரை,
புத்தரின் ஞான ஒளி ஏந்தி,
தமிழகத்தில் மண்டிக் கிடந்த,
மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக ஓயாமல் போராடியவர்.
க.அயோத்திதாச
பண்டிதர்.
விளக்கம் அருமை முதன்முறையாக அறிகின்றேன் நன்றி நண்பரே.
பதிலளிநீக்குவிளக்கம் மிகவும் அருமை... திருமிகு க.அயோத்திதாச பண்டிதர் அவர்களின் அறிமுகம் சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
கருப்பு, காட்டேரி.. விளக்கம் அருமை..
பதிலளிநீக்குமிக அருமையான விளக்கங்கள் ...
பதிலளிநீக்குதிருமிகு க.அயோத்திதாச பண்டிதர் அவர்களை அறிய செய்தமைக்கு மிகவும் நன்றி ..
தங்கள் வலைப் பூவில் நறுமணம் தவழ்கிறது ! மிக்க மகிழ்ச்சி ! பாராட்டுகள் ! இரண்டொரு இடங்களில் எழுத்துப் பிழை காணப்படுகிறது. திருத்தம் செய்யுங்கள் !
பதிலளிநீக்குஇதுவரை அறிந்ததில்லை. புதியதாய் தெரிந்து கொண்டோம். அயோத்திதாச பண்டிதர் அறிமுகம் சிறப்பு.
பதிலளிநீக்குவிளக்கங்கள் அருமை!
பதிலளிநீக்குஎன்னதான் விளக்கங்கள் கூறி விளக்க முயன்றாலும் மனதில் ஏற்றப்பட்ட பொய்மைகள் மாறுவதுகடினம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்
பதிலளிநீக்குகோயில் கேள்விப்பட்டுள்ளேன். காட்டேரி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி.
பதிலளிநீக்குமுதன்முறையாக அறிகின்றேன் நன்றி
பதிலளிநீக்குhttps://kovaikkothai.wordpress.com/
அருமையான விளக்கங்கள்.
பதிலளிநீக்குசிறப்பான விளக்கம்.
பதிலளிநீக்குநன்றி.
விளக்கங்களுடன் அறிமுகம் அருமை...இது ஆசிரியர்க்கே உரித்தான சிறப்பு...
பதிலளிநீக்குவாக்குக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை ,
பதிலளிநீக்குபோக்குக்கற்றவனுக்கு போலீஸ் வேலை
என யூகித்து வைத்திருந்த
சொல் உண்மைதான் என்பதை
தங்கள் பதிவு தெளிவு படுத்தியது.
இது போல் பல,,,நன்றி
>>> என்னதான் விளக்கங்கள் கூறி விளக்க முயன்றாலும் மனதில் ஏற்றப்பட்ட பொய்மைகள் மாறுவது... கடினம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்... <<<
பதிலளிநீக்குGMB ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன்..
வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை..
பதிலளிநீக்குபோக்கற்றவனுக்கு போலீஸ் வேலை..
இதெல்லாம் பிற்காலத்தைச் சேர்ந்த -
போலீஸ் என்ற துறை வந்த பிறகு ஏற்பட்ட சொல்லாடல்...
வெள்ளையன் - தன்னை எதிர்ப்பவர்களை
அடித்து உதைத்து கைகாலை முறிப்பதற்கே உருவாக்கினான்...
அவன் வருவதற்கு முன்பே -
நம் நாட்டில் ஊர்க்காவல், தலையாரி, கங்காணி (கண்காணி
என்றெல்லாம் நடைமுறை இருந்தது...
நாட்டின் மன்னவனே காவல் முறை செய்ததாக வரலாறு...
ஊர்க்காவல், தலையாரிகளின் காலத்தில்
ஊரும் நாடும் நன்றாக இருந்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது..
க.அயோத்திதாச பண்டிதர் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. இவர் பற்றிய செய்திகளைச் சுவையாகத் தொகுத்து அளித்துள்ளது சிறப்பு.
பதிலளிநீக்குகோ இல் காட்டு ஏரி விளக்கங்கள் மிகவும் அருமை
பதிலளிநீக்குதங்கள் சிறப்பான விளக்கங்களின் பின் பலவிடயங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். நன்றி பலப்பல..
பதிலளிநீக்கு