கடவுள் எங்கே? என நான் கேட்ட பொழுது,
எங்கும் என பதிலுரைத்தது அறிவு. ஆனால் அன்போ இங்கே எனத் தன்னையே சுட்டிக் காட்டிக்
கொண்டது.
அன்பென்னும் நேரான பரந்த, செழிப்பான பாதை
தன் முன்னே விரிந்திருக்க, மதங்களென்னும் குறுகிய, ஒற்றடிப் பாதைகள் வழியே
சென்றவாறு, உன்னைக் காண, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மதங்கள்
வழிகளாயினும், அவைகள் மட்டுமே வழிகளென்பதல்ல.




