12 ஆகஸ்ட் 2015

ஒளி பிறந்தது


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
                                   பாரதியார்    நண்பர்களே, என் அலைபேசி அழைத்தது.

சார், நல்லா இருக்கீங்களா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குரலில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா கூறினார்கள்.

மகிழ்வினும் பெரு மகிழ்வு, தன் குழந்தையின் குரலினைக் கேட்பதில் அல்லவா இருக்கிறது.

   பிறந்த நாள் என்றால் என்ன? என்று கேட்கப் பெற்ற கேள்விக்கு, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வழங்கிய, பதில் இருக்கிறதே, அது ஒன்றே போதும்.


வாழ்க்கையில் அந்த ஒரே ஒரு நாள், உன்னுடைய அழுகுரல் குரல் கேட்டு, உன் தாய் சிரிப்பது.

    நண்பர்களே, அலைபேசியில் அழைத்து மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டவர் யார் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தவர்தான்.


  அமெரிக்காவின், நியூயார்க் நகரில் டாக்டர் பட்டம் பெற்றாரே, அந்த வெற்றி வேல் முருகன்.

ஆம் நண்பர்களே, அவரேதான்.

     பிறவியிலேயே பார்க்கும் வல்லமையினை இழந்தும், மூலையில் முடங்கி விடாமல், வீறு கொண்டு எழுந்து, வாழ்வின் தடைகளைத் தகர்த்து எறிந்து, சோதனைகளையே சாதனைகளாக்கிக் காட்டியவர்.
    

கடந்த 14.11.2013 அன்று, தன்னைப் போலவே, புறவிழிப் பார்வையற்ற நித்யாவை வாழ்வியல் இணையராக ஏற்று, புத்தம் புது வாழ்வைத் தொடங்கியவர்.

இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை, ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும், கண்ணே போல் போற்றிப் புரக்க நெஞ்சார வாழ்த்தினோமே, நினைவிருக்கிறதா?

நண்பர்களே, நம் வாழ்த்துதல் பலித்திருக்கிறது.

மழலை முத்துக் குமரன்

வெற்றிவேல் முருகன் நித்யா
தம்பதியினரின்
மழலை
முத்துக் குமரன்
ஒளி வீசும் கண்களோடு
பிறந்திருக்கிறான்.

தன் பெற்றோரை
கண்ணே போல்
போற்றிப் புரக்கப்
பிறந்திருக்கிறான்.

கடலூர் மருத்துவர்
திருமதி ஞான சௌந்தரி அவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்.
நம் வணக்கத்திற்கும் உரியவர்.

வணிகமயமாகி விட்ட இன்றைய மருத்துவ உலகில்,
தாய்மை உணர்வோடு,
தொடர்ந்து நித்யா அவர்களுக்கு
மருத்துவம் பார்த்து, தக்க அறிவுரைகளை வழங்கி
மழலை முத்துக் குமரனை
தன்  தாய், தந்தையரைக்
கண்ணாரக் காண வைத்திருக்கிறார்.


வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினரை
வாழ்த்துவோம்.

மருத்துவர் ஞான சௌந்தரி அவர்களைப்
போற்றுவோம்.
அவர்தம் தொண்டு தொடர

வாழ்த்துவோம், வணங்குவோம்.

.....................
நண்பர்களே, 
நண்பர் வெற்றிவேல் முருகன் அவர்களின் மின்னஞ்சல்


59 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் மழலைக்கும்
  மழலை பாக்கியம் பெற்றவர்களுக்கும்

  பதிலளிநீக்கு
 2. வெற்றிவேல்முருகன் - நித்யா தம்பதியினருக்கும், முத்துக்குமரனுக்கும் எங்கள் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதிவுகளின் மூலமாக அறிமுகமான வெற்றிவேல்முருகன் தம்பதியினரும் அவர்களுடைய மழலைச்செல்வமும் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. congratulations to Vetrivelmurugan and Nithya.our honour and respect toDr.Gnanasoundri.
  Thanks to Mr.Jayakumar for bringing out this news.

  பதிலளிநீக்கு
 5. ஆம் நண்பரே அன்று வாழ்த்தினோம் இன்று பவித்தது வாழ்க பல்லாண்டு,

  பதிலளிநீக்கு
 6. மனதிற்கு இனிய செய்தி அய்யா. வலையுலக நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள். மருத்துவருக்கும் பாராட்டுகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்...

  பதிலளிநீக்கு
 8. வெற்றிவேலுக்கு ஒரு வீர வேல். அவர் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் தொடக்கம் முதல் இன்றுவரை அவர் பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளை வரிசையாக நினைத்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. இனிய வாழ்த்துகள் என்றும் வளமுடன் வாழ வேண்டுகிறேன். படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்புங்க சகோ. விழாவிற்கு சென்று நாங்களும் வாழ்த்தியதாக தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. நினைவிருக்கின்றது நண்பரே! இவர்களைப் பற்றி முன்னரேயே நீங்கள் எழுதியுள்ளது...

  எங்களது வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
 11. வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினருக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 12. கம்பராமயண யுகத்தில் கண்ணிழந்த பெற்றோருக்கு சிரவணன் பிறந்தான்!
  கம்புயூட்டர் யுகத்தில் பிறந்த நீ சீரும் சிறப்பும் பெற்று நெடிது வாழ்க என மும்பை சரவணன் வாழ்த்துகிறான்!!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோ,
  எங்களின் வாழ்த்துக்களும், குழந்தையின் பிறப்பு அவர்களுக்கு ஒளியாகட்டும், வாழ்த்துக்கள்.
  நன்றி சகோ,

  பதிலளிநீக்கு
 14. அத்தம்பதியினர் எல்லாச் சிறப்புகளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். குழந்தைக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...! நெகிழ்ச்சியான ஒரு பதிவு ! நன்றி பதிவுக்கு !

  பதிலளிநீக்கு
 15. வெற்றிவேல் முருகன் தம்பதியினருக்கு நல்வாழ்த்துக்கள்! விழா சிறக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. தன் பெற்றோரை
  கண்ணே போல்
  போற்றிப் புரக்கப்
  பிறந்திருக்கிறான்.//

  மகிழ்ச்சி.

  வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினருக்கு வாழ்த்துகள். குழந்தை முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  மருத்துவர் ஞான சௌந்தரி அவர்களை மனதார பாராட்டி வாழ்த்தி வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!
  பகிர்விற்கு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  த ம +

  பதிலளிநீக்கு
 18. ''...நெஞ்சார வாழ்த்தினோமே, நினைவிருக்கிறதா?........ஆம்
  வெற்றிவேல் முருகன் தம்பதியினருக்கு நல்வாழ்த்துக்கள்! விழா சிறக்க வாழ்த்துக்கள்! இங்கு கருத்திட இன்னும் பிரச்சனையாகவே உள்ளது.....
  ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திடுவதில் பிரச்சினை தோன்ற காரணம் புரியவில்லை சகோதரியாரே
   நன்றி

   நீக்கு
 19. வெற்றிவேலின் முகவரி கேட்டிருந்தேனே. முடிந்தால் வசதிப்பட்டால் போய்ப்பார்க்கலாம் என்றுதான். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு அவரது பெங்களூர் முகவரி தெரியாது ஐயா
   அவரது அலைபேசி எண்
   95 97 784596
   அவரது மின்னஞ்சல் முகவரி
   avm124@gmail.com
   நன்றி ஐயா

   நீக்கு
 20. கண்களான கண்ணுக்கு வாழ்த்துகள்.

  த ம +1

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துகள்!
  கரந்தையாரின் மனிதாபிமானமிக்க இந்த பண்புமிக்க பதிவினை பாராட்டுவோம்!
  த ம 13
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 22. அன்புத் தம்பதிக்கும்
  அழகுக் குழந்தைக்கும்
  எமது வாழ்த்துகளைத்
  தெரிவியுங்கள்!!!

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்வு சிறக்கட்டும்

  பதிலளிநீக்கு
 24. இனிய வாழ்த்துகள். ஒளிபிறக்கட்டும் அந்த இனிய இனையர் இல்லற வாழ்வில்..........

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தம்பதியர் வாழ்வில் ஒளி பிறந்தது குறித்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 26. "குழலின்னிசையின்"

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 27. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. மனம் நெகிழ்கிறது. அற்புதமான தம்பதியினருக்கும் ஆசிபெற்ற அருஞ்செல்வத்துக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 29. இனி ஒரு விதி செய்வான் அய்யா...

  பதிலளிநீக்கு
 30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  திரு.வெற்றிவேல் முருகன் - நித்யா தம்பதியரின் மனம் குளிர வந்து பிறந்த முத்துக்குமரனை வாழ்த்துவோம். இந்த செய்தியை கேட்டவுடன் மனம் இறுக்கம் தளர்ந்து இலேசானது போல உணர்ந்தேன். வாழ்த்திய உள்ளங்களுக்கும் இறைவனுக்கும் மகப்பேறு சேவை செய்த மருத்துவர் ஞானசௌந்தரி அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு