28 ஏப்ரல் 2015

எழுதுகோலே இவர் தெய்வம்


எல்லாரும் வாருங்கள்
எழுந்து நடக்கலாம்
இத்தனை நாள் நடந்ததெல்லாம்
என்னவென்று பார்க்கலாம்
என்று நம்மை அழைத்தவர் ஜெயகாந்தன்.

     சித்தாந்தத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. சித்தாந்தங்களைப் பயின்றுவிட்டு எழுதுகிறவர்கள், அந்த நிறுவனங்களில் வேலைக்குப் போவதுதான் சரி.

இளைஞர்கள் முதலில் எழுத வேண்டும். நீங்கள், நல்ல மனிதராயிருந்து, நல்ல இதயத்தோடு, இந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்
எனஇளைஞர்களை அழைத்தவர் ஜெயகாந்தன்.

சிறுகதை மன்னனா நான்?

என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதை சக்கரவர்த்திகளையேச் சந்தித்துவிட்டு வந்தவன்.


யார் அந்த சக்கரவர்த்திகள்?

கிராமப் புறங்களில், வயலோரங்களில், மரத்தடியில், நடை பாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

     வாழ்வைப் படித்தவர் ஜெயகாந்தன். வறுமையைப் படித்தவர் ஜெயகாந்தன். மக்கள் மனங்களைப் படித்தவர் ஜெயகாந்தன்.

      இத்தனையையும் படித்தவர், பள்ளி சென்று படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே.

     நான் வாழ்வின் மகத்துவத்தை மகாகவி பாரதி மூலம் பயின்றேன். நான் படிக்காத காலத்திலும் கூட என் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அது மகாகவி பாரதி புத்தகம். அதன் மூலம் வாழ்க்கையை நான் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும், ஆத்மார்த்தமாகவும் அறிய முடிந்தது.

எழுதுகோல் என் தெய்வம்
என்றே வாழ்ந்தவர் ஜெயகாந்தன்.

கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன்
காசு தராவிட்டால்தான் என்ன?
பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன்
எழுத்து எனக்கு சிவனமல்ல
அது என் ஜீவன்

என்று முழங்கிய ஜீவன் இன்று இல்லை.

வாழ்வதன் முன்னம்நான் செத்திருப்பேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்

என்று முன்னமே எழுதிய,
தமிழ் எழுத்தாளர்களின்
கம்பீர முகம்
ஜெயகாந்தன்

இன்றும், என்றும், என்றென்றும்
தமிழ் எழுத்துக்களில் வாழந்து கொண்டேயிருப்பார்.

41 கருத்துகள்:

  1. உங்களின் இந்தப் பதிவு, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு ஒரு நல்ல அஞ்சலி. உங்கள் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. பெரும் புலவர்கள் முறையான பள்ளிக்கல்வி பயிலாமலேதான் இலக்கியம் படைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அவர் வாழ்க்கையைப் பார்த்த விதமும், பார்க்க வைத்த விதமும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  4. ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி. நானும் பங்கு கொள்கிறேன். பல பெரியோர்கள் பள்ளிக்கல்வி கூட முடிக்காமலேயே வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  5. ஜே.கே. அவர்கள் - என்றென்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

    பதிலளிநீக்கு
  6. ஜெயகாந்தன் என்ற ஆளுமையுடன் மாணவப் பருவத்தில் இருந்தே பழகியவன் நான். விகடனில் அவர் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து ஒன்று விடாமல் அவரைப் படித்திருக்கிறேன். அவரது மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்றே. தமிழ் இலக்கிய உலகின் அழிக்க முடியாத படைப்புகள் அவருடையவை.

    பதிலளிநீக்கு
  7. ஜெயகாந்தன் என்ற ஆளுமையுடன் மாணவப் பருவத்தில் இருந்தே பழகியவன் நான். விகடனில் அவர் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து ஒன்று விடாமல் அவரைப் படித்திருக்கிறேன். அவரது மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்றே. தமிழ் இலக்கிய உலகின் அழிக்க முடியாத படைப்புகள் அவருடையவை.

    பதிலளிநீக்கு

  8. ஐயா,ஜெயகாந்தன் எனக்கு ஞானாசிரியன் மேடையில் முழங்கும் போது இவரின் கூற்றுக்களை கூறாமல் இருந்தது கிடையாது.
    இனி யார் இருக்கிறார்கள். ரிக்ஷா தொழிலாளி, சவரம் செய்பவன், பூ விற்பவள், மூட்டை தூக்குபவன் இந்த எளிய மனிதர்களிடம் இருக்கும் மனித உயர்வை எடுத்துக்காட்டியவர் இவரை விட தமிழுலகத்தில் வேறு எவரேனும் உண்டோ..
    சீர்திருத்தம், சினம், பண்பு, தன்மானம், சுயமரியாதை போன்ற எத்தனையோ குணங்களை கற்றுக்கொடுத்தவர் பெருமகன்.
    இவரது படைப்புகளை படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர் வரும். வேறுயாருக்கும் அழாத இந்த.......
    என் தந்தை இறந்த போது அழவில்லை
    இந்த ஞானத்தந்தை இறந்த போது மூன்று தினங்கள் அழுதேன்.
    எழுத்தில் வாழ்வார் என்னை வழி நடத்துவா

    பதிலளிநீக்கு
  9. 1991 ம் ஆண்டு தஞ்சை இராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்த இலக்கிய விழாவில் சந்தித்து பேசினேன். கையெழுத்து வாங்கினேன். சிங்கம் போல் இருந்தார் கர்ஜித்தார் "சரவணா உனக்கு சரி என்று பட்டதை தைரியமாகச் செய் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு செய்யாதே" எப்படியாப்பட்ட வார்த்தை...
    மும்பைத் தமிழ்ச்சங்கத்தில் உடனே இரங்கல் கூட்டம் வைக்கவில்லை பிடித்தேன் ஒரு பிடி வார்த்தை சவுக்கால் விளாசினேன். ஜே.கே பாணியிலே....... விடிவு கிடைத்தது. இங்கு மே 1ம் தேதி ஜெயகாந்தனுக்கு இரங்கல் கூட்டம்.
    மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
  10. பலரது உள்ளங்களில் பல வித தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் அவரது எழுத்துக்கள் பலவற்றைப்படித்திருக்கிறேன் மலைத்து நின்றது உண்டுஒரு எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் எழுதியது போதும் என்றும் நிறுத்திக் கொண்டார்.சம்பிரதாய இரங்கல் அஞ்சலி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர், எதிர் பார்த்தும் இருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
  11. ஜெகே பற்றிய வித்தியாசமான பார்வையில் உங்களுக்கே உரிய தனித்துவத்தோடு...

    அருமை ஐயா!

    த ம 4

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. Jayakanthan has revealed different personality to different people according to their indepth philosophy.For me ,"oru nadagai nadakam parkkiral" and "Riashimoolam""are great stories.
    Thanks Mr.Jayakumar.

    பதிலளிநீக்கு
  13. வாசகர் நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். என்றும் வாசகர்கள் மனதினில் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  14. கம்பீரமான மனிதரைப் பற்றிய அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  15. பாரதி, கண்ணதாசன், ஜேகே - இம்மூவரின் ஞானச் செருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  16. //வாழ்வைப் படித்தவர் ஜெயகாந்தன். வறுமையைப் படித்தவர் ஜெயகாந்தன். மக்கள் மனங்களைப் படித்தவர் ஜெயகாந்தன். எழுதுகோல் என் தெய்வம் என்றே வாழ்ந்தவர் ஜெயகாந்தன்.//

    பள்ளி சென்று படிக்காததோர் மேதையைப்பற்றி சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லியுள்ளது, அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. ஞானச்செருக்குள்ள படைப்பாளி ஜெகே. அருமையான அஞ்சலிப்பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  18. எழுதுகோல் என் தெய்வம்... அடடா அற்புதமான மனிதரைப்பற்றிய பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
  19. அருமை நண்பரே சிம்மசொப்பனம் அவர்களைப்பற்றிய தங்களின் பதிவு அருமை வாழ்த்துகள்
    தமிழ் மணம். 9

    பதிலளிநீக்கு
  20. காலத்தின் அடையாளமாய் சிலரால் மட்டுமே இருக்க முடியும். அதில் இந்த எழுத்துச் சக்கரவர்த்தி முதன்மையானவர்.- நாகை ஜவகர்

    பதிலளிநீக்கு
  21. எழுத்துகளை தன் கைக்குள் அடக்கி ஆண்ட அற்புதமான எளிய மனிதர் ஜெயகாந்தன்...

    வெகு சாதாரணமாக சைக்கிள் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கியவரை வெகு நெருக்கத்தில் கண்டேன். அகந்தை இல்லை, தான் என்ற மமதை இல்லை... இவரிடம் அடக்கமும் பக்குவமும்... ஆனால் இவர் எழுத்துகளோ ஆளுமை செய்தது மக்களின் மனங்களை...

    அற்புதமான பகிர்வு சார்... அன்பு நிறைந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  22. ஜே கே ஆளுமை நிறைந்த எழுத்தாளர். நிறைய கதைகள் வாசித்திருக்கின்றோம். அவரது நடையே தனிதான். தமிழ் உலகத்திற்கு அவரது இழப்பு பெரும் இழப்பு......அருமையான பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  23. வாழ்வதன் முன்னம்நான் செத்திருப்பேன்
    செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
    எத்துனை உண்மையான வரிகள், அருமை.

    பதிலளிநீக்கு
  24. ஜெயகாந்தன் இன்னும் வாழ்கிறார் தன் எழுத்துக்களில்/

    பதிலளிநீக்கு
  25. திரு ஜெயக்காந்தனின் இழப்பு! தமிழ் சிறுகதை இலக்கியத்தின் இழப்பு! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  26. எழுத்துலகில் ஜெயகாந்தனின் தாக்கம் அதிகம் .ஜெ.கே பற்றிய உங்களது பாணியில் அழுத்தமாகக் கூறியது அருமை

    பதிலளிநீக்கு
  27. அவரின் சிறுகதையில் 'சினிமாவுக்கு போன சித்தாளு ' எனக்கு ரொம்ப பிடிக்கும் :)

    பதிலளிநீக்கு
  28. ஒரு அருமையான எழுத்தாள‌ருக்கு அருமையான அஞ்ச‌லி! அவரின் 'பொம்மை' என்ற சிறுகதை இள‌ம் வயதில் அப்படியே மனதை உறைய வைத்தது இப்போது நினைவில் எழுகிறது!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    ஐயா
    உலகம் நேசிக்கும் உன்னத மனிதன் பற்றி மிகச் சிற்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அவர்மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கறது. பகிர்வுக்கு நன்றி.த.ம 13
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. புகழின் உச்சியில் இருந்தபோதே, எழுதுவதை நிறுத்திக் கொண்டார் ஜெயகாந்தன். எத்தனை பேருக்கு அத்தகைய முடிவெடுக்கும் எண்ணம் வரும்?

    பதிலளிநீக்கு
  31. முகமூடி இல்லாத எழுத்தாளர்,,தனக்கே உரிய கம்பீரத்திற்கு சொந்தக்காரர்.நன்று சகோ

    பதிலளிநீக்கு
  32. வாழ்வதன் முன்னம்நான் செத்திருப்பேன்
    செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்

    அவர் கூற்று உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  33. ஜேகேயின் படைப்பினை மட்டும் வைத்து அவருக்கு செலுத்தப்பட்ட முறையான புகழஞ்சலி
    தம +

    பதிலளிநீக்கு
  34. ஜெயகாந்தனுக்குத் தாங்கள் செலுத்தும் அஞ்சலியில் நானும் கலந்துகொள்கிறேன். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  35. அருமையான பதிவு! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  36. சிறப்பான எழுத்தாளருக்கு சீரிய இரங்கல் பதிவு.

    எனது அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா05 மே, 2015

    ''..இன்றும், என்றும், என்றென்றும்
    தமிழ் எழுத்துக்களில் வாழந்து கொண்டேயிருப்பார்...''
    ஆம் இவர் இறவாத வரம் பெற்றவர்.
    நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
    சகோதரா எனது விழா முன் -பின்னெடுப்புகள்
    காரணமாக வர தாமதம் ஆனது.

    பதிலளிநீக்கு
  38. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    எழுத்துச்சித்தர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய தங்களின் இந்தப் பதிவு அவருக்கு உரிய நேரத்தில் தாங்கள் தொடுத்த அருமையான ஒரு புகழ்மாலை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    எழுத்துச்சித்தர் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய தங்களின் இந்தப் பதிவு அவருக்கு உரிய நேரத்தில் தாங்கள் தொடுத்த அருமையான ஒரு புகழ்மாலை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. நல்ல படைப்பாளிகள் மறைவதில்லை...வாசகர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வழி காட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்..அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர்,,...உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு