01 ஆகஸ்ட் 2021

ஓய்வெடுங்கள் ஐயா

 


பரிதிமாற் கலைஞர்

மறைமலை அடிகளார்

தேவநேயப் பாவாணர்

இம்மூவரின், மறுஉருவாய் வாழ்ந்தவர்.

    

          எனக்குப் பெயர் தந்தவர் மலைமலை அடிகள், நெஞ்சம் தந்தவர் திரு வி.க., தோள் தந்தவர்கள் பாவாணரும், இலக்குவனாரும், துணிவு தந்தவர்கள் பாரதியாரும், பாவேந்தரும் என முழங்கியவர்.

     தனித் தமிழ் இயக்க அறிஞராய், திருக்குறள் வித்தகராய், இலக்கண, இலக்கிய ஏந்தலாய், அகராதியியல் ஆற்றலாளராய், சொல்லாராய்ச்சித் தோன்றலாய், பதிப்பியல் செம்மலாய் வாழ்ந்த

செந்தமிழ் அந்தணர்

தமிழ்க் கடல்


உலகப் பெருந்தமிழர்

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

இன்று இல்லை.

     தமிழின் தொன்மை, தமிழின் தூய்மை, தமிழின் வளமை இம்மூன்றையும், தன் மூச்சாய், பேச்சாய், எழுத்தாய், வாழ்வாய் வடிவமைத்து வாழ்ந்து, ஓயாது உழைத்த, ஓய்வறியா உத்தமர்

கடந்த 25.7.2021

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி, பாவாணர் நூலகம் அமைத்து, வாழும் வள்ளுவராகவே வாழ்ந்து, 94 ஆண்டுகளில், தொள்ளாயிரம் ஆண்டுகாலப் பணியினைச் செய்தவர் தாங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள்

4,642 தமிழ் முறைத் திருமணங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     தமிழ் நாடு முழுவதும், வாழும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழ் வழி திருமணங்கள், தன் காலத்திற்குப் பிறகும் தொடர, ஆவண செய்தவர் தாங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     தாங்கள் வாழ்ந்த காலத்தில், நாங்களும் வாழ்ந்தோம், என்பதே எங்களுக்குப் பெருமை.

    



கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் பலமுறை நேரில் காணவும், பேசவும், தங்களைப் பற்றி எழுதவும், எனக்குக் கிட்டிய வாய்ப்பு, என் தனிப் பெருமை.



தங்களின் சொல் சுமந்து வந்த கடிதமே,

இனி என்றென்றும், என் பரம்பரைப் பொக்கிசம்.

     கடந்த 30.1.2021 அன்று, தங்களின், 94 ஆம் அகவையின், முதல் நாளில், பெரும்புலவர் முனைவர் இரா.கலியபெருமாள், புலவர் ம.கந்தசாமி, குறள் அறச்சுடர், தமிழ்ச் செம்மல் பழ.மாறவர்மன், சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு ஆகியோருடன்  இணைந்து, மதுரைக்கு வந்து, தங்களை இறுதியாய் சந்தித்ததை எண்ணிப் பார்க்கிறேன். உள்ளம் சிலிர்க்கிறது.






ஓய்வெடுங்கள் ஐயா




19 கருத்துகள்:

  1. சந்திப்பு நிகழ்வு மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாதங்களுக்கு முன் அவரைச் சந்தித்தோம் என்ற மகிழ்ச்சி மனதில்
      நன்றி ஐயா

      நீக்கு
  2. கடிதத்தில் கூட அறியாத தகவல்களை அறிந்து கொள்ளும் ஆவல்; ஆகா...!

    பதிலளிநீக்கு
  3. கடிதத்தில் சில வார்த்தைகள் அறிந்து கொண்டேன்.
    ஐயா ஓய்வு பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. போற்றத்தகுந்த மனிதர். போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  5. பேரறிஞருடனான உங்களின் சந்திப்பு உங்கள் வாழ்வில் முக்கியமான, மறக்கமுடியாத பதிவு என்பதே உண்மை. பதிவு நெகிழ்ச்சியினைத் தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே மறக்க முடியாத நிகழ்வுதான் ஐயா
      நன்றி

      நீக்கு
  6. அன்பு நண்பருக்கு, மூத்த தமிழறிஞர் மதிப்புமிகு இளங்குமரனார் அய்யா அவர்களின் எழுத்தாற்றல், அவையடக்கம், அயராத உழைப்பு, சமூகப் பற்று போன்ற போற்ற வேண்டிய பல பண்புகளுக்கு சிரம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். தங்களது தலைப்பு உண்மைதான் நண்பரே, அயராது உழைத்த அய்யா இனி சொர்க்கத்தில் ஓய்வெடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. உலகப் பெருந்தமிழர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களை சந்தித்தமை பற்றியும் அவர் ஆற்றிய பெரும்பணிகள் தொடர்பாகவும் பதிவுகளை தந்த தங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா,
    கொழும்பு, இலங்கை

    பதிலளிநீக்கு
  8. மூதறிஞர் இளங்குமரனார் புகழ் என்றும் வாழும்

    பதிலளிநீக்கு
  9. அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது.

    பதிலளிநீக்கு
  10. காலஞ்சென்ற முதுமுனைவர், தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களுக்கு என் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு