08 அக்டோபர் 2021

உயில்



     தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு, ஐந்து மாத வீட்டு வாடகை ரூ.135 தரவேண்டி இருக்கிறது.

     தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் கடையில், ஜவுளி வாங்கிய வகையில் ரூ.30  நிலுவை தரவேண்டும்.

     வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ரூ.30 தர வேண்டும்.

     சில்லறைக் கடன்கள் ரூ.60 மீதமிருக்கினறன.

     இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20

     சோமநாத்துக்கு ரூ.16

     வேதவல்லிக்கு ரூ.50 பாக்கி இருக்கிறது.

    

02 அக்டோபர் 2021

கரந்தைக்கு இரண்டு


 

     இவர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

     ஒன்றல்ல, இரண்டு கல்லூரிகளைத் தூக்கி நிறுத்தியவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, தொடங்கப் பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரி, பிற்காலத்தில், தளர்வுற்றபோது, கல்லூரியின் முதல்வராய் பொறுப்பேற்று, புது இரத்தம் பாய்ச்சி, புத்துணர்வு கொடுத்து, புதுமெருகூட்டிக் காத்தவர், வளர்த்தவர்.

    

25 செப்டம்பர் 2021

கரந்தை நீர்த்தூம்பு




நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

     நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம், நீர் நிலைகள் அமையும்படி கரை அமைக்கும் மன்னர்களே, இவ்வுலகில் என்றென்றும் அழியாதப் புகழ் பெற்று போற்றப்படுவார்கள் என்கிறார் ஒரு புறநானூற்றுப் புலவர்.

   நீரின் அருமையும், பெருமையும், உயிர்மையும் அறிந்த இனம், உணர்ந்த இனம் நம் இனம்.

    

17 செப்டம்பர் 2021

ஓப்பிலா செந்தமிழ்ச் செல்வன்

 

 

     அன்பார்ந்த ஐயா,

     நமஸ்காரம்.

     எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும், தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில், வேறு தஞ்சம், ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.

     நான் இனிமேல், அதிக காலம், ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை.

04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்



     மருந்து.

     வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.

     உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம்.

     நமது இன்றைய வாழ்வு, மருந்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வாகி விட்டது.

     மருந்தில் இருந்து, நமக்கு விடுதலையே கிடையாதா?

     உண்டு.