27 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 4


வெயிலில் வாடும் இரவு
     

நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிறது.

     என்ன இரவு 8.30 மணிக்கு, சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்ததா? யாரிடம் கதை விடுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை.


     பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதும், பூமி 90 டிகிரி செங்குத்தான் அச்சில் இருந்து இருபத்து ஒன்றரை டிகிரி சாய்வாக இருப்பதும் நாம் அறிந்த்தே.

      இதன் காரணமாகவே இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.

      ஆனால் இந்தக் கதையெல்லாம், பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் செல்லுபடி ஆகாது.

    இங்கே பகல் ஆறு மாதம். இரவு ஆறு மாதம்.
  
                              The trajectory of the sun above Concordia over a 24 hour period

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல், மார்ச் 21 ஆம் தேதி வரை சூரியன் தென் துருவத்தில் மறைவதே இல்லை.

     டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து, மார்ச் 21 ஆம் தேதிவரை, சூரிய வெளிச்சம் மெல்ல, மெல்லக் குறையும்.

    மார்ச் 21 முதல் ஜுன் 21 வரை சூரியன் தலைமறைவாகி, இருளையே பரிசாய் வழங்கும்.

    ஜுன் 21 முதல் வெளிச்சம் மெல்ல, மெல்ல தலை தூக்கி, செப்டம்பர் 21 முதல் மீண்டும் பகல் தொடங்கும்.

    இதுதான் அண்டார்டிகா.

    அதோ, தொலைவில் தெரிகிறதல்லவா.

   


 அதுதான்,

  தக்ஷின் கங்கோத்ரி.

                                                                             தொடரும்
56 கருத்துகள்:

 1. பகல் 6 மாதம் இரவு 6 மாதம் ஆச்சர்யமான விடயம் முதல் முறை அறிகின்றேன் நண்பரே... தொடர்கிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
 2. பள்ளியில் படித்த பாடங்களும் நினைவுக்கு வருகின்றன..

  தொடர்கின்றேன் - அடுத்து என்ன நிகழ்வினை அறியும் ஆவலுடன்!..

  பதிலளிநீக்கு
 3. இதுபோன்ற அறிவுபூர்வமான தகவல்களை நம்முடைய மாணவர்களின் பாட திட்டத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. வட துருவத்திலும் இப்படித்தான்- ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. தெற்கில் பகலென்றால் வடக்கில் இரவு
  தொடர்கிறேன் அண்ணா

  பதிலளிநீக்கு
 5. //செங்குத்தான் அச்சில் இருந்து இருபத்து ஒன்றரை டிகிரி சாய்வாக இருப்பதும் //

  இந்த சாய்வு கோணம் 21 1/2 டிகிரி சரிதானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்னல் அவர்களின் நூலில்இந்த கோணம்தான் குறிப்பிடப் பட்டிருந்தது ஐயா
   இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
  2. 23 1/2 டிகிரி என்பதுதான் சரி ,
   துருவங்களில் பகல் இரவு தொடர்பாக ஒரு பதிவு எனது ட்ராப்டில் உள்ளது செபடம்பர் 21 அன்று வெளியிடுவேன்.
   ஏற்கனவே மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்! வவ்வாலின் சூடான விவாதங்களுடன் கூடிய பதிவு

   நீக்கு
 6. படத்துக்குக் கவிதையான தலைப்பு”வெயிலில் வாடும் இரவு”!

  பதிலளிநீக்கு
 7. காடாறு மாசம் நாடாறு மாசம்னுதான் இதுவரை நான் கேள்வி பட்டது ,நீங்கள் சொல்வது புது செய்தி :)

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள கரந்தையார்,

  அண்டார்டிகா பற்றி இங்கே பகல் ஆறு மாதம். இரவு ஆறு மாதம்.

  வியப்பின் குறியீடு... அதிசயம்!

  நன்றி.
  த.ம. 7

  பதிலளிநீக்கு
 9. சகோநீங்ககணக்குவத்தியாருன்னுதான்னுதான்நினைத்தேன் ஆனாபுவீயியலிலுமா?

