22 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 2


கொந்தளிக்கும் கடலில்
     

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

     சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.
தமிழகத்தில் இருந்து ஐவர், கேரளத்தில் இருந்து மூவர், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், தில்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என 15 பேர் அடங்கிய கூட்டனியினர், கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், கோவாவில் இருந்து, தங்கள் கடல் வழிப் பயணத்தைத் தொடங்கினர்.

    ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான்.


கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு. மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்.

     அண்டார்டிகா சென்றடைவதற்குள் ஒன்பது முறை கால மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. கடிகார முள்ளை நாமே திருப்பி, நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

     கப்பலில் தன் அறையில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம், கர்னல், தான் கொண்டு வந்த ஒரு பையினை, ஆசை தீர தொட்டுப் பார்ப்பார்.

    தன் சொந்த ஊரான சன்னா நல்லூரில் இருந்தும், தனது வசிப்பிடமான சென்னை, அண்ணா நகரில் இருந்தும், தான் பணியாற்றிவரும் ஜம்மு காஷ்மீரில் இருந்தும் கொண்டு வந்த மண், இந்தப் பையில் அல்லவா இருக்கிறது.

      தாய் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி. வழி நெடுக தனக்கு ஊக்கமும், தளரா தன்னம்பிக்கையினையும் அல்லவா, வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தாய் மண்.

   டிசம்பர் 10 ஆம் நாள். பயணத்தின் 15 ஆம் நாள் கப்பல் மெதுவாக, முதலில் மெதுவாகத்தான் ஆடத் தொடங்கியது. காரணம் கடல் கொந்தளிப்பு. நேரம் செல்லச் செல்ல, கடல் கோபத்தின் உச்சிக்கே சென்று கொந்தளிக்கத் தொடங்கியது.

    கப்பலில் இருந்த பொருட்கள் எல்லாம், மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கின. சரியான பிடிப்பு இல்லாத கட்டில்கள், மேசைகள், நாற்காலிகள் அனைத்தும் தலை கீழாய் புரண்டன்.

    ஆய்வுக் குழுவினர் பலரும், வாந்தி எடுத்து, நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், ஒவ்வொருவராய் மயங்கி விழத் தொடங்கினர்.

                                                             தொடரும்


52 கருத்துகள்:

 1. பரபரப்பான இடத்தில் 'தொடரும்'

  :))))

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. சாதனையின் சிகரம் தொடுதற்குத் தான் எத்தனை எத்தனை சிரமங்கள்!..

  பதிலளிநீக்கு
 3. சாதிப்பதுஅத்தனை சுலபமல்லவே மயங்காமலிருந்தவர்கள்யார் என்றுபார்ப்போம் சகோ.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா!

  உறைபனி உறைய விடாமல் எம்மை விறுவிறுப்பாக இருக்க வைக்கிறது
  தங்களின் எழுத்து! அருமை!
  சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!..
  த ம 3

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் நண்பரே... விறுவிறுப்பாக செல்கிறது களம் தொடர்கிறேன் உண்மையே சொந்தமண்ணை தொட்டுப் பார்ப்பதில் ஒரு சுகம் உண்டு.
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 6. அடுத்தது என்ன நடக்குமோ என்று ஆவலுடன் எதிர்பார்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோ,
  அடுத்து என்ன???????தொடர்கிறோம்,,,,,,,

  பதிலளிநீக்கு
 8. சாதிக்க இருப்பவர்கள் சோதனையிலிருந்து தாங்களே மீண்டு விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
 9. படிக்கப் படிக்க விறுவிறுப்பாக உள்ளது. தொடர்ந்தும வருகிறோம்.

  பதிலளிநீக்கு
 10. விறுவிறுப்பாக பயணிக்கின்றது கப்பல்...தென் துருவத்தை நோக்கி...பரபரப்பான இடத்தில் தொடரும்...காத்திருக்கின்றோம்...தொடர்கின்றோம்...நிச்சயமாக மீண்டிருப்பார்கள்..

  பதிலளிநீக்கு
 11. புதியன தேடிப் புறப்பட்ட பயணமெலாம் பொதியெனத் துயரம் தாங்கிய தெனலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துயரம் தொடரும் பயணம்தானே
   இறுதியில் மகிழ்வினைத் தரும்
   நன்றி ஐயா

   நீக்கு
 12. ஆவலுடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  தென் துருவப் பயணம் பர பரவென செல்கிறது. பதட்டமாகவும் இருக்கிறது. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ஒரு பயணத்தொடரை மிகவும் எதிர் நோக்கும் நேரத்தில் தொடரும் என்கிறீர்களே வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்
  ஐயா
  விறுவிறுப்பாக உள்ளது தொடருங்கள் அடுத்தது என்னவென்று அறிய ஆவலாக உள்ளோம்..த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 17. மண் வாசம் புத்துணர்வைத்தரும் அடுத்த அங்கம் காணும் ஆவலுடன்.

  பதிலளிநீக்கு
 18. தாய் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 19. திகில் நிறைந்த பயணத்தை நாமும் தொடர்வோம்..........

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள அய்யா,

  உறை பனி உலகில் ...கொந்தளிக்கும் கடலில் 1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பலில் வீரர்கள் 12,000 கிமீ தொலைவு பயணத்தைத் தொடர்ந்ததைத் தொடர்ந்தது விறுவிறுப்பு.

  நாங்கள் மும்மை கடலுக்குள் ‘போட்டில்’ சென்று திரும்புகின்ற நேரத்தில் இருள் கவ்வத்தொடங்கியிருந்தது... காற்று, மிகுந்த வேகத்துடன் அடிக்க... படகிலோ அளவிற்கு அதிகமானபேர் ஏறி இருந்தனர். காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் படகு தத்தளிக்கிறது. நாங்கள் எல்லாம் ‘உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு’ என்று சொல்வார்களே அப்படி அமர்ந்திருந்தோம்...........!

  நன்றி.
  த.ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா
   இதுபோன்றஅனுபவத்தை தாங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்
   நன்றி ஐயா

   நீக்கு
 21. ஒரு மர்ம நாவல் போல் விறுவிறுப்பாக செல்கிறது தொடர். அடுத்த அத்தியாயத்தை படிக்க ஆவல் மேலிடுகிறது.
  தொடர்கிறேன் நண்பரே!
  த ம 9

  பதிலளிநீக்கு
 22. விறுவிறுப்பான பயணம். மெய் சிலிர்க்க வைக்கிறது. தொடர்ந்து நாங்களும் பயணம் செய்கிறோம்

  பதிலளிநீக்கு
 23. அருமையாக எழுதிக்கொண்டு போகிறீர்கள்! தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 24. சாகசங்கள் நிறைந்த பயணம். சரியான இடத்தில் தொடரும்.... :)) தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. தாய்மண்ணை பற்றி படித்து வரும்போது மிகச் சரியான இடத்தில் தொடரும்...
  காத்திருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 26. பரந்த கடலில் தாய் மண்ணைத் தொட்டுப்பார்த்தல் எத்துணை உணர்ச்சியைக் கொடுக்கும்!!
  உங்கள் எழுத்தில் உணர வைக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 27. கர்னல் அவர்களால் சன்னா நல்லூர் மண் பேறுபெறபோகிறது

  பதிலளிநீக்கு
 28. அருமையான இத் தொடரின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்
  என்று தேட வைக்கின்றது வாழ்த்துக்கள் சகோதரா !

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு