பைகுல்லா மீன் மார்க்கெட்.
மாலை 7.00 மணியளவில், அன்றைய
வியாபாரம் முடிந்து, கடைக்காரர்கள், ஒவ்வொருவராய், மிச்சம் இருந்த மீன்களுடன்
வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.
வியாபாரிகள் அனைவரும் வெளியேறிய
பின், அப்பகுதி மக்கள் ஒவ்வொருவராக, மீன் மார்க்கெட்டினுள் நுழையத் தொடங்கினர்.
தரையிலே, அங்கு இங்கு என,
எங்கும் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருந்த பெரிய கற்களில்,
ஒருவர் இருவர் என அமர்கின்றனர்.
சிறிது நேரத்தில் மீன்
மார்க்கெட் முழுவதும் மக்கள் நிரம்பி வழிந்தனர்.
சாக்கடையின் துர்நாற்றத்தினையும்
மறந்து, மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கின்றனர்.
என்ன நடக்கப் போகிறது
இங்கே? எதற்காக இவர்கள் இங்கே கூடியிருக்கிறார்கள்? புரியவில்லைதானே.
இதோ மேளச் சத்தம் கேட்கிறதே? புது
உடை அணிந்து, கழுத்தில் மாலையுடன் ஒரு சிறுவன் வருகின்றான். பதினேழு வயதிருக்கும்.
அச்சிறுவனைத் தொடர்ந்து ஒரு பெண், கழுத்தில் மாலையுடன், பெற்றோர் பின்தொடர, உள்ளே
வருகிறார்.
இப்பொழுது புரிந்துவிட்டதல்லவா? ஆம்
திருமணம் நடைபெற இருக்கின்றது. மணமக்களை வாழ்த்துவதற்குத்தான் இந்த கூட்டம்.
என்னது? திருமணமா? மீன்
மார்க்கெட்டிலா? வழிந்தோடும் சாக்கடைகளுக்கு இடையிலா? பூக்களின் வாசனை வீச வேண்டிய
இடத்தில், சாக்கடையின் துர்நாற்றமல்லவா, மூக்கைப் பிடிக்க வைக்கின்றது.
திருமணம் நடத்த, அவ்வூரில்
சத்திரங்களோ அல்லது திருமணக் கூடங்களோ இல்லையா என்ன? இருக்கினறன. ஆனால் இந்தத்
திருமணத்திற்காக, அத்திருமணக் கூடங்களை வாடகைக்கு தருவதற்குத்தான், அவர்களுக்கு
மனமில்லை.
தாழ்த்தப் பட்ட மஹர் வகுப்பினருக்கு
திருமண மண்டபத்தை வாடகைக்கு விடுவதா? தெய்வ குற்றமல்லவா? தீட்டாகி விடுமே? அந்தப்
பாவத்தை எப்படி போக்குவது.
வேறு வழியில்லை, மீன்
மார்க்கெட்டில் திருமணம் அரங்கேறுகிறது.
மாப்பிள்ளை யார் தெரியுமா?
இங்கே நாங்கள், நாய்களை
விடவும், பூனைகளை விடவும், இழிவாக நடத்தப்படும் பொழுது, இதை நான், என் தாய் நாடு
என்று எப்படி அழைக்க முடியும்? இதை என்னுடைய சொந்த மதம் என்று எப்படி நினைக்க
முடியும்?
இங்கே குடிப்பதற்குக் கூட,
நாங்கள் தண்ணீரைப் பெற முடியாத நிலை உள்ளதே. சுயமரியாதை உணர்வுள்ள, எந்தவொரு,
தீண்டப்படாதவனும், எப்படி இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்க முடியும்?
என்று மகாத்மா காந்தியிடமே, நேருக்கு நேர் முழங்கியவர்.
நான் இந்துவாகப் பிறந்தேன்,
ஆனால்
நிச்சயமாக, இந்துவாக சாக மாட்டேன்
என்று சூளுரைத்து,
அவ்விதமே
பௌத்தராய் கண் மூடியவர்.