  பதிலளிநீக்கு
 10. ஆம் நண்பரே! தென் துருவ வட துருவ கால நிலைகள் இப்படித்தான்....

  ஒரு சிலர் இராமாயணத்தில் வரும் கும்பகர்ணன் ஆறுமாதம் உறங்குவான், என்று சொப்பப்பட்டதைக் கூட இந்த துருவங்களுடன் இணைத்துச் சொல்லுவதுண்டு....

  தொடர்கின்றோம் தங்களின் தொடரை...

  பதிலளிநீக்கு
 11. தெற்கில் பகல் என்றால் வ்ட துருவத்தில் இரவு...தெற்கில் இரவு என்றால் வடதுருவத்தில் பகல் இப்படித்தான் பூமியின் சுழற்சியில் ..

  பதிலளிநீக்கு
 12. மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறீர்கள்! படங்களும் அருமை! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 13. எப்போதோ கேட்டதாக நினைவு!

  பதிலளிநீக்கு
 14. அற்புதமாக விவரிதத்துள்ளீர்கள். கர்னலின் சாகசப் பயணம் தொடரட்டும் படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 15. Well done Mr.Jayakumar.Any mistake in geographical datas can be corrected by any person viewing this.After all I also had collected these informations from other books etc only.I also feel that indias middle line is 23 1/2 degree north from Equater and that the Earth is 21 1/2 degree away from vertical axis.There are geography ptofessors and doctorates amongst us and they are welcome to educate us.T.N Muralidharan may please correct us.Thanks to all viewers.

  பதிலளிநீக்கு
 16. அங்கம் நான்கு வாசித்தேன்
  நன்று...நன்று....

  பதிலளிநீக்கு
 17. படங்களுடன் வெகுசுவார்யஸ்யமான தொடர்.
  தொடர்கிறேன் சகோ.

  பதிலளிநீக்கு

 18. இந்த பதிவைப் படித்தபோது, பள்ளிப்பருவத்தில் படித்த வடதுருவம், தென்துருவம் என்ற பாடப் பகுதிகள் நினைவுக்கு வந்தன. தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 19. ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தை விறுவிறுப்பாகப் பார்ப்பதுபோல உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
 20. சுவாரசியமான பதிவு. போய்ப் பார்க்க முடியாத இடம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோதரியாரே
   நம்மால் காணஇயலாத இடம்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 21. 6 மாதம் பகல் , 6 மாதம் இரவா ? வியக்க வைக்கிறது ஐயா !

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோ,
  நாங்களும் சேர்ந்தே பயணிக்கிறோம். புகைப்படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. ஏற்கனவே கேள்விப்பட்டதை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வந்துவிட்டீர்கள் அய்யா நன்றி!.

  பதிலளிநீக்கு
 24. ஆமாம் ஐயா! நான் வாழும் ஜேர்மனியிலேயே நல்ல கோடை காலத்தில் அவ்வப்போது விடிய 4 மணிக்கே வெளிப்புடன் சூரியன் தலை தூக்கும். இரவு 10.00 ஆனாலும் சூரியன் மறையாது வெளிச்சம் தெரியும் நாட்களும் வந்துள்ளது. தூங்கவே முடியாது எம்மால்!...

  தொடர்கிறேன் ஐயா!..

  பதிலளிநீக்கு
 25. ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் இருந்தபோது இரவு 7 மணிக்கு பிரகாசித்த சூரியனைப்பார்த்து வியந்து நின்றேன்..

  பதிவும் படங்களும் அருமை.பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 26. பள்ளியில் படித்தது ஞாபகச் சுவற்றில்....
  அருமை... தொடர்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வெயிலில் வாடும் இரவு அத்தியாயம் பல அறிவியல செய்திகளை கொடுத்துள்ளது. தொடர்கிறேன்,

  பதிலளிநீக்கு
 28. ஆறாறு மாதங்களுக்கு ஒரே கால நிலை இருக்குமாயின் இது எவ்வாறு
  இருக்கும் !!!! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை வியப்பில் ஆழ்த்துகின்றது பகிர்வு .

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு