பனிப் பிளவு
கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும்
விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது?
சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும்
முதலில் புரியவில்லை.
கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த
இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.
பனிக் காற்று அவர்களின் காட்சியை
மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய
பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு
மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.