22 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 2


கொந்தளிக்கும் கடலில்
     

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

     சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.

18 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில்

    நண்பர்களே, வணக்கம். நலம்தானே.

     நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

     நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது.

    ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.

     நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்கின்றன அல்லவா?

12 ஆகஸ்ட் 2015

ஒளி பிறந்தது


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
                                   பாரதியார்



    நண்பர்களே, என் அலைபேசி அழைத்தது.

சார், நல்லா இருக்கீங்களா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குரலில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா கூறினார்கள்.

மகிழ்வினும் பெரு மகிழ்வு, தன் குழந்தையின் குரலினைக் கேட்பதில் அல்லவா இருக்கிறது.

   பிறந்த நாள் என்றால் என்ன? என்று கேட்கப் பெற்ற கேள்விக்கு, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வழங்கிய, பதில் இருக்கிறதே, அது ஒன்றே போதும்.

05 ஆகஸ்ட் 2015

அக்னிக் குஞ்சு


இனிய எண்ணங்களே, போய்விடுங்கள்
கவலை கொண்ட நெஞ்சமும் இனி வேண்டாம்
விழித்திருக்கும் இரவுகளுக்கு
வேலை காத்திருக்கிறது.
பகற் பொழுதுகள்
பரபரப்பாக இருப்பினும்
எனது நினைவுகள் எல்லாம்
இராமேசுவரம் கடற்கரையில்
நிலைகுத்தி நிற்கின்றன.

                                ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்


     ஆண்டு 1946. அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன், பள்ளியில் இருந்து வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கிறான்.

     இப்பள்ளியில் படித்து முடித்தாகிவிட்டது. இனி படிப்பைத் தொடர, வேறு ஊருக்குத்தான் சென்றாக வேண்டும். பாசமிகு தாய், தந்தையை விட்டுப் பிரிந்தாக வேண்டும். குடும்பத்தை விட்டுவிட்டு, தனியனாய், தன்னந் தனியனாய், ஓர் புத்தம் புதிய ஊரில், ஓர் புத்தம் புதிய பள்ளியில்தான், இனி படித்தாக வேண்டும்.

01 ஆகஸ்ட் 2015

கனவின் நாயகன்

        

 நாள் 30.7.2015 வியாழக் கிழமை காலை 8.00 மணி. இராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை. சுப்பையா நகர், நான்கு ரோடு சந்திப்பு.

      நாங்கள் சென்ற மகிழ்வுந்து, காவலர்களால் தடுத்து நிறுத்தப் படுகிறது.