திருச்சி வாழ், வலைப் பதிவர்
திருமிகு
தி.தமிழ் இளங்கோ அவர்கள்
இன்று 2.2.2019 சனிக்கிழமை காலை
இயற்கையோடு இணைந்தார்.
நாளை காலை 10.00 மணி அளவில்,
எண்.27, துளசி இல்லாம், 3 வது குறுக்குத் தெரு,
நாகப்பா நகர், கே.கே நகர் புதிய பேருந்து நிலையம்,
திருச்சி
என்னும்,
அன்னாரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.
அழைக்கவே வேண்டியதில்லை, தகவல் தெரிந்தாலே போதும்,
முதல் மனிதராக வருகை தந்து, எந்நிகழ்வையும் சிறப்பிக்கும் பண்பாளர்.
அகவை முதிர்ந்த போதிலும்,
நண்பராகவே அனைவருடனும் பழகியவர்.
பழகுதற்கு இனியவர்,
பாசத்தில் உயர்ந்தவர்
எழுத்தை நேசித்தவர்,
நல் உள்ளங்களைப் போற்றியவர்.
பாசமிகு தோழரின் பிரிவால்
இணைய உலகில் ஒரு வெற்றிடம்
உருவாகியிருக்கிறது,
தங்களின் நினைவுகள்
என்றும் எம்மோடிருக்கும்.
கரந்தை ஜெயக்குமார்
அவரது பிரிவால் துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
பதிலளிநீக்குநான் இந்தியா வந்தால் கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டிய மரியாதைக்குரிய மனிதர் இனி இல்லாமல் போய்விட்டார் என்பதை நினைக்கும் போது மனதிற்கு மிக வருத்ததை தருகிறது அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை
பதிலளிநீக்குநம்பவே முடியவில்லையே ஐயா. மனம் பதைபதைக்கிறது. என்ன ஆயிற்று?
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, புதுகை வலைப் பதிவர் மாநாட்டில் அவருடன் ஐந்து நிமிடங்கள் உரையாடிய நினைவு எனக்கு ஏற்படுகிறது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்.அவருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறேன்.நம்ப முடியவில்லை.
பதிலளிநீக்குகுடும்பத்தினர்க்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சரியாக ஓராண்டு முன்பு ஜனவரி 2018 இல் திருச்சி வந்தபோது அவரை நேரில் சந்தித்து அவர் அன்போடு கொடுத்த தமிழ் டயரியைப் பெற்றுக் கொண்டது கண்ணிலேயே நிற்கிறது. அமைதி யான மனிதர். மற்றவர் உள்ளம் புண்பட்டுவிடுமோ என்று மென்மையாகப் பேசும் இயல்பினர். இவ்வளவு சீக்கிரம் அவரை இறைவன் அழைத்துக் கொண்டு விட்ட காரணம் புரியவில்லை. இப்போது தான் அவர் மைந்தர் அரவிந்தன் உடன் பேசி விசாரித்தேன். அன்னார் ஆன்மா சாந்தி அடைவதாக. இராய செல்லப்பா சென்னை
பதிலளிநீக்குசெய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.
பதிலளிநீக்குஅவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை தர வேண்டும்.
அவருக்கு என் அஞ்சலிகள்.
வருத்தம் தந்த செய்தி. அவருடன் சில சந்திப்புகளில் இருந்ததுண்டு. மிக நல்ல மனிதர். கேமரா கையாளுவது அவருக்கும் பிடித்த விஷயம்.
பதிலளிநீக்குஅவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.....
நல்ல மனிதர்.திருவரங்கத்தில் எனதுஇல்லததிற்கு வந்த போது இனிமையாகப் பேசினார்.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇன்று காலை கோபு அண்ணனின் மெயில் பார்த்து இச் செய்தி அறிந்து மனம் அப்படியே உறைந்ததுபோலாகிவிட்டது... என்ன சொல்வதென தெரியவில்லை... இளங்கோ அண்ணனின் மனம் அமைதியடையப் பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குமிகவும் வருத்தம் தரும் செய்தி!
பதிலளிநீக்குதேவையே இல்லாமல் அவருடன் கடவுள் இல்லை என்றூ விவாதம் செய்து இருக்கிறேன். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்றூ ஒதுங்கிப் போயிருக்க வேண்டும். தவிர்த்து இருக்கனும். அதன் பிறகு அவருடன் கடைசிவரை சமாதானம் எதுவும் செய்து கொள்ள முடியவில்லை- ஒவ்வொருவர் நம்பிக்கையில் அவரவர் பிடிவாதமாக இருந்ததால்.
அவர் தந்தை மிகவும் வயதாகி 90 வயதுக்குமேல் வயதானக் காலத்தில் மிகவும் கஷ்டப் பட்டு சில வருடங்கள் முன்புதான் உலகை விட்டுச் சென்றார். அப்போது மிகவும் வயதாகி இறப்பது வரமா/ இல்லை சாபமா என்றூ ஒரு பதிவெழுதினார்னு நினைக்கிறேன். தந்தைபோல் கஷ்டப்படாமல் நாம் நிம்மதியாகப் போயிவிடனும் என்பதுபோல் ஒரு ஆதங்கமே அவரிடம் இருந்து வெளீப்பட்டது.
யாரின் முடிவாலும் பாதிக்கப் படுவது அவரவர் குடும்பத்தினரும், நண்பர்களூமே. அவர்களூக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.
உண்மை தான், வாழும் காலத்தில் என்னன்னமோ காரணங்களை சொல்லி புரிந்திடாமல் விலகி நிற்கின்றோம். இனி திரும்ப மாட்டார் எனும் செய்தி தெரியும் நொடியில் நம் குற்ற உணர்ச்சிக்கு விடைகளும் இருப்பதில்லை.
நீக்குஇன்று காலை கோபு அண்ணா அவர்களிடமிருந்து இந்த வருத்தமான செய்தி தாங்கிய மின்னஞ்சல் வந்தது .படித்ததும் மிகவும் வேதனையடைந்தேன் .மிகவும் வருத்தமான செய்தி .அவரது ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் .அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் அவரது உற்ற நண்பர்களுக்கும் இறைவன் ஆறுதலை தர பிரார்த்திக்கின்றேன் .
பதிலளிநீக்குவலைப்பதிவின் எழுத ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் என்பதிவில் தவறாது பின்னூட்டப் பதிவிட்டு ஊக்கம் கொடுத்த ஐயாவின் மறைவு குறித்த செய்தி கவலையை தருகின்றது. சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள். அதிர்ச்சியான செய்தி.
பதிலளிநீக்குஉறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு சொல் இருக்கும் பிரிவு என்றும் துன்பம் தருவது ஆனாலும் பழகியவர்கள் எண்ணங்களில் அவர் என்றும் நிலைத்திருப்பார். நினைக்கும்போது நினைப்பவர் மனக்கண் முன் தோன்றுவார். ஓம் சாந்தி
பதிலளிநீக்குநண்பர் திரு தமிழ் இளங்கோ பழக இனியவர். சிறந்த பண்பாளர். தரமான கட்டுரைகளுக்கு சொந்தக்காரர். அனைவரையும் ஆழமான விவாதம் மூலம் ஈர்ப்பவர். மாற்றுக் கருத்துக்களை சரி என்று தோன்றினால் ஏற்பார். இல்லையெனில் நியாயத்தை முன் வைப்பார். மழபாடி என்றாலே அவர் நினைவு வரும். திருச்சியில் நான் ஆற்றிய பௌத்தம் தொடர்பான பொழிவினைக் கேட்க வந்ததோடு, நூலொன்றைப் பரிசாக அளித்து அதனைப் பாராட்டி தன் தளத்தில் எழுதியவர். அவருடைய எழுத்து என்றும் நம் நினைவில் நிற்கும், அவருடைய அழகான புன்னகையைப் போல.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள். அதிர்ச்சியான செய்தி. நேற்று மதியமே திரு வைகோ அவர்கள் மின்னஞ்சல் மூலமும் வாட்சப்பிலும் தெரிவித்திருந்தார். :( அவருக்கு இதய நோய் என்பதும் அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்பதும் என் கவனத்தில் வரவில்லை. ஏதோ ஓர் பதிவில் குறிப்பிட்டிருந்தார் போல் நினைவு. ஒரு வேளை அறுவை சிகிச்சை நடந்திருந்தால், இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாம். :( அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குபுகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர் நானும் என் தளத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல் ஐயா. அண்ணாரின் இழப்பு தமிழ் வலைப்பதிவர் உலகத்துக்குப் பேர் இழப்பு..
பதிலளிநீக்குநான் முகநூலில் ரமணி ஐயாவின் பதிவைக் கண்டு அறிந்தேன். என்னாலும் அவரது இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை. முகநூலில் பதிந்த பதிவின் இணைப்பைப் பகிருகிறேன்.
பதிலளிநீக்குhttps://www.facebook.com/yarlpavanan/posts/2503621176346823
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிர்ச்சியான செய்தி.
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்ம சாந்திக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்! என்னுடைய பல பதிவுகளுக்கு கருத்திட்டு பாராட்டி ஊக்கப்படுத்தியவர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர். அவரது பதிவுகளும் அருமையாக இருக்கும். என் வேலைப்பளு காரணமாக வலைப்பதிவுகளில் எழுதாமல் வாசிக்காமல் இருப்பதால் நீண்ட நாட்களாக அவரைப்பற்றி அறிய முடியவில்லை! அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஅவரது நினைவு சுமந்து பயணிப்போம்/
தனியாக என் பதிவில் எழுதுகிறேன். வருத்தமாக உள்ளது. என் அஞ்சலிகள்.
பதிலளிநீக்குவருத்தப்படுகிறேன்.இன்னும் சில ஆண்டுகள் வாழ அருள் கிட்டாமல் போனதில் கடவுள் மேல் வருத்தப்படுவதை தவிர வேறு எதும் செய்வதற்கில்லை
பதிலளிநீக்குஎனது வருத்தங்களும் அஞ்சலிகளும் ..
பதிலளிநீக்குநம்ம இயலா இழப்பு ...
மிகவும் வருத்தமான செய்தி .அவரது ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்
பதிலளிநீக்குஅவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலை தர வேண்டும்.
பதிலளிநீக்குஅவருக்கு என் அஞ்சலிகள்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஎப்பொழுதும் நான் கடைசிதான்.. தமிழ் பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் இயற்கையோடு இணைந்த செய்தியை கடைசியாகத்தான் தெரிந்து கொள்கிறேன்..எனது ஆழந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குதிரு.தமிழ் இளங்கோ அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.....! அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதிர்ச்சியான செய்தி!
பதிலளிநீக்குஅன்புள்ள
பதிலளிநீக்குவணக்கம். உங்கள் வலைப் பதிவுகளுக்கு உடனுக்குடன் கருத்துரைப்பார். அடிக்கடி வாசித்திருக்கிறேன். அன்னாரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது ஆன்மா அமைதிகொள்ளட்டும்.
அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குஇறுதி மரியாதை நிகழ்வுகளுக்கு
பதிலளிநீக்குசென்று வந்தேன்...
ஈடுசெய்ய முடியா இழப்பு
அமரர். இளங்கோவின் ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினா் நலம் யாவும் பெறவும் இறைவனைப்பிராா்த்திக்கின்றேன்.
பதிலளிநீக்கு