அண்டார்டிகா
உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40
டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை
அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.
அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா
சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற்
பகுதி ஆகும்.
தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
ஆனாலும் அனைவரின் முயற்சியும்
தோல்வியில்தான் முடிந்தது.
கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட
பிரான்சிஸ் ட்ரேக் (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த
சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.
உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று
எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக்
அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.
எனவே இப்பகுதி இன்றும் ட்ரேக் பாதை (
Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.
இப்பகுதியைக் கப்பல் கடக்கும் பொழுது,
மிகப் பெரிய கடல் கொந்தளிப்பை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
இரண்டு மகா கடல்கள் சங்கமிக்கும் பகுதி
என்பதால், கடல் கொந்தளிப்பானது, இடதும் வலதுமாய், முன்னும் பின்னுமாய் கப்பலை
அலைக் கழிக்கும்.
பொதுவாக கப்பல், இப்பகுதியைக் கடப்பதற்கு
நான்கு நாட்களாகும். நான்கு நாட்களுமே, ஒரு நொடி கூட, அமைதியாய் இராத கடலில்தான்
பயணித்தாக வேண்டும். தூங்க முடியாது, உட்கார முடியாது, நிற்கக் கூட முடியாது. வேறு
வழியில்லை, சமாளித்துத்தான் ஆக வேண்டும்.
அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரடையவே,
ஆய்வுக் குழுவினர், ஒவ்வொருவராய் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும்
ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும்
அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்.
டிசம்பர் 13 ஆம் நாள், கப்பல் குளிர்
பிரதேசத்தை மெதுவாய் நெருங்கியது. குளிர் மெல்ல மெல்ல, உடலின் நாடி நரம்புகளில் எல்லாம்
நுழையத் தொடங்கியது.
பனிப் பாறைகள் ஒன்றிரண்டு கடலில் மிதக்கும்
காட்சியைக் கண்டார்கள்.
அப் பனிப் பாறையின் அளவு என்ன தெரியுமா?
110 கிமீ நீளம், 75 கிமீ அகலம். நாம் வசிக்கும் ஊரினை விட பெரிய பாறை, ஒரே
பாறையாய் கடலில் மிதந்தால் எப்படி இருக்கும்.
இரண்டாம் நாள் நீலக் கடல், வெண் பனிப்
பரப்பாக மாறும் அற்புதக் காட்சியைக் கண்டார்கள்.
கப்பலின் தலைவர், ஹெலிகாப்டரில் பறந்து, உறை
பனி குறைவாக உள்ள இடங்களைக் கண்டு, அவ்வழியே கப்பலைச் செலுத்தத் தொடங்கினார்.
டிசம்பர் 20. இரவு 8.30 மணி. கப்பலின் தலைவர்
அறிவித்தார்.
தக்ஷின் கங்கோத்ரியை அடைந்து விட்டோம்.
ஆய்வுக் குழுவினர் மகிழ்ச்சியோடு, கப்பலின்
மேல் தளத்திற்கு ஓடினார்கள்.
சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக்
கொண்டிருந்தது.
மணியோ இரவு 8.30.
உச்சி வெயிலோ மண்டையைப்
பிளந்து கொண்டிருந்தது,
தொடரும்
இரவில் வெயிலா ? ஆச்சர்யமாக இருக்கிறேதே ? நள்ளிரவில் சூரியன் தோன்றும் நார்வே நாடுபோல் தொடர்கிறேன் நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் இணைப்புடன் ஒன்று
தமிழ் மணம் இணைப்பிற்கும் முதல் வருகைக்கும்
நீக்குநன்றி நண்பரே
அதிசயம், ஆச்சர்யம் அனைத்தும் கலந்த தொடர். தொடர்ந்து வருகிறோம். தமிழ் மணம்+1
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஆம்சகோகடல் மிகவும்விநோதமானதே,நார்வேயில்தான் இரவில் வெயில் இருக்கும்
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரியாரே
நீக்குநன்றி
இரவில் வெயிலா ,அப்போ பகலில் நிலவொளியா ...ஆச்சரியமா இருக்கு :)
பதிலளிநீக்குஉலக விந்தைகளில் இதுவும் ஒன்று நண்பரே
நீக்குநன்றி
அருமையான பயணம்..தொடர்கின்றோம்..
பதிலளிநீக்குஆம் அண்டார்டிக்காவில் இரவும் வெளிச்சாம் இருக்கும்...
உண்மை நண்பரே
நீக்குஆறு மாதம் வெளிச்சம்
ஆறு மாதம் இரவு
விநோதமான உலகம் அண்டார்டிகா
நன்றி நண்பரே
ஆறு மாதங்கள் ஒரு நாள் போல..
பதிலளிநீக்குஇனி என்ன நடக்கப் போகிறது? தொடர்கிறேன்
உண்மைதான் சகோதரியாரே
நீக்குஒரு நாள் போல, ஆறு மாதங்கள் இருந்தால்
நினைத்துப் பார்க்கவே வியப்பாகஇருக்கிறதல்லவா
நன்றி சகோதரியாரே
விறுவிறுப்பான தொடர்!
பதிலளிநீக்குதொடர்ந்து....
த ம +1
நன்றி சகோதரி
நீக்குஅவர் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்..
பதிலளிநீக்குசிறந்த கண்ணோட்டம்
பதிலளிநீக்குபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
தங்களின் தளத்தில் இணைந்து விட்டேன் ஐயா
நீக்குநன்றி
சாகசப் பயணத்தைத் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குExcellant presentation Mr.Jayakumar.There is small correction in your interpretation.The passage between 40 and 60 latitude towards South Pole,no doubt is the most dangerous place in the sea voyage and you can call it as dark passage.But what I had written is different.The search for land towards south pole had been going on since 6th centuary BC.In September 1578 a scientist by name Francis Drake was trying to cross this passage and experienced extra-ordinary sea disturbance and narrowly escaped alive .He studied the reason and found that the sea is circum navigating Antarctica with out any land interference.and warned all mariners about the danger. Since then this passage is named after him as DRAKE PASSAGE.The crossing experience will be worst than "Posidon adventure" an english FILM.
பதிலளிநீக்குவருகைக்கும்
நீக்குதிருத்தத்திற்கும் நன்றி ஐயா
இதோ திருத்தம் செய்து விடுகிறேன்
நன்றி ஐயா
ஆர்வத்துடன் படித்தேன். தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவிழிகள் வியப்பினால் விரிகின்றன.. கண்முன் காட்சிகள் தெரிகின்றன..
பதிலளிநீக்குஅண்டார்டிகாவில் பயணிக்கும் கப்பலைத் தொடர்கின்றேன்..
நன்றி ஐயா
நீக்குமிகவும் ஆச்சரியமான நிகழ்வை அற்புதமாக பகிர்ந்திருக்கிங்க தொடருங்கள் சகோ. தொடர்கிறோம்.
பதிலளிநீக்குஇவர்கள் போய்ச் சேரும் முன்னரே அந்த இடம் தக்ஷிண் கங்கோத்ரி என்று பெயரிடப்பட்டு விட்டதா.? தொடர்கிறேன்
பதிலளிநீக்குஐயா, தங்களின் கேள்விக்கு திருமிகு கர்னல் அவர்களின் விளக்கம் இதோ
நீக்குRespected Balasubramaniam sir,Indian Antarctic venture started in 1981.For two years ie 1981 and 1982 the research team used to hire a ship,go to Antarctica,stay for about a month there and return.The 1983 team consisting of about 90 summer team and about 12 winter team went to Antarctica constructed a permenent station ,named it DAKSHIN GANGOTRI,and left the winter there and returned.Since then a resaech team consisting of summer and wintering members leave India in November(summer in Antarctica) reach Antarctica in Dec and carry out research works for about a month,or two and leave the winter team there and return.This used to be the nature of work.(More as Mr.Jayakumar proceeds)
நன்றி ஐயா
சுவாரஸ்யமும் ஆர்வமும் அதிகரிக்கின்றது! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குRespected Balasubramaniam sir,Indian Antarctic venture started in 1981.For two years ie 1981 and 1982 the research team used to hire a ship,go to Antarctica,stay for about a month there and return.The 1983 team consisting of about 90 summer team and about 12 winter team went to Antarctica constructed a permenent station ,named it DAKSHIN GANGOTRI,and left the winter there and returned.Since then a resaech team consisting of summer and wintering members leave India in November(summer in Antarctica) reach Antarctica in Dec and carry out research works for about a month,or two and leave the winter team there and return.This used to be the nature of work.(More as Mr.Jayakumar proceeds)
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குவியக்க வைக்கும் செய்திகள் நிறைந்த ப்கிர்வு
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குgood expression with attractive photographs.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதிகிலும் சுவையும் கூடிய பதிவு ....
பதிலளிநீக்குஅதிசய்மான பயணம்... நல்ல விறுவிறுப்பு...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநம் நாட்டிலேயே மேற்குப் பகுதியில் இரவு எட்டு மணி வரை வெயில் இருக்கும். மாலை ஏழரை மணி என்பது இங்கே ஐந்தரை போல் இருக்கும். எட்டு மணிக்கப்புறம் தான் மெல்ல மெல்ல அஸ்தமிக்கும். :) இது இன்னும் ஆச்சரியம் அளிக்கிறது.
பதிலளிநீக்குஉண்மையில் வியப்பிற்குரிய செய்திதான் சகோதரியாரே
நீக்குஅண்டார்டிகாவில் தொடர்ந்து ஆறு மாதம் வெயில், அடுத்த ஆறு மாதம் இருள்
கற்பனை செய்து பாருங்கள்
நன்றி சகோதரியாரே
விறுவிறுப்பான சாகசப் பயணக்கதை போல உள்ளது. விவரிப்பு அருமை தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஇரவில் சூரியஒளியா ஆச்சரியம் தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமையா தொடர் ஆச்சர்யம் மிக்க தொடர் ஆதலால் கண்டிப்பாகத் தொடர்ந்து படிப்போம் தொடருங்கள் சகோதரா நாமும் தொடர்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரா .படங்கள் அருமை !
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குமிகவும் விறுவிறுப்பாக உள்ளது..
பதிலளிநீக்குவாசித்தேன்
பதிலளிநீக்குநன்று...நன்று....
தண்ணீர் உறைந்தால் பயணிக்க முடியாது... அப்போது கோடை வரும் வரை கப்பலில்தான் இருக்க வேண்டுமா...
பதிலளிநீக்குஆத்தி.... அது சரி....
வாசித்தேன்... ரசித்தேன்,
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபரபரவென செல்லும் தங்கள் தொடரினை ஆவலுடன் தொடர்கிறேன்.
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குபரபரவென செல்லும் தங்கள் தொடரினை ஆவலுடன் தொடர்கிறேன்.