இந்தியா சுதந்திரம் பெற்றதும்,
அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராய் அமர்ந்து, இந்தியாவின் அரசியலமைப்புச்
சட்டத்தை வடிவமைத்து வழங்கியவர்.
பாபா சாகேப் டாக்டர்
அம்பேத்கர்.
14.4.2015
சித்திரைத் திங்களின் முதல் நாள்
அண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள்.
மனுதர்மத்தை நிராகரித்துவிட்டு
மனித தர்மத்தை முன்வைத்த
அண்ணல் அம்பேத்கரின்
நினைவினைப் போற்றுவோம்.
இது வரை அறியாத செய்தி.இந்த நிகழ்வு சமூகத்தின் மீதான சாட்டையடி.
பதிலளிநீக்குஎப்பேர்பட்ட மேதை அவர். மிகப் பெரிய மாற்றத்திற்கு விதை தூவியவர் அல்லவா.அவரை அரசியல் லாபத்திற்காகவே இன்றும் பயனடுத்துகிறார்கள் நல்ல பதிவுஜேகே சார்
அறியாத செய்தி. படித்தேன். ரசித்தேன்.
பதிலளிநீக்குஇவ்வாறான ஒரு நிகழ்வு இவரது வாழ்வில் நடந்ததைப் பற்றி நான் அறிந்ததில்லை. வரலாற்றில் நாங்கள் அறியாத, அறியவேண்டிய பக்கங்களை முன்வைத்து எழுதும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅறியாத தகவல் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஐயா,
பதிலளிநீக்குநல்ல பதிவு. அறியாத செய்தி படித்தேன்.
நன்றி
நல்ல கொள்கைகளுட்ன் வாழ்ந்து மறைந்த ஒரு நல்ல மனிதருக்கு சிறப்பான அஞ்சலி!
பதிலளிநீக்குநல்ல கருத்து ஒன்றினை அறிந்தேன்.
பதிலளிநீக்குஅருமையான அறியாத செய்தி ... நன்றி கரந்தை அவர்களே ...
பதிலளிநீக்குஅறிந்திராத செய்திகள்...நன்றி . எனது வீ்ட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவே அமைந்துள்ளது டாக்டர் அம்பேத்கர் இல்லம். நேற்று எப்போதும் இல்லாது அந்த இ்ல்லத்தை இரண்டு நிமிடம் நின்று அவதானித்தேன். காலையில் உங்கள் செய்தி சிலிர்ப்பாக இருக்கிறது எனக்கு!
பதிலளிநீக்குகட்டுரையின் மைய கருத்து (தீண்டாமை) இன்னும் எனக்கு புலப்படவில்லை ..தீர்வு காணவில்லை ... !!
சரவணன்
அருமையான அஞ்சலி. நாமும் மாபெரும் மனிதருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
பதிலளிநீக்குஅருமையன பதிவு. இதை படிக்கும் இந்த நேரத்தில் எனக்கு பெரியாரின் நினைவு வருகிரது. இன்று நாம் மரியாதையுடன் தமிழகத்தில் வாழ அவர் தானே காரணம். பதிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குபுதிய செய்திகள் தெரிந்துக்கொண்டோம். சட்ட மேதையாம், சமுதாய சிற்பியாம் அண்ணல் அம்பேத்கார் அவர் பட்ட பாடுகள் பார்த்தால் மனம் பதறும்,,,,,,,,,,,,,,,,,,,,,,, அருமையான பதிவு. நன்றி.
பதிலளிநீக்குசட்ட மாமேதை சாமானிய மக்களின் தோழன் அம்பேத்கார் பற்றிய பிதிய தகவல் அறிந்தேன் மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குநான் அறிந்திராத ஒரு தகவலை, நேரில் பார்ப்பது போன்ற உங்கள் எழுத்து நடையில் அறிந்துகொண்டேன்.
" இங்கே நாங்கள், நாய்களை விடவும், பூனைகளை விடவும், இழிவாக நடத்தப்படும் பொழுது, இதை நான், என் தாய் நாடு என்று எப்படி அழைக்க முடியும்? இதை என்னுடைய சொந்த மதம் என்று எப்படி நினைக்க முடியும்?
இங்கே குடிப்பதற்குக் கூட, நாங்கள் தண்ணீரைப் பெற முடியாத நிலை உள்ளதே. சுயமரியாதை உணர்வுள்ள, எந்தவொரு, தீண்டப்படாதவனும், எப்படி இந்த நாட்டைப் பற்றிப் பெருமையாக நினைக்க முடியும் "
இன்னும் இந்த நிலை முற்றிலும் மாறவில்லையே ?!!!
நன்றி
சாமானியன்
" இன்று நாம் மரியாதையுடன் தமிழகத்தில் வாழ அவர் தானே காரணம். "
பதிலளிநீக்குபெரியாரை பற்றி உமாசங்கர் இப்படி பின்னூட்டமிட்டுள்ளார்...
மரியாதையுடன் மட்டுமல்ல, மத அரசியல் இத்தனை காலமும் தமிழ்நாட்டில் தள்ளாடுவதற்கும் பெரியாரே காரணம். அவரின் வாழ்வியல் பற்றிய இன்னும் எத்தனையோ எளிய தத்துவங்களை இருளிலேயே வைத்துள்ளோம் என்பது வேதனை !
நன்றி
சாமானியன்
இதுவரை அறிந்திராத தகவல் ஒன்றினை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஇது இதுவரை அறியாத செய்தி. மனித தர்மத்தை முன்வைத்த
பதிலளிநீக்குஅண்ணல் அம்பேத்கரின் நினைவினைப் போற்றுவோம்.
இது வரை அறியாத அரிய தகவல் இது கண்டிப்பாக...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு... அன்பு நன்றிகள் சார்.
அண்ணல் அம்பேத்கார் அவர்களுடைய வாழ்வில் -
பதிலளிநீக்குஇப்படியான ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை அறிந்ததில்லை.
அரியதொரு தகவலை அறியத் தந்த தங்களுக்கு நன்றி!..
அருமை நண்பரே எனக்கு புதிய விடயம் புரட்சி வீரன் சட்டமேதை திரு. அம்பேகரின் நினைவினை போற்றுவோம்.
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் இணைக்க 7
திருமண நிகழ்வு அம்பேத்கருடையதா.? மத மாற்றம் என்பது ஒரு எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடே. மற்றபடி மாற்றம் ஏதும் நிகழ வாய்ப்பில்லை. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தாழ்த்தப் பட்டவர் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா. மதம் மாறுவதால் நிலையில் மாற்றம் நிகழ்கிறதா. எல்லோரும் அம்பேத்கர் போல் அடையாளம் காட்ட முடிகிறதா.? ஐயா கேள்விகள் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கிறது. சொல்லப் போனால் இப்போது நாடு ஹிந்துத்வ வாதிகளிடம் சிக்கி இருக்கிறது. அம்பேத்கருக்கு அஞ்ச்லி செய்ய மக்கள் மன மாற்றம் வேண்டும்
பதிலளிநீக்குஇந்தப் பதிவின்மூலமே இந்த செய்தியை அறிகிறேன். உங்களுக்கு நன்றி ஜெயக்குமார்!
பதிலளிநீக்குசட்ட மேதையின் கொள்கை இன்னும் வர நிறைவேறவில்லை ,காரணம் அவர் பெயரைச் சொல்லிக் கொள்ளும் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததுதான் !
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறியாத தகவல் முதலில் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் ஐயா.. சட்ட மேதையின் வரலாற்றை தங்களின் சொல் வீச்சில் சுவைபட கூறிய விதம் வெகு சிறப்பு ஐயா.பகிர்வுக்கு நன்றி.த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரு வல்லவரைப் பற்றிய நல்ல தகவல்; நன்றி.
பதிலளிநீக்குஆனாலும் ஜி.எம்.பி. சார் சொல்வது போல் நம்மிடையே மாற்றம் ஏதுமில்லை. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையும் இல்லை.
அவரது நினைவு போற்றுவோம்.நினைவுகள் சொல்லிச்செல்கிற வரலாறும் கதைகளும் இங்கே ஏராளம்/
பதிலளிநீக்குஎப்போதும் போல் பெரியோர்களை அடயாளப் படுத்தி வருகிறீர்கள். தொடர்ந்து நாமும் ஆச்சரியத்துடன் அறிந்து கொள்கிறோம். மிக்க நன்றி. மேலும் தொடருங்கள். வாழ்த்துக்கள் சகோ !...
பதிலளிநீக்குதங்களின் நடையில் அம்பேத்கார் பற்றிய தகவல்கள் அருமை.
பதிலளிநீக்குபௌத்தம் பற்றியும் சமணம் பற்றியும் தனியே எழுதத் தோன்றுகிறது.
த ம கூடுதல் 1
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅண்ணல் அம்பேத்கார் வார்த்தைகள் இன்றும் பெரிய அளவில் மாற்றமின்றி பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே நம் நாட்டில் தீண்டாமை வாழ்ந்து கொண்டிருக்கிறது, நம் மண்ணின் மைந்தர்கள்தான் அவர்கள் என்று எந்த நாளில் அனைவரும் நினைக்கிறார்களே அன்றிலிருந்துதான் நம் நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்று அர்த்தம்
புதிய தகவல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அசாத்திய மனத்துணிவு இன்றி
யாரால் இப்படிச் செய்ய முடியும்.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் 14.4.2015 சித்திரைத் திங்களின் முதல் நாள் அண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள் வர இருக்கின்ற இந்த வேளையில் ....
அண்ணல் அம்பேத்கரின் 124வது பிறந்த நாள். ‘மாப்பிள்ளையாக’ அவரைப் பற்றிய அன்றைய அவலநிலையை அறியத் தந்ததற்கு மிக்க நன்றி.
த.ம. 13.
அறியாத தகவல்! அக்காலத்தில் தீண்டாமையின் கொடுமையை உணர முடிகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குடாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் வரும் இந்த நேரத்தில், அவருடைய வாழ்நாளில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வைச் சொல்லி அவரை பெருமை படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குத.ம.14
ariya thagaval. nandri aya
பதிலளிநீக்குgood memeories
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத தகவல்......
பதிலளிநீக்குநாடு போற்றும் நல்ல உள்ளங்களை உள்ளங் கையில் வைத்து வழிபட வேண்டும்!
பதிலளிநீக்குஅற்புதமான அறிய வேண்டிய பதிவு!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்கு'மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம், நாங்க
பதிலளிநீக்குமனுசமட்டும் தீண்டக் கூடாதா?
நாடு என்பதா? இதை நரகம் என்பதா?
சேரியெல்லாம் சிறைகள் ஆனதே?” என்னும் நவகவிகள் இன்னும் தேவைப்படும் அளவிற்கு இன்றைய சமூகமே இருக்கும்போது, சுமார் 100ஆண்டுக்கு முன் அண்ணல் அம்பேத்கர் என்ன பாடு பட்டிருப்பார்.
உணர்ச்சிகரமான உங்கள் எழுத்தின் சுருக்கம் நெஞ்சில் தைத்தது அய்யா. மிக்க நன்றி. த.ம. கூடுதல் (15?) 1.
அண்ணல் அம்பேத்கார் பற்றிய நிறைவான பதிவு ..அருமை,
பதிலளிநீக்குஅன்பு நண்பரே!
பதிலளிநீக்குவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅறியாத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
தம +
பதிலளிநீக்குஇன்னும் வளர்த்திருக்கலாம்..
மனதை நெகிழ வைத்தது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருமண நிகழ்ச்சி.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அறியாத தகவல். அம்பேத்கார் அவர்களின் பிறந்த தினத்தன்று அவரை நினைவு கூர்ந்திருக்கும் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குஅண்ணல் அம்பேத்கர் ஒரு மகத்தான மக்கள் தலைவர். அவரை ஜாதிய சிமிழுக்குள் அடைத்து அவர் குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் மட்டுமே என்று சித்தரிக்கின்றனர். அந்த கண்ணோட்டம் தவறு என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது
பதிலளிநீக்குஅம்பேத்கார் பற்றி அறியாத செய்தி...தந்தமைக்கு நன்றி......உடுவை
பதிலளிநீக்கு