30 ஏப்ரல் 2015

சரித்திரம் படைக்கும் சன்னா நல்லூர்

     

ஆண்டு 1962. தஞ்சாவூர் மாவட்டம். மெலட்டூர். வெட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த, அணைக் கட்டை, நீர் தேக்கும் கண்மாயாக மாற்றி அமைக்கும் பணி நிறைவுற்ற நிம்மதியில் நிற்கிறார், அந்தப் பொதுப் பணித் துறையின் இளம் பொறியாளர்.

     தமிழக முதல்வர் கர்மவீரர் காமராசரும், பொதுப் பணித் துறை அமைச்சர் ராமையா அவர்களும், விவசாயத் துறை அமைச்சர் கக்கன் அவர்களும், பல முறை நேரில் வந்து பார்வையிட்ட, கண்மாய் பணி நிறைவுற்றிருக்கிறது.

    ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் மட்டுமல்ல,அந்த இளம் பொறியாளர் உள்ளத்திலும், ஏதேதோ எண்ணங்கள், கரை புரண்டோடிக் கொண்டிருக்கின்றன. பணி நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை, ஓர் நிறைவு இல்லை.


      பணம் பணம் என ஒவ்வொருவரும் அலையாய் அலைவதையும், வாழ்வென்பதே பணத்திற்காகத்தான் என பாடாய், பாடுபடுவதையும் நேரில் கண்டதால் ஏற்பட்ட சலிப்பு, உள்ளத்தை நெருடிக் கொண்டே இருக்கிறது.

     பணத்தை மட்டுமே தேடி ஓடுவதுதான் வாழ்வின் குறிக்கோளா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. வாழ்வில் சாதிக்கக் கூடிய சாதனைகள் எவ்வளவோ, நமக்காகக் காத்திருக்கின்றன.

     சட்டைப் பையில் இருந்து, பணக் கட்டு ஒன்றினை வெளியே எடுக்கிறார். இரண்டு ரூபாய் கட்டு. நூறு சலவைத் தாள்கள்.

      இன்று இரண்டு ரூபாய் நோட்டுக்களே புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. ஆனால் 43 வருடங்களுக்கு முன், இரண்டு ரூபாய் நோட்டின் மதிப்பே தனி.

     ஒரு நொடி சிந்தித்தவர், அடுத்த நொடி, இரண்டு ரூபாய் கட்டை, ஆற்று வெள்ளத்தில் வீசினார்.

      நூறு வெண் புறாக்களைப் பறக்க விட்டதைப் போல், நோட்டுகள், ஒவ்வொன்றும் காற்றில் படபடத்து, உயரே, உயரே பறந்து, பின் மெதுவாய், மிக மெதுவாய், ஆற்றில் இறங்குகின்றன.

         ஆற்றின் இரு கரைகளிலும் கூடியிருந்த மக்களில் பலர், ஆற்றில் குதித்து, வேகமாய், வெகுவேகமாய் நீந்துகின்றனர், ரூபாய் நோட்டுக்களை எடுக்க.

    ஆற்றில் நீந்தும் மனிதர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த, அந்த இளம் பொறியாளர், அக்கணமே ஓர் முடிவுக்கு வருகிறார்.
இனி வேண்டாம் இந்த வேலை.

     இராணுவத்தில் சேர்ந்தார்

     1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இரு இந்திய, பாகிஸ்தான் போர்களில் பங்கு கொண்டார். விழுப்புண் விருது ( Wound Medal )  உட்பட 13 மெடல்களை இவரை நாடி வந்து பெருமையடைந்தன.

விருதுகளின் உச்சமாய், உன்னதமாய் ஓர் விருது
குடியரசுத் தலைவரின் திருக்கரங்களால்
வசிஷ்ட சேவா விருது.


இவரது சாதனைகளின் உச்சம்
தக்ஷிண் கங்கோத்ரி

     இந்தியத் தென் துருவ ஆய்வுத் தளமான தக்ஷிண் கங்கோத்ரிக்கு தலைமைப் பொறுப்பேற்று, ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்களை, பூமிப் பந்தின் தென் துருவத்தில், உறை பனி உலகில் கழித்தார்.

     தென் துருவத்திற்குச் செல்லும் முன், தன் சொந்த ஊருக்குச் சென்று, தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் இருந்து, மண் எடுத்துச் சென்று, மணல் என்பதே எங்கும் இல்லாத, பனிப் பிரதேசத்தில் தூவினார்.

     தென் துருவத்தில் இன்று இவரது வீட்டு மணலும் இரண்டறக் கலந்து இருக்கிறது.

    உறை பனி உலகில் இருந்து திரும்பும் பொழுது, 50 கோடி வருடங்களாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த ஐந்து பெரும் கற்களைக் கொண்டு வந்தார்.

     இமயம் சென்று கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை வடித்த சேரன் செங்குட்டுவனைப் போல், அதையும் தாண்டி, பூமிப் பந்தின் ஒரு முனைக்கேச் சென்று வந்த, இந்த நவீன செங்குட்டுவனார், அதில் ஒரு கல் கொண்டு உருவாக்கத் தொடங்கியிருப்பது என்ன தெரியுமா?


அகத் தூண்டுதல் பூங்கா

எங்கு தெரியுமா?

தனது சொந்த ஊரில், தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த தன் சொந்த ஊரில்.

சன்னா நல்லூர்

நாகப்பட்டினம் கும்பகோணம் சாலையும், திருவாரூர் மயிலாடுதுறை சாலையும், ஒன்றை ஒன்று சந்திக்கும், நான்கு முனைச் சந்திப்பில் அமைந்திருக்கும் எழில் மிகு சிற்றூர் சன்னா நல்லூர்.

    பிறந்த தாய் நாட்டிற்கு ஆற்ற வேண்டிய, கடமைகளைச் செய்தாகிவிட்டது, தன்னை ஈன்றெடுத்த இனிய நல்லூராம், சென்னா நல்லூருக்கு, தன் மீதி ஆயுளையும் அர்ப்பணிக்கத் தயாராகி இருக்கும், இவர் பொறியியல் மட்டும் படித்தவர் அல்ல.

திருவருட்பாவையும்
திருமந்திரத்தையும்
திருவாசகத்தையும்
தேவாரத் திருமுறைகளையும்
முற்றாய் கற்றுத் தேர்ந்தவர்.

காயத்ரி மந்திரம் சொல்வதனால் ஏற்படும் நன்மைகளை, தேவாரத் திருமுறைகள் மூலமாகவும் அடையலாம் என்னும் உயிரிய கருத்தினை உடையவர்.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே

மனிதனே தெய்வம். தெய்வத்தை வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை என்னும் கருத்துடையவர்.

மரத்திலே விதையும்
அந்த வித்திலே மரமும் போல
மனிதனுக்குள் தெய்வம்
அந்தத் தெய்வத்திற்குள் மனிதன்
என்னும் உயரிய கொள்கையினை உடையவர்.


இவர்தான்
கர்னல் பா.கணேசன்.

சென்னா நல்லூரில், தன் சொந்த நிலத்தில்
அகத் தூண்டுதல் பூங்காவினை
நிறுவியிருக்கிறார்.

    தென் துருவத்தில், உறை பனி உலகில் இருந்து எடுத்து வந்த கல் ஒன்றினை, ஒரு தூணின் மேல் பார்வைக்கு வைத்து, அறுகோண வடிவிலான சுற்றுச் சுவர் ஒன்றினையும் எழுப்பி உள்ளார்.

இது ஒரு தொடக்கம்தான்.

    


கர்னல் கணேசன் அவர்களிடம், ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள ஏராளமான நூல்கள் இருக்கின்றன. இவை தவிர அறிவுத் திறன் பெருக்கும் நூல்கள், சுய முன்னேற்ற சிந்தனையினைத் தூண்டும் நூல்கள், சாதனையாளர்களின் சரித்திரங்கள், சிறு தொழில் விவரங்கள் என ஆயிரக் கணக்கான புது நூல்களையும் வாங்கி இவ்விடத்தில் ஓர் நூலகம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

      வாரம் மூன்று முறை யோகா, தியானம் மற்றும் உடற் பயிற்சி வகுப்புகளுக்கு என்று தனி அரங்கு.

      மாதம் ஒரு முறை சிறந்த தமிழறிஞர்களை, சிந்தனையாளர்களை, அறிவியலாளர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தல். இச் சொற்பொழிவுகளைத் தொகுத்து, ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிடல்.

     வருடத்திற்கு ஒரு முறை, இளஞ்சிறார்களை ஊக்கப் படுத்த ஓர் நடைப் பயணம்.

    அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளுதவி செய்தல், வழி காட்டுதல்.

    முன்னாள் இராணுவத்தினருக்கான உதவி மையம்.

    இவ்வாறாக ஏகப் பட்ட திட்டங்களுடன், தான் பிறந்த ஊரான சன்னா நல்லூரை, சரித்திரம் படைத்த நல்லூராக்கும் முயற்சியில், தனியொரு நபராக இறங்கியுள்ளார், இந்த 73 வயது இளைஞர்.

கர்னல் பா.கணேசன் அவர்களின்
முயற்சியைப் பாராட்டுவோம்.

சன்னா நல்லூர்
வரலாற்றில் நிரந்தரமாய்
ஓர் இடத்தினைப் பிடித்து
சரித்திரம் படைத்த நல்லூராக
உயர
மனமார வாழ்த்துவோம்.


91 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வருடமும் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பயணம் மேற்கொள்ளும் போதும் சன்னா நல்லூரை கடந்துதான் சென்றுள்ளோம். அனேகமாக அது இரவு நேரமாகத்தான் இருக்கும். ஒரு சில கடைகள் கொண்ட சாதாரண ஊராகத்தான் தோன்றியிருக்கிறது. அந்த ஊரிலே ஒரு சிறப்பு இருப்பது உங்கள் பதிவின் மூலமாகவே தெரிந்தது. அடுத்த முறை வெண்மணியிலிருந்து திரும்பும் வழியில் சன்னா நல்லூர் தூன்டுதல் பூங்காவை பார்க்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் பதிவு தூண்டி விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை செல்லும் பொழுது அவசியம் பார்த்து வாருங்கள் நண்பரே

   நீக்கு
 2. வரலாற்றில் உயர்ந்து நிற்கட்டும் சன்னாநல்லூர்!..

  மகத்தான மாமனிதர் கர்னல் பா. கணேசன் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!..

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  வரலாற்று சரித்திரத்தை அறியத்தந்தமைக்கு நன்றி மகத்தான மாமனிதர் கர்னல் பா.கணேசன் ஐயாபற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியுள்ளீர்கள் இருந்தாலும் மீண்டும் படிக்க தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வெளியில் எங்கும் இல்லை எனும் கருத்துடைய கர்னல் பா. கணேசன் ஐயா வாழ்த்துக்கள்... வணக்கங்கள்...

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள கரந்தையாரே!

  சன்னா நல்லூர் சரித்திரம் படைத்து நல்லூராக்கும் முயற்சியில், தனியொரு நபராக ஈடுபட்டுச் செயலாற்றி வரும் 73 வயது இளைஞர் கர்னல் பா.கணேசன் அவர்களின் முயற்சி கண்டு பெரிதும் வியந்து போனேன்.

  “மனிதனே தெய்வம். தெய்வத்தை வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை” என்னும் அவரது கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதுதான் உண்மையும்கூட.

  ஓரு நூலகம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்ற செய்தி அறிந்து சமூகத்தின் மீது உள்ள அக்கறை புலப்படுகிறது. பலதரப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியமான உதவிகளைச் செய்யும் அவரது உள்ளத்தின் உயரம் தெரிகிறது. பாராட்டுகள். வாழ்த்துகள்...!

  தஞ்சாவூர் மாவட்டம். மெலட்டூர் என்ற பொழுது எனது நண்பர் மெலட்டூர்காரர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் தொழிற்நுட்ப ப்பயிற்சி பழகுநராக, திருச்சியில் என்னுடன் பயிற்சி பெற்றார். அவரது நினைவு வந்தது.

  நன்றி.
  த.ம. 4.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நீண்ட கருத்துரை மிக்க மகிழ்வினை அளிக்கிறது ஐயா

   நீக்கு
 6. மனிதனே தெய்வம். தெய்வத்தை வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை என்னும் கருத்துடையவர்.
  அற்புதமான மனிதரைப் பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க சகோ. கர்னலுக்கு எனது வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஒரு குறிக்கோள் கொண்டு , தன்னலமின்றி வாழ்ந்துவரும் கர்னல் பா.கணேசன் அவர்களின்
  முயற்சியைப் பாராட்டுவோம்.
  பலரும் அறிய பதிவிட்ட உங்களுக்கு மிக்க தன்றி!

  பதிலளிநீக்கு
 8. இவரைப் பற்றி முன்பே பதிவிட்டிருக்கிறீர்கள் என்ற நினைவு.இருந்தால் என்ன இப்பேர்ப்பட்ட மனிதர்கள் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம் கூறலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னரே ஒரு முறை எழுதியுள்ளேன் ஐயா
   அப்பொழுது இப்பூங்காவின் தொடர் பணிகள் பற்றி தெரியாது
   இப்பொழுது அறிந்ததால் இப் பதிவு
   நன்றி ஐயா

   நீக்கு
 9. பாராட்டப்படவேண்டிய மனிதர்.

  இதே போன்றதொரு பதிவு ஏற்கனவே உங்கள் தளத்தில் படித்த நினைவாக இருக்கிறதே.... அது வேறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப் பூங்கா பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் நண்பரே
   இவரது தொடர் பணிகள் பற்றியும், இப் பூங்காவின் விரிவுபடுத்த இருக்கும் திட்டம் பற்றியும் இப்பொழுதுதான் அறிந்தேன்
   எனவே இப்பதிவு
   நன்றி நண்பரே

   நீக்கு
 10. கர்னல் கணேசன் புகழ் ஓங்குக.

  பதிலளிநீக்கு
 11. பாவாடை கணெசன் அவர்களோடு தொடர்பு உண்டு ! பாவாடை கணெசன் அவர்களின் சகோதரர் பாவாடை ராமமூர்த்தி ! ஹைதிராபாத்தில் என்னுடன் எல்.ஐ.சி யில்பணீயாற்றினார் ! மகா கெட்டிக்காரர் ! பின்னர் ஸ்டெட் வங்கி பணிக்கு சென்றார் !A .A.G யாக ஓய்வு பெற்றார் ! தீவிர மான பெரியார் பக்தர் ! சங்க மித்ரா என்ற பெயரில் எழுது வார் ! அவருடைய குடுமபத்தின் 21 தலைமுறை பற்றிய சரித்திர குறிப்புகளை வைத்திருந்தார் ! அந்த பாவாடை குடும்பம் வாழ்க என்று வாழ்த்துகிறேன் ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
   நன்றி ஐயா

   நீக்கு
 12. ஐயா வணக்கம்.

  இவ்வாளுமை குறித்து ஏற்கனவே தங்கள் பதிவின் வாயிலாகத் தான் அறிந்துள்ளேன்.

  நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை.
  தம 8
  நன்றி

  பதிலளிநீக்கு

 13. சரித்திரம் படைத்திருக்கும் கர்னல் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அவரைப்பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 14. pana katai yan thannerl thoke podavendum athai parthu yan velai vitu ranuvathil sera vendum. tharpothum naatu pani seivatharku vaalthukal.

  பதிலளிநீக்கு
 15. கர்ணல் கணேசனின் பணிகள் சிறப்பானவை! அறியத்தந்தமைக்கு நன்றி! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 16. மரத்திலே விதையும்
  அந்த வித்திலே மரமும் போல
  மனிதனுக்குள் தெய்வம்
  அந்தத் தெய்வத்திற்குள் மனிதன்"
  என்னும் உயரிய கொள்கையினை உடைய "கர்னல் பா.கணேசன்" அவர்ககளது சிறப்பினை போற்றுவோமே!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. அருமையான விந்தை மனிதரைப்பற்றிய தகவல் அருமை இவரைப்பற்றி ஏற்கனவே பதிவு இட்டாலும் இதில் கூடுதல் தகவல்கள் தந்திருக்கின்றீர்கள் நன்றி நண்பரே
  வாழ்க நலமுடன் கர்னல் திரு. பா.கணேசன் அவர்கள்
  தமிழ் மணம் 9

  பதிலளிநீக்கு
 18. தங்கள் தளத்தில் கர்னல் கனேசன் அவர்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள், இன்று அவரின் ஆசை, வாழ்க வளமுடனும் நலமுடனும். அவரின் ஆசை நிறைவேறட்டும். இந்த தகவல் அத்துனையும் அருமை. பணத்தாசையை மனிதன் விட்டால் அகிலமே நலம் பெறும். நன்றி.

  பதிலளிநீக்கு
 19. தங்கள் தளத்தில் கர்னல் கனேசன் அவர்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள், இன்று அவரின் ஆசை, வாழ்க வளமுடனும் நலமுடனும். அவரின் ஆசை நிறைவேறட்டும். இந்த தகவல் அத்துனையும் அருமை. பணத்தாசையை மனிதன் விட்டால் அகிலமே நலம் பெறும். நன்றி.

  பதிலளிநீக்கு
 20. கர்னல் கணேசன் அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை ,நமக்கெல்லாம் நல்ல படிப்பினை !

  பதிலளிநீக்கு
 21. தேடிப் பிடித்து செய்திகளைத் தந்த ஆசிரியருக்கு நன்றி. உங்களோடு இணைந்து சன்னா நல்லூர் கர்னல் பா.கணேசன் அவர்களின் முயற்சியைப் பாராட்டுகின்றேன். ஊருக்கு ஒரு கர்னல் பா.கணேசன் வர வேண்டும்.

  மே தின வாழ்த்துக்கள்.

  த.ம.11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   ஊருக்கு ஒரு கர்னல்
   பாரதமே புதுப் பொலிவு பெற்றுவிடும்
   நன்றி ஐயா

   நீக்கு
 22. கர்ணல் பா. கணேசன் அவர்களின்
  பணி நிறைவு பெற நாமும்
  வாழ்த்துவோம்!!!

  பதிலளிநீக்கு
 23. அறியாத தகவல் ஐயா! அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 24. முன்மாதிரியான ஒருவரின்
  முன்மாதிரியான செயலை
  முன்மொழிந்தமைக்குப் பாராட்டுகள்...
  அகத் தூண்டுதல் பூங்கா
  பலருக்கு நன்மை தரட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக ஐயா
   அகத்தூண்டுதல் பூங்கா பலரது வாழ்வில்
   விளக்கேற்றும் என்பதில் ஐயமில்லை
   நன்றி ஐயா

   நீக்கு
 25. Millions of thanks toMr Jayakumar and all the viewrs of his blog.Inspirations are not personal property of any individual.irrespective of who you are,what is your back ground etc every human being born in this world is a gift of god and he is capable of performing great service to humanity. The binding block comes only from with in and not from out soid.I left a PWD lucrative job because my vision was something else.The country was terribly thrown out of gear by the brutal chineese attack and National emmergency was declared.I was from a big family of 7 brothers and sisters.Every one was in need of money and my help.But the Nation was greater to me than my family.so inspite of my family objection I left for a greater mission.To day I had lost my parents(I could not attend their funerel),I had also lost two elder brothers and unfortunetly two younger brothers too.But my mission will be in complete with out making sannanallur an indellible name in Tamilnadu and even beyond its limits.I seek devine blessings and help of all those who are interested in building a great INDIA and bring back her yester years glory.Please contact me on cell,land line, e mail.As I am yet to have suitable living space at sannanallur I stay at Vedhathri Ashram,Peralam and trying to execute the project at Sannanallur.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்னல் கணேசன் அவர்களுக்கு வணக்கம். பெரிய பல இழப்புகளுக்கிடையேயும் தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த அரிய முயற்சி சிறக்க வலைப்பூ நண்பர்களின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

   நீக்கு
  2. தன்னலமற்ற தங்களின் சேவைக்கு வலைப் பூ
   நண்பர்கள் எந்நாளும் துணை நிற்பார்கள் ஐயா
   தங்களின் முயற்சி வெற்றி பெற
   வலைப் பூ நண்பர்களின் சார்பில்
   மனமார்ந்து நல் வாழ்த்துக்ளைத் தெரிவிப்பதில்
   பெரிதும் மகிழ்கின்றேன் ஐயா

   நீக்கு
  3. கர்னல் கணேசன் ஐயா அழர்களுக்கு எமது வாழ்த்துகளும்.

   நீக்கு
 26. கேர்னல் கணேசன் விருப்பங்கள் நிறை வேற என் வாழ்த்துக்கள். உன்னத மனிதரை அறியத் தந்தமைக்கு நன்றி ! தொடருங்கள் தொடர்கிறேன் ...!

  பதிலளிநீக்கு
 27. கர்னல் கணேசன் முன்னர் தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மாமனிதர். அவருடைய உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவரது பணியை வெளிக்கொணர்ந்து எங்களுடன் பகிர்ந்த தங்களின் பெருமனது பாராட்டுக்குரியது. வரலாற்றின் பதிவுகளில் தற்போது சன்னாநல்லூர், கர்னல் கணேசன் மட்டுமல்ல கரந்தை ஜெயக்குமாரும்கூட.

  பதிலளிநீக்கு
 28. பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய மனிதர்! தகவல் பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 29. நன்றி நண்பரே
  தங்களுக்கும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. படித்து நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு உங்கள் பதிவுகள் அமைந்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி .முன்பு படித்ததை விட கூடுதல் தகவல்கள் இதில் உள்ளன. அருமை ஜெ.கே. சார்

  பதிலளிநீக்கு
 31. மிகச் சாதரணமாக பல ஊர்களையும் சில மனிதர்களையும் கடந்து சென்றுவிடுகிறோம் ஆனால் எத்தனை அற்புதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பது உங்களைப் போன்றோர் வெளிப்படுத்தும் போதுதான் தெரிகிறது. அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 32. அவசியம் தொடர்பு கொள்வேன் தோழர்.
  மிகச் சரியும் தேவவையுமான அறிமுகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் தொடர்வு கொள்ளுங்கள் தோழர்
   உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்
   நன்றி தோழர்

   நீக்கு
 33. மிகவும் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் சன்னா நல்லூருக்கு இத்தனை பெரிய பாக்யம் கிடைத்திருக்கிறதா? சிறு வயதில் சன்னா நல்லூருக்கு பலமுறைகள் சிறு வயதில் சென்றிருக்கிறேன். தூரத்து உறவினர்களும் இருக்கிறார்கள். இனி ஒரு முறை சென்று ' அகத்தூண்டுதல் பூங்காவைப்பார்த்து, ரசித்து வர வேன்டும்.

  இதுவரை தெரியாத, ஒரு உயர்ந்த மனிதரைப்பற்றிய விபரங்களை அறியத்தந்ததற்கு மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் சென்று பார்த்து மகிழ்ந்து வாருங்கள் சகோதரியாரே
   நன்றி

   நீக்கு
 34. அருமையான பதிவு. அந்த உயர்ந்த மனிதர் வாழ்க!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 35. அருமையான பதிவு நண்பரே,

  ஒரு சாதனையாளரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே,

  த ம +1

  பதிலளிநீக்கு
 36. படித்தேன்.. வியந்தேன்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 37. பாராட்டுக்குரியவர் கர்னல் பா.கணேசன். தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. நல்லுள்ளம் கொண்ட அந்த நல்ல மனிதர் வாழ்க. தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. பெயரில்லா05 மே, 2015

  நல்ல தகவலுள்ள பதிவு.
  சகோதரா எனது விழா முன் -பின்னெடுப்புகள்
  காரணமாக வர தாமதம் ஆனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியாரே
   விழா சிறக்க வாழ்த்துக்கள்

   நீக்கு
 40. கர்னல் கணேசனின் சாதனைகளை ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் இத்தனை தகவல்களும்,அவர் ஊர் சன்னாநல்லூர் என்பதும் தெரியாது. பகிர்வுக்கு நன்றி. ஒவ்வொன்றும் தேடித் தேடி வெளியிடுகிறீர்கள் பொக்கிஷங்களாக! தாமதத்துக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதாமானால் என்ன சகோதரியாரே
   தங்களின் வருகை மகிழ்வினை அளிக்கிறது
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 41. இந்தியாவில் எத்தனை எத்தனை உயர்ந்த மனிதர்கள். வெறும் சாதாரண அரசியல்வாதிகளையும், வாய்ச்சவடால் வீரர்களையும் அறிவதை விட, 'நமக்கு இவரைப் போன்றவர்களை அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 42. இத்தனை அறிய தகவல்களை எங்குதான் திரட்டுகின்றீர்களோ நானறியேன் பதிவினை அவ்வளவு அழகாய் சொல்லி இருக்கீங்க இந்த
  73 வயது இளைஞனுக்கு என்சார்பிலும் வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாகட்டும் !
  தம +1

  பதிலளிநீக்கு
 43. வரலாற்றுப் புத்தகம் போல தங்கள் வலைப்பதிவு வளர்ந்து வருவது கண்டு மகிழ்வடைகிறேன்.

  பயனுள்ள பதிவு தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 44. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  உலகில் பிறக்கும் மிகச் சிலரே உயர்ந்த உள்ளம் படைத்தவராக அமைந்து தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் வாழாமல் தன் நாட்டுக்காகவும் தன் நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்து காட்டி பிறருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகிறார்கள். அவ்வகையில் முதன்மையானவராக வாழ்ந்து கொண்டிருக்கும் சன்னாநல்லூர் ஈன்றெடுத்த கர்னல் பா.கணேசன் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அற்புதம். அவர் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்து பலருக்கு உதவிட வாழ்த்தி அவரை வணங்கி மகிழ்வோம்.

  பதிலளிநீக்கு
 45. சாதனை மனிதரைப் பற்றிய பதிவிற்கு வாழ்த்துக்கள்
  தம +

  பதிலளிநீக்கு
 46. அற்புதமான மனிதரைப் பற்றிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 47. அருமையான பதிவு! அற்புதமான மனிதர். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!
  இதே போன்ற ஒரு பதிவு முன்பு தங்கள் தளத்தில் வாசித்த நினைவு வருகின்றது நண்பரே! சரியா?!!!

  பதிலளிநீக்கு
 48. பணம் தேவைதான்...அதை அளவோடு வைத்துக் கொண்டு சமூகத்துக்கு எம்மாலான பங்களிப்பு வழங்குவது தான் சிறப்பு,,...உடுவை

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு