ஆண்டு 2011.
அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப்
படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.
பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த
பெண்மணி.
வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